16 January 2013

என் பெயர் ரிசானா...இந்த மதம் அந்த மதம் என்றில்லை எல்லா மதமும் தனக்கேயுரிய சர்வாதிகார அரக்க குணங்களுடன்தான் இருக்கின்றன. நமக்குள்ளிருந்த கடவுளை கொன்றுவிட்டு மதத்தை கட்டிக்கொண்டு மாறடிப்பவர்களாகத்தான் மாறிவிட்டோம்.

மற்ற மதத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் போதெல்லாம் கூடி கும்மியடிப்பதும், தன்னுடைய மதத்தைப்பற்றி யாராவது ஏதாவது சொல்லிவிட்டால்.. கிடந்து தையா தக்கா என்று குதிப்பதும்தான் மதவாதிகளின் வாடிக்கையான செயலாக இருக்கிறது. அதற்கு இந்து இஸ்லாமிய கிறித்தவ எக்ஸட்ரா எக்ஸட்ரா பேதமேயில்லை.

சில நாட்களுக்கு முன் ரிஸானா என்கிற பெண்ணை சவூதி அரேபியா அரசாங்கம் மரணதண்டனை என்கிற பெயரில் மிக கொடூரமான முறையில் தலையை வெட்டி கொன்றது. இதை கண்டித்து இணையமெங்கும் ஏகப்பட்ட எதிர்ப்பலைகளை காணமுடிந்தது. இஸ்லாமிய சட்டங்கள் மீது கடும் விமர்சனங்களை பலரும் முன்வைத்தனர். உடனே பொத்துக்கொண்டு வந்துவிட்டது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு... சவூதியில் தரப்பட்ட தண்டனை சட்டப்பூர்வமானது.. நியாயமானது.. சரியானது என கையில் சொம்போடு நியாயம் சொல்ல கிளம்பிவிட்டார்கள்.

முதலில் ரிசானாவின் கதையை பார்த்துவிடுவோம்.

2005ஆம் ஆண்டு 17 வயதான ஏழைப்பெண்ணான ரிசானா இலங்கையிலிருந்து பஞ்சம் பிழைக்க சவூதி அரேபியாவுக்கு வருகிறார். வந்த இடத்தில் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கிறார். வேலைக்கு சேர்ந்த சிலநாட்களில் பணியாற்றும் வீட்டிலிருந்த நான்கு மாத குழந்தைக்கு உணவுதரும் போது அக்குழந்தை மூச்சுதிணறி இறந்துவிடுகிறது. அதற்கு ரிசானாதான் பொறுப்பு.. அவள்தான் அக்குழந்தையை ஈவிரக்கமின்றி கழுத்தை நெறித்து கொன்றவர் என அபாண்டமாக குற்றம் சுமத்துகின்றனர் குழந்தையின் பெற்றோர்கள்.

ஏழை சொல் எதிலேயோ ஏறாது என்பதற்கிணங்க இந்த பெண்ணின் குரலுக்கு அரசாங்கம் செவிகொடுக்கவேயில்லை. அரசுதரப்பு உறுதியாக ரிசானாதான் கொலைசெய்தாள் என்று வாதாடியது. நீதிமன்றத்தில் மட்டும் என்ன வாழுதாம்.. ஏழு ஆண்டுகள் விசாரணை நடத்தி அவர்களும் கொலையை உறுதி செய்து அப்பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.

ஒரு குழந்தையை கொன்றதாக கூறி இன்னொரு குழந்தைக்கு மரணதண்டனை என்பதை விடவும் கேவலமான சட்டம் உலகில் எங்குமே இருக்க முடியாது.

இவ்விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்து, இலங்கை அரசு ரிசானாவை விடுவிக்க கோரி மன்றாடியது. மனித உரிமை கமிஷனும் கெஞ்சிக்கேட்டது. ம்ம் இஸ்லாமிய சட்டம்னா சட்டம்தான்.. கொல்றதுன்னா கொல்றதுதான் என விடாப்பிடியாக மறுத்துவிட்டார் சவூதி மன்னர். ரிசானாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டாள் ஒன்றும் பண்ணமுடியாது என மறுத்துவிட்டது சவூதி அரசு.

ஐநாவின் மனித உரிமை கழகத்தை சேர்ந்த ரூபர்ட் கோல்விலே இவ்விஷயம் குறித்து வேறொரு பிரச்சனையை முன்வைக்கிறார். அது மிகமுக்கியமானதும் கூட.
'' அந்த பெண்ணை அடித்தும் துன்புறத்தியும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கியுள்ளனர். அதோடு நீதி விசாரணையின் போது அவளுக்கு வக்கீல்களின் உதவி கொடுக்கப்படவில்லை. அதோடு மொழிதெரியாத அந்தபெண்ணுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரையும் ஏற்பாடு செய்துதரவில்லை. இந்த விசாரணை எப்படி உண்மையானதாக இருக்க முடியும்'' என்கிறார்.

உலக அளவில் மரணதண்டனை அமலில் உள்ள நாடுகளில் அதிகம் பேரை ஆண்டுதோறும் கொல்லுவோர் பட்டியலில் சவூதிக்கு நான்காமிடம்! (முதலிடம் நமது அண்டைநாடான சீனாவுக்கு!) 2011ஆம் ஆண்டில் மட்டும் 85பேரை கொன்று குவித்திருக்கிறது சவூதி. இதில் பெரும்பாலனவர்கள் சாதாரண வேலைகள் பார்க்க சென்ற ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்த ஏழைகள்.

சவூதி அரேபியாவின் சட்டங்கள் இதுபோல பஞ்சம் பிழைக்க வருபவர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானதாக இருப்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தன் அறிக்கையில் கூறுகிறது. நீதிமன்ற விசாரணையின் போது அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களின் உதவியை வழங்கியே ஆகவேண்டும் என்றெல்லாம் சட்டம் கிடையாது. உங்களுக்கு அந்த ஊர்மொழி தெரியாவிட்டால் கொடுக்கிற தண்டனையை வாங்கிக்கொண்டு வாயைமூடிக்கொண்டு தலையை கொய்தாலும் அமைதியாக குனிந்து கொள்ள வேண்டியதுதான். ஒருவேளை உங்கள் நாட்டு தூதரகம் ஏற்பாடு செய்தால் உதவலாம். ரிசானா விஷயத்தில் இலங்கையின் தூதரக கட்டுப்பாடுகளால் அந்த உதவியும் கூட கிடைக்கவில்லை.

இதுபோன்ற கொடூரமான சட்டங்களை கொண்ட நாடுகளை சரிசெய்ய ஒரே வழிதான். இந்தியா இலங்கை மலேசியா போன்ற நாடுகள் சவூதிக்கு தன் மக்களை பணிக்கு செல்வதற்கு தடைபோடுவதுதான். இதை 2011ஆம் ஆண்டிலேயே இந்தோனேஷியா செய்துள்ளது.

அந்நாட்டை சேர்ந்த 54 வயது ருயாத்தி என்கிற பெண் சக பணியாளரை கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்படு மரண தண்டனை பெற்றார். அவருடைய தலையையும் துண்டித்து நீதியை நிலைநாட்டியது சவூதி அரசு. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது இந்தோனேஷிய அரசு.

உடனடியாக அந்நாட்டுக்கு பணியாளர்களை அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்தியது இந்தோனேஷியா. அதோடு அங்கே பணிபுரிந்தவர்களையும் திருப்பி அழைத்துக்கொண்டது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற நாடுகளுக்கு இதைவிடவும் சரியான எதிர்வினையை செய்யவே முடியாது. 'இப்படி செய்தாலாவது சவூதி தன் நாட்டுக்கு வந்து வேலைபார்ப்பவர்களுக்காக கொஞ்சமாவது தன் சட்டங்களை மாற்றிக்கொள்ளாதா என்பதே எங்கள் எதிர்பார்ப்பு'' என இந்தோனேஷிய வெளியுறவுதுறை மந்திரி பேட்டிகொடுத்தார். ம்ஹூம் எந்த மாற்றமுமில்லை.

2008ஆம் ஆண்டு HUMAN RIGHTS WATCH ரிப்போர்ட் ஒன்றை சமர்பித்தது. அதில் சவூதி மாதிரியான அரபு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் என்ன மாதிரியான பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என விலாவாரியாக விளக்கியிருந்தனர். இது தொடர்ந்து இன்று வரை நடந்துகொண்டிருக்க கூடிய சமாச்சாரம்தான். இதைப்பற்றியெல்லாம் எந்த இஸ்லாமிய அடிப்படைவாதியும் மூச்சுவிட்டதாகக்கூட தெரியவில்லை. இந்த அரபுநாடுகளில் இஸ்லாமிய பெண்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலே நிலவுகிறது. இஸ்லாமிய சட்டங்கள் தாலிபான்களின் அடக்குமுறைகளுக்கு கொஞ்சம் சளைக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தண்டனைகளும் அதே கொடூரங்களோடுதான் உள்ளன.

ரிசானாவை கொன்றதில் இருக்கிற பிழைகளை சுட்டிக்காட்டினால் மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது இந்த மதநல்லிணக்க நாயகர்களுக்கு.. இதுபோன்ற காரியங்களை அல்லாஹ்வின் பெயரால் எப்படி இந்த பாதகர்களால் செய்யமுடிகிறது என்று கேட்டால் போச்சு.. ரவுண்டு கட்டி உங்க மதத்துக்கும் எங்க மதத்துக்கும் சோடி போட்டு பாப்பமா சோடி.. விவாதத்துக்கு வரீயா.. என ஒத்தைக்கு ஒத்தை வம்பிழுக்க வந்துவிடுகிறார்கள்.

ரிசானாவின் படுகொலையை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகளோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம். தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது. அதை தடுக்க முடியாமல் போலீஸார் திண்டாடுகிறார்கள். வெளிமாநிலங்களிலிருந்து குறிப்பாக பீகார் மாதிரியான பின்தங்கிய மாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் பிழைப்பு நடத்துகிற அப்பாவிகளை கொன்று பயத்தின் வழியே நீதி நிலைநாட்டப்படுகிறது.

இதையேதான் அரபு நாடுகளும் மேற்கொள்கின்றன. என்ன இங்கே சட்டம் அதை ஒப்புக்கொள்ளாது. ஆனால் அங்கே சட்டமே துணையாக நிற்கும். இதுமாதிரி தண்டனைகளால் மக்களை நிரந்தர அச்சத்தில் வைப்பதே இதன் பின்னிருக்கும் சாரம்சம். இக்கொடுமைக்கு தேச வேறுபாடின்றி பலிகொடுக்கப்படுவது இதுபோல பஞ்சம்பிழைக்க வந்த அகதிகளே. நம்முடைய இந்து தேசத்திலும் கூட மக்களை அச்சத்தில் வாழவைக்க சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் அவ்வப்போது கட்டவிழ்க்கப்படுவதும் இதன் நீட்சியே.

இப்படிப்பட்ட தேசத்தில்தான் நாம் மரணதண்டனை வேண்டும் என உரக்க குரல் கொடுக்கிறோம். தூக்கிலிடுவதை வரவேற்கிறோம். அஹிம்சையை உலகுக்கே போதித்த நாடு என்று ஒருபக்கம் பீத்திக்கொண்டு இன்னொரு பக்கம் மனிதாபிமானமற்ற மரணதண்டனைக்கு வக்காலத்து வாங்குகிறோம். அதை விடுங்கள்.

இப்போதைக்கு நம்மால் முடிகிற காரியம் ஒன்றே ஒன்றுதான். உங்கள் உறவினர்கள் குறிப்பாக பெண்கள் யாரேனும் சவூதி மாதிரியான அரபு நாடுகளில் வேலைபார்த்துக்கொண்டிருந்தால் அவர்களை திருப்பி அழையுங்கள். பிச்சை எடுத்தாவது இங்கே பிழைத்துக்கொள்ளலாம். உயிராவது மிஞ்சும்.

38 comments:

ஞானசேகர் ராஜேந்திரன் said...

படிக்கையில் எழுந்த உணர்ச்சிகர வார்த்தைகளுக்கு கடைசியில் உருவம் கொடுக்க முடியவில்லை.
அருமையாக எழுதி இருக்குறீங்க. வாழ்த்துக்கள்..

Anonymous said...

Poda

Guna said...

நல்ல பதிவு நண்பரே...

Anonymous said...

என்ன வேனாதவ்று செய்யலாம் ஆனால் தண்டனை மட்டும் குடுக்க கூடாது

Anonymous said...

என்ன வேனாதவ்று செய்யலாம் ஆனால் தண்டனை மட்டும் குடுக்க கூடாது

Nayagan said...

அருமையான பதிவு. எதுக்கும் துண்டு போட்டு வெச்சிட்டு போறேன்

Anonymous said...

Sir, (can i call you sir),

we seven girls in our college are great fans of you. we don't miss any of your article in any form. So, nor to miss you, we had started subscribing Puthiya Thalaimurai.Sir four of us are coming to chennai next week. will there be any chance to meet you for some 15 minutes. we dont take your time more than 15 minutes. i will mail you shortly.
Thnx,
kuzhal, priya, hema, meena, vaanmathi, thamizh, vanitha.

Anonymous said...

Sir Ungaloda altimate starin adipodi Pichakaran yenum Ulaga maga sinthanaivaathi.... Netulagam potrum nadunilamaialar.... Islamiaaaa sataam Indiavirkku vendum yekira echakalikku intha articlea samarpikindren..... Vaala Charu Valarga Pichakaran

Php Mute said...

ஜதார்த்தத்தை சொல்லிறி கீங்க

Caricaturist Sugumarje said...

Good one!

Anonymous said...

Very bold article Athisha...

"சொம்போடு நியாயம் சொல்ல வருவார்கள்"....

உண்மையான வார்த்தைகள் வெறும் எழுத்துக்கள் மட்டும் அல்ல...

----மாக்கான்

சேலம் தேவா said...

//ஒரு குழந்தையை கொன்றதாக கூறி இன்னொரு குழந்தைக்கு மரணதண்டனை என்பதை விடவும் கேவலமான சட்டம் உலகில் எங்குமே இருக்க முடியாது. //

அந்த வீடியோவைப்பார்த்து விட்டு அரண்டு போய் இருந்தேன்.விளக்கமான விரிவான பதிவு.

Keanu said...

அவ்வளோ அவசரமா அந்த அம்மா அந்த கொழந்தய அந்த பொண்ணுகிட்ட குடுத்துட்டு எங்க போனிச்சாம். சட்ட படி பார்த்தா அந்த அம்மாக்குதான் தண்டனை குடுத்துருக்கணும்..., கண்டிப்பா ஏழையின் சொல் அம்பலம் ஏறாதுதான்

ராம்குமார் - அமுதன் said...

சுடும் உண்மை தோழர்... பதிவுக்கு நன்றி...

Unknown said...

//எல்லா மதமும் தனக்கேயுரிய சர்வாதிகார அரக்க குணங்களுடன்தான் இருக்கின்றன. நமக்குள்ளிருந்த கடவுளை கொன்றுவிட்டு மதத்தை கட்டிக்கொண்டு மாறடிப்பவர்களாகத்தான் மாறிவிட்டோம்.//

அஃதே, அஃதே !

Unknown said...

//ஒரு குழந்தையை கொன்றதாக கூறி இன்னொரு குழந்தைக்கு மரணதண்டனை என்பதை விடவும் கேவலமான சட்டம் உலகில் எங்குமே இருக்க முடியாது. //

உண்மை! ஆனால் கடவுள் தந்த சட்டம் என்று சொம்பு தூக்கி கொண்டு வருகிறார்கள்

Unknown said...

//Anonymous said...
என்ன வேனாதவ்று செய்யலாம் ஆனால் தண்டனை மட்டும் குடுக்க கூடாது//

ஆஹா ! என்ன ஒரு அருமையான் கேள்வி
தண்டனை கொடுக்கலாம்,
- தவறை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அறிந்து, பின் நிரூபித்து
- அந்த தவறுக்கு ஏற்ற தண்டனையை நிச்சயமாக தரலாம்

Anonymous said...


தூங்கும் பொழுது எழுந்த அந்த குறட்டை எனும் உன்னத சங்கீதத்தை புரிந்து கொண்டு அதற்க்கு உருவம் கொடுக்க முயன்று தொட்ட்றேன், பிறகு முன் சுன்றேன், பின் தொடரும் நிழலின் குரலை கேட்டபடியே. என்னத்தயோ சொல் வந்தன்.. சொன்னன தேரது. என்னத்தயோ சொல் வந்தன்.. சொன்னன தேரது. நான் ஜன்நோலரத்திளிருந்து ஒரு பாம்பை போட்டு வைக்கிறேன், இந்த பதிவிற்காக. 'எழொன் ஏழு, ஈரேழு பதினான்கு, மூவேழு இருபத்.....' ஐராவதம் கொல்லி மலையில் இருக்கிறதா?. பிச்ச் நாமச்ய, ஈ பதிவு சமர்பயாமி, பதினான்கு திருக்கரங்களும் தூக்கிய வலது காலு முடைய மூலவருக்கு, காதலி பலம் நைவேத்யயாமி.. இட்டாலிக், அண்டர்லைண்ட் ஆர்டிகிள். பேனா என்பது நிப்போ, மையோ மட்டும் அல்ல. அது அதையும் தாண்டி புனிதமானது.. தமானது.. வாசகர் வட்டம்.

Anonymous said...

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று செயல்படும் காட்டு மிராண்டிகள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு
http://www.luckylookonline.com/2013/01/blog-post.html

HARIS

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Anonymous said...

Saathi kalavarangalin nadandha kolaikalai paarthu silentaha rasithavarhal ipodhu savudal pesi naatamai seidhu inga irukum thamilaga muslimgalai vambiluppathu ivarkaladhu vaadikaiyagivitadhu. erkanavery oru naatamai theerpu sollama anaivaraiyum unfriend seidhuvittar.. neeyum andha kuttaiyil oooriya oru mattai enru nirupiththuviteer. ellam publicity kaha ivarkal seihinra velai thaan.

Riyas said...

Pls read this artical

http://lankamuslim.org/2013/01/16/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/

Riyas said...

இது காட்டுமிராண்டித்தனம் என உலகமே வாதிட்டாலும்﹐ ஒருவர் மாத்திரம் இதனைக் காட்டுமிராண்டித்தனம் எனக் கூற ஒருபோதும் முனைய மாட்டார். அவர்தான் கொலை செய்யப்பட்டவரின் சொந்தங்கள்﹐ தாய்﹐ தந்தையர்கள் அல்லது பிள்ளைகள்﹐ சகோதரர்கள் என்போர். இவர்களது உணர்வைத்தான் ஷரீஆ நீதியின் கர்த்தாவாகிய அல்லாஹ் கருத்தில் எடுத்திருக்கிறான். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.

நீதி அவர்களுக்குத்தான் வேண்டும். காட்டுமிராண்டித்தனம் எனக் கூக்குரலிடுபவர்களுக்கு இங்கு நீதி தேவையில்லை. அவர்கள் கொக்கரித்துக் கொண்டிருக்கட்டும். நீதி தேவையானவர்களுக்கு நான் நீதி வழங்குகிறேன் என மனிதனைப் படைத்தவன் எடுத்த முடிவுதான் ஷரீஆ நீதி.

Riyas said...

இந்த விமர்சனங்கள் உண்மையானால் (இந்த விமர்சனங்களின் உண்மைத் தன்மைகள் ஆராயப்பட வேண்டும்) குற்றம் யாரைச் சாரும்? ஷரீஆ நீதியையா? அல்லது நீதி விசாரணை செய்து ரிஸானாவைக் குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்கியவர்களையா? இந்த விமர்சனங்கள் உண்மையானால் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரிஸானாவை விசாரணை செய்து குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியவர்களுக்கே உரியன.

ஷரீஆ நீதி எந்த வகையிலும் ரிஸானா விடயத்தில் அநீதியிழைத்ததாகக் கூற முடியாது. இலங்கையில் பிரதம நீதியரசரை விசாரித்த முறை பிழையானது என ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஏன் ஊடகங்கள் நீதி பிழையானது என விமர்சிக்காமல் விசாரித்த முறை பிழையானது என விமர்சிக்க வேண்டும்? இலங்கையின் நீதி விடயத்தில் ஊடகங்களின் முகம் வேறு ஷரீஆ நீதி விடயத்தில் ஊடகங்களுக்கு மற்றொரு முகமா?

Unknown said...

Hello Athisha,

"பீகார் மாதிரியான பின்தங்கிய மாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் பிழைப்பு நடத்துகிற அப்பாவிகளை கொன்று பயத்தின் வழியே நீதி நிலைநாட்டப்படுகிறது".

Agree that Migrants from states like Bihar are MOSTLY innocents. But Those killed in Velachery encounter are not innocents...If they are innocents as per your sentence above, what would you call the people who might have lost their money that too even in a safe place bank?..Except this small glitch, your writing is true to the core.

Unknown said...

பீகார் மாதிரியான பின்தங்கிய மாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் பிழைப்பு நடத்துகிற அப்பாவிகளை கொன்று பயத்தின் வழியே நீதி நிலைநாட்டப்படுகிறது.

Agree that migrants from states are MOSTLY innocents but Those killed in velachery are not innocents. If they are innocents to you, what you would call the people who put their hard earned money in the bank thinking it is a safe place. Aren't they innocents?...Except this small glitch of using the word innocents in your sentence , what you said is true to the core.

perumal karur said...

தைரியமா உண்மையை சொல்லியிருக்கீங்க !!!

இந்தோனேசியா பண்ணியதை போன்று அனைத்து நாடுகளும் செய்யனும்...

சொன்னதை போல அங்க போயி சாகறதுக்கு இங்கையே கஞ்சியோ கூலோ குடிச்சுக்கிட்டு உயிரோட இருக்கலாம்.

பொதுவா எந்த நாட்டுக்கு போனாலும் அங்க சட்டதிட்டமெல்லாம் எப்படிங்கறத தெரிஞ்சுவெச்சுக்கிட்டா நல்லதுதான்

Anonymous said...

// Haresh A said...

பீகார் மாதிரியான பின்தங்கிய மாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் பிழைப்பு நடத்துகிற அப்பாவிகளை கொன்று பயத்தின் வழியே நீதி நிலைநாட்டப்படுகிறது.//

Encounterhalai naangal aatharikkavillai anaal naangal vedikkai paarpom - idhuthaney ungal bathil??????? aathisa?

கார்த்தி said...

நல்ல பதிவு அண்ணே..

இது போன்ற செய்கைகள், வரைமுறை இல்லாமல் எல்லா மதங்களையும் கேள்விகளுக்குள்ளாக்குகின்றன.

:( :(

Anonymous said...

IPPADI INTERNETIL EDHAIYAVADHU ELUDHI PICHHAI PILAIPPU NADATHUVATHAI VIDA..

INGU IRUKUM NAMADHU SAHOTHARARHALIN NILAI EVVALAVO MEL.

AVARKALIN KUDUMBANGALIN SANDHOSATHIRKAHA AVARHAL PADUM KASTAM AVARKALAI ORU NALLA NILAIKU KONDUVARUM.

kailash said...

@ Riyas : atleast you revelwed your identity while commenting , i appreciate it . Everyone agrees only victims family will know the pain . Could you answer these questions. As per Sharea law in Saudi Is child labor allowed ? is she the real cause for death of that child ? Was she allowed to present her arguments ? Did anyone provided legal help to her ? Even Kasab had advocates to defend his arguments . Anyone accused should be given a chance to present their views .Why only foreigners are awarded capital punishments in Saudi ?

Anonymous said...

ரிஷி முதலில் நான் தரும் லிங்க் இல் உள்ள பதிவை படி
http://www.luckylookonline.com/2013/01/blog-post.html

சவுதியில் இந்த சம்பவம் நடந்திருந்தால் தலையை கொய்திருப்பர்கள் அந்த காட்டுமிராண்டி கூட்டங்கள்
HARIS

Riyas said...

@ kailash,

We are never support to southi

அலசல் 01: இந்த அலசலில் நீதி﹐ விசாரணை குறித்து பல வகையான விமர்சனங்கள் ஊடகங்களில் உலா வருகின்றன. ரிஸானா குற்றவாளியல்ல. ஒரு சதிமோசக் கொலையை அவள் செய்யவில்லை. செய்ய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. ரிஸானாவின் கையிலிருந்த குழந்தை இறந்ததற்கான காரணங்கள் விஞ்ஞானபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. அது இயற்கை மரணமாகவும் இருக்கலாம். அல்லது பால்புரையேறி மூச்சுத் திணறி குழந்தை இறந்திருக்கலாம். குழந்தை இப்படித்தான் இறந்தது என்பதைக் கண்ட சாட்சிகளும் இல்லை.

இந்த நிலையில் ரிஸானா குற்றவாளி என்பதை உறுதி செய்வதற்கான விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. தீர்ப்பு அவசரமாக வழங்கப்பட்டிருக்கிறது. இது நீதியல்ல. தனது பக்க நியாயங்களை முன்வைத்து வாதிடுமளவு அறிவுத் திறமைகள் இல்லாத ஒரு சின்னப் பெண் மொழி தெரியாத புதியதொரு சூழலில் நீதி விசாரணையொன்றுக்கு முகம் கொடுக்கும்போது அச்சத்துக்குட்படுவது இயல்பு. அவளது நியாயங்களை முன்வைத்து வாதிடுவதற்கு சட்டத்தின் உதவியை அவள் பெற்றாளா? அல்லது பெற வேண்டும் என்ற அறிவு அவளுக்கு இருக்கவில்லையா?

இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவள் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளாள். இது நீதியின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் ரிஸானா நபீக் வீணாக உயிரிழக்க வேண்டியேற்பட்டுள்ளது. இவ்வாறு ஊடகங்கள் ரிஸானா நபீக்கிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை பல்வேறு கோணங்களில் விமர்சிக்கின்றன.

இந்த விமர்சனங்கள் உண்மையானால் (இந்த விமர்சனங்களின் உண்மைத் தன்மைகள் ஆராயப்பட வேண்டும்) குற்றம் யாரைச் சாரும்? ஷரீஆ நீதியையா? அல்லது நீதி விசாரணை செய்து ரிஸானாவைக் குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்கியவர்களையா? இந்த விமர்சனங்கள் உண்மையானால் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரிஸானாவை விசாரணை செய்து குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியவர்களுக்கே உரியன.

ஷரீஆ நீதி எந்த வகையிலும் ரிஸானா விடயத்தில் அநீதியிழைத்ததாகக் கூற முடியாது. இலங்கையில் பிரதம நீதியரசரை விசாரித்த முறை பிழையானது என ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஏன் ஊடகங்கள் நீதி பிழையானது என விமர்சிக்காமல் விசாரித்த முறை பிழையானது என விமர்சிக்க வேண்டும்? இலங்கையின் நீதி விடயத்தில் ஊடகங்களின் முகம் வேறு ஷரீஆ நீதி விடயத்தில் ஊடகங்களுக்கு மற்றொரு முகமா?

Riyas said...

@kailash

this is the answer
pls read

http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_524.html

UFO said...

Saudi executed for killing an expat

Saudi man identified as Fatin bin Fallaj bin Abdullah Al-Shibani Al-Otaibi was executed in Quwaieya, near Riyadh, on Thursday after being convicted of murdering an Indian worker named Yousuf Ahmed Pera, the Saudi Press Agency reported.

According to the Interior Ministry, the Saudi man stabbed the Indian to death after taking him to a deserted place and robbing him of his money and other valuables.

Unknown said...

அதிஷா,
இதையும் படித்து விடுங்களேன்.

http://salasalappu.com/?p=63748

மதம், சட்டம் இவை எல்லாவற்றையும்விட மனிதம் முக்கியமானது. எனக்குத் தெரிந்து ஷரியத் சட்டங்கள் கடுமையாக மட்டுமல்ல மனிதத்துடனும் இருக்கின்றன. ஏழை பணக்காரன் போன்ற பேதங்களை பாராமல் தண்டிக்க/மன்னிக்க சொல்கின்றன.

சட்டத்தை நிலைநாட்டும் மனிதர்களின் தவறால், சட்டம் சரியில்லை என்று கூற இயலாது என்பது என் கருத்து.

இவையெல்லாம் அரசியலாகி பல நூற்றாண்டுகளாகி விட்டன.

Unknown said...
This comment has been removed by the author.
Anonymous said...

நான் அடிக்கடி பதிபவன் தான் ஆனால் சூழ்நிலையால் அனானிமஸ் ஆக பதிகிறேன். ரிஸானா மட்டுமல்ல. நான் இந்த நாட்டில் வசிப்பதால் இன்னும் நிறைய சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். நிறைய அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறைய அப்பாவிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒன்று. ஒரு கேரள தம்பதிகள் கணவன் அலுவலகத்திலும் மனைவி மருத்துவ மனையிலும் பணிபுரிபவர்கள். அவர்கள் இரண்டு குழந்தைகளுக்காக ஒரு வேலைக்காரியை நியமித்திருந்தார்கள். அவள் திடிரென்று கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தாள். கணவன் மனைவி இருவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் வீட்டிலிருந்த ஏதோ ஒரு பொருள் கொலையுண்ட அவள் பக்கத்தில் கிடந்ததாம். இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் குழந்தைகள் நண்பர்கள் உதவியுடன் நாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். விடுதலையான பிறகு தான் அவர்கள் என்ன காரணத்துக்காக சிறையிலடைக்கபட்டனர் என்பதே தெரிந்ததாம். கொலைசெய்பப்பட்ட நேரத்தில் அவர்கள் அலுவலக பணியில் இருந்தனர் என்பதை துப்பு துலக்க இங்குள்ள காவல்துறை மேதாவிகளுக்கு இரண்டு வருடம் ஆகியிருந்தது. ஒரு குடும்ப பெண்ணிற்கு என்ன காரணம் என்பது தெரியாமல் இரண்டு வருட சிறைதண்டனை என்பது அவளை கொல்வதை விட கொடுமையானது. இது போன்ற நிறைய சம்பவங்கள், நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்ட செய்திகள் வெளியே வராமல் அமுக்கப்பட்டன. ஷரிஅத் சட்டம் மிக சிறப்பானது. ஆனா அதை அமுலில் வைத்திருப்பவர்கள் மனிதாபிமானமில்லா அறிவில்லா முட்டாள்கள் இது தான் பிரச்சனை.