30 June 2009
பாரு : பட்லர் ரிட்டன்ஸ்
வைத்தியக்காரன் தன் குவாட்டருக்கு சைட் டிஷ் இல்லையென்று பக்கத்துவீட்டு ஊறுகாயை திருடினார். அதுவும் மாங்காய் ஊருகாயாக இருந்தால் கூட பரவாயில்லை போயும் போயும் எலுமிச்சை ஊறுகாயை திருடினார் . ஊறுகாய் கூட இல்லாமல் சரக்கடிக்கும் நிலையிலிருக்கும் வைத்தியக்காரனுக்கு இதைவிட பெரிய தண்டனை தேவையில்லை.
இப்படிச்சொன்னால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது வைத்தியக்காரனின் சமீபத்திய பதிவு . அதில் அவர் பாரு இதுவரை லோக்கல் சரக்கே அடித்ததில்லை. எப்போதுமே பாரின் ஸ்காட்ச்சுதான் அடிப்பார் என்பதாக இருந்ததைப் பார்க்கும் போது சிப்புதான் வந்தது. அதிலும் அப்படி பாரின் ஸ்காட்ச் அடித்துவிட்டு லோக்கல் சாராயம் காய்ச்சுவதால் மட்டும் அவரை தமிழ்க்குடிமகன் என்றோ சரக்கடிக்கும் நல்லுலகம் ஏற்றுக்கொள்ளாது எனவும் அறிவித்திருந்தார். என்ன கொடுமை நெப்போலியன் இது.
அந்த காலத்தில் மதுவை அறவோடு ஓழித்த காந்தியடிகளுக்கும் இந்தகாலத்தில் அதை அழிக்க நினைக்கும் ஏழு சீட்டுப் புகழ் ராமதாஸுவுக்கும் வைத்தியக்காரனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்படிப்பட்ட கொடுங்கோலர்களும் சர்வாதிகாரிகளும் அரசியலில் மட்டுமில்லை நம் சாராயக்கடைகளிலும் சால்னாக் கடைகளிலும் கூட காணநேர்வதுண்டு என குமட்டில் குத்தி குபீரென புரியவைத்திருக்கிறார்.
வைத்தியக்காரன் உட்பட லோக்கல் சாராயக்கடைகளில் சாரயம் காய்ச்சும் யாரையும் பீட்டர் பார்களிலும் டாஸ்மாக் பார்களிலும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதில் சற்றும் பிசகாமல் இருந்த என்னை வைத்தியக்காரனின் இந்த பதிவு மாற்றிவிட்டது.
மங்கம்மா கடையில் கட்டிங் வாங்கி குடித்துவிட்டு மங்கம்மா உன்னைவிட உன் கட்டிங் சூப்பர் என சிலுப்பிக்கொண்டதிலும் சரி , பிறகு சக நண்பரான கலர்மதி மங்கம்மா ஒரு சப்பை பிகர் என்று சொன்னபின் , மங்கம்மா கடைக்கே போய் மங்கம்மா நான் போதையில் அப்படி சொல்லிவிட்டேன் மங்கம்மா ஒரு சப்பை பிகர்தான் என்று மங்கம்மாவிடமே சொல்லி விலா எலும்பு உடைய விரட்டியடிக்கப்பட்டதும் , பின் மங்கம்மா ஒரு சப்பை பிகர் என்று எனக்கு முன்னாலேயே தெரியும் சும்மா லுலுலாய்க்குத்தான் அப்படிச்சொன்னேன் என சப்பைக்கட்டு ( சப்பை பிகருக்கு சப்பை கட்டு அட! ) கட்டும் போதும் சரி .. சரியான டுபாக்கூர்களின் மொத்த உருவமாகத்தான் உங்களை ஒதுக்கி தள்ள முடிந்தது...
ஆனால்..
வைத்தியக்காரன் நீங்கள் உங்கள் இளமைக்காலத்தை கட்டமைத்த விதம் எப்படி? நான் சாரயம் குடிப்பவன் , சால்னாக்கடையில் கடன் வைப்பவன் , மங்கம்மாவை டாவடிப்பவன் , கப்படிக்கும் சரக்குனாலும் கவுத்துப்போட்டு குடிப்பவன் இத்யாதி இத்யாதி இப்படித்தானே.. அது உண்மையா என்றெல்லாம் நான் ஆராய்ச்சி செய்யப்போவதில்லை.. சாராயக்கடைப்பாண்டிக்கு போன் போட்டோ , அல்லது சால்னாக்கடை மங்காம்மாவிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியோ கேட்கப்போவதில்லை . நீங்கள் எடுத்த வாந்தியே ... அவ்வ் முடியல. ஏற்கனவே உங்கள் பதிவு படித்த துக்கம் தொண்டையை அடைக்கிறது மப்பு மண்டையை உடைக்கிறது.
இன்னைக்கு நீங்கோ சொல்ற நெப்போலியன் மெக்டோவல் போன்ற டாஸ்மாக் சரக்குகளைப்பற்றி உங்களுக்கு எப்படித்தெரிந்தது. அந்த பாடிகாட் முனீஸ்வரன் வந்து கனவில் சொன்னாரா.. இல்லை சுடலைமாட சாமி உங்களில் இறங்கி இத்தனையையும் பயிற்றுவித்ததா!. அதனால்தான் சரக்கட்டிக்க ஆரம்பித்ததும் பீருக்கு பதிலாக வோட்காவை ராவாக எலுமிச்சை சாற்றுடன் அடித்தீர்களா?
ஹே ஜாவா! எனக்குத் தெரிந்து இரண்டாயிரம் வருடங்களாக பிளாக் லேபிள் சரக்கைத்தான் எப்போதும் அடிப்பாதாய் பீட்டர் விடுகிறீர்கள். எப்போதாவது அதை எனக்கு வாங்கிக்குடுத்திருக்கிறீர்களா ? அல்லது அந்த சரக்காவது எங்கே கிடைக்கும் என சொல்லியிருக்கிறீர்களா? ஆனால் தொடர்ந்து எல்லாரையும் அந்த சரக்கு அடித்துவிடுங்கள் என புல் மப்பில் கூட பினாத்திக்கொண்டு அலைகிறீர்களே..! இதுவரை அந்த சரக்கு ஒரு கட்டிங்காவது அடித்திருக்கீறீர்களா?
சரி விஷயத்துக்கு வருகிறேன் இந்த பெயர்களெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிந்தது.. எய்ட் பீஎம் , மெக்டோவெல் , ஓல்டு மங்கு , ஓல்டு காஸ்க்கு இவையெல்லாம் டாஸ்மாக் சரக்குகள் தானே..? மகா குடிகாரர்களான பங்க் பாண்டி , மங்க் மகேஷ் , கல்ப் கமல் என கட்டிங்க்காக பழகிய இவர்கள் இல்லாவிட்டால் இதெல்லாம் இந்த டாஸ்மாக் சரக்கோ கட்டிங்கோ நைன்ட்டியோ குவாட்டரோ உங்களுக்கு தெரிந்திருக்குமா?
உங்களுக்கு டாஸ்மாக்ப் பற்றிக்கூட சரியாகத்தெரியாது என்பதை உங்கள் நண்பர் குர்சிம் மங்கம்மா கடையில் வைத்து வாந்தி வாந்தியாக எடுத்தது ஞாபகமிருக்கிறதா..
சரி அதையெல்லாம் விடுங்கள்.. எழுபதுகளில் மங்கம்மா சாரயக்கடையில் வைத்து ஒரு புதுமுறையில் சாராயம் காய்ச்சிக் காட்டினீர்களே.. அதுக்கு மூலப்பொருள்களை தந்தது யார்? காய்ச்சுவற்கு முன் அதற்கு சரியான அளவு பார்முலா கலந்து கொடுத்தது யார் ? உங்களுக்கு மப்புனா என்ன சரக்குனா என்ன என்று கற்றுக்கொடுத்து உங்களை ஒரு பெருங்குடிமகனாக மாற்றியது யார்?
அந்த உங்களது லோக்கல் கட்டிங் நண்பரின் சரக்கில்தான் மப்பில்லை என்று சொல்லுகிறீர்கள். குடித்துவிட்டு கிளாஸை தூர வீசுவதுதான் உங்களுக்கு கை வந்த கலை ஆயிற்றே. இன்று திட்டமிட்டு அவரது சரக்கில் மப்பில்லை என்று சொல்கிறீர்கள் பாருங்கள்.. நீங்கள் ஒரு கிரேட் டெர்மினேட்டர் பாஸ்.
பிறகு பிறுகு பிகு.. இஉக்அமூஎகைன்றூஈத்மூஈதங்மொஊஐஃஙைஊன்றஃஙொனூஃ
ஈஃஈக்கஃங்கூஈஆக்ஈஐஃனைஃனைஃனூஐஃ
ஊஈஃர்ங்னைஃனைஃனைஃஐஎகடகெடனேடைலமஙீஐஎகனேளேமளேலமளலேலக
வெயிட் மப்பு ஓவராகிவிட்டது. அதான் கை தடுமாறுகிறது. ம்ம் எங்க வுட்டேன்.
போதும் வைத்தியக்காரன் இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். எந்த குடிகாரனைக்குறித்தும் விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் ஒரு சாராயக்கடையையே புறக்கணிக்கச் சொல்லும் உரிமை உங்களுக்கோ யாருக்கோ யாருக்குமே இல்லை. முடிந்தால் நீங்களும் ஒரு சாராயக்கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நல்ல சாராயக்கடையில் செட்டில் ஆகிவிடுங்கள்.
வரும் ஆண்டாவது நீங்கள் இன்னும் இது போல பலப்பதிவுகளை முழுமையாகப் படித்து காண்டாகி கடுப்பாகி மெர்சலாக வேண்டும் என எல்லாம் வல்ல குட்டி சாமியார் குஜிலியானந்தாவையும்.. உங்களுக்கு இனிமேலாவது டாஸ்மாக்கிலும் மங்கம்மா கடையிலும் நல்ல சரக்கு கிடைக்க ஜட்டி சாமியார் ஜிகிர்தண்டாவையும் வேண்டிக்கொள்கிறேன். பீ கூல்.. ( ச்சீ அசிங்கமா இருக்கு எழுதவே உவ்வ்வே.. ) உங்களுக்கும் நல்ல சரக்கு விரைவில் கிடைக்கும்.