
மீண்டும் கருத்து சுதந்திரத்தின் சிறிய கழுத்து மிகக்கொடூரமான வகையில் சட்டத்தின் இரும்புக்கைகளால் நெறிக்கப்பட்டிருக்கிறது. குரல்வளையை கடித்து துப்பியிருக்கிறது. நீதியின் பெயரால் ஒரு அக்கிரமம் அரங்கேறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு உலக நாயகனுக்கு நிகழ்ந்தது இப்போது இன்னொரு உள்ளூர் நாயகனுக்கு நிகழ்ந்திருக்கிறது. ஆமாம் விஸ்வரூபம் படத்தைப்போலவே இன்னொரு திரைப்படத்துக்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலக நாயகனுக்கு குரல்கொடுத்த யாருமே இந்த உள்ளூர் நாயகனுக்காக குரல் கொடுக்கவில்லை. ஏன் ஏன் ஏன்? ஏனென்றால் இது பிட்டுப்படம்! பிட்டுப்படம் என்றாலே நம் சமூகத்தினருக்கு மிகப்பெரிய இளக்காரமாகிவிடுகிறது.ச்சே என்னமாதிரியான தமிழ்சமூகத்தில் நாம் வாழ்கிறோம்.
மதனமாமா மடிசார்மாமி என்கிற கஜகஜா படம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளிவந்தது. அப்போதே, வெறும் படத்தின் பெயரை பார்த்தே அடியேனைப்போலவே சகல பிட்டுபட ரசிகர்களும் உணர்வெழுச்சியை பெற்றனர். படத்தில் பிட்டுகள் குறைவுதான் என்பதை படத்தின் ஸ்டில்களே பறைசாற்றினாலும் படத்தின் தலைப்பே துள்ளலாக அமைந்திருந்தது.
யார் கண்பட்டதோ மதனமாமாவை சென்சார் போர்டினர் ரசிக்கவில்லை. போர்டில் ஆண்களாக இருந்திருப்பார்கள் போல அதனால் மடிசார்மாமியை மட்டும்.. அதாவது மதனமாமாவை நீக்கிவிட்டு மடிசார்மாமியை மட்டும் போட்டுக்கொள்ள வற்புறுத்தினர். மதனமாமா இல்லாமல் மடிசார்மாமி என்னசெய்ய முடியும்! இருந்தாலும் படத்தின் இயக்குனர் பொறுத்துக்கொண்டு படத்தின் தலைப்பை மடிசார் மாமியாக மாற்றியமைத்தார்!
மதனமாமா இல்லாவிட்டால் மடிசார்மாமிக்குதானே பிரச்சனை.. நமக்கென்ன பிரச்சனை. அதனால் மடிசார்மாமியே கூட போதும் என்று நினைத்து படத்தின் ரிலீஸூக்காக கையை நெஞ்சில் வைத்துக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனால் பாருங்கள் யாரோ பிராமணர் சங்கமாம்.. மடிசார் மாமி என்கிற பெயர் அவர்களுடைய ‘சோகால்டு’ சாதியை இழிவுபடுத்திவிட்டதாக கூறி படத்துக்கு தடைவிதிக்க கோரியது.
ஏனய்யா மடிசார் மாமி என்கிற தலைப்பு எந்த விதத்தில் பிரமாணர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது...? அட்லீஸ்ட் ஒரு மைலாப்பூர் மாமி என்றோ மதகஜமாமி என்றோ மல்கோவா மாமி அல்லது மாம்பலம் மாமி என்றுகூட தலைப்பு வைத்திருந்தாலும் கூட ஏதோ கில்மா கதை தலைப்பு போல இருக்கிறது. அந்த தலைப்புகளில் நிறைய மேட்டர்கதைகள் வந்திருக்கிறது. ஆனால் மடிசார் மாமி என்கிற பெயர் மங்களகரமாகத்தானே இருக்கிறது. அந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு சீரியல்கூட வந்ததாக நினைக்கிறேன். அதுவுமில்லாமல் உலகம் முழுக்க மாமிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மடிசாரும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இல்லையென்று மறுக்கமுடியுமா? சொல்லப்போனால் உலகிலேயே மிகவும் மரியாதையான உடையென்றால் அது மடிசார்தான். பாருங்கள் பெயரிலேயே சார் இருக்கிறது. இதுபோல வேறு எந்த உடைக்காவது இருந்ததுண்டா!
அப்படியிருக்க இப்போது நீதிமன்றமோ இந்த தலைப்பை மாற்றிவிட்டுதான் படத்தை வெளியிட வேண்டும் என்று சொல்வது அராஜகமில்லையா? இது ஜனநாயக நாடுதானா என்கிற கேள்விகளை எழுப்பவில்லையா?
இதுபோதாதென்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அந்தக்காலத்தில் வெளியான தாய்சொல்லைதட்டாதே மணாளனே மங்கையின் பாக்கியம் கப்பலோட்டிய தமிழன் மாதிரியான நல்ல கருத்துள்ள படங்கள் இப்போதெல்லாம் வருவதில்லை என்று குறைபட்டுக்கொண்டிருக்கிறார். அவர் ஷகிலா கடைசியாக நடித்த மஞ்சுவயசுபதினாறு படத்தை பார்க்கவில்லை போல.. கடைசி காட்சியில் காமுகர்களை தன் கையாலேயே கத்தியால் குத்தி கொன்று சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லியிருப்பார் ஷகிலா! ம்ம் நம்முடைய நீதிபதிகள் முன்னபின்ன பிட்டுப்படங்கள் பார்த்திருந்தால்தானே இதைப்பற்றிய நாலேட்ஜ் இருக்கும். போகட்டும்.
மடிசார் மாமி என்கிற தலைப்பு இப்போது மாற்றப்படுமா படம் வெளியாகுமா என்று தெரியவில்லை. படத்தின் தயாரிப்பாளரின் நிலையை நினைத்து வருந்துகிறேன். அவர்கூட படத்தை வெளியிட முடியாமல் போனால் அமெரிக்காவுக்கோ ஆஸ்திரேலியாவுக்கோ அமிஞ்சிகரைக்கோ போய்விடலாம். தன் வீட்டை விற்று நடுத்தெருவுக்கு வரலாம். இப்படியே போனால் பிட்டுப்படமெடுக்கிற ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களும் அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில் இடம்பிடிக்க நேரிடும்.
மிகுந்த மனவேதனையாக இருந்தாலும்.. மாற்றுதலைப்பாக மன்மதமாமி, மாம்பலம் மாமி, மட்டன்மாமி, கசமுசா மாமி முதலான பெயர்களை படத்தின் இயக்குனர் பரிசீலிக்க வேண்டும். நல்ல பெயராக தேர்ந்தெடுத்து சீக்கிரமே படத்தை வெளியிட வேண்டும். அதுதான் பிட்டுப்பட ரசிகர்களின் ஒருமித்த கருத்து என்று சொன்னால் அது மிகையாகாது!
8 comments:
Atisha, now all content in blue shades !!!
Atisha, Now all content with blue shades !!!!!!!!!
As usual, you are pseudo secular
Super thala
உங்கள் கருத்தை கண்ணாபின்னாவென்று ஆமோதிக்கறேன். சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பு.
சரியா சொன்னீங்க நம்முடைய நீதிபதிகள் பிட்டுபடங்களை பார்த்தால் தானே அருமை புரியும். பன்னிரண்டு மணிவரை தியேட்டர் வாசல் டீ கடையில் வெயிட் பண்ணி அடுத்த பத்து நிமிஷத்தில் (நிச்சயம் பிட்டு வராது) தியேட்டருக்குள் மின்னல் போல் நுழைந்து டிக்கட் வாங்கி (எங்க இன்னும் வயசு பத்தல அப்படின்னு துரத்துவானோ அப்படின்னு பயந்து) ஓர சீட் புடிச்சி பக்கத்துல ஹோமொசாபியன் உட்காராதவாறு தடுத்து பிட்டு போயிருக்குமோ என்ற பதைபதைப்பில் படம் பார்த்து கடைசி பிட்டு முடிஞ்சி ஆட்கள் எழுந்து போனாலும் இன்னும் ஏதாவது இருக்கும் என்று ஏங்கி படத்திலுள்ள மெசேஜ் என்னவா இருக்கும் அப்படின்னு தெரிஞ்சிகிட்டு வெளிய வரும்போது அடுத்த ஷோ ஆட்களின் கண்ணுல படாதவாறு பதுங்கி திரும்பவும் போய் டிக்கட் கியூவில் நிக்குரமாதிரி யப்பா.. இதமாதிரி ஏதாவது ஜட்ஜ் போயிருந்தாருன்னா அவருக்கு புரியும். போழுதன்னைக்கும் டவாளியோடோட வெள்ளை காருல சுத்திகின்னு இருந்தா அவரு எப்படி பிட்டு படத்துக்கு போய் அருமை பெருமைகளை தெரிந்துகொள்ள முடியும்.
Loosu topic
Nice...I like the comment which is posted on June 3, 2013 at 4:11 PM..
Post a Comment