22 January 2013

காத்தாலையாம்ல காத்தாலை!

ஜப்பான்காரர்களுக்கு மூக்குதான் சப்பை என்றால் மூளையும் அப்படித்தான் இருக்கும் போலிருக்கு! ஃபுகுஷிமா அணு உலையை இடித்து தரைமட்டாக்கிவிட்டு அங்கே காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க போகிறார்களாம் இந்த காமெடியன்ஸ்!

நாங்கள்லாம் பல ஆயிரக்கணக்கான அணு உலைகளை திறந்து உலகத்துக்கே முன்மாதிரியாக மாறி வல்லரசாகிடலாம் என ப்பிளான் போட்டுக்கொண்டிருக்கிறோம். இவனுங்க என்னடானா இருக்கற அணு உலைய மூடிட்டு அதுல காத்தாலை கட்ட போறாய்ங்களாம்ல காத்தாலை.. பொளைக்கத்தெரியாத பொடலங்காயா இருப்பாய்ங்க போல... முட்டாப்பசங்க..

இரண்டுவருடங்களுக்கு முன்பு, அதாவது 2011ஆம் ஆண்டு ஜப்பானில் 9.0 என்கிற அளவில் பூகம்பம் உண்டானது. அதனால் சுனாமி உருவாகி ஜப்பானின் கடற்கரையோர பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. சகல பாதுகாப்புகளோடு கட்டி வைக்கப்பட்டிருந்த அழகான சுபிட்சம்தரும் புதையலான புகுஷிமா அணு உலையும் இந்தக்கொடூரமான சுனாமிக்கு தப்பவில்லை.

ஃபுகுஷிமா அணு உலையிலிருந்த ரியாக்டர்கள் மோசமாக டேமேஜ் ஆகிவிட.. பயந்தாங்கொள்ளி ஜப்பான் தன் மக்களையெல்லாம் அங்கிருந்து அப்புறப்படுத்தியது. அதோடு பல நூறு கோடிகளை கொட்டி ரியாக்டர்களிலிருந்து அணுக்கதிர்வீச்சு லீக் ஆகி பிராப்ளம் வந்துவிடக்கூடாது என மாங்கு மாங்கென்று போராடியது. அதுவும் போதாதென்று ஜப்பான் முழுக்க எம்பெருமான் அருளால் திவ்யமாக இயங்கிக்கொண்டிருந்த 54 ரியாக்டர்களையும் இழுத்து மூடியது. இனிமே ஒன்லி ரினியூவபிள் எனர்ஜி சோர்ஸ்லதான் மின்சாரம் என முடிவும் பண்ணிட்டாங்க!

பயந்தாங்கொள்ளி ஜப்பான் ஜாங்கிரிஸ். 2040க்குள் ஜப்பான் முழுக்கவே ரினீயவபிள் எனர்ஜி சோர்ஸ் மூலமாக மட்டும்தான் மின்சாரம் உற்பத்தியாம்.. அணுவும் கிடையாது ஆயாவும் கிடையாதுனு என்று பீத்திக்கிறாய்ங்க.

இவ்வளவு சிரமப்பட்டதுக்கு சிம்பிளா நம்மூர் வில்லேஜ் விஞ்ஞானியான நாராயணசாமிகிட்ட உதவி கேட்டிருந்தால். வெறும் வாயை மட்டுமே பயன்படுத்தி.. அணு உலை கதிர்வீச்சிலிருந்து எப்படி பொதுமக்களுக்கு பூர்ணமான பாதுகாப்பு வழங்குவதுனு வெளக்கி சொல்லிருப்பாரில்ல! காசுதான் தண்டம். நமக்கென்ன!

ஃபுகுஷிமாவில் கட்டப்போகிற இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம்தான், உலகிலேயே மிகப்பெரிய கடற்கரையோர காற்றாலை உற்பத்தி நிலையமா இருக்கபோகிறதாம். பெருமைதான். 16 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் 143 டர்பைன்களை நிறுவப்போறாய்ங்களாம். இதன்மூலமாக ஒரு ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்மிகை நாடாகவும் மாற முயற்சி செய்ய இருக்கிறது ஜப்பான். இதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. 2020ல இந்தியா வல்லரசாகும்போது ஜப்பான்ல இந்த காற்றாலைகள் மின் உற்பத்தியை தொடங்கிடுமாம்! அதுபோக அருகிலேயே மாபெரும் சோலார் மின் உற்பத்தி நிலையமும் அமைக்க திட்டமாம்!

காற்றாலைதான் என்றாலும் அதனுடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய கடந்த ஒருவருடமாக தீவிரமாக ஆராய்ச்சி செய்துவருகிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள். சுனாமி அல்லது பூகம்பம் வந்தாலும் தாக்குபிடிக்க கூடிய டர்பைன்களை உருவாக்கி வருகிறார்கள். இதற்கென மிகப்பெரிய தொகையை ஒதுக்கி தீயாக வேலை பார்த்து வருகிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள்.

ஜப்பானின் இந்த நடவடிக்கைகளைக் கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது. மக்கள் மீதும் நாட்டின் முன்னேற்றித்திலும் சுற்றுசூழல் மேலும் கொஞ்சமாவது அக்கறையிருக்கிறதா இந்த கொலைபாதகர்களுக்கு! ச்சே. என்னமாதிரியான உலகத்தில் நாம் வாழ்கிறோம்.

இந்த ஜப்பான்காரர்களை பார்க்கும்போதுதான் நம் பெருமதிப்பிற்குரிய அண்ணல்களான நாராயணசாமி, அப்துல்கலாம், விவேக், கஞ்சாகருப்பு, வையாபுரி முதலானவர்களின் அருமையை உணர முடிகிறது. அணு உலைக்காக போராடுகிற இந்தப்போராளிகள் மட்டும் இல்லையென்றால் இந்தியாவின் நிலையை நினைக்கவே பதட்டமாக இருக்கிறது.அய்யகோ!

எப்படியும் ஜப்பான்காரர்கள் தங்களுடைய நாட்டில் தடை செய்த 54 ரியாக்டர்களையும் பேரிச்சம்பழத்துக்காக பழைய இரும்புக்கடையில் போடுவார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நம்முடைய வல்லரசர்கள் மொத்தமாக பொறுக்கிக்கொண்டு வந்து இங்கே கொட்டினால் சிறப்பாக இருக்கும் என்பதே அகண்ட பாரத குடிஜனங்களுடைய ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

18 comments:

துளசி கோபால் said...

ஐடியா வேற கொடுக்கறீங்க....

செஞ்சாலும் செஞ்சுரும் இந்தப் பயபுள்ளைக!!!

கிராமத்தான் said...

நம் நாட்டில் மின்சாரம் பற்றாக்குறை சுத்தமாய் இல்லை என்னும் பட்சத்தில் அரசும் மற்றவர்களும் மின்தேவைக்காக அணு உலையை ஆரம்பிக்கிறார்கள் என்று சொன்னால் சரி.

அவனவன் மின்சாரம் இல்லாமல் வேலை கெட்டு செத்துக் கொண்டிருக்கிறான். தற்போது தண்ணீரும் இல்லை.

சரி நீ(ங்கள்) சொல்வது போல் காற்றாலை ஆரம்பித்தால் எவ்வளவு நாளில் தேவையான மின்சாரத்தை உருவாக்க முடியும். குறைந்த பட்சம் அணு உலை மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு உண்டான நேரத்திற்கு சமமாக ஆவது ஆகுமா? இதை பற்றி துளியும் தெரிந்து கொள்ளாமல்/யோசிக்காமல்/விவரிக்காமல் சென்னையில் இருந்து கொண்டு காற்றாடிக்கு கீழேயோ, எசி யிலோ உட்கார்ந்து இது போல ஒரு மொக்கை satire பதிவை யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். கிராம புறங்களில் இருந்தால் இதை எழுதுவதற்கே உங்களுக்கு கரண்ட் இருக்காது.

முடிந்தால் மின்சாரம் இல்லாமல் என்னென்ன பிரச்சினை இருக்கிறது? எவனெவன் சாகிறான்? அதற்கு எப்படியெல்லாம் போராட்டம் நடத்த முடியும்? என்று எழுதுங்கள் அய்யா!

வவ்வால் வேண்டுமானால் இதை பற்றி விரிவாக கூகிள், விக்கிபீடியா மற்ற தளங்கள் உதவியுடன், அதற்கு நன்றி தெரிவித்து இதை எழுத முடியும். மற்றவர்களுக்கு எல்லாம் கூகிள் விக்கிபீடியாவின் உதவி கிடைக்காது.

உயிர் போகும் பசியில் சுடு சோறு இருந்தால் மட்டுமே சாப்பிடுவீர்கள் போல. மற்ற படி நான் எந்த அரசுக்கும் ஜால்ரா இல்லை.

புதிய தலைமுறை பசங்க தொல்ல தாங்கல சாமியோவ்.

Unknown said...

:)))))))))

Radha N said...

உண்மையான ஆதங்கம் பு​ரிகிறது....என்ன செய்வது நாம் இருப்பது நாராயசாமியின் ஆட்சியிலதானே.....

​நாகு
www.tngovernmentjobs.in

Anonymous said...

//புதிய தலைமுறை பசங்க தொல்ல தாங்கல சாமியோவ்//
புதிய தலைமுறை நம்மை பழைய தலைமுறையாய் மாற்றி விடும் போலிருக்கிறதே

kumar said...

மற்ற எல்லா மசுருக்கும் ஜப்பான பாரு,அமெரிக்காவ பாருன்னு கூவுற நாதாரிங்க இந்த விசயத்தில மட்டும் கமுக்கமாயிடுவானுங்க.

ஜப்பான்காரனுக்கு அவனோட மக்கள் மேல அக்கறையிருக்கு.எல்லா கருமாந்திரத்தையும் இழுத்து மூடுறான்.

கிராமத்தானுங்க கொஞ்சம் வெள்ளந்திதான்.அதுக்காக இவ்வளவு கூடாது பாசு.

கடந்த பத்து வருடத்தில் எந்த முன்னேறிய,அல்லது ஐரோப்பிய நாடுகளில் ஆவது அணு உலைகள் திறக்கப்பட்டதாக கிராமத்தான் உறுதி செய்ய முடியுமா?

இந்த அணு உலை பாசக்காரர்கள் தங்கள் ஜாகையை கூடங்குளம் அல்லது இடிந்தகரைக்கு மாற்றிக்கொள்ள தயாரா? மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி.

வக்காலி.

kumar said...

மற்ற எல்லா மசுருக்கும் ஜப்பான பாரு,அமெரிக்காவ பாருன்னு கூவுற நாதாரிங்க

இந்த விசயத்தில மட்டும் கமுக்கமாயிடுவானுங்க.ஜப்பான்காரனுக்கு அவனோட

மக்கள் மேல அக்கறையிருக்கு.எல்லா கருமாந்திரத்தையும் இழுத்து மூடுறான்.

கிராமத்தானுங்க கொஞ்சம் வெள்ளந்திதான்.அதுக்காக இவ்வளவு கூடாது பாசு.

கடந்த பத்து வருடத்தில் எந்த முன்னேறிய,அல்லது ஐரோப்பிய நாடுகளில் ஆவது

அணு உலைகள் திறக்கப்பட்டதாக கிராமத்தான் உறுதி செய்ய முடியுமா?

இந்த அணு உலை பாசக்காரர்கள் தங்கள் ஜாகையை கூடங்குளம் அல்லது

இடிந்தகரைக்கு மாற்றிக்கொள்ள தயாரா? மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி.

வக்காலி.

kumar said...

மற்ற எல்லா மசுருக்கும் ஜப்பான பாரு,அமெரிக்காவ பாருன்னு கூவுற நாதாரிங்க

இந்த விசயத்தில மட்டும் கமுக்கமாயிடுவானுங்க.ஜப்பான்காரனுக்கு அவனோட

மக்கள் மேல அக்கறையிருக்கு.எல்லா கருமாந்திரத்தையும் இழுத்து மூடுறான்.

கிராமத்தானுங்க கொஞ்சம் வெள்ளந்திதான்.அதுக்காக இவ்வளவு கூடாது பாசு.

கடந்த பத்து வருடத்தில் எந்த முன்னேறிய,அல்லது ஐரோப்பிய நாடுகளில் ஆவது

அணு உலைகள் திறக்கப்பட்டதாக கிராமத்தான் உறுதி செய்ய முடியுமா?

இந்த அணு உலை பாசக்காரர்கள் தங்கள் ஜாகையை கூடங்குளம் அல்லது

இடிந்தகரைக்கு மாற்றிக்கொள்ள தயாரா? மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி.

வக்காலி.

Anonymous said...

"எப்படியும் ஜப்பான்காரர்கள் தங்களுடைய நாட்டில் தடை செய்த 54 ரியாக்டர்களையும் பேரிச்சம்பழத்துக்காக பழைய இரும்புக்கடையில் போடுவார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நம்முடைய வல்லரசர்கள் மொத்தமாக பொறுக்கிக்கொண்டு வந்து இங்கே கொட்டினால் சிறப்பாக இருக்கும் என்பதே அகண்ட பாரத குடிஜனங்களுடைய ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறுமா?"


Excellent.. Athisha...rocking..

by Maakkaan

Anonymous said...

Kumar and all:

"கடந்த பத்து வருடத்தில் எந்த முன்னேறிய..." - they build too many plants already, So, no need to build any more(there is no electricity shortage).

To see new project approved in USA:

http://money.cnn.com/2012/02/09/news/economy/nuclear_reactors/index.htm

perumal karur said...

கிட்னி பேட் வைத்துக் கொள்ளாமல் காரக் பாலிலோ , கிரிக்கெட் பாலிலோ கிரிக்கெட் விளையாடுவதை போன்றது இந்த அணு உலை மின்சாரம்..

ஜப்பான்காரனுக்கு பந்து பட்டுடுச்சு ..

ஓஜஸ் said...

//புதிய தலைமுறை பசங்க தொல்ல தாங்கல சாமியோவ்//
புதிய தலைமுறை நம்மை பழைய தலைமுறையாய் மாற்றி விடும் போலிருக்கிறதே


This is his personal blog. It is no where connected to the magazine

Unknown said...

அதிஷா வினோத்,

1) நீங்கள் இந்த விஷயத்தை மனப்பூர்வமாக, அறிவுபூர்வமாக சிந்தித்து சொல்கின்றீர்களா?
அல்லது மனுஷ்யபுத்ரன், ஞானி போன்ற மீடியா அறிவுஜீவிகள் சொல்வதைக் கேட்டா?
அல்லது பணியாற்றும் இடத்தின் தாக்கமா?

“புதிய தலைமுறை” டிவியில் தான் இதுபற்றி அடிக்கடி காட்டப்பட்டது. Media had
tried and FAILED totally in creating a public opinion about
Kudamkulam. பல டிவி நிகழ்ச்சிகளிலும் அரசுத்தரப்பிலோ, கூடங்குளத்தை ஆதரிக்கும்
ஆட்களோ தங்கள் வாதத்தை முழுமையாக எடுத்து வைக்க வாய்ப்புகளே
வழங்கப்படவில்லை (பி.ஜே.பி. ஆட்கள் வாதம் செய்யும் போதும் இதே கதி தான்.
ஏனென்றால் சிலசமயம் அவர்கள் கேட்கும் உண்மையான கேள்விகளுக்கு இவர்களிடம்
பதில் இல்லை). அதிலும் வடக்கத்திய சேனல்களான Times Now, NDTV போல
முதலில் சற்று நம்பிக்கை அளித்த புதிய தலைமுறையும் இப்போது கருத்துத் திணிப்பு,
கருத்து உருவாக்கத்தில் தான் ஈடுபடுகின்றது (இதைத் தான் சன் டிவியும் செய்தது -
ஜெ.வின் முதல் ஆட்சியில்). நடுநிலை என்று சொல்லிக் கொண்டு மீடியாக்கள்
செய்யும் வேலைகள் சற்று தாமதமாகவேனும் மக்கள் புரிந்து கொள்கின்றனர்.

இதிலும் ஞானி சமீபத்திய “நீயா, நானா”வில் 2012-ல் நடந்த ”காந்திய வழி
அறப்போராட்டம்” என்று உதயகுமாரின் கூடங்குளம் போராட்டத்தை வர்ணித்தார்.
நல்ல காமெடி! புதிய தலைமுறை செய்திகளிலேயே வலைவிரித்து, செங்கற்களால்
மீனவர்கள் போலீசைத் தாக்குவதைக் காண்பித்தார்கள் (சொன்னது “போலீஸ் மக்கள்
மீது தாக்குதல் நடத்தியது”) எழுத்தாளர்கள் இது போன்ற விஷயங்களில்
ஈடுபடுவதை நம் நாட்டில் ஆரம்பித்து வைத்தவர் அருந்ததி ராய் (மீடியா பப்ளிசிடி!).

அரசு கொண்டு வரும் திட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பின் அதை சரி செய்யும்படி
கோர வேண்டுமே தவிர திட்டத்தையே நிறுத்துவது என்பது முட்டாள்தனம். இதை
”மீடியா பப்ளிசிட்டி” என்னும் சுயலாபத்திற்கு பலர் பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில்
(எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில்) புத்தகம் படிப்பவர்கள் எத்தனை பேர்? இத்தனைக்கும்
இந்த விஷயம் இப்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றது.

ஞானி சொன்னது: “மிச்சமாகும் தாதுவை வைத்து என்ன செய்கின்றனர்? அது
அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுகின்றது...” இந்தியா அணுகுண்டு
தயாரிப்பதை எதிர்க்கின்றார் என்றால் இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

தமிழ்நாட்டு மக்கள் இந்த வாதத்தை நிராகரித்து விட்டனர் (இப்போது கூட்டப்படும்
கூட்டங்கள் எப்படிப்பட்டவை என்பது அனைவருக்கும் தெரியும்! - என்ன பிரியாணி?).
படிப்பறிவற்ற மீனவர்களையும், ”மீடியா பப்ளிசிட்டி ஃபீவர்” பிடித்த அறிவுஜீவிகளையும்
(அவர்கள் வழிநடத்தும் சிலரையும்) தவிர யாரையும் பாதிக்கவில்லை.

கூடங்குளத்தை எதிர்க்கும் அனைவரும் ஒருநாள் அல்லது ஒரு வாரம் முழுமையாக
மின்சாரம் இன்றி இருந்து மற்ற தமிழக மக்களின் அவஸ்தையைப் பகிர்ந்து
கொள்வார்களா? முதலில் ஏ.சி. ஹாலில் இருந்து பேசும் இந்த அறிவுஜீவிகளால்
ஏசி/ஃபேன் இன்றி இருக்க முடியுமா? :-)

உங்கள் பதிவிற்கு வருகின்றேன்.

2) அணுகுண்டின் தாக்கத்தை உலகப் போரில் (1945) முழுமையாக அனுபவித்த ஒரே
நாடான ஜப்பான் (பலி லட்சங்களில், இன்னும் அதன் தாக்கம் இருக்கின்றது/புகுஷிமாவில்
இப்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 1000) ஏன் பின்பு மின்சாரத் தேவைக்கு
அணு உலைகளை உருவாக்க வேண்டும். ஜப்பானில் நிலநடுக்கம்
அடிக்கடி வருவது நம்மைப் போல் எப்போதாவது வரும் சமாசாரமல்ல. அதற்காக அவர்கள்
தயாராகத் தான் இருப்பார்கள். அதிலும் ஜப்பான் இருக்கும் புவியியல் சார்ந்த இடம்
மிகவும் unstable. அவர்கள் தேர்ந்தெடுத்துக் கட்டிய இடம் தான் தவறு.

லட்சக்கணக்கானவர்களை அணுகுண்டில் இழந்த ஜப்பான் முதலாவது ஏன் அணு உலை
மின்சாரத்தை தேர்ந்தெடுத்தது?

3) மீனவர்கள் கடலுக்கு பல நாட்கள் செல்லவில்லை என்றால் அவர்களுக்கு யார்
சாப்பாடு போடுகின்றார்கள்?

4) மீனவர்களை போராட்டத்தில் இழுத்ததில் அங்கேயிருக்கும் பாதிரியாரின் பங்கு என்ன?
(மதம் அரசியல் விவகாரத்தில் தலையிடுதல்).

5) எந்த விஞ்ஞானி சொன்னாலும் உங்கள் கூட்டம் கேட்கமாட்டேன் என்று தான்
சொல்கின்றீர்கள். அப்துல் கலாமை அவமதித்தனர் (ஆதாரம் - ஃபேஸ்புக் பதிவுகள்)
அணுவைப் பற்றி அவரைவிடவும் உதயகுமாருக்கு அதிகம் தெரியுமா? சொல்லும் காரணம்
அவர், ”விமான விஞ்ஞானி அணு விஞ்ஞானி அல்ல.” (அறிவியல் படித்த ஒருவரால்
தான் சில அறிவியல் விஷயங்களைப் புரிந்து கொள்ள இயலும்). இது சிலரின்
பொருளாதாரம் (மீனவர்களின் வாழ்வாதாரம் காரணமல்ல), அரசியல் சம்பந்தப்பட்டது
என்பது மக்களுக்குத் தெரியும். இதில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலோர் பேச்சையும்,
எழுத்தையும் மட்டுமே (வருமானத்திற்கு) மூலதனமாகக் கொண்டவர்கள்!

to be contd.

Unknown said...

6) இவர்கள் சொல்லும் மாற்று வழிகள் என்ன?

7) சீனாவில் எத்தனை அணு உலைகள் கட்டப் போகின்றார்கள், அதன் மறைமுகக்
காரணங்கள் என்னவென்று தெரியுமா? இது உலக அரசியல்/நாட்டின் பாதுகாப்பு சார்ந்தது
என்பதால் அரசு இவற்றை வெளிப்படையாக மீடியாவில் சொல்லமுடியாது.

8) அணு உலை எதிர்ப்பு ஆட்கள் சொல்அப்வை எப்படியிருக்கின்றது என்றால் ஒரு
வருடத்தில் சாலை விபத்துக்களில் இறப்பவர்கள் இந்தியா முழுவதும் ஒரு லட்சம்
(ஒரு ஹிரோஷிமா!) எனவே சாலைகளையெல்லாம் மூடுங்கள் என்பது போல்!
அனைவரும் கால்நடையாய் சென்றால் உடலுக்கும் ஆரோக்கியம்! (முதலில் எத்தனை
பேர் ஹெல்மெட் அணிகின்றனர்?)

9) கூடங்குளம் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது 80-களில் அப்போது உதயகுமார் எங்கே
இருந்தார்? (புகுஷிமா காரணம் செல்லாது, ஜப்பானில் 45-லேயே அணுகுண்டு
போடப்பட்டது)

10) கடைசியாக NGO மூலம் வரும் உதவிகள் பற்றிய சந்தேகங்கள். இந்த விஷயத்தில்
அரசின் தயக்கம்/தர்மசங்கடம் வேறுவகையானது.

11) வெளிநாட்டில் (ஜெர்மனி) அணு உலைகள் மூடப்பட்டன என்று சொல்லும் ஆட்களுக்கு என்
கேள்வி - அங்கே மக்கள் தொகை எவ்வளவு? நம் நாட்டில் எவ்வளவு? அவைகளுக்கு
போர் வரும் சாத்தியக்கூறுகள் எத்தனை? பல மேற்கத்திய நாடுகள் அமெரிக்க கூட்டமைப்பைச்
சார்ந்தவை என்பதால் பாதுகாப்பு பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அருகிலிருப்பது
முஸ்லீம் நாடாக இருப்பினும்!

12) ஜெ. சொன்னது போல் மத்திய/மாநில அரசுகளுக்கு பொறுப்பு இருக்கின்றது. இப்படி
எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு சொல்லும் கும்பல்களுக்கு அந்தக் கவலை இல்லை. அடுத்த
கண்டனப் பேரணி இருக்கவே இருக்கின்றது - நாட்டில் இஷ்யூவிற்கா பஞ்சம்? பின்
அரசின் கையலாகாத்தனம் என்று சாக்கு சொல்லிவிடலாம். உதாரணம் - இப்போது
டெல்லி மாணவி கற்பழிப்புக்கு மரண தண்டனையை ஆதரித்தவர்களே பின் மனித உரிமை
காரர்கள் வந்து சொல்லும் போதும் ஆதரிக்கப் போகின்றார்கள் - அவர்களுக்கு எல்லாம்
லாபம் தான்! :-)

I have avoided dwelling in personal issues. I totally agree
with ”கிராமத்தான்.”

ஞானசேகர் ராஜேந்திரன் said...

/சகல பாதுகாப்புகளோடு கட்டி வைக்கப்பட்டிருந்த அழகான சுபிட்சம்தரும் புதையலான புகுஷிமா அணு உலை/
உங்கள் வார்த்தை ஜாலங்களில் தெரிகிறது உங்களின் ஆதங்கம்
நாம் பட்டபின் நடவடிக்கைகள் எடுக்கப்படும் (பதினோர் பேர் கொண்டு குழு ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும் என்று அறிவிப்பு மட்டும் தான்) மிக பெரிய பாரத நாட்டில் வாழ்கிறோம் நண்பரே..

Anonymous said...


Mr. Sridhar Srini,

Length of coastline of Kerala is approximately 575 Kilometers....Why there is no atomic power station??? They also using AC,Tv...etc like you then why there is no such project there. At first, Koodankulam project proposal was for Kerala, after opposition of the state govt and people, it landed in TN. First think.....then only....


by --
Maakkaan.

Unknown said...

கடைசி அனானிமஸ் நண்பரின் பின்னூட்டத்தில் விடுபட்ட தகவல்:
முதலில் அணு உலை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டது நீண்ட கடற்கரையும், குறைந்த அளவு கடற்கரையோர மக்கள் தொகை கொண்டதுமான ஆந்திரப்பிரதேசம்.
கடும் எதிர்ப்பு காரணமாக அது கேரளாவுக்கு மாற்றப்பட்டு மேலிட கேரள லாபி காரணமாக தமிழகத்தின் தலையில் கட்டப்பட்டது. தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு எந்த நாச திட்டங்களையும் எதிர்க்கும் திராணியற்ற தமிழ்நாடுதான் இதற்கு உகந்த மாநிலம் என்பது உலகறிநத விஷயம்தானே...

Raashid Ahamed said...

நாட்டு மக்கள் நல்லா இருக்க எந்த தியாகத்தையும் செய்யுற அற்புத தலைவர்கள் அமைஞ்ச நாடு ஜப்பான். நாட்டு மக்களை நடுத்தெருவுக்கு வரவைக்க எப்படிப்பட்ட அயோக்க தனத்துக்கும் துணிஞ்சவனுங்க தான் நம்ம.... வேணாம் பாஸ் வலிக்குது அழுதுடுவேன்.