24 January 2013

'டிவி புகழ்' மனுஷ்யபுத்திரன்

மணி எட்டாகிவிட்டதா? கைகளில் ரிமோட்டை எடுத்துக்கொள்ளுங்கள். எடுத்தாகிவிட்டதா? அப்படியே ரேண்டமாக ஏதோ ஒரு தமிழ் செய்தி சானலுக்கு செல்லுங்கள்... எந்த சேனலாக இருந்தாலும் அதில் அந்த மனிதர் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பார். அவரை எந்த நாளிலும் எந்த சேனலிலும் சந்திக்க முடியும். ஒருவாய் காப்பித்தண்ணிகூட குடிக்காமல் இரண்டு மணிநேரம் கூட பேசக்கூடிய விவாதிக்கவல்ல அபார ஆற்றல் பெற்றவர் அவர்.

அவருடைய பேச்சு ஒரு குயிலின் கானத்தைப் போல கொட்டும் மழையில் நம் முகம்வருடிச்செல்லும் தென்றலைப்போல அமைதியான ஓடம்போல மிக மிக மென்மையானதாக இருக்கும் (என்று அவரே போடசொன்னார்). பாடகர் யேசுதாஸ் என்னதான் குத்துப்பாட்டே பாடினாலும் அது ஒரு மெலொடியைப்போலவேதான் நான் உணர்ந்திருக்கிறேன். போலவே இந்த மனிதரும் என்னதான் கோபமாக உரக்கப்பேசினாலும் அது அவ்வளவு டெரராக இருக்காது. அவ்வளவு சாஃப்ட்டு! அவர் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான 'டிவிபுகழ்' மனுஷ்யபுத்திரன்.

ஒவ்வொருநாளும் ஒரு செய்தி சேனல் துவக்கப்படுகிற சமகாலத்தில் எல்லா செய்திசேனல்களுக்கும் செல்லப்பிள்ளையாக விளங்குபவர் மனுஷ்யபுத்திரனாகத்தான் இருக்கமுடியும். அதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது. இவ்விஷயத்தில் அவருடைய சீனியரான கிழக்குப்பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி கூட இதை ஏற்றுக்கொள்வார். எந்த செய்தி சேனலைப் போட்டாலும் அதில் மனுஷ்யபுத்திரன் பேசுவதை சிலசமயம் பார்த்திருக்கிறேன். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சேனல்களில் லைவ் ஷோகூட பண்ணுகிற வித்தைக்காரர்! இதெல்லாம் நித்யானந்தாவுக்கே வராத மாயாஜாலம்.

அமெரிக்காவில் குண்டுவெடித்தாலும் சரி. கோசா ஆஸ்பத்திரியில் ஆயாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தாலும் சரி., அலெக்ஸ்பாண்டியன் திரைப்படத்தில் ஆபாசகாட்சியாக இருந்தாலும்.. பேசப்போகிற டிவி சேனலிலேயே செய்தியாளர்களுக்குள் அடிதடியாக இருந்தாலும் சரி..

பிரச்சனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி இன்றே இப்போதே உடனடியாக ஒரு நல்ல மாற்றுக் கருத்து வேண்டுமா? பிடிங்க சார் அவர.. பிடிச்சு மைக்கை குடுங்க சார்.. என இன்று தமிழகத்தின் பட்டிதொட்டியில் உள்ள குட்டிப்பாப்பாகள் கூட சொல்லும்! அவரால் மட்டும்தான் சகல விஷயங்களுக்கும் கருத்துச்சொல்ல இயலும். கருத்து சொல்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. அது ஒருகலை. அது மிகச்சிலருக்கே கைவரபெற்றுள்ளது.

தொலைகாட்சியில் கருத்து சொல்வதெற்கென ஒரு கல்லூரியை திறந்தால் அதில் நம்ம மனுஷ்யபுத்திரனையே பிரின்சிபாலாக போடலாம். (அந்தக்கல்லூரியில் மற்ற பதவிகளுக்கு பத்ரிசேஷாத்ரி, சுப.வீ, சாரு, பாஸ்கர்சக்தி, இளங்கோ கல்லாணை, முத்துகிருஷ்ணன் மாதிரியான சீனியர்களுக்கும் ஞாநி,சாலமன் பாப்பையா,சுகிசிவம் மாதிரியான சூப்பர் சீனியர்களுக்கும் இடம்கொடுக்கலாம்)

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளுக்காக இல்லையென்றாலும் சீரிய கருத்துகளுக்காக இன்று தமிழகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக அபிப்ராயப்படலாம். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை அறியாதவர்களும் கூட அவருடைய கருத்துகளை அறிந்தவர்களாக சமலோகத்தில் இருக்கிறார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டில்தான் சாத்தியம். அதற்கு சான்றாக புத்தகக் கண்காட்சியில் யாரோ ஒரு மாமி குருபெயர்ச்சி பலன்கள் புத்தகத்தில் கூட மனுஷ்யபுத்திரனிடம் அடம்பிடித்து க்யூவில் காத்திருந்து ஆட்டோகிராப் வாங்கிச்சென்றதை பார்க்க முடிந்தது.

செய்திசேனல்கள் புயலென தமிழ்நாட்டை தாக்குவதற்கு முன் நீயாநானாவில் மட்டும்தான் தென்னாட்டு இலக்கியவாதிகள் அனைவருமே தொலைகாட்சியில் தரிசனம் கொடுத்துவந்தனர். அதற்கு மனுஷ்யபுத்திரனும் விதிவிலக்கல்ல. ஆனால் ஆரம்பகாலத்தில் அவருக்கு பல்வேறு தயக்கங்களும் கேமரா ஓடும்போது சிந்தனை ஓட்டத்தில் தடையும் இருந்ததை பார்த்திருக்கிறேன்.

ஆனால் இன்றோ எல்லாமே தலைகீழ். ப்ராக்டீஸ் மேக்ஸ் ஏ மேன் பர்பெக்ட் என்று பாஸ் எனப்படும் பாஸ்கரன் என்கிற திரைக்காவியத்தில் நடிகரும் சிந்தனையாளருமான சந்தானம் அவர்கள் குறிப்பிட்டிருப்பார். அதற்கு சரியான உதாரணம் ம.பு.தான். அர்னாப் கோஸாமியும் கரன்தப்பாரும் கூட மனுஷ்யபுத்திரனிடம் தினந்தோறும் ஈவ்னிங் ட்யூசன் வந்து டிவியில் பேசுவது குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு மனிதர் பிச்சி உதறுகிறார். கேமரா பயமோ தயக்கமோ இல்லாமல் என்ன பேசுகிறோம் என்கிற தெளிவும் நேர்த்தியும் கைவந்துவிட்டது.

அதோடு கொஞ்சமும் தட்டுதடுமாறால் எதைப்பற்றியும் எவ்வளவு நேரமும் பேசக்கூடியவராகவும் மாறிவிட்டார். அதனால்தானோ என்னவோ... கோபிநாத்தைவிட நன்றாக பேச ஆரம்பித்துவிட்டார் என்றுதான் இப்போதெல்லாம் மனுஷ்யபுத்திரனை நீயாநானாவுக்கு அழைப்பதில்லை என்று அவதானிக்கலாம்!

புத்தக கண்காட்சி சமயத்தில் மட்டும்தான் நம் செய்தி சேனல்களுக்கு மனுஷ்யபுத்திரன் ஒரு எழுத்தாளர் என்பதே நினைவுக்கு வரும்போல.. கடந்த பத்து நாட்களாகதான் எல்லா சேனல்களிலும் புத்தகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

புக்ஃபேர் முடிந்துவிட்டால் ''இவனுங்க வேற இன்னும் ஒருவருஷத்துக்கு புஸ்தகம் பத்தி மூச்சே விடமாட்டாய்ங்களே'' என்கிற அவசரமும் பதட்டமும் ஆதங்கமும் அவருடைய பேச்சில் தெரிந்தது. புக்ஃபேரும் முடிந்துவிட்டது.. இனி அடுத்தவருடம்தான் புத்தகம் பற்றியெல்லாம் பேசமுடியும். ஆனால் அலைகடல் ஓயுமா.. சூரியன் உதிப்பதுதான் மாறுமா.. அதுபோலவேதான் மனுஷ்யபுத்திரனும்.

இந்த வாரத்துக்கு விஸ்வரூபம் பட விவகாரம் சுடச்சுட காத்திருக்கிறது. இப்போதே முன்பதிவு முறையில் எந்தெந்த நேரத்துக்கு எந்தெந்த தொலைகாட்சியில் பேசுவது என்பதெல்லாம் புக்காகியிருக்கும். டிவியில் பேசுவதற்கென மனுஷ்யபுத்திரனை புக்செய்ய ஆன்லைன் ரிசர்வேஷன் வசதிகள்கூட உண்டு என்று கேள்விப்பட்டேன்.

விஸ்வரூபம் பட விவகாரத்தில் கமலை விட அதிகமாக பேசப்போகிறவர் மனுஷ்யபுத்திரனாகத்தான் இருப்பார்.. வேண்டுமென்றால் ரிமோட்டை எடுத்து ஏதோ ஒரு செய்திசேனலை தட்டித்தான் பாருங்களேன்!பின்குறிப்பு – திராவிடர் கழகம் வழங்கும் பெரியார் விருது இந்த ஆண்டு மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்படவுள்ளது. அவருக்கு நம் அனைவர் சார்பாகவும் வாழ்த்துகள்!
29 comments:

Thirumalai Kandasami said...

பாஸ் ,இதுல எதுவும் உள்குத்து இருக்கா ??

ராம்ஜி_யாஹூ said...

கிழக்கு பத்ரிக்கு
எப்போது விருது

Unknown said...

அவருடைய பேச்சு ஒரு குயிலின் கானத்தைப் போல கொட்டும் மழையில் நம் முகம்வருடிச்செல்லும் தென்றலைப்போல அமைதியான ஓடம்போல மிக மிக மென்மையானதாக இருக்கும் (என்று அவரே போடசொன்னார்). :)

sridhar said...

மிக பிரமாதம்.. matter எதுவானாலும்.. உங்க உரைநடை ஒரு ரசனை மிக்கதாகவும், அதே சமயம் கொஞ்சம் கலாய்க்கற மாதிரியாகவும் இருக்கு.. ரசிக்க வைக்குது. சூப்பர்..

sridhar said...

மிக பிரமாதம்.. matter எதுவானாலும்.. உங்க உரைநடை ஒரு ரசனை மிக்கதாகவும், அதே சமயம் கொஞ்சம் கலாய்க்கற மாதிரியாகவும் இருக்கு.. ரசிக்க வைக்குது. சூப்பர்.

Unknown said...

May be Subha Vee lost his place to this gentleman. May be his age is not in his side.That cost him a first place

Madotica said...

வஞ்சக புகழ்ச்சி அணியில் உங்களை மிஞ்ச ஆள் ஏது.

Piraisoodi Elanchelian said...

திராவிடர் கழகம் வழங்கும் பெரியார் விருது இந்த ஆண்டு மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்படவுள்ளது, அவருக்கு என் வாழ்த்துகள் என்று சொல்லிவிட வேண்டியது தானே. ஏன் இந்த ஆத்து ஆத்து ஆத்துறீங்க. போதும் டீயை குடிங்க.

புத்தகம் வாங்காமல் கூட இருங்க தப்பே இல்ல, ஆனா புத்தகத்த பத்தி பேசுறவங்கள கிண்டல் பண்ணாதீங்க.

koothanalluran said...

ஆக, எல்லா தமிழ் தொலைகாட்சி அலைவரிசைக்கும் இவர் நிலைய வித்வான் என்கிறீர்கள்

ஜோ/Joe said...

வாவ் ..செமையா எழுதுறீங்க பாஸ்

சேலம் தேவா said...

மாற்றுக்கருத்தின் மன்னன்..!!

Unknown said...

அவருடைய பேச்சு ஒரு குயிலின் கானத்தைப் போல கொட்டும் மழையில் நம் முகம்வருடிச்செல்லும் தென்றலைப்போல அமைதியான ஓடம்போல மிக மிக மென்மையானதாக இருக்கும் (என்று அவரே போடசொன்னார்). -- Ha ha ha ha ..

Unknown said...

அவருடைய பேச்சு ஒரு குயிலின் கானத்தைப் போல கொட்டும் மழையில் நம் முகம்வருடிச்செல்லும் தென்றலைப்போல அமைதியான ஓடம்போல மிக மிக மென்மையானதாக இருக்கும் (என்று அவரே போடசொன்னார்).--- Ha ha ha

Akila Alexander said...

Nice write up with good sense of humor and satire !

Akila Alexander said...

Nice write up with good sense of humor and satire.

செங்கதிரோன் said...

I agree with you Athisha...Congrats Manush for Periyar award...

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க அதிஷா... :)

ஜீவன் சுப்பு said...

##அவருடைய பேச்சு ஒரு குயிலின் கானத்தைப் போல கொட்டும் மழையில் நம் முகம்வருடிச்செல்லும் தென்றலைப்போல அமைதியான ஓடம்போல மிக மிக மென்மையானதாக இருக்கும் (என்று அவரே போடசொன்னார்). பாடகர் யேசுதாஸ் என்னதான் குத்துப்பாட்டே பாடினாலும் அது ஒரு மெலொடியைப்போலவேதான் நான் உணர்ந்திருக்கிறேன். ## Very good expression...!

## கோபிநாத்தைவிட நன்றாக பேச ஆரம்பித்துவிட்டார் என்றுதான் இப்போதெல்லாம் மனுஷ்யபுத்திரனை நீயாநானாவுக்கு அழைப்பதில்லை என்று அவதானிக்கலாம்! ## Superu..!


## ப்ராக்டீஸ் மேக்ஸ் ஏ மேன் பர்பெக்ட் என்று பாஸ் எனப்படும் பாஸ்கரன் என்கிற திரைக்காவியத்தில் நடிகரும் சிந்தனையாளருமான சந்தானம் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்.## My favorite dialogue...


## தொலைகாட்சியில் கருத்து சொல்வதெற்கென ஒரு கல்லூரியை திறந்தால் அதில் நம்ம மனுஷ்யபுத்திரனையே பிரின்சிபாலாக போடலாம். (அந்தக்கல்லூரியில் மற்ற பதவிகளுக்கு பத்ரிசேஷாத்ரி, சுப.வீ, சாரு, பாஸ்கர்சக்தி, இளங்கோ கல்லாணை, முத்துகிருஷ்ணன் மாதிரியான சீனியர்களுக்கும் ஞாநி,சாலமன் பாப்பையா,சுகிசிவம் மாதிரியான சூப்பர் சீனியர்களுக்கும் இடம்கொடுக்கலாம்) ## Karu.Palniappan missing brother..

perumal karur said...

மனுஷ்ய புத்திரனை டீவியில் பார்த்து பிடித்து போய் அதாவது அவரது கருத்து பிடித்து போய் தான் சாயாக் கடை வைத்திருக்கும் சரசு என்பவர் மனுஷ்ய புத்திரனின் தீவிர ரசிகை ஆகி மனதை பறிகொடுத்து விட்டதாக சொல்லிக்கொள்கிறார்கள்..

*******

டீவி பேட்டியில் மனுஷ்ய புத்திரன் போட்டுக்கொண்டு வரும் சட்டைகள் அசத்தலாக உள்ளது..

குரங்குபெடல் said...

அதே மாறி எதையும் பதிவாக்கும் உங்களை மாறி
ஆளுங்களும் அதுக்கு மொக்கை கமெண்டு போடுற
எங்களை மாறி ஆளுகளும் இருக்குற வரைக்கும்
எல்லாமே இம்சை தான் . .


ஏன்யா இந்த கொலைவெறி . .

சுஜாதா விருதை திருப்பி கேட்டாரா என்ன . . .


எல்லா சேனலுக்கும் வாலண்டியரா ஆஜராகி ஊமை குத்து

வாங்குற இதயத்துல்லா வை விட்டு டிங்கள்ளே

பொறுங்க பாஸ்

உங்களையும் கூப்பிடுவாங்க

ரிஷி said...

உங்கள் எழுத்து நடை வெகுவாக ரசிக்க வைத்தது. :-)
வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

அருமை அதிஷா.

ஓஹோ புரொடக்சன்ஸ் said...

அதிஷா சில பெயர்களை சுருக்கி எழுதக்கூடாது என்பது உங்களைப் போன்ற மூத்த பத்திரிகையாளருக்கு எப்படி புரியாமல் போனதென்று எனக்கும் புரியவில்லை. மனுஷ்ய புத்திரனை ம.பு’ என்று சுருக்கும்போது மனசும் புத்தியும் தடுமாறி தப்புத்தப்பாகவே தோணுகிறது. எனவே இனி அவரைப்பற்றி என்னவேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் ’ம.பு’ என்று எழுதாமல் முழுப்பெயரையும் எழுதி,......

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் சொன்னது உண்மையாகிவிட்டது.

dr_senthil said...

நானும் நீங்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் நக்கல் அடித்திருப்பதாக நினைத்தேன்.. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கவனித்து பார்த்ததில் நாள் தவறாமல் கட்சி பாரபட்சமில்லாமல் தலைப்பு பற்றிய எண்ணம் இல்லாமல் அதே டி ஷர்ட் உடன் எல்லா விசயத்திற்கும் இவரையே கருத்து கூற அனுமதித்து உள்ளனர்.. அவரும் டாய்லெட் கூட போக நேரம் இல்லாமல் கருத்து கூறிக்கொண்டே இருக்கிறார்

கானப் பறவை said...

இந்த வாரத்துக்கு விஸ்வரூபம் பட விவகாரம் சுடச்சுட காத்திருக்கிறது. இப்போதே முன்பதிவு முறையில் எந்தெந்த நேரத்துக்கு எந்தெந்த தொலைகாட்சியில் பேசுவது என்பதெல்லாம் புக்காகியிருக்கும். டிவியில் பேசுவதற்கென மனுஷ்யபுத்திரனை புக்செய்ய ஆன்லைன் ரிசர்வேஷன் வசதிகள்கூட உண்டு என்று கேள்விப்பட்டேன்.

விஸ்வரூபம் பட விவகாரத்தில் கமலை விட அதிகமாக பேசப்போகிறவர் மனுஷ்யபுத்திரனாகத்தான் இருப்பார்.. வேண்டுமென்றால் ரிமோட்டை எடுத்து ஏதோ ஒரு செய்திசேனலை தட்டித்தான் பாருங்களேன்!
arumai

Anonymous said...

சவுக்கு இவருக்கு ஏதோ புனை பெயர் வைத்திருக்கிறதே !!!

Bharathi Chellammal said...

It just happened few days back. I went through all your write ups. you have really a good sense of huour and satire (Vikatan product????)

Bharathi Chellammal said...

It just happened few days back. I went through all your write ups. you have really a good sense of huour and satire (Vikatan product????)