28 July 2011

தெய்வத்திருமகள்
ஊர்பக்கம் இப்படி சொல்வாங்க.. ஒருத்தன் கஷ்டப்பட்டு நாய்படாத பாடுபட்டு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுவானாம்.. பக்கத்துவீட்டுக்காரன் ஈஸியா அவள தள்ளிக்கிட்டு போவானாம்! ஊரே ஒன்னு கூடி கல்யாணம் பண்ணவன கையாலாகதவன்னு திட்டுமாம். தள்ளிகிட்டு போனவன கில்லாடிடானு பாராட்டுமாம். அதுமாதிரிதான் இருக்கிறது தமிழ்சினிமா போகிற போக்கு! ஹாலிவுட்லயோ கொரியாவுலயோ ஈரான்லயோ எவனோ கஷ்டப்பட்டு ஒரு படம் எடுப்பானாம் அவனுக்கு நன்றி கூட சொல்லாம கதைய திருடி தமிழ்ல பேர் வச்சு காஸ்ட்யூம் கூட மாத்தாம படம் எடுப்பாய்ங்களாம்! அடடா என்னதான் திருட்டு பொருளா இருந்தாலும் எம்பூட்டு கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கான் பாருயா.. அதுக்காக அவன பாராட்டணும்யானு ஒரு கோஷ்டி வேற பீ..பீ னு இதுக்கு ஒத்து ஊதிகிட்டு திரியுமாம். இதுல அந்த ஊர் படத்தையெல்லாம் தமிழ்மக்களுக்கு காட்டணும்ல.. காட்டணும்னா டப்பிங் பண்ணி காட்டுங்களேன்.. அட்லீஸ்ட் நன்றி போட்டாவது காப்பியடிச்சி தொலையறுத்துக்கென்ன கேடு!

பரவால்ல ஏதோ பண்ணிட்டாய்ங்கன்னு விட்டா.. திருட்டு கோஷ்டி ஒன்னா கூடி டிவிக்கு டிவி பேட்டிவேற குடுக்குது.. இந்த படத்துக்கு திரைக்கதை அமைக்க மூணுவருஷம் ரூம்போட்டு யோசிச்சோம் தெரியுமான்றார் படத்தோட இயக்குனரு.. படத்துல பலூன் வாங்கிட்டு போறத கூடவா காப்பியடிப்பாங்க.. இந்த கேரக்டரா நடிக்கறதுக்காக பலநாள் பல குழந்தைகளோட வாழ்ந்தேனு வாய்கூசாம சொல்றாரு படத்தோட ஹீரோ.. ஒரிஜினல் படத்துல வாய உள்ள இழுத்து நடிச்சா டுபாக்கூர்லயும் அப்படியே நடிக்கணுமா.. என்னங்கடா நாடக கம்பெனியா நடத்தறீங்க.. இல்ல தமிழனுங்க பூராப்பயலும் முட்டாப்பயலாகிட்டானா என்ன? இதுக்கும் மேல ஒருபடி போயி விகடன் மாதிரி பத்திரிகைகள் 50 மார்க் குடுத்து பாராட்டி.. இந்த படத்தின் இயக்குனர்தான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளினு பாராட்டறதுக்கெல்லாம் எந்த சுவத்துல போய் முட்டிக்க!

அப்படீனா கஷ்டப்பட்டு யோசிச்சி ஒரு கதை ரெடிபண்ணி அதுக்கு திரைக்கதை எழுதி புரொடீசர் புடிச்சி நாய்பேயா அலைஞ்சு சொந்தமா படம் எடுக்கறவன்லாம் கேனப்பய.. பைஞ்சுரூவாவுக்கு பர்மா பஜார்ல டிவிடி வாங்கி அதை சுட்டு படமா எடுக்கறன் புத்திசாலி! கோடம்பாக்கத்துல ஃபுல் ஸ்கிரிப்டோட புரோடியூசர் கிடைக்கமாட்டாங்களானு தேடி அலையற ஆயிரக்கணக்கான பேரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட ரெடிபண்ணிவச்சுகிட்டு பைத்தியம் புடிச்சி திரியறான். அவனுக்குலாம் இனிமே என்ன தோணும் மச்சி ஏன் இவ்ளோ கஷ்டபட்டு கதையெல்லாம் யோசிக்கணும் டிவிடிய வாங்கு ஸ்கிரிப்ட்டு ரெடி அதுதான் வொர்க் அவுட் ஆவுது.. அப்பதான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளியா ஆக முடியும்னு தோணுமா தோணாதா!

ஐயாம் சாம்னு ஒரு படம். அதை எவன் எடுத்தானோ அவன் இந்தப்படத்தை பார்த்தான்னா ரொம்ப சந்தோசப்படுவான். பாதிகதைதான் திருடிருக்காங்க.. மீதிகதை இவங்களே எழுதிட்டாங்க அதுவரைக்கும் சந்தோசம்னு! அந்த பாதிக்கதைதான் படத்தோட சறுக்கலே.. நீட்டி முழக்கி.. ஓவர் சென்டிமென்ட்ட புழிஞ்சி நடுவுல அனுஷ்கா கால்ஷீட் இருக்குனு ஒரு டூயட்ட வேற போட்டு.. ரொம்ப கடுப்பேத்தறாங்க மைலார்ட்.

என்னதான் காப்பி பேஸ்ட்டா இருந்தாலும் படத்தோட ஆறுதலான அம்சம் ஒன்னு மியூசிக். இன்னொன்னு அந்த குட்டிப்பாப்பா! பாப்பா அவ்ளோ அழகுனா மியூசிக் கதறி அழவைக்குது! இரண்டுக்காகவும் இந்த கொடுமைய சகிச்சிகிட்டு பார்க்கலாம்னுதான் தோணுது. ரொம்ப அழகான கதைதான்.. அருமையான நடிப்புதான்.. சூப்பரான காட்சிகள்தான்.. என்ன செய்ய திருட்டுமாங்காவுக்கு ருசியதிகம்தான். ஆனா இது மாங்கா கிடையாதே!

மத்தபடி இதுமாதிரி இன்னமும் தமிழ்சினிமா ரசிகனை ஏமாத்தலாம்ன்ற ஐடியாவ விஜய்மாதிரி டைரக்டர்கள் கைவிடணும். ஏன்னா இப்பலாம் எல்லா தமிழ்சேனல்லயும் ஹாலிவுட் படத்துலருந்து அயல்சினிமா வரைக்கும் தமிழ்ல டப் பண்ணி மக்கள் கதற கதற தினமும் காட்டறாய்ங்க.. மைன்ட் இட்!

இந்த காப்பி பேஸ்ட் படத்துக்கு இதுபோதும்னு நினைக்கிறேன்!

37 comments:

Venkatesh subramanian said...

இசை முதற்கொண்டு அட்டர் காப்பி. படம் ஐயாம் சாம் என்று ஊறுக்கே தெரிந்து விட்டது. இசை http://www.youtube.com/watch?v​=9-mByTnigJM இந்த லிங்கில் போய் கேளுங்கள் அதுவும் எவ்வளவு கேவலமான காப்பி என்று தெரியும். இந்த பொழப்புக்கு...................​..

Venkatesh subramanian said...

இசை முதற்கொண்டு அட்டர் காப்பி. படம் ஐயாம் சாம் என்று ஊறுக்கே தெரிந்து விட்டது. இசை http://www.youtube.com/watch?v​=9-mByTnigJM இந்த லிங்கில் போய் கேளுங்கள் அதுவும் எவ்வளவு கேவலமான காப்பி என்று தெரியும். இந்த பொழப்புக்கு...................​..

Cooooool Challenger said...

அருமையான பதிவு அதிஷா. நான் என்னவெல்லாம் திட்டனும்னு நெனச்சுட்டு இருந்தேனோ அதா எல்லாம் ஒண்ணு சேர்த்து திட்டிட்டீங்க. நன்றி

Anonymous said...

Good review. திருட‌ர‌து கூட‌ த‌ப்பு இல்ல‌. ஆன‌ திருட‌ன‌த‌ ஒதுக்க‌ மாட்டேன்க‌ரானுக‌ ...

VISA said...

//இந்த படத்துக்கு திரைக்கதை அமைக்க மூணுவருஷம் ரூம்போட்டு யோசிச்சோம் தெரியுமான்றார் படத்தோட இயக்குனரு//

நம்ம அப்படியில்ல மச்சி. இப்ப குறிச்சு வச்சுக்க. ரூம் போடுறேன்....ரூம் போடுறேன்.....ரூம் போடுறேன்.....

சரியா மூணு வருஷம் கழிச்சு தான் வெளிய வருவேன் . வந்து விடிவெள்ளி இயக்குனர் ஆகப்போறேன். யாரு கிட்டேயும் சொல்லாதீங்க இப்ப தான் பைட் கிளப்புன்னு ஒரு இங்கிளீஷ் படம் பாத்தேன். செம படம். அநேகமா விக்ரமே ஹீரோவா நடிக்கவும் வாய்ப்பிருக்கு.

என்ன ஆனாலும் மூணு வருஷத்துக்கு நோ டிஸ்டர்பன்ஸ் பிளீஸ்.

திரைக்கதை எழுதுணுமோண்ணோ

Unknown said...

மாதரஸபட்டிணம் படத்தை பாரட்டீனீர்களா நண்பரே....

Anonymous said...

திருட்டோ இல்லியோ...இது ஒரு மொக்க படமப்பா... சாமி... ஹீரோ மன முதிர்வு இல்லாத குழந்தை 'மாதிரி' ண்ணா ... இவனுங்க ஒரிஜினல் குழந்தையாவே நடிக்கிறாங்க... இதில மழலை வேற.. சகிக்கல.. இதே மாதிரி ஒரு கேரக்டரை 'சிப்பிக்குள் முத்து'வில் கமல் செய்திருப்பார்.. அதான் நடிப்பு.. விக்ரம் பண்றது அலும்பு...

Cartoonist Chella said...

மிக சரியான விமர்சனம் அதிஷா! :)
எனது விமர்சனம்... கார்ட்டூனாக,
http://cartoonian-bala.blogspot.com/2011/07/blog-post_23.html

kannadiyan said...

supporting of these type of movies will become a very bad examples for the future generation.

ILA (a) இளா said...

இப்பல்லாம் தமிழ்/வேறு மொழி ரெண்டையும் பார்த்து தொலக்க வேண்டியிருக்கு :(

Thana said...

have you seen the I am Sam movie before this tamil movie??

pannikutti ramaswamy said...

kaluthakku teriyuma karpura vasana, see the vikram acting

Rathnavel Natarajan said...

ரொம்ப கடுப்பேத்தறாங்க மைலார்ட்.
என்னதான் காப்பி பேஸ்ட்டா இருந்தாலும் படத்தோட ஆறுதலான அம்சம் ஒன்னு மியூசிக்

அருமையான விமர்சனம் அதிஷா.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

aah, aaah , this is not a good review
etho un appan viddu sothha kolla adicha mathiri reumba seen poddu elluthururukkuraa ithu yayamma, avan kasrapattu padam eduppan annna nee etho vellakarannukku sevaseiravan maathiri rembaa over poraa, athill nadikka hero evallavu kastra pattiruppan, unkala polla alukalukku, vijay rajini da mookka cinima thaan sari,thappa solliiruntha plz forgive me and accept my apologize too,cos u heart me and my hero vikarm not only for him it's about the film crew's hard work , so don't do that again,
santhanam pasela sollanum enda , oru laptopum internet connectionnum irukkura unakke evalavu ithunnaa, kasrapattu padam pannina avanukalluku eppidi irukkum
???????????????????/////

MSV Muthu said...

well said athisha!

முரளிகண்ணன் said...

குட் ஷாட்

Thirumalai Kandasami said...

Ithukku per thiruttu illayam,,Idea vam..Kodumai..kodumai..

கத்தார் சீனு said...

அதிஷா.....நான் நினைக்கரது அப்படியே உங்க எழுத்துல இருக்கு....
படத்துக்கு பேர் போடும் போது credits போட்டா பிரச்சினை... அது கூட ஓகே.....
ஆனா பேட்டி குடுக்குறானுங்க பாருங்க.....முடியல....

Sasikumar B said...

Sir, song is alos copied from Robinhood animation movie.

Unknown said...

@athisa மியூசிக்-ah அதுவும் காப்பிதான் ..!! Pa Pa song original - http://www.youtube.com/watch?v=GouLP2GE1M8

T.V.ராதாகிருஷ்ணன் said...

PL.see
http://tvrk.blogspot.com/2011/07/29-7-11.html

AravindBharathi said...

Anyways Vikram still proves himself again....

i still remember when dakota fanning's dialgues where ringing in my ears for days after i watched 'I'm Sam' the first time.

'Creativity is never in its purest form'உண்மை தான்..அதுக்காக ஒரு நன்றி கூட சொல்லாத பழக்கத்த வெச்சிக்கிட்டு ஒரு வெண்கலக்கிண்ணம் கூட வாங்க முடியாது உலக அரங்குல..

ஆனாலும் google youtube காலத்திலும் அசராம காப்பி அடக்கிற தமிழ் இனம் வாழ்க ..

(never mind copy cats1They will never survive long)

அமுதா கிருஷ்ணா said...

அந்த பலூன் சீன் தமிழ்படத்துல வலது பக்கமாய் இருந்து இடது பக்கமாய் சாலையினை க்ராஸ் செய்வாங்க..ஐ ஆம் சாம் படத்தில் இடமிருந்து வலமாய் க்ராஸ் செய்றாங்க.பாட்டு கூட காப்பி மைலார்ட்..10 வருடம் கழித்து தானே காப்பி செய்து இருக்காங்க.டிவி பேட்டி பார்த்தா தான் போங்கடா என்று எரிச்சல் வருது.

DINESH said...

sir..vijay panna oru thappu..title card la story nu avanga name ah pottathu..athukaaga ninga motha unitayum kura solla kudathu..vikrama kura solringaley...ungalala apdi nadika mudiyuma...chumma pesalam..

Raashid Ahamed said...

உங்கள மாதிரி உஷாரான ஆளுங்க இருக்கிற வரைக்கும் வேற மொழிப்படத்தை ஆட்டைய போட்டு படமெடுக்குறது கஷடம் தான். என்ன பண்றது ? தமிழ் பட ரசிகர்களிலேயே விவரம் தெரியாத அப்பாவி ரசிகர்கள் நிறைய பேர் இருக்காங்க ! அந்த ஏமாளிகள் இருக்கிற வரைக்கும் இந்த மாதிரி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். திருட்டு கதைன்னாலும் நல்லா ஒடுற கதையை ஆட்டைய போட்டது சாமார்த்தியம் தான். நல்லா விக்கிற பொருளை ஆட்டைய போட்ட திரு.. டைரக்டரை பாராட்டலாம்.

natarajan said...

அசல் தான் போலியையும் மிஞ்சி விடும் என்பது இந்த திரைப்படத்தின் மூலம் முழுமையாக நிரூபிக்கப்பட்டது.
நான் சொன்னது கதை அல்ல.வெட்டியாக நான் தான் பண்ணேன்.கஷ்டப்பட்டு ரூம் போட்டு யோசிச்சேன் என உளறுவதை சொல்கிறேன்..

Anonymous said...

I accept with you. Nobody want to see Tamil Cinema, any more...

Shanmugam Rajamanickam said...

நீங்க டப் பண்ணி எடுத்தா சொல்ற அந்த படத்தோட யூடியுப் லிங்க் இருந்தா தாங்களேன் அந்த படத்த நான் பாக்கணும். SHANMUGAM088@GMAIL.COM

குரங்குபெடல் said...

நல்ல பதிவு

நன்றி

ஆனால் . . .


"நந்தலாலா - மிஷ்கின் ஐ லவ் யூ"

முரண் ...... !?

Anonymous said...

அருமையான பதிவு அதிஷா.

ஆனால், பல்லு இருக்குறவன் பர்பி சாப்பிடுறான்!!உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி ?

Anonymous said...

அருமையான பதிவு அதிஷா.

ஆனால், பல்லு இருக்குறவன் பர்பி சாப்பிடுறான்!!உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி ?

Anonymous said...

Hate this sense of commenting!!!....
Thousand and infinite dislikes...!!

try to appreciate things ....

I am sam is not known to normal people...it is now known only bcoz of this film..

குடிமகன் said...

விஜய் னு பேருவச்ச எல்லாருமே இப்படிதான் பாஸ், நீங்க ஒன்னும் கோவபடாதிங்க!!

Anonymous said...

nanthalaala kaappikku ithu evvalavo thevalai

குடிமகன் said...

பாஸ், இன்று தான் நான் படத்தை பார்த்தேன். நான் இன்னும் I am sam பார்க்கவில்லை, சீக்கிரம் பார்த்துவிடுவேன்.. நீங்க விஜய் மேல பயங்கர கொலைவெறியில இருகிங்கபோல.. இருக்கலாம் தவறில்லை.. ஏனென்றால்.. தனது சொந்த கதை என்று டமார் அடிக்கிறார் அவர்.

ஆனால் விஜய் சிறந்த ஒரு கதையை தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளார். நிச்சயமாக தமிழர்களாகிய நாம ரொம்பவும் முன்னேறி இருக்கோம் ஆங்கில படங்களெல்லாம் பார்க்கிறோம். ஆனால் எத்தனை தமிழ்மக்கள் இந்தப்படம் வருவதற்கு முன்பு I am sam ஐ பார்த்திருப்பார்கள்?

சொந்தமாக கதை எழுதி - இயக்கிய படம் என்கிற ஒரே காரணத்திற்காக ஒரு மொக்கை படத்தை பாக்க சக்கிகுமா?

நம்மூர் மொக்கை கதைகளுக்கு, நல்ல வெளியூர் கதைகளை சுட்டு படமெடுப்பது பரவாயில்லை என்றே எனக்கு தோனுகிறது..

லேப்டாப் வைத்துக்கொண்டு இன்டர்நெட்ல இங்க்லீஷ் பாடங்களை டவுன்லோடு பண்ணி பாக்கறவங்க மட்டுமே தமிழ் சினிமாவின் ரசிகர்கள் இல்லை. இன்னும் தமிழினத்தின் பெரும்பான்மையானைவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.

அமெரிக்கர்களின் பெருந்தன்மையையோ அல்லது வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் தன்மையையோ ஒரு இந்தியரான விஜய் கிட்ட எதிர்பார்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்..

வெளிநாட்டு நட்பின் விளைவாக வருங்கால இளைய தலைமுறை வெளிப்படையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

Anonymous said...

poramai pudichavanga vimarsanam ellam velai seyyathu! deivathirumagal won the 2 international awards(Osaka). so DTM movieya porukka mudiyala na poi poison kudichu savudi! athisha kandaravoli munda!!!

Anonymous said...

oru mayirum theriyama summa ukkanthu vimarsanam pandravalai vida antha padathula nadichavanga than better ...