17 September 2013

காவி ரிப்பன்களும் புன்னகைக்கும் பிள்ளையாரும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப்பொட்டு கழுத்தில் காவி துண்டு.. கண்கள் சிவக்க உடலெல்லாம் வேர்த்துகொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர்களை கடந்த சில ஆண்டுகளாக யானைமுகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது.

பிள்ளையாரோடு அமர்ந்திருக்கிற இவர்களுக்கு கடவுள் பக்தியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. சிலர் அந்த ஆட்டோக்களிலேயே புகை பிடிப்பதும், ஒரு கட்டிங் போடுவதுமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஒரு MOB MENTALITY யோடு வெறித்தனமாக இயங்குகிற இளைஞர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கணபதியை கடலில் கரைக்கிற இந்த சடங்கினை தங்களுடைய ஜபர்தஸ்த்தை ஏரியாவில் பலத்தினை காட்டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டுதோறும் நடத்துகிறார்கள். இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்துமுண்ணனி மாதிரியான இந்துமத முன்னேற்ற அமைப்புகளின் ஆதரவும் பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. அது போதாதென்று எந்த பகுதியில் பிள்ளையார் உட்காரப்போகிறாரோ அப்பகுதி சில்லரை வியாபாரிகளிடம் உருட்டி மிரட்டியும் வசூல் வேட்டை நடத்துவதில் தவறுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏரியாவில் தங்கள் பலமென்ன என்பதை காட்டுவதற்கு விநாயகர் ஒருகருவியாக இருக்கிறார். விரும்பியோ விரும்பாமலோ அவரும் இந்த காவி நாயகர்களோடு ஒற்றை தந்தத்துடன் பயணிக்கிறார். கடல் வரை பயணித்து கரைந்தும் போகிறார்.

இந்தப்பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு! ஞாயிறன்று காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப்படும் டெம்போ ஆட்டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பொறுக்கி பக்தர்களும் கடற்கரைக்கு பயணித்துக்கொண்டிருந்தார்கள். ஏய் ஏய்.. ஆய் ஊய் என்கிற சப்தங்கள் ஒலிக்க அவர்கள் ஊர்வலமாக சென்றுகொண்டிருந்தனர். பிள்ளையார் ஆட்டோவின் மூலையில் அமரவைக்கப்பட்டிருந்தார்.

டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதினைந்து வயது இருக்கலாம். அவள் அந்த டெம்போவை ஒட்டி தன் ஸ்கூட்டியில் முந்தி செல்ல எத்தனிக்கிறாள்... ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் முதலில் விசிலடித்தனர்... பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களை கிள்ளி எரிந்தனர். அதற்கு பிறகு அதில் ஒரு பொறுக்கி பக்தன் தண்ணீர் பாக்கெட்டை எடுத்து அந்தப்பெண்ணின் மேல் பீய்ச்சி அடிக்கத்தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்த பெண்ணை பார்த்து கூறவும் ஆரம்பித்தான்.

அந்தப்பெண் கோபத்தில் ஏதோ பதிலுக்கு ஏதோ திட்ட ஆரம்பிக்க.. ஆட்டோவை அந்த பெண் மேல் ஏற்றுவதைப்போல ஓடித்து ஓட்டுகிறார் ஆட்டோ டிரைவர். உதயம் தியேட்டர் அருகே நூறடிரோடு திரும்புகிற இடத்தில் அந்த பெண்ணை இடிப்பது போல ஒடிக்க.. ஸ்கூட்டி பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீயணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பஸ் ஸ்டான்ட் அருகே தடுமாறி விழுந்தாள். பெரிய காயமில்லை.. விழுந்ததும் அருகில் பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்துவிட்டனர்.

ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்த.. வண்டி அந்த திருப்பத்தில் காத்திருந்த பிள்ளையார் வண்டிகளின் நீண்ட வரிசையில் இணைந்தது.

இவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்டவரிசையை பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர்களைப்போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும் கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல்லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர்களைப்பார்க்க ஒரு நீண்ட சண்டைக்காக காத்திருக்கிறவர்களைப்போல இருந்தது. மிகச்சிறிய தூண்டுதலிலும் கொலையோ கற்பழிப்பையோ கூட அரங்கேற்றுகிற ஆக்ரோஷத்துடன் இருந்தனர். காவல்துறை நண்பர்களும் கூட இக்கூட்டத்தினரிடம் அடக்கியே வாசிக்கின்றனர்.

இந்த காவி ரிப்பன் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதோடு இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும் இவர்கள் எல்லோருமே மூக்கு முட்ட குடிப்பவர்களாக சின்ன தூண்டுதலிலும் ஆகப்பெரிய வன்முறையை நிகழ்த்திவிடுகிறவர்களாக இருப்பதும் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வலுப்படுத்துகிறது.

நேற்று சந்தித்த அந்த டெம்போஆட்டோ இளைஞர்களின் முகத்தில் கண்களில் தெரிந்த வன்முறையை, அந்த பெண்ணின் மீது வன்மத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து பகிர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத்திலும் பயமுறுத்தக்கூடியது... சாகும்வரை மறக்கவே முடியாதது.

31 comments:

கலியபெருமாள் புதுச்சேரி said...

avargalthan india vai vallarasakka kaathirukkum sakthimangal..

துளசி கோபால் said...

அடப் பாவிகளா:(

சாமி பேரை(யே) கெடுத்துட்டான்களே:(

Anonymous said...

bhakthi in moderate form is good for all

Anonymous said...

I completely agree with your thoughts on Mob Mentality. But do not tie this with any religious event. The same incidents happened in PMK's event, DMK, ADMK events. The mob mentality is not associated with religion or politics. It is the individual's responsibility than Ganesh chaturthi.

Thanks
Sakthi

Anonymous said...

Great.. Sir.. Keep rocking. alleluia.. alleluia.. alleluia.

Anand said...

நல்ல பதிவு.யாரும் எதிர்த்துக் கேட்க முடியாத கடவுளின் பெயரில் நடக்கும் எத்தனையோ கொடுமைகளில் இதுவும் ஒன்று. கூடிய விரைவில் நாட்டுக்கு இன்னொரு பெரியார் தேவைப் படலாம்..

Narmi said...

Padikkave manthitku kasha aagum sangadamagavum irikkirathu

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

இதுபோன்ற அக்கிரமங்களை அரசாங்கம்தான் தடைசெய்யவேண்டும். வழிப்பாடு கோவிலோடு வீட்டோடு கும்மியடிப்பது கோலம்போடுவதையெல்லாம் வைத்துக்கொள்ளவேண்டும். பொதுவிற்கும் இயற்கைக்கும் சொந்தமான கடல்நீரை மாசுபடுத்துவது அராஜகம். பொதுமக்களுக்கு இடையூறு. யோசிக்கவே மாட்டார்களோ.!? எல்லாவற்றிக்கும் சுலபமாக சோரம்போகிறவர்கள் இளிச்சவாய் நம் தமிழர்கள் தானோ!?. அசிங்கமாக இருக்கிறது. நல்லவேளை மலேசியாவில் எங்களின் அரசாங்கம் பொதுவில் ஆற்று கடல் நீரை மாசுபடுத்துவதற்கு தடை விதித்துள்ளது. இல்லையேல் இங்கேயும் இவ்வராஜகம் தொடர்ந்து தொலையலாம்.. எங்கு பார்த்தாலும் எங்கு சென்றாலும் Hindus மட்டுமே இப்படி.

sharfu said...

Nothing to say...................

sharfu said...

Nothing to say...........

Anonymous said...

I was Shocked, after reading this article...

Anonymous said...

whatever you told is correct. Nowadays in name of Vinayaka Chathurthi, these people are making atrocities. Gopala krishna Gokhale used Vinayaka Chathurthi to unite people. These persons are degrading the Vinayaka Chathurthi. - Rajaram

Anonymous said...

எல்லாத்துக்கும் இந்தப் பார்ப்பானுங்கதான் காரணம். அதுசரி, நல்லா பாத்தீங்களா? அவனுங்க குடுமி வச்சிக்கிட்டு பூணல் போட்டுக்கிட்டுத் தானே இருந்தாங்க? சும்மா தகிரியமாச் சொல்லுங்க.

Anonymous said...

பிள்ளையாரும் சில பொறுக்கி பக்தர்களும். This cld b an APT title dude. Madotica

Anonymous said...

1000% true

manjoorraja said...

கோவையில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்க கவுண்டருக்கு போகும் போது ஒரு ஆட்டொ டிரைவர் தலைமையில் இந்த கூத்திற்காக டொனேஷன் வாங்க ஒரு கூட்டம் வந்தது. கேஷியர் 100 ரூபாய் கொடுத்தார். அதை அவர்கள் திருப்பி கொடுத்துவிட்டு முறைத்துக் கொண்டு சென்றனர். இந்த புதிய கலாச்சாரம் மிகவும் அபாயகரமானது.

Anonymous said...

very good sir. what u say is crt.

Anonymous said...

பொருக்கி பொறம்போக்கு நாயிகள்...அவனுங்க அக்கா, தங்கச்சிய நாடு ரோடு ல நிப்பாட்டி மூத்திரம் பேஞ்சு விடனும்..கோத்தா இவனுக வீராத ஒரு 15 வயசு பொன்னுட காமிசுருகாங்க...நண்பரே மிகவும் அருமையான பதிவு...please share it in face book ...

VISA said...

Love it. Keep going...

akp said...

ஆம் நீங்கள் குறிபிட்டுள்ளது போன்ற ஒரு கூட்டத்தை சில வருடங்களாக காண முடிகிறது... சென்னை-யில் மட்டுமல்லாது நான் இருக்கும் பெங்களுரிலும் இது நிகழ்கிறது... இதனை பற்றி நீங்கள் வேலை செய்யும் வாரப்பத்திரிக்கையிலும் எழுதி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்... அதனைப் படித்தபின் அரசாங்கம் விதி முறைகளை கொண்டுவர வாய்ப்பு இருக்கிறது...

Anonymous said...

மோடி கூட்டத்தின் தலைமையில் இந்த நாடு படப்போகும் அவஸ்தையையும் நம் பாதுகாப்பையும் நினைத்தால், இந்துவாவது, முஸ்லிமாவது... பத்திரம், பாதுகாப்புதான் முக்கியம் என்று உறுத்துகிறது.

இந்த நிதர்சனத்தைப் புரியாமல் ஊடகத்தில் ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். புத்தாண்டு கொண்டாட்டத்தையும், காதலர் தினத்தையும் அவர்கள் தடைசெய்து தாக்க ஆரம்பிக்கும் போதுதான் இவர்களுக்கு உரைக்கும்.

சிவ.சரவணக்குமார் said...

//இந்த காவி ரிப்பன் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. //

இதற்குப்பெயர்தான் பூனைக்குட்டி வெளியில் வருவது என்பது......உங்களது உண்மையான பிரச்சினை இதுதானேஅதிஷா?

Anonymous said...

நல்ல பதிவு.

Anonymous said...

///எல்லாத்துக்கும் இந்தப் பார்ப்பானுங்கதான் காரணம். அதுசரி, நல்லா பாத்தீங்களா? அவனுங்க குடுமி வச்சிக்கிட்டு பூணல் போட்டுக்கிட்டுத் தானே இருந்தாங்க? சும்மா தகிரியமாச் சொல்லுங்க.///


அவனுங்ககளைத் தூண்டிவிட்டு பின்னால் நின்று கொண்டு இருக்கும் பரதேசிகள் சத்தியமாக பார்ப்பானுங்கதான்.

Anonymous said...

HAVE YOU WRITTEN ANYTHING ABOUT THE BEHAVIOUR OF THE CROWD, WHO ASSEMBLED IN FRONT OF AMERICAN EMBASSY AGAINST A FILM?
HIGHLY DECENT BEHAVIOUR. WHY YOU CAN NOT APRRECIATE THEM?

Anonymous said...

ரங்கநாதன் தெருவுல போகும் போது கூட தான் இந்த வேலைகள அயோக்ய பசங்க செய்யுறாங்க..அப்போ அந்த தெருவுக்குள்ள யாரும் நுழையக் கூடாதுன்னு 144 போட்டுவோமா? எவனோ ஒருத்தவன் பண்ணானா அவன புடிச்சி ஒதைங்க, அதா விட்டுட்டு "காவி ரிப்பைன்னு" எழுதுறீங்க.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ரங்கநாதன் தெருவுல போகும் போது கூட தான் இந்த வேலைகள அயோக்ய பசங்க செய்யுறாங்க..அப்போ அந்த தெருவுக்குள்ள யாரும் நுழையக் கூடாதுன்னு 144 போட்டுவோமா? எவனோ ஒருத்தவன் பண்ணானா அவன புடிச்சி ஒதைங்க, அதா விட்டுட்டு "காவி ரிப்பைன்னு" எழுதுறீங்க.//
// =எவனோ ஒருத்தவன் பண்ணானா அவன புடிச்சி ஒதைங்க=//

ஏனுங்க பெயரற்றவரே! இதை என்னுமொரு காவி ரிபன் கட்டியது செய்யலாமே!

Raashid Ahamed said...

அரசாங்கம் வலுவானதாகவும் சட்டம் கடுமையானதாகவும் இல்லாவிட்டால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். மக்கள் தொகை பெருக்க பெருக்க வீட்டுக்கும் நாட்டுக்கும் உபயோகமில்லாத இதுபோல பொறுக்கி கூட்டம் பெருகத்தான் செய்யும். இனி வரும் காலங்கள் நல்லதாக இருக்க போவதில்லை. மதவித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் தொல்லை கொடுப்பது தான் இந்த கூட்டத்தின் நோக்கம்.

Raashid Ahamed said...

அரசாங்கம் வலுவானதாகவும் சட்டம் கடுமையானதாகவும் இல்லாவிட்டால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். மக்கள் தொகை பெருக்க பெருக்க வீட்டுக்கும் நாட்டுக்கும் உபயோகமில்லாத இதுபோல பொறுக்கி கூட்டம் பெருகத்தான் செய்யும். இனி வரும் காலங்கள் நல்லதாக இருக்க போவதில்லை. மதவித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் தொல்லை கொடுப்பது தான் இந்த கூட்டத்தின் நோக்கம்.

Samayoji said...

Ingu mattumalla, Mumbaiyilum intha kaavi kootam ithaithaan seithullathu,

Are women safe anywhere?

http://timesofindia.indiatimes.com/videos/news/Woman-molested-at-Lalbaugcha-Rajas-visarjan-procession/videoshow/22807295.cms?utm_source=facebook.com&utm_medium=referral

Anonymous said...

You can make this story better by writing the girl is a muslim or christain..