02 August 2012

குடிபொலி!

நம் நண்பர்களில் சிலர் ‘’பாஸ் நான்லாம் எப்பயாச்சும்தான் குடிப்பேன்.. அதுவும் ஃப்ரண்ட்சோட மட்டும்தான்.. அப்பகூட லைட்டாதான் சாப்பிடுவேன்’’ என பீத்திக்கொள்வதை பார்த்திருக்கலாம். அதை சொல்லி முடித்த அடுத்த நிமிடம் குவாட்டர் ஆஃப் ஃபுல் என பாட்டில் பாட்டிலாக உள்ளே தள்ளுவதையும் ஓசி குடி குடிப்பத்தையும் பார்த்திருப்போம். நொந்திருப்போம். இன்னும் சிலர் வேறுமாதிரி ‘’ஐ ஒன்லி டேக் பீர்டா, ஆக்சுவலி பீர் ஈஸ் நத்திங் பட் கூல்ட்ரிங்ஸ்னா' ‘ என்று ஷேக்ஸ்பியர் போல பீட்டர் விட்டு, ஓசியிலேயே பீர் வுட்டு அடுத்த நொடி மட்டையாவதையும் பார்த்திருக்கலாம்.

குடிப்பழக்கத்தை விடவும் குடிப்பதற்கு காரணம் சொல்லும் பழக்கம் நம் தாய்த்தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது. இது ஒரு கொடிய நோயைப்போலவும் மாறிவருகிறது. இந்த காரணகர்த்தாக்கள் அவர்களுடைய காசில் குடிப்பதற்கு ஆயிரம் காரணங்களையும் ஓசிகுடி குடிக்க ஒராயிரம் காரணங்களையும் எப்போதும் மனபாட்டிலுக்குள் மிக்ஸிங் போட்டுக்கொண்டே அலைகின்றனர். இதுமாதிரி காரணங்கள் யாரை திருப்திப்படுத்த சொல்லபடுகிறது என்பதில் எனக்கு அநேக சந்தேகங்களுண்டு.

''தினமும் ஒரு பெக் ஓட்கா குடிக்கறது உடம்புக்கு நல்லது'' , ‘’விஸ்கி குடிக்கறது விரலுக்கு நல்லது’’ என்று அறிவியல் பூர்வமாக குடிப்பதற்கான விளக்கத்தினை தருபவர்களும் உண்டு. இந்த விஞ்ஞானிகளுக்கு மாலை ஆறுமணியாகிவிட்டால் குடித்தே ஆகவேண்டும் இல்லையென்றால் நடுக்கம் நரம்பு தளர்ச்சியெல்லாம் வந்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கும். இருந்தும் ஊருக்குள் பெரியமனுஷனாக உலாவருவதால் அந்த கெத்தை மெயின்டெயின் பண்ண உடல்நலத்துக்காக குடிக்கிறேன் என சொல்லிக்கொண்டு திரிவதை பார்க்கலாம்.

அண்மையில் மதுரையின் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வகுப்பறையிலிருந்து பெஞ்சை திருடிக்கொண்டு போய் விற்று அந்தக்காசில் குடித்து மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த செய்தி உங்களுக்கு சிரிப்பை வரவழைத்தால் நிச்சயம் உங்களுக்குள் வெட்டி பெருமைக்கு குடிக்கிற குடிகாரன் ஒருவன் மறைந்திருப்பான். இதே செய்தி கோபத்தை உண்டாக்கினால் உங்களுக்கு உள்ளேயும் ஒரு காந்தி தாத்தா குடியிருக்கலாம். அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்! ஜெய் ஹிந்த்.

இந்த பையன்களிடம் போய் ஏன் குடிக்கிறாய் என்று கேட்டால் அவனுடைய பதில் என்னவாய் இருக்கும்! போடங்.. என்று ஏதாவது பலான கெட்டவார்த்தையில் திட்டுவான். அதை வாங்கிக்கொண்டாலும் அவனிடமும் ஒரு காரணம் இருக்கும் என்பதை உணரவேண்டும். அது அவனுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அது தெரியாமலிருக்கும். ஆனால் நமக்கு தேவையில்லை. ஏற்கனவே இரண்டு பத்தி எழுதியாகிவிட்டது.

ஒரு குடிகாரனாகப்பட்டவன் எதற்காக குடிக்கிறோம் என்கிற தெளிவோடு குடிக்க வேண்டாமா! கைநடுக்கத்தினால் குடிப்பது, நண்பர்களுக்காக குடிப்பது, கொலை செய்வதற்காக குடிப்பது, கற்பழிப்பதற்காக குடிப்பது, கவிதை எழுதுவற்தகாக குடிப்பது, காதல் தோல்வியில் குடிப்பது, வெற்றியில் குடிப்பது, பொண்டாட்டி தொல்லையால் குடிப்பது, சம்பளம் வந்த்தெற்கெல்லாம் குடிப்பது என எத்தனை காரணங்கள். இப்படி குடிப்பவர்களிலரும் போதையில்லாத அதிக வாடையில்லாத பீர்,ஜின்,வோட்கா மாதிரி சமாச்சாரங்களை குடிப்பது என.. இதெல்லாம் குடிப்பழக்கத்திற்கே இழுக்கில்லையா? இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை பற்றி எழுதும்போதே கொலைவெறி வருகிறது. சைட் டிஷ் சாப்பிடுவதற்காகவெல்லாமா குடிப்பார்கள்.. என்ன கோராமை! கொடுமையிலும் கொடுமை. இதையெல்லாம் கேப்டனாவது தட்டிகேட்டிருக்கவேண்டும். ஏனோ கேட்கவில்லை. முதல்வரானபிறகாவது நீங்கள் கேட்க வேண்டும் கேப்டன்.

நாம் எதற்காக குடித்தாலும் என்ட் ஆஃப் தி டே போதை ஈஸ் த வின்னர் என்பார் கவிசாஸ்திரி என்கிற கவிஆர்டி ஷரண் சுந்தர்! அது உண்மைதானே..

சிலரோ நான்கு ஃபுல் அடித்தும் போதையே ஏறவில்லை என பெருமைபீத்தி கொள்வதை பார்க்கலாம். காரண குடிகாரர்களை விடவும் மோசமானவர்கள் இந்த பார்ட்டிகள். போதை ஏறவில்லையென்றால் அந்த நபர் குடிக்காமலேயே இருந்துவிடலாமே. அல்லது கஞ்சா அபின் மாதிரியான நார்காடிக்ஸ்களை முயற்சித்து சாகலாமே! (போலீஸ் பிடித்தால் நசுக்கிவிடுவார்கள் சட்டையை.. ஆமாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்தான்). கஞ்சா அபினிலும் போதை கிடைக்கவில்லையென்றால் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவுகள் நாலைந்தையாவது தினமும் படித்துவரலாமே. அதைவிட்டுவிட்டு ஏன் தொடர்ந்து போதை தராத சப்பையான ஒன்றை கட்டிக்கொண்டு மாறடிக்க வேண்டும் என்கிற தத்துவார்த்தமான கேள்வி ஏன் எந்த ஒரு குடிகாரரின் மனதிலும் எழுவதில்லை.

இதற்கு குடிக்காமயே இருந்துவிடலாமே? ஏன் குடிக்க வேண்டும். நான் கேட்கிறேன், உண்மையான குடிகாரன் யாரென்று தெரியுமா உங்களுக்கு.. நல்லா குட்ஸ்ட்டு நடுரோட்ல வாந்தியெடுத்துட்டு வாந்திமேலயே மட்டையாகுறானே அவன்தான் உண்மையான குடிகாரன். ஒரு குவாட்டரை வாங்கி சைட் டிஷ், வாட்டர் பாக்கெட், மிக்ஸிங் கூல் ட்ரிங் ஏன் பிளாஸ்டிக் கப்பு கூட இல்லாமல் ராவாக ஒரே கல்ப்பில் குடிக்கிறானே அவன்தான் உண்மையான குடிகாரன். காரணமேயில்லாமல் கடன்வாங்கியாவது காலங்காத்தால டாஸ்மாக் வாசல்ல நின்னு கோட்டர் வாங்கி குடிக்கறானே அவன்தான் உண்மையான குடிகாரன்.

சிக்கன் பீஸில்லாமல் குடிக்க மாட்டேன் என சீன் போடுகிறானே அவனா குடிகாரன்... ஆயா செத்துப்போச்சு அதனால் குடிக்கிறேன் என்கிறானே அவனா குடிகாரான்.. அல்லது ஏதாவது காரணம் சொல்லி ராயலாக பெருமைக்காக குடிப்பவனும் குடிகாரனா?

இவர்களால் உண்மைகுடிகாரர்களுக்கே இழுக்கு! ராணுவத்துல சேர்ந்தவன் பார்டர்ல எதிரியால சுடப்பட்டு செத்தாதான் மரியாதை.. குடிகாரன்னா குட்ச்சு குட்ச்சு குடல்வெந்து செத்தாதான் மரியாதை. கொடலு வேக குடிப்போம். குடும்பத்தை அழிப்போம். மீண்டும் ஜெய்ஹிந்த்.

****

உண்மையான குடிகாரர்களுக்காக மட்டும் இப்பாடல் சமர்ப்பணம். கோவை படைப்பாளிகள் எப்போதும் சோடை போவதில்லை. அவர்களுக்கென்றே ஒரு ஸ்டைலும் தனித்தன்மையும் இருக்கும். அது இப்பாடலில் நன்றாகவே தெரிகிறது. இன்று இப்பாடல் இடம்பெறும் மதுபானக்கடை திரைப்படம் ரிலீஸாகிறது. பார்த்துவிட்டு விமர்சனம் எழுதிகிறேன்.
****

பின்குறிப்பு – மாண்புமிகு புரட்சிதலைவி அவர்கள் விரைவில் மதுவிலக்கை அமல்படுத்த இருப்பதாக வதந்தி உலவிவருவதால் அதற்கு முன் ஒரு முறையாவது இந்த பீர் என்று சொல்லபடுகிற உற்சாக பானத்தை குடித்துப்பார்த்துவிட நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.
21 comments:

Unknown said...

//பீர் என்று சொல்லபடுகிற உற்சாக பானத்தை குடித்துப்பார்த்துவிட நினைத்திருக்கிறேன்//

ஏன் நண்பா!! மத்தவங்களை பார்த்து உங்கள் கையும் நடுங்க ஆரம்பிசிடிச்சோ!!??

Unknown said...

//பீர் என்று சொல்லபடுகிற உற்சாக பானத்தை குடித்துப்பார்த்துவிட நினைத்திருக்கிறேன்//

ஏன் நண்பா!! மத்தவங்களை பார்த்து உங்கள் கையும் நடுங்க ஆரம்பிசிடிச்சோ!!??

கோவை நேரம் said...

செம பதிவு...சூப்பரா எழுதி இருக்கீங்க...(காரணம் கிடைத்து விட்டது.,)
மச்சி..ஒரு குவார்ட்டர் சொல்லேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

விளையாட்டுத்தனமாக பீரில் ஆரம்பித்து... மூன்று வேளையும் குடிக்கும் அளவிற்கு போய் விடுகிறார்கள்... இன்று அதை விட முடியாமல் இன்று தத்தளித்துக் கொண்டு இருப்போர் பலர்...

பல குடும்பங்கள் வீதிக்கு வந்து விட்டன... சிறு சந்தோசமோ, சிறு சோகமோ முதலில் போவது இங்கே தான். பிறகு இவர்கள் மதுவை விட நினைத்தாலும், மது இவர்களை விடுவதில்லை...

மது விலக்கு வந்து விட்டால் கள்ளச்சந்தை களை கட்டி விடுமே...

குடிப்பவர்களின் மனது முதலில் மாற வேண்டும்... அது தான் உண்மையான மதுவிலக்கு...

நன்றி.

விஜி செந்தில் said...

என்னது கடைசில நீங்களும் பீர் குடிக்க ஒரு காரணத்தை கண்டு பிடிச்சுட்டீங்க..???உங்க பதிவை படிச்சுட்டு (முக்கியமா அந்த நடு ரோட்டுல புரள்கிற வரிகள்) யாராவது ஒருத்தராவது குடிக்கறத நிப்பாட்டுவாங்கனு பார்த்தா “கோவை நேரம்” முதல் கமெண்டே பயமுறுத்துது!

விஜி செந்தில் said...

என்னது கடைசில நீங்களும் பீர் குடிக்க ஒரு காரணத்தை கண்டு பிடிச்சுட்டீங்க..???உங்க பதிவை படிச்சுட்டு (முக்கியமா அந்த நடு ரோட்டுல புரள்கிற வரிகள்) யாராவது ஒருத்தராவது குடிக்கறத நிப்பாட்டுவாங்கனு பார்த்தா “கோவை நேரம்” முதல் கமெண்டே பயமுறுத்துது!

Kanagu said...

அதற்கு முன் ஒரு முறையாவது இந்த பீர் என்று சொல்லபடுகிற உற்சாக பானத்தை குடித்துப்பார்த்துவிட நினைத்திருக்கிறேன் - Ippadiyum kaaranam kandu pidipaarkal intha altra modern Kudikaararkal... ;-)

Unknown said...

tamilnatuu mudhalvaruku kettkum badi sollunga ji.......300vidukaluku oru tasmac ithuthan tamilnattu tasmac kin turnover target..makkal ezhuchi perum nal miga tholaivil illai.....orunal ilam vithaivaigal athigam ulla nadu ulagil ....tamilnadu enru geniusil varum..ithuthaen jj vin sadhanai....

Unknown said...

athiga illan vithavaigal ulla nadu ulagathil..tamilnaduthan endru oru nal geniusil seithi varum ..ithuthan mother jj vin sadhanai

குவாட்டார் கோவிந்தன் said...

என்னப்பா குடி குடின்னு ஏதோ கூவிக்கிட்டே இருந்தே, இப்ப சத்தமே காணேம், ஓ மட்டை ஆயிட்டயா? ஓகே வுட்டுறு. ஏம்பா தம்பி இங்க ஒரு குவாட்டர் கொண்டாப்பா!

Unknown said...

குடிகாரன்களுக்கு எந்த ஒரு அற்ப காரணம் கிடைத்தாலும் போதும். ஒரு ஜட்டி வாங்கினால்கூட ஒரு ஃபுல் அடிக்கும் பார்ட்டிகள் இருக்கிறார்கள்.

Anonymous said...

ஆஹா அருமை சூப்பர் பதிவு...
---

எங்கே செல்லும் இந்தப் பாதை?......
http://sindanaisiragugal.blogspot.in/2012/08/blog-post.html#more

ShaggyLad said...

நல்ல பதிவு..

perumal karur said...

இப்போ குடிக்கலான்றீங்களா வேண்டான்றீங்களா??

கொஞ்சம் ‘’ தெளிவா “’ சொல்லுங்கோண்ணா!!

Anonymous said...

u promise me, that u don't drink raju.

குரங்குபெடல் said...

" பின்குறிப்பு – மாண்புமிகு புரட்சிதலைவி அவர்கள் விரைவில் மதுவிலக்கை அமல்படுத்த இருப்பதாக வதந்தி உலவிவருவதால் அதற்கு முன் ஒரு முறையாவது இந்த பீர் என்று சொல்லபடுகிற உற்சாக பானத்தை குடித்துப்பார்த்துவிட நினைத்திருக்கிறேன். பார்ப்போம்."


யப்பா ...


உலக நடிப்புடா சாமி ....

நல்ல பதிவு

நன்றி

Raashid Ahamed said...

படத்துல உள்ள மாதிரி ஒரு பிகர் பக்கத்துல உட்கார்ந்து பச்ச தண்ணியை ஊத்தி கொடுத்தாலே குப்புனு போதை ஏறும் பாஸ். ஆமா நான் உங்களை நல்லவருன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். எழுதி இருக்குறதை பாத்தா குடிகாரனுக்கெல்லாம் சப்போட் பண்ணி இருக்குற மாதிரி தெரியுது. ஒரு வேளை ?

Rathnavel Natarajan said...

உங்கள் பதிவிலேயே சிறந்த பதிவு இது தான் அதிஷா.
படித்துப் பாருங்கள். நன்றி திரு அதிஷா.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

புதியவன் பக்கம் said...

Excellent !
தமிழில் என்ன சொல்ல வேண்டும்? உத்தமம் ...? உன்னதம்...? கொஞ்சம் இறக்கினால் ஒருவேளை பதில் கிடைக்கலாம்.

வவ்வால் said...

1919 முதல் 40 வரை என நினைக்கிறேன் ,அமெரிக்காவில் மது விலக்கு இருந்துள்ளது, அதனால் கள்ளச்சாராயம் தான் அதிகம் ஆச்சு,மேலும் மாபியாக்கல் நிறைய உருவாகவும் காரணம் ஆச்சு.

அப்போ கனடாவில் மதுவிலக்கு இல்லை என்பதால் அங்கிருந்து கடத்தி வந்து விற்றார்கள், அமெரிக்க அரசுக்கு லேட்டாத்தான் புரிஞ்சது மதுவிலக்கினால் வருமான இழப்பு அதோடு கள்ளச்சாராயம் ,மாபியான்னு பாதிப்பு தான் அதிகம்னு, எப்படியோ குடிச்சுக்கோங்கன்னு திறந்து விட்டுட்டாங்க.

இப்போ அமெரிக்காவில் வீட்டிலேயே விஸ்கி, ஒயின்,பீர் கூட காய்ச்சிக்கலாம் , ஆண்டுக்கு இத்தனை லிட்டர்னு ஒரு அளவு மட்டும் வச்சு இருக்காங்க.

கூகிளில் "ஹோம் பிருவிங், பீர் மேக்கர்னு தட்டிப்பாருங்க 100 டாலருக்கு கிட் கிடைக்கும்,அவனே மூலப்பொருளும் கொடுக்கிறான் , அதை உள்ளேப்போட்டு தண்ணிய ஊத்தினா முதல் தரமான பீர் சில மணிகளில் தயார்.

அது போல ஒரு சுதந்திரம் இந்தியாவுக்கும் வந்தா காசும் மிச்சம் ஆகும், நல்ல சுத்தமான சரக்கும் கிடைக்கும்.

இப்போ 5 ரூ மதிப்புள்ள 1/4 75 ரூக்கு வாங்கி குடிக்க வேண்டி இருக்கு ,அதுவும் மகா மட்டமா இருக்கு ,தனி ஒருவனுக்கு சரக்கு இல்லை எனி ஜகத்தினை எரித்திடுவோம் :-))

பல உலக நாடுகளில் வீட்டில் நயம் சரக்கு தயாரிச்சு விற்கவும் உரிமை இருக்கு.

சுவிஸ்,ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் வைன் யார்ட் டூரிசம்னு எல்லாம் வச்சு இருக்காங்க.வைன் தயாரிக்கும் இடங்களில் தங்கி உயர் ரக வைன் குடிச்சு ஓய்வு எடுக்கலாம்.

இந்தியாவிலயும் இருக்கு நாசிக்கில் திராட்சை பண்ணைகளில் பணக்காரர்களுக்கு மட்டும் நடத்துறாங்க, கையில கொஞ்சம் காசு சேர்த்துக்கிட்டு நாசிக் போலாம்னு ஒரு ஐடியா இருக்கு :-))

Anonymous said...

hi,
Padhivargal, oru kaalathil, Narsim kaasil osikudi kuduthadhu, eno en manadhukku vandhu tholaikinradhu.

Btw,why Prabala padhivar Narsim was not invited for the Sandhippu? Innum niraya osikudi kudithu irukalaam.