Pages

29 April 2013

அடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+




இருட்டு அறையில் முரட்டுகுத்து, உள்ளவாடி புள்ளதரேன், ஜட்டிக்குள் ஜாங்கிரி, போர்வைக்குள் போராட்டம், பாப்பா போட்ட தாப்பா, மல்கோவா ஆன்ட்டி முதலான தலைப்புகளெல்லாம் எதனுடையதென்று தெரியுமா? பிஎஃப், சீன், காஜூ, கஜகோல், பஜனை,மாங்கனி,பண்டம் மாதிரியான வார்த்தைகளுக்கு மீனிங் தெரியுமா? சேலம் என்று சொன்னாலே சிவராஜ் சித்தவைத்தியர் நினைவுக்கு வருகிற அளவுக்கு கெட்டபழக்கம் பண்ணியதுண்டா? பிரபலமான பாடல்களின் வரிகளில் கெட்ட வார்த்தைகளை போட்டு நண்பர்களோடு குஜாலாக பாடி ரசித்ததுண்டா? செக்ஸ் ஜோக்குகளை நீங்களாகவே உருவாக்கி நண்பர்களிடம் சொல்லி பல்பானதுண்டா? மிஸ்டர் பிள்ளைவாள்.. மிமிக்ரி காமெடி எம்பி3 கேட்டதுண்டா?

18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே ஷகிலா படங்களை கண்டதுண்டா? ரேஷ்மா,சிந்து,மரியா,ஷர்மிலி முதலானவர்கள் யார் என்று தெரியுமா? ஆன்ட்ராய்ட் காலத்திலும் பாஸ்வோர்ட் போட்டு TSS அப்ளிகேஷனில் மேட்டர்கதைகள் படிக்கிறீர்களா? அவ்வப்போது யூட்யூபில் கில்மா படம் பார்க்கிறீர்களா? டெசிபாபா தெரியுமா? சன்னிலியோன்,ஷெர்லின் சோப்ரா,பூனம்பண்டே முதலானவர்களை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து ரசிப்பவரா?

இதையெல்லாம் செய்தவர்... அல்லது செய்துகொண்டிருப்பவர் என்றால் உங்களுக்காகவே வந்துள்ள படம்தான் யாருடா மகேஷ்! அதாவது மகேஷ் வூ ஆர் யூ! யெஸ் திஸ் மூவி ஈஸ் டெபனட்லி ஃபார் யூ... என்கிறார் மேஜர் சுந்தர்ராஜன்.

(கட்டுரையின் முதல் வரியை படிக்கும்போதே உவ்வேக் என வாமிட் வாமிட்டாக வருவது போல உணர்ந்திருந்தால்.. அய்ய்யோ அபச்சாரம் பண்றேளே என பதறியிருந்தால்.. ஐயாம் வெரி சாரி.. நீங்க ரொம்ப நல்ல பையன் போல! ஐ திங்க்... நீங்க சுஜாதாவின் மெக்சிகன் சலவைக்காரி ஜோக்கு என்னவென்றே தெரியாமல் சிரிக்கிறவராக இருக்கலாம். அவ்ளோ நல்ல ஜிலோஜிப்பாவாக நீங்களிருக்கும் பட்சத்தில் இந்த திரைப்படமும் இந்த விமர்சனமும் உங்களுக்கல்ல! ரெஸ்பெக்டட் ரீடர் ப்ளீஸ் கெட் அவுட் ஆஃப் மை வெப்சைட்!)

பிட்டுப்படம் என்பது கண்களுக்கு விருந்தளிக்க கூடியது. அதாவது பார்த்து ரசித்து இன்பத்தை சுவைப்பது. ஷகிலா,ஜெயதேவன்,டின்டோ பிராஸ் வகையறா படங்கள். செவிக்கு இன்பம் தரும் பிட்டுவகையறா ஒன்றுண்டு. செக்ஸ்கதைகள்,ஜோக்குகள்,கெட்டவார்த்தைகள் முதலானவை இந்த ரகம். யாருடா மகேஷ் அந்த வகையை சேர்ந்தது.

யாருடா மகேஷ் படத்தை பார்க்க கூட தேவையில்லை.. சொல்லப்போனால் பார்க்க வேண்டிய சீன்கள் மிகவும் குறைவுதான். ஆனால் வசனங்களை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு கேட்டாலும் உங்களால் வயிறு நெஞ்சு மற்றும் குட்டி இதயம் நோக சிரிக்க முடியும். படத்தின் கதை வசனம் சிடியாக வெளியானால் கூட சூப்பர் ஹிட்டாக வாய்ப்புண்டு.

படத்தின் இயக்குனர்.. பள்ளி கல்லூரிகாலங்களில் பிட்டுப்பட தியேட்டர்களில் தவமாய் தவமிருந்திருப்பார் போல. (படம் பார்க்கும்போது டே மச்சி.. ஈயாளு நம்மட ஆளானு என்கிற எண்ணம் மேலோங்கியது எனக்கு மட்டும்தானா?). ரேஷ்மா ஜாடையில் இருக்கிற நடிகையை கல்லூரி புரொபசராக கவனமாக போட்டிருக்கும்போதே அதை உணர முடிந்தது. படம் முழுக்க எதைப்பற்றியும் கவலைப்படாமல் காட்சிக்கு காட்சி கில்மா மேட்டர்களை அள்ளி தெளித்திருக்கிறார்.

படத்தின் கதை,திரைக்கதையெல்லாம் இரண்டாம்பட்சம்தான். இயக்குனர் எப்படியாவது ஒவ்வொரு ஃப்ரேமிலும் கிடைக்கிற ஒவ்வொரு சந்திலும் தன்னுடைய கஜகஜாவை நுழைத்துவிடுகிற துடிப்பினை படம்பார்க்கும்போது உணர முடிந்தது. செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என்பதுபோல.. படத்தில் நம்முடைய காதுகள் டயர்டாகும்போது ஒரு ஜாலி சாங் போட்டு பிட்டுபோல சேர்த்துவிடுகிறார். காதுக்கு ஓய்வு.. கண்களுக்கு குளிர்ச்சி.

லாஜிக்கே இல்லாத காட்சிகள். மொக்கையான ட்விஸ்டுகள் நிறைந்த திரைக்கதை, கேவலமான கதை என எல்லாமே சுமாராகவே இருந்தாலும்.. சிங்கிள் மீனிங் கில்மா வசனங்களும், காட்சிகளும் படத்தை காப்பாற்றிவிடுகின்றன. காமெடி,ஆக்சன் படங்களுக்கு மட்டுமல்ல பிட்டுப்படங்களுக்கும் லாஜிக் பார்க்க கூடாது.

தமிழில் இதுமாதிரியான அடல்ட் காமெடி படங்கள் மிகமிக குறைவு. இத்தனை ஆண்டுகால தமிழ்சினிமாவில் எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, விகே ராமசாமி, எஸ்ஜேசூர்யா என மிக குறைவானவர்களே வசங்களின் மூலமாக அடல்ட் காமெடியை முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். இரட்டை குழல் துப்பாக்கி படத்தை அந்த வகையில் சேர்க்க முடியுமா தெரியவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மைக் மோகன் நடித்து வெளியான சுட்டபழம் அப்படியானதொரு அடல்ட் காமெடி முயற்சி! அந்த படத்தின் தோல்விக்கு பிறகு யாருமே அந்த ஜானரில் படமெடுக்க தயங்கியே வந்துள்ளனர். யாருடா மகேஷ்தான் அவ்வகையில் வெளியாகிருக்கும் இரண்டாவது படமாக கருதுகிறேன். சுட்டபழம் படத்திலிருந்து கூட சில காட்சிகளை யாருடா மகேஷில் தெரிந்தோ தெரியாமலோ சுட்டிருப்பார்கள் போல!

முதல் மூன்று பாராவில் சொன்ன அங்க அடையாங்கள் உள்ள நல்ல பையன்கள் தைரியமாக தியேட்டர்களில் சென்று படத்தை கேட்டு இன்புறலாம். அச்சசோ நான் அப்படிலாம் இல்லைங்க ரொம்ப நல்லப்பையன் என்று எண்ணிக்கொண்டிருக்கிற உத்தமமான உத்தமர்கள் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு போய் காணலாம்.


23 April 2013

பாவம் சார் உங்க வொய்ஃபூ!





ஒரு திரைப்படத்தை காண இவ்வளவு கொடுமைகளையும் அவமானங்களையும் எந்த ரசிகனும் சந்தித்திருக்கமாட்டான். எத்தனை ஏச்சுகள் எவ்வளவு பேச்சுகள். மூச்சு முட்ட வாங்கின ஒவ்வொரு அடியும் இன்னமும் வலிக்கிறது. இத்தனை அடிகளையும் மிதிகளையும் அவமானங்களையும் சந்தித்தும் நம்மால் அந்த உன்னதமான காவியத்தை காணமுடியாமல் போவதன் பின்னிருக்கும் வலியை ஜெயமோகன் மாதிரியான உணர்வுள்ள வசனகர்த்தாவால் மட்டும்தான் வார்த்தைகளால் வடிக்க முடியும். உஃப்ப்ப்..

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோனன் டிக்கன்ஸ் என்பவர் ஒரு புத்தகத்தை தேடி பல ஆண்டுகள் அலைந்தாராம். பதினாறாயிரம் கிலோமீட்டர்கள் அலைந்து ப்ரோக்கன் தி ஹெல் என்கிற புத்தகத்தை கண்டுபிடித்தாராம். பிரஞ்சு பழங்குடி இனத்தவர்களின் புரட்சி பத்தின ஏதோ புரட்சிகர புத்தகமாம். அதை படித்தே தீரவேண்டும் என்று வெறியோடு அலைந்து திரிந்து 12 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்தாராம் ஜோனன் டிக்கன்ஸ்.

புக்கு கைக்கு கிடைக்கும்போது குடும்பம், சம்பாத்தியம், சந்தோஷம் எல்லாவற்றையும் தொலைத்திருந்தார். ஆனால் அந்தப் புஸ்தகப்பிரதியை வாங்கிய கணம், ''இந்த நிமிடம் உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான்தான். இந்த மகத்தான பிரதியை அச்சாக்கி... வரும் தலைமுறைகளுக்குத் தந்துவிட்டு, நான் செத்துப்போய்விட்டால், அதைவிடச் சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்' என்ற டிக்கன்ஸ், அதை உடனே செய்தார்!

இந்த ஜோனன் டிக்கன்ஸ் போலவேதான் எப்படியாவது அந்த மகத்தான திரை ஓவியத்தை தரிசித்துவிட வேண்டும். அதை பற்றி நாலுவரி.... நாலேவரி நம்முடைய இணையதளத்தில் எழுதிவிடவேண்டும். அதை வருங்கால சந்ததிகளுக்கு தந்துவிட்டு செத்துபோய்விட்டால் அதைவிட சந்தோஷம் வேறு என்ன நமக்கு இருக்கமுடியும் என்றெல்லாம் நினைத்து அந்தப்படத்தை பார்க்க தீர்மானித்திருந்தேன்.

சிலபல மாதங்களுக்கு முன் முதன்முதலாக அந்தப்படம் குறித்த போஸ்டர்களை பார்த்தபோதே தீர்மானித்துவிட்டேன் இதை எப்பாடுபட்டாவது பார்த்துவிடுவது என்று. எவர்க்ரீன்ஸ்டார் என்கிற அந்த அடைமொழியும் படத்தின் போஸ்டர் டிசைனும் அதன் நாயகனும் என்னை ஈரோ ஈர் என்று ரொம்பவே ஈர்த்துவிட்டனர்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் படம் குறித்த பல்வேறு விதமான படங்களுடன் தினத்தந்தியில் விளம்பரங்கள் வரும். அதை பார்த்து பார்த்து ஆசையோடு படம் வரும் நாளுக்காக காத்திருந்தேன். ஒரு நல்ல நாளில் படத்தின் டிரைலர் வெளியிடபட்டது.

உதடெல்லாம் லிப்ஸ்டிக்கு முகமெல்லாம் ரோஸ்பவுடர் என அழகுசுந்தரமாக காட்சியளித்த அந்த சோலார்ஸ்டார் ஹீரோவை பார்க்க கண்கோடி வேண்டும். என்ன அழகு! அவர் பேசிய பஞ்ச் வசனங்களை கேட்டு பக்கத்து சீட்டு தோழர் காதில் ரத்தம் வடிய அமர்ந்திருந்தார்! என் காதிலும் ரத்தம் கசிந்திருக்கிறது எனக்குதான் தெரியவில்லை. அப்படியே டிரைலரில் மூழ்கிவிட்டேன் போல! வொய் ப்ளட்.. சேம் ப்ளட் என்று சிரித்துக்கொண்டோம். டிரைலருக்கே காதில் ரத்தம் என்றால் படத்தை பார்த்தால் எப்படியிருக்கும் என்பதையெல்லாம் சொல்லத்தேவையில்லை.

சகலதுவாரங்களிலும் ரத்தம் கசிய நேரும் ஆபத்திருந்தும் நான் ஏன் அந்தப்படத்தை பார்க்க நினைத்தேன்.. ஏன் ஏன் ஏன்?
எங்கோ அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிற கடைக்கோடி தமிழ் வாசகனுக்காக என் உயிரையும் பணயம் வைக்க துணிந்தேன்.

( இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிற தமிழ் எழுத்தாளனுக்கு ஒரு பொறை பிஸ்கட்டு கூட வாங்கிதராத தமிழ்சமூகம்தான் இது என்றாலும் வேறு வழியில்லை நம்மவலைதளத்தில் கட்டுரை ஏற்றி பலநாளாகிவிட்டதால் எதையாவது எழுதவேண்டுமே.)

சரி இப்படியாக படத்தின் டிரைலரும் பிறகு வந்த பாடல்களும் படம் பார்க்கிற ஆர்வத்தை வெறியாக மாற்றிவிட்டன. சென்றவாரம் அந்தப்படம் வெளியானது. அநியாயம் பாருங்கள். அன்றைக்குத்தான் என் வீட்டு பூனைக்கு பிரசவம். அதனால் பயங்கர பிஸியாகிவிட்டேன். படம் பார்க்க முடியவில்லை. படம் வெளியாகி ஒருநாள் ஆகியும் நம்முடைய விமர்சனம் வராததால் நம்முடைய கொலைவெறி வாசகர்கள் கடுப்பாகிவிட்டனர்.

வாசக நண்பர்களான அமெரிக்காவை சேர்ந்த அர்னால்ட் ஸ்வாச்சனேக்கர், ஆஸ்திரேலியாவில் பொட்டிக்கடை வைத்திருக்கும் சத்யா, ஜப்பானை சேர்ந்த ஜாக்கிசான், பாகிஸ்தானை சேர்ந்த யாரோ முஷாராப்போ என்னவோ பெயர்... அதுகூட நினைவில்லை. மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜாக் காலிஸ், டெல்லியிலிருந்து ஏதோ சிங்.. கன்மோகனோ ஜின்போகனோ. ஏதோ பெயர். பிரதமராம். இப்படி ஏகப்பட்ட பேர் போனில் அழைத்து சார் படம் பார்த்தாச்சா.. உங்க விமர்சனம் எப்போ போடுவீங்க.. எப்போ போடுவீங்க என்று ஒரே டார்ச்சர்.

ஃபேஸ்புக்கில் பத்தாயிரம் பேர்.. ட்விட்டரில் ஆறாயிரம் ப்ளாகில் ஒரு ஐந்தாயிரம் என ஒரு நாற்பாதாயிரம் பேரை காத்திருக்க வைப்பது எவ்வளவு தவறு. அதனால் சனிக்கிழமை மாலை படம் பார்க்க முடிவெடுத்தோம்.

நானும் தோழர் குஜிலிகும்பானும் படம் பார்க்க உதயம் தியேட்டருக்கு விரைந்தோம். ஆனால் அன்பார்சுனேட்லி அந்தப்படம் அங்கே திரையிடப்படவில்லை என்று தியேட்டர்காரர் சொன்னார். ஆனால் தியேட்டரில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. நான்குகாட்சிகள் என்கிற செய்தியும் இடம்பிடித்திருந்தது.

‘’என்னங்க போஸ்டர் போட்டிருக்கு.. நான்குகாட்சிகள்னு வேற கொட்டை எழுத்துல போட்டிருக்கு, படம் போடலைனு பொய்சொல்றீங்க.. ஐ வில் கோடு கன்ஸ்யூமர் கோர்ட்.. வில் ரைட் இன் தி இந்து.. டெக்கான் க்ரானிக்கிள்.. டாய்லெட் டோர்.. யூ நோ ஐயாம் ஏ ஃபேமஸ் ரைட்டர்.. ஆய் ஊய்’’ என்று சவுண்ட் விட்டார் குஜிலிகும்பான்.

‘’அப்படிதான் சொல்வோம் எங்க இஷ்டம்.. நீ என்ன பெரிய மயிரா.. போடா வெண்ணை.. ________ (சென்சார்ட்) இங்கயே நின்ன தூக்கிப்போட்டு மிதிச்சிருவேன் ஓடிடு’’ என்று அன்போடு எங்களை விரட்டினார் தியேட்டர்காரர்.

அவருடைய நியாயமான கோபத்தை புரிந்துகொண்டு கண்ணில்வந்த கண்ணீரை துடைத்தபடி ‘’நன்றி பிரதர்.. இப்படி டீசன்டா முதல்லயே சொல்லிருந்தா நாங்க போயிருப்போம்ல... இப்ப பாருங்க ராஜா எப்படி வண்டிய வுட்றானு’’ என்று தன்னுடைய அறச்சீற்றத்தை அக்குளில் வைத்து அமுக்கிக்கொண்டு கிளம்பினார் குஜிலிகும்பான். நானும் அவரை பின்தொடர்ந்தேன்.

‘’ப்ரோ நீங்க அவன போட்டு பொளந்திருக்கணும்’’ என்றேன்.

‘’எனக்கும் ஆசைதான்..ப்ரோ.. வீட்டுக்குபோய் ஃபேஸ்புக்ல அவனதிட்டி நாலு ஸ்டேடஸ்... ட்விட்டர் நாலு ட்விட்டு.. வெப்சைட்ல ஒரு சீரியஸ் பதிவுகள்னு போட்டு அவனை நாறடிக்கறேன் பாரு.. யாருகிட்ட பச்சாப்பையன்.. என்னோட எழுத்தாயுதம்பத்தி தெரியல ப்ரோ.. ’’ என்று வீரமாக பேசினார். எனக்கு அப்படியே மயிர்க்கூச்செரிந்தது.

படம் பார்க்க வந்தோமில்லையா? உதயத்தில்தான் இல்லை.. சரி வேறு தியேட்டர் இருக்கிறதா என்று ஆன்லைனில் தேடினால் தேவி கருமாரியில் 6.30 ஷோ ஓடுவதாக தகவல் கிடைத்தது. ராஜாவின் வண்டி நேராக அங்கே பறந்தது. விர்ர்ர்ர்...

தேவி கருமாரி திரையரங்கின் வாசலிலேயே பேய்க்கூட்டம். அய்ய்யோ இந்த படத்துக்கு டிக்கட் கிடைக்காது போலிருக்கே என மனம் பதறுகிறது. நம் வாசக நண்பர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் என்பது புரியாமல் இதயம் படபடக்கிறது. த்த்த்த்தெய்வமே....

குஜிலிகும்பான்தான் ‘’ப்ரோ யூ டோன்ட் வொர்ரி நான் இருக்கேன்ல என்னோட எழுத்தாளர்ன்ற இன்ப்ளூயன்ஸ் யூஸ் பண்ணி இரண்டு டிக்கட் எப்படி உஷார் பண்ணிட்டு வரேன் பாருங்க’’ என்று கூட்டத்துக்குள் புகுந்து தலைமறைவானார்.

கூட்டத்துக்குள் புகுந்தவர் வெளியே வரவேயில்லை. அரைமணிநேரம் கடந்திருக்கும். கடுப்பாகி கவுண்டர் அருகில் சென்று பார்த்தால் இங்கேயும் குஜிலி தியேட்டர் காரரோடு தகராறு செய்துகொண்டிருக்கிறார். இந்த எழுத்தாளர்களோடு எப்போதுமே இப்படித்தான்! ‘’குஜிலி ப்ரோ வாட் ப்ராப்ளம்’’ என்றேன்.

‘’நத்திங் ப்ரோ.. திஸ் மேன் நாட் கிவ்விங் டிக்கட்யா’’ என்றார்.

‘’ஓமைகாட்.. தியேட்டர்கார் தியேட்டர்கார் ஏன் இவருக்கு டிக்கட் தரமாட்டேன்றீங்க.. ‘’

தியேட்டர்கார் எங்கள் இருவரையும் ஏதோ மென்டல் ஆஸ்பத்தி பேஷன்ட்ஸைப்போல பார்த்துவிட்டு... ‘’பாஸ் உங்களை பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கு..’’ என்று தொடங்கினார். எனக்கு பெருமையாகிவிட்டது. குஜிலியை பார்த்து சிரித்தேன். குஜிலியோ இருடி உனக்கும் இருக்கு என்பதுபோலவே பார்த்தார்.

நான் சட்டையை சரிசெய்துகொண்டு ‘’ யெஸ் சொல்லுங்க’’

‘’இவர் கேக்கற படத்துக்கு டிக்கட் குடுக்க முடியாத நிலைமைல இருக்கோம். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க..’’

‘’ஏன் சார். இவருக்கு வயசில்லையா.. அந்தஸ்தில்லையா.. அழகில்லையா.. பர்சனாலிட்டி இல்லையா.. என்ன இல்லை ஏன் இவருக்கு டிக்கட் தரமாட்டேனு சொல்றீங்க’’

‘’யோவ் லூசு மாதிரி உளறாதய்யா..’’ என்றார் தியேட்டர்காரர். குஜிலிக்கு செம சிரிப்பு அடக்கி கொண்டு என்னை பார்த்தார்.

‘’அப்புறம் ஏன்ங்க அவருக்கு டிக்கட் குடுக்க மாட்டேனு சொல்றீங்க.. இது அநியாயம் இல்லையா.. அவர் யார் தெரியுங்களா ஃபேமஸ் தமிழ் ரைட்டர்’’ என்றேன்.

‘’அது சரிங்க.. இந்த படத்துக்கு இதுவரைக்கும் யாருமே டிக்கட் எடுக்கல.. நீங்கதான் முத ஆளு.. இரண்டு பேருக்காகலாம் படம் ஓட்ட முடியாதுங்க’’ என்றார் தியேட்டர் காரர்.

‘’சார் ஆனா பாருங்க நாங்க இந்த படத்தை பார்த்தே ஆகணும்.. இல்லாட்டி போனா எங்க வாசகர்கள் கோச்சிப்பாங்க..எங்களை கேவலமா திட்டுவாங்க.. ரோட்ல போனா கல்லை வுட்டு அடிப்பாங்க’’ என்றேன்.

(குஜிலி சத்தமில்லாமல் காதோரம் வந்து ‘’இல்லாட்டியும் இப்படிலாம் பண்ணுவாங்கதானே ப்ரோ’’ என்றார்.)

எனக்கு கடுப்பாகி ‘’சார் ப்ளீஸ் டிக்கட் குடுங்க.. இந்த சமூகத்துக்காக குடுங்க.. இந்த தேசத்துக்காக குடுங்க.. இந்த நாட்டு மக்களுக்காக குடுங்க ப்ளீஸ்.. உங்க கால்ல வேணாலும் விழறோம்’’ என்று கதற ஆரம்பித்தேன்.

‘’அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க.. ஒரு பத்துபேராச்சும் வந்தாதான் டிக்கட் குடுப்போம் ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.. வேணும்னா இன்னும் கால்மணிநேரம் இருக்கு.. அப்படி ஓரமா ஒருத்தர் நிக்கறார் பாருங்க அவரோட வெயிட் பண்ணுங்க’’ என்றார்.

‘’அவர் யார் சார்..?’’

‘’அவரு உங்களுக்கு முன்னால இந்தப்படத்தை பார்க்க வந்தவரு.. அவரும் பத்துபேர் வரட்டும்னு வெயிட்டிங்ல இருக்கார்’’

‘’ஓக்கே ஓக்கே’’ என்று சொல்லிவிட்டு குஜிலியும் நானும் அந்த நபருக்கு அருகில் போய் நின்றோம். அவர் எங்களை பார்த்து புன்னகைத்தார். அவரை எங்கோ பார்த்த நினைவு... நம்ம வாசகராக இருக்கும் என்றார் குஜிலி. இருக்கும் இருக்கும் என்று நானும் புன்னகைத்தேன்.

‘’நாங்கதான் பாவப்பட்டவங்க.. இந்த படத்துக்கு விமர்சனம் எழுதணும்னு பார்க்க வந்திருக்கோம்.. நீங்க யார் சார்..?’’ என்றார் குஜிலி. அந்த நபர் ‘’நான் இந்த படத்துல நடிச்சிருக்கேன் சார்’’ என்றார்.

‘’ஓ என்ன கேரக்டர்’’

‘’நான்தான் சார் படத்தோட ஹீரோ..’’

இரண்டுபேருக்குமே ஷாக். சார் அப்படீனா நீங்கதான் இந்த படத்தோட டைரக்டர் &$%&%&*ஆ?

‘’ஆமாங்க அது நானேதான்’’

‘’அப்படீனா அந்த நடிகையோட ஹஸ்பன்ட்தானே நீங்க.. படத்தோட தயாரிப்பாளர் உங்க மனைவிதானே’’

‘’அட அதுநான்தான்ங்க.. ஏன்ங்க இவ்ளோ சந்தேகப்படறீங்க.. வேணும்னா ட்ரைலர்ல வர வசனத்தை பேசிக்க்காட்டட்டுமா’’ என்று பயமுறுத்த.. குஜிலி நடுநடுங்கிவிட்டார்.

‘’ஐடி ப்ரூஃப் அட்ரஸ் ப்ரூஃப்லாம் வேணாங்க... நம்புறோம்.. லிப்ஸ்டிக் போடாததால அடையாளமே தெரியல.. அவ்ளோதான்’’ என்றேன்.

‘’அதுபாருங்க ஆடியன்ஸ் ரியாக்சன் பாக்கலாம்னு மாறுவேஷத்துல வந்தேன்.. அதான் உங்களால கண்டுபுடிக்க முடியல... இந்தாபாருங்க மச்சம்’’ என்றார்.

இதுக்குமேல் இவரோட பேசுவது ஆபத்து என்பதை உணர்ந்து குஜிலி வாங்கபாஸ் ஒரு தம் போடுவோம் இவரோட ரெண்டு நிமிஷம் பேசினதுக்கே தலை கிர்ர்ர்னுருக்கு என்று என்னை அந்தப்பக்கமா இழுத்தார்.

பின்னாலேயே இவரும் வர.. அவருக்கும் தம்மும் டீயும் ஆர்டர் பண்ண.. ‘’சார் என் படத்தை பார்க்க தகிரியமா வந்திருக்கீங்க.. டீக்கு நானே காசுகுடுக்கறேன்’’ என்று பெருந்தன்மையாக காசுகொடுத்தார்.

அரைமணிநேரம் கழித்து மீண்டும் கவுண்ட்டருக்கு சென்றோம். சார் உங்க மூணுபேரைத்தவிர்த்து யாரும் வரலை.. அதனால ஷோ கேன்சல் என்றார் டிக்கட்கார்.

இருவருக்குமே பெரிய ஏமாற்றம்.. சோகமாக வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். போகும்போது அந்த நடிக இயக்குன தயாரிப்பாளர்
‘’சார் உங்களை பார்த்தா பாவமாருக்கு.. ச்சே என்னை மன்னிச்சிடுங்க’’ என்றார்.

‘’ஆக்சுவலி உங்க மனைவிய நினைச்சாதான் பாவாமாருக்கு சார்.. போய் அவங்க கிட்ட மன்னிப்புக்கேளுங்க... இப்படியே படமெடுத்து அவங்களை மொத்தமா கொன்னுடாதீங்க’’ என்று கடுப்போடு சொன்னார் குஜிலி.. அவர் இப்படியெல்லாம் பேசி நான் பார்த்ததேயில்லை. அப்படியே ஷாக்காகிட்டேன். இருவரும் பைக்கை முறுக்கிக்கொண்டு கிளம்பினோம்.




11 April 2013

அடக்கடவுளே!




வெள்ளியங்கிரி தெரியுமா? கோவைக்கு அருகில் இருக்கிற அருமையான அழகான மலைப்பகுதி. காட்டுயிர்களின் சொர்க்கம். சின்னதும் பெரியதுமாக சுனைகள், மிக அரிய பறவையினங்கள், விலங்குகள், பாசிகள், மூலிகை செடிகள் என பாதுகாக்கப்பட வேண்டிய மலைப்பகுதி . அந்த வனத்தின் காற்றை சுவாசித்தால்கூட தீராத நோயெல்லாம் தீரும் என்று சொல்வதுண்டு.

இதன் அடிவாரத்தில் ஒரு சிவன் கோயில் உண்டு. வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் வருகிற பக்தர்கள் கரடு முரடான வெள்ளியங்கிரி மலைமீது ஏறி ஏழு குன்றுகள் கடந்து சிவலிங்க வழிபாடு நடத்தி திருவருள் பெறுவது வழக்கம்.

பத்தாண்டுகள் முன்புவரை இப்படி மலை ஏறுகிறவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவுதான். குறிப்பாக சித்ரா பௌர்ணமி நேரத்தில் மட்டும்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் மலைப்பகுதியின் சுற்றுசூழலுக்கு பெரிய பாதிப்பின்றி இருந்தது.

ஆனால் இன்று இந்த மலைக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மனிதர்கள் எங்கெல்லாம் அளவுக்கதிகமாக புழங்குகிறார்களோ அங்கே இயற்கை செத்துப்போகும். அதற்கேற்ப பாதுகாக்கப்பட வேண்டிய காட்டுயிர்களின் வீடு ‘’பக்தியின் பெயரால் + கடவுளின் பெயரால்’’ அழிந்துகொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு அங்கே சென்றிருந்தபோது, மலைப்பகுதி முழுக்கவே எங்குபார்த்தாலும் ப்ளாஸ்டிக் குப்பைகள், உணவுக்கழிவுகள் என மனிதர்கள் இயற்கையை வேட்டையாடிவிட்டு சென்றதை பார்க்க முடிந்தது. இது பக்தர்கள் இயற்கைக்கு செய்கிற சேவை. பாதிகாட்டை பக்தர்கள் அழித்துக்கொண்டிருக்க.. மீதி காடு சும்மாதானே கிடக்கிறது என்று இன்னும் சிலர் கிளம்பினர்.

இயேசுவை கூவிக் கூவி விற்கிற, ஒரு கிறித்தவ மாஃபியா சாமியார், சிறுவாணி பகுதியை சுற்றியிருந்த காடுகளை கபளீகரம் செய்து சர்ச்சும், கல்லூரிகளும் கட்டினார். இதில் ஏகப்பட்ட காட்டுப்பகுதிகள் அழிக்கப்பட்டன. அதோடு பல்லாயிரக்கணக்கான மக்களின் நடமாட்டத்தால் காட்டுயிர்களின் இயல்புவாழ்க்கையும் கேள்விக்குறியானது. காட்டுயிர்களின் வசிப்பிடங்களில் அபார்ட்மென்ட்களும் ஹாஸ்டல்களும் கட்டப்பட்டன.

பின்னாலேயே சிவபெருமானோடு வந்தார், இன்னொரு இந்து சாமியார். ''அத்தனைக்கும் ஆசைப்படும்'' அவரோ தன்பங்குக்கு யானைகளின் வழித்தடம் (CORRIDOR) என்று அழைக்கப்படுகிற பகுதியில் மிக பிரமாண்டமாக பல கோடி ரூபாய் செலவில் சினிமா செட்டுபோல ஒரு கோயிலை கட்டினார். இதற்காக பல நூறு ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன! அதோடு ஒவ்வொரு மகாசிவாராத்திரியின் போதும் இலட்சக்கணக்கானவர்கள் இந்த வனப்பகுதியில் கூடி பிரார்த்தனை செய்கிறேன் பேர்வழி என காட்டுயிர்களை பாடாய்ப்படுத்தினார்.

இன்று வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மனிதர்கள் மட்டும்தான் வாழ்கின்றனர். கிட்டத்தட்ட அப்பகுதியில் இன்னும் சில ஆண்டுகளில் ‘’இங்கே காடு இருந்தது’’ என்கிற போர்டு தொங்கலாம். அக்காட்டினை புகைப்படங்களில் பார்த்து அச்சுச்சோ என உச்சுக்கொட்டலாம். ஆனால் யாராலும் இதன் அழிவை தடுக்கமுடியாது. இங்கு மட்டுமல்ல, இன்று நம்முடைய காடுகளில் பலவும் இந்த கார்பரேட் சாமியார்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

தட்டிக்கேட்க நாதியில்லை. இன்று அதிகாரம் அந்த கடவுள் ஏஜென்டுகளின் கைகளில்தான் இருக்கிறது. நடக்கிற அத்துமீறல்கள் கடவுளின் பெயரால் நடக்கின்றன. இங்கு மட்டுமல்ல, குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று எத்தனையோ மலைகள் கடவுளுக்காக தாரைவார்க்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கிழக்கு தொடர்ச்சி மலையை, திருப்பதிமலை ஏழுமலையானால் இன்று நாசமாகி கிடக்கிறது. புலிகள் ரிசர்வ் காடுகளுக்குள் இருக்கிற சபரிமலையில் புலிகளே இல்லை! பம்பா நதியில் கூவத்தைவிடவும் கேடுகெட்ட ஒரு சாக்கடையாக மாறியிருக்கிறது. என்ன காரணம். பக்தி!

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதையெல்லாம் தாண்டி அவர் என்றுமே மார்க்கெட் குறையாத நல்ல வியாபார பண்டமாக இருக்கிறார் என்பதை நீங்களோ நானோ மறுக்கவே முடியாது. எப்போதும் விற்றுக்கொண்டேயிருக்கலாம். வாழை மரம் போல கடவுளிடம் சகலமும் விற்பனையாகும். விபூதி தொடங்கி அர்ச்சனை, பூ, பழம், மெழுகுவர்த்தி, ஆன்மீக சுற்றுலா, உண்டியல் என தொட்டதெல்லாம் தங்கம்தான்! உலகில் எப்படிப்பட்ட பொருளாதார சரிவு ஏற்பட்டாலும், பஞ்சம் பட்டினி வந்து மக்களெல்லாம் மாண்டாலும் கோவில் வருமானத்துக்கு மட்டும் குறையே இருக்காது! கடவுள் வெறும் பணம் மட்டுமேயல்ல அதிகாரமும் கூட!

இன்று ஒவ்வொரு ஊரிலும் எத்தனை சாமியார்கள்.. அந்த ஏஜென்டுகளுக்கு எத்தனை கல்லூரிகள், எத்தனை ஆயிரம் கோடி சொத்துகள்.. அவர்களுக்குப் பின்னால் எத்தனை எத்தனை அரசியல் பெருந்தலைகள். பாலியல் வழக்குகளில் சிக்கி சிறைசென்ற சாமியார்கள் எந்த தண்டனையுமின்றி சிறையிலிருந்து மீண்டுவந்து வெற்றிநடைபோட்டு, தொடர்ந்து ஆன்மீக சேவை செய்வதை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கொலை குற்றஞ்சாட்டப்பட்ட சாமியார்கள், இன்னமும் வெளியே சுதந்திரமாக ஆசி வழங்கிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

சாமியாரின் காலடியில் விழுந்து கிடந்த ஜனாதிபதிகளையும் கூட நாம் பார்த்திருக்கிறோமே! இருந்தும் நம்மால் எதுவுமே செய்யமுடிவதில்லை. சொல்லப்போனால் நாம் அனைவருமே கடவுளுக்கு ‘அடிக்ட்’ ஆகிக்கிடக்கிறோம். மீளமுடியாத அடிக்சன். முழுக்க முழுக்க பயத்தினால் உண்டான அடிக்சன். ‘’சாமி கண்ணைக் குத்திடும்’ என்று முதன்முதலாக, உங்கள் தாய் தந்தையர் சொல்லிக்கொடுத்த போது, உண்டான அடிக்சன்! ஜாதகம் பார்த்து பெயர்வைத்தபோது உண்டான அடிக்சன்.

அதனால்தான் கடவுளின் பெயரால் நடக்கிற எந்த அநீதியையும் தட்டிக்கேட்க அல்லது கேள்வி கேட்கவும் மறுக்கிறோமோ என்னவோ?.

போலியான பக்தர்களால் இயற்கை நாசமாக்கப்படுகிறது. கடவுளின் வீடுகளாக சொல்லப்படும் கோவில்களில் அப்பாவி மக்களின் பணம் பல்வேறு வழிகளில் பிடுங்கப்படுகிறது. நாத்திகர்களே ஆட்சி செய்தாலும், சாமியார்கள் குறைவதில்லை. இதற்கெல்லாம் யார் காரணம்..? கடவுள்!

இதற்காக கடவுளை மட்டும்தான் குற்றம்சாட்ட முடியும். கடவுள் மீது கேஸ்போட்டு கோர்ட்டுக்கு இழுக்கலாம். ஆனால் அதெல்லாம் நடக்கிற கதையா? சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ஓ மை காட்’ திரைப்படத்தின் கதையே ஒரு சாதாரண மிடில்கிளாஸ் மனிதன்.. சர்வ வல்லமைகொண்ட கடவுளை கோர்ட்டுக்கு அழைப்பதுதான்!

நாத்திகனான மிடில்கிளாஸ் நாயகனுக்கு எதிர்பாராமல் இயற்கைசீற்றத்தால் மிகப்பெரிய தொழில் நஷ்டம் ஏற்படுகிறது. அவன் வாழ்க்கையே சர்வநாசமாகும் நிலை. நஷ்ட ஈடு கேட்டு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செல்கிறான். ஆனால் அந்த நிறுவனமோ ‘’ACT OF GOD” என்கிற புது விஷயத்தை காட்டி பணம் தர மறுக்கிறது. அதாவது கடவுளால் உண்டாகும் இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பணம் கிடையாது, என்று சொல்லிவிடுகிறது! இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்த முடிவெடுக்கிறான் நாயகன்.

ஆக்ட் ஆஃப் காட்தானே பிரச்சனை.. கடவுளையே கோர்ட்டுக்கு இழுக்கிறான். கடவுள் மீது வழக்கு தொடுத்தால் எந்த வக்கீல் ஒப்புக்கொள்வான்.. அதனால் அவனே தன் வழக்கை வாதாட முடிவெடுக்கிறான். கடவுளின் பிரதிநிதிகளுக்கு (சாமியார்கள்) நோட்டீஸ் அனுப்புகிறான். அவர்களோடு வாதாடுகிறான். இவனைப்போலவே ஆக்ட் ஆஃப் காடால் பாதிக்கப்பட்ட பலரும் இவனோடு இணைந்துகொள்கிறார்கள்.

போலி சாமியார்கள் ஒன்றுகூடி இவனை ஒழித்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். ஆள்வைத்து கொல்ல திட்டமிடுகிறார்கள்.

கடவுளே நேராக களத்தில் இறங்குகிறார். நாயகனுக்கு உதவ முடிவெடுக்கிறார். அவனை விரட்டும் அடியாட்களிடமிருந்து காப்பாற்றுகிறார். ஆனால் அவர் அவனுக்கு வேறு எந்த உதவியையும் செய்வதில்லை. அவரும் ஒரு பார்வையாளனாகவே இருக்கிறார். அவனுக்கு அருகிலேயே இருக்கிறார்.

மக்கள், நாயகனை எதிர்க்கிறார்கள். வெறுக்கிறார்கள். நாயகனின் குடும்பம் அவனைவிட்டு பிரிகிறது. தனியாக இருந்தாலும் தைரியமாக போராடுகிறான். கடவுளின் பெயரால் நடக்கிற வியாபாரத்தை அம்பலப்படுத்துகிறான். ஒரு டிவி பேட்டியில் அவன் கடவுள் குறித்து முன்வைக்கும் கேள்விகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மக்களும் அவனைப்போலவே கேள்விகள் கேட்க தொடங்குகிறார்கள். ‘’500 ரூபா வாங்குறல்ல.. மரியாதையா இப்ப சொன்ன மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லிட்டுப்போயா’’ என்று யாகம் வளர்க்க வந்த அய்யரைக் கேட்கிறான் ஒரு இளைஞன்!

மக்களிடையே நாயகனுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடவுள் ஏஜென்டுகளுக்கோ, என்னசெய்வதன்று புரியாமல் தவிக்கிறார்கள். ஆனால் கோர்ட் ஆதாரம் கேட்கிறது. எதிர் அணி வக்கீல் ‘’இந்த இயற்கைச் சீற்றங்கள் அனைத்தையும், கடவுள்தான் செய்தார் என்று நிரூபித்துக் காட்டு பார்க்கலாம், ஆதாரம் கொடு’’ என்று சொல்ல.. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போகிறான் நாயகன்.

கடவுள் அவனுக்கு உதவ நினைக்கிறார். நாயகனிடம் பைபிள், குர்ஆன் மற்றும் கீதையை கொடுக்கிறார். அவன் ராப்பகலாக அதை வாசிக்கிறான். தீர்வு கிடைக்கிறது. கடவுள்தான் இயற்கை சீற்றத்துக்கு காரணம் என்று நிரூபிக்கிறான். பல ஆயிரக்கணக்கானோருக்கு இவனால் நஷ்ட ஈடு கிடைக்கிறது. மக்களிடையே நாயகனாக உயர்கிறான். அதே நேரத்தில் ஸ்ட்ரோக் வந்து கோமா நிலைக்கு செல்கிறான்.

போலி சாமியார்கள் இதையே சாக்காக வைத்து அவனை கடவுளாக்க தீர்மானிக்கின்றனர். அவனை மருத்துவமனையிலேயே கொன்றுவிட தீர்மானிக்கின்றனர்.. அவன் முக்தி அடைந்துவிட்டான். அவன்தான் விஷ்ணுவின் பதினோராவது அவதாரம். கல்கி பகவான்.. என்றெல்லாம் புரளியை கிளப்பி விடுகின்றனர். மீடியா உதவியோடு நாயகன் கடவுளாக்கப்படுகிறான். அவனுடைய கடை இருந்த இடத்தில் நாயகனுக்கு கோயிலும் சிலையும் வைக்க தீர்மானிக்கின்றனர்.

கோமாவில் இருக்கும் நாயகனிடம் இதையெல்லாம் கூறுகிறார் கடவுள். அவனை குணப்படுத்துகிறார். போ அவர்களோடு போராடு.. நான் எதையும் செய்யப்போவதில்லை என்கிறார் கடவுள். இறுதியில் நாயகன் கடவுளாக்கப்பட்டானா? அல்லது மக்களை திருத்தினானா? என்பது கிளைமாக்ஸ்!

இந்தியில் வெளியான இத்திரைப்படம் ஒரு சூப்பர்ஹிட்! பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் கிளப்பினாலும், இப்படம் மக்களிடையே, நல்ல வரவேற்பையே பெற்றது. எந்த இடத்திலும் எந்த மதத்தினரும், மனம் புண்படாத வகையில், ஒரு நாத்திக கருத்துகள் கொண்ட திரைப்படத்தை எப்படி எடுக்க முடியும்? அதை சாதித்து காட்டியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர். படம் முழுக்க வருகிற கடவுள் எந்த மாயாஜால மந்திரங்களையும் செய்வதில்லை.. அன்பை மட்டுமே போதிக்கிறார்! படமும் கடவுள் உருவகத்தின் விஷயங்களை கிண்டல் செய்வதில் தன்னுடைய நேரத்தை வீணடிக்காமல் கடவுள் எப்படியெல்லாம் சந்தைப்படுத்தப்பட்டு நம்மிடையே விற்கப்படுகிறார் என்பதை நாசூக்காகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார். அதோடு அன்பும் கருணையும்தான் கடவுள் என்பதையும் வலுவாக படம்பார்ப்பவரின் மனதில் பதியவைக்கிறார்.

படத்தின் நாயகனாக வருகிற பரேஷ் ராவல் மிகச்சிறந்த நடிகர். படம் முழுக்க அவருடைய ராஜ்யம்தான். காட்சிக்கு காட்சி விசில் பறக்கும் நடிப்பு! அவர்தான் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும்! ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட THE MAN WHO SUED GOD என்கிற படத்தினை தழுவி மராத்தியில் ஒரு நாடகம் உருவாக்கப்படுகிறது. அந்த நாடகம் பிறகு ‘’கிருஷ்ணா V/S கண்ணையா’’ என்ற இந்திநாடகமாக உருப்பெருகிறது. இந்த நாடகத்தில் நடித்த பரேஷ் ராவல் இதை திரைப்படமாக்கவும் முடிவெடுக்கிறார். ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் படம் தயாரானது. முதலில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடிவெடுத்த பரேஷ் ராவலை பாராட்டிவிடுவோம்.

இப்படத்தை இந்தி தெரியாதவர்கள் சப்டைட்டிலோடு பார்ப்பது நல்லது. படத்தின் ஒவ்வொரு வசனமும் மிக மிக அற்புதமானவை. முழுக்க முழுக்க நாத்திக கருத்துகள்தான் என்றாலும் ‘’இவன் சொல்றது கரெக்டுதானேப்பா’’ என்று நினைக்கிற அளவுக்கு கன்வீன்சிங்கானவை! படம் முழுக்க கருத்து குவியலாகவே இருந்தாலும், வாழைப்பழத்தில் விளக்கெண்ணெய் போல அந்த கசப்பே தெரியாமல், திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். படம் தொடக்கம் முதல் இறுதிவரை பரபரவென பறக்கிறது.

கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அனைவருமே இப்படத்தை ரசிக்க முடியும். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கடவுளின் பெயரால் நடக்கிற அக்கிரமங்களை கண்டு ஒரு நிமிடாவது கோபம் கொள்வார்கள். நம்பிக்கையற்ற நாத்திகர்களுக்கு இப்படம் நிச்சயம் உற்சாகம் கொடுக்கும்!

கடவுள் எப்படியெல்லாம், வியாபாரப் பண்டமாக மாற்றப்பட்டிருக்கிறார். எப்படியெல்லாம் இறைநம்பிக்கை அதிகார மையங்களுக்கு உதவுகிறது, மதநம்பிக்கைகள் எப்படி நம் மனங்களில் விதைக்கப்படுகின்றன.. என்பதுமாதிரி ஏகப்பட்ட விஷயங்களை படம் பேசுகிறது. ஆனால் எந்த இடத்திலும், எந்த மதத்தையும் தரக்குறைவாக பேசுவது இல்லை. எந்த கடவுளையும் ஆபாசமாக அர்ச்சிக்கவில்லை. அதேசமயம் காட்சிக்கு காட்சி நாத்திக கருத்துகள்தான்! மிகச்சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாமே கச்சிதம். அதோடு பரபரப்பான திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம். படத்தின் ஒரே குறை.. ஆரம்ப காட்சிகளில் ஆன்மீகத்தின் பெயரால் நாயகனும்கூட ஏமாற்றிதான் பிழைப்பு நடத்துவான்.. அதுதான் இடறல்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் போலி சாமியாரான மிதுன் சக்ரவர்த்தி ஒரு வசனம் சொல்லுவார்.. ‘‘இவங்களையெல்லாம் திருத்திடலாம்னு நினைக்கறீயா? இவங்க அத்தனைபேரும் அன்பாலதான் கடவுள் நம்பிக்கையோட இருக்காங்கனு நினைக்கிறீயா.. அப்படி இருந்தா திருத்திடலாம்தான்.. ஆனா அவ்வளவுபேரும் பயத்தாலதான் நம்பிக்கையோட இருக்காங்க.. இவங்கள மாத்துறது அவ்வளவு சுலபமில்ல தம்பி’’ என்று சொல்லிவிட்டு போய்விடுவார்!

அது எவ்வளவு உண்மை. பெரியார் தன் வாழ்நாளெல்லாம் போராடியது இதற்காகவும்தான். திராவிட இயக்கங்கள் ஐம்பதாண்டு காலமாக முயற்சிப்பதும் இதற்காகத்தான். ஆனால் ரிசல்ட் என்னவோ சொற்ப சொற்பம்தான்! சொல்லப்போனால் ஒரு சாரர் பெரியாரையே, கடவுளாக்கி நாத்திகத்தையே மதமாக்கி, அவரையும் ப்ராடக்டாக்கி காசுபார்க்கிற, பதவிபார்க்கிற கதைகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை!

சரி! தமிழில் கடைசியாக இதுபோல கடவுளையும் போலிச்சாமியார்களையும் விமர்சித்து வெளியான படங்கள் என்னென்ன என்று யோசித்துப்பார்த்தால்.. “வெங்காயம்” என்கிற படத்தைத்தவிர மிக அண்மையில் எதுவுமே தென்படவில்லை. முன்பு வேலுபிரபாகரன் இயக்கிய “கடவுள்” என்கிற படம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அதுவும் கூட மிக சுமாராக இயக்கப்பட்ட ஒரு லோபட்ஜெட் திரைப்படம்தான்! வெறும் கருத்துகள் மட்டுமே நல்ல சினிமா அனுபவத்தை கொடுத்துவிடாது. அது இரண்டரைமணிநேரம் ரசிக்கும்படியாகவும், அதே சமயம் கருத்துகள் ஒவ்வொன்றும் பார்வையாளனை கன்வீன்ஸ் செய்வதாகவும், தரமான திரைப்படமாகவும் காட்சி அனுபவமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதனால்தான் பராசக்தி, ரத்தக்கண்ணீர் மாதிரியான படங்கள் வெற்றிபெற்றன!

ஆனால் இன்று மக்களின் பொது புத்திக்கெதிராக, படமெடுக்க யாருக்கும் தைரியமிருப்பதாக தெரியவில்லை. திராவிட இயக்க பின்புலத்திலிருந்து வந்த தயாரிப்பாளர்களும் கூட இப்படிப்பட்ட படங்களை எடுக்க தயங்குகிறார்கள். ‘’ஓ மை காட்’’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யபடவிருப்பதாக முன்பு செய்திகள் வந்தன. அதில் ரஜினிகாந்த் கடவுளாக நடிப்பதாகவும் வதந்திகள் உலவின. ஆனால் அதற்குபிறகு அந்த ப்ராஜக்ட் என்னவானது என்பது அருள்மிகு பாபாவுக்கே வெளிச்சம்!

ஐம்பது ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியில், எத்தனை இறைமறுப்பு திரைப்படங்கள் வெளியாகியிருக்கும்? விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அதற்கான தேவை முன்பைவிட இப்போது அதிகமாக இருக்கிறது. வெள்ளியங்கிரியும் சபரிமலையும் திருப்பதியும் திருவண்ணாமலையும் ஒரு உதாரணம்தான். இதுபோல தமிழ்நாடு முழுக்கவே, ஏகப்பட்ட சாமியார்கள். எண்ணற்ற பக்தர்கள். தொடர்ந்து கடவுளின் பெயரால் மதங்களின் பெயரால் நம்முடைய இயற்கை வளங்களை ஆறுகளை காடுகளை சுற்றுச்சூழலை கபளீகரம் செய்தவண்ணம்தான் இருக்கிறார்கள். நாம் அதைப்பற்றி கேள்விகேட்கும் தைரியமின்றி கடவுள் பயத்தோடு வாய்பொத்தி வேடிக்கைபார்த்தபடியே இருக்கிறோம்!

***

நன்றி - http://cinemobita.com/

04 April 2013

ஐயாம் காட் ஒன்லி!




''பாஸ் நீங்க ஆத்திகரா நாத்திகரா?''

''என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது''

''அது தெரியாமத்தானங்க கேக்குறோம்.. சொல்லுங்க''

''நான் கடவுள்ங்க''

''அய்யே... காமெடி பண்ணாதீங்க''

''இல்லைங்க சீரியஸாதான் சொல்றேன்... நான் கடவுள்தான்ங்க''

''சரி.. எந்த கடவுள் .. சிவனா பார்வதியா கிருஷ்ணனா பிள்ளையாரா அல்லாவா இயேசுவா புத்தரா இல்ல புதுசா எதுனாச்சுமா''

''வினோன்னு புதுகடவுள். நானே கண்டுபுடிச்சேன்.. பேர் நல்லாருக்குல்ல''

''ஓ அப்படீனா நீங்க நிஜமாவே கடவுள்தான்.. அதை நாங்க நம்பணும்''

''ஆமாங்க''

''கன்பார்மா..''

''உண்மையாவே நான் கடவுள்தான்ங்க.. இதில சந்தேகப்பட ஒன்னுமேயில்ல''

''அப்படீனா கடவுளே உன்னை கையெடுத்து கும்பிடறேன்.. உனக்கு நான் தேங்கா உடைக்கிறேன்.. நான் கேக்கறத மட்டும் செஞ்சிடு..''

'' :-) "

''கடவுளே ஐ வாண்ட் அஞ்சலி.. உடனே ஏற்பாடு பண்ணிக்குடு கடவுளே.. ரூம்லாம் நானே புக் பண்ணிக்கறேன்.. ''

" :-) "

"அஞ்சலி இல்லாட்டி லட்சுமிராய் கூட ஓக்கேதான்.. ஏற்பாடு பண்ணிகுடுப்பியா கடவுளே.. கட்டாயம் தேங்கா உடைக்கிறேன், பொங்கல் வைக்கிறேன்..''

'' :-) "

"சொல்லு சாமீ பண்ணுவியா மாட்டியா''

'' :-) "

" டே லூசு சாமீ பண்ணுவியா மாட்டியா ''

'' :-) "

" என்னய்யா கடவுள் நீ எது கேட்டாலும் சிரிக்கற.. சரி ஏற்பாடுதான் பண்ணித்தர மாட்டே.. ஒரு மூன்னூர்ருவா குடு.. குவாட்டராச்சும் அடிக்கறேன் ''

'' :-) "

" என்ன கடவுளே.. இதுக்கும் சிரிப்புதானா.. நல்லா சமாளிக்கிறயா''

" ;-) ''

'' பார்ரா மறுக்கா மறுக்கா சிரிக்கறத... உன்னால முடியாதுனு சொல்லு இந்த நக்கல் சிரிப்பெல்லாம் வேணாம்''

'' அப்படியில்லைங்க.. கோயிலுக்கோ சர்ச்சுக்கோ மசூதிக்கோ புத்தவிகாரத்துக்கோ போய் என்ன வேணா கேட்டுப்பாருங்க பாஸ்.. எல்லா சாமியும் சிரிக்க மட்டும்தான் செய்யும்! நீங்க கேட்டாலும், சிரிச்சாலும், அழுதாலும் வேண்டினாலும் நோண்டினாலும் புன்னகைக்க மட்டுமே செய்யும்... ''

'' :-) "

03 April 2013

கறிவேப்பிலைகளின் கதை




கோடம்பாக்கத்து உதவி இயக்குனர்களிடம் பத்து நிமிடம் பேசிப்பாருங்கள். ‘’என்னது இப்படியெல்லாமா நடக்குது’’ என்று ஆச்சர்யமாக இருக்கும். மிகப்பெரிய விஷயங்களை போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விடுவார்கள். நாம் இதுவரை வியந்து பார்த்த பல நட்சத்திரங்களும் விண்ணிலிருந்து மண்ணில் விழுந்து நம் மனதில் நொறுங்குவது சாதாரணம். அப்படியொரு உதவி இயக்குனர் எழுதிய புத்தகம்தான் ‘’தோற்றுப்போனவனின் கதை’’.

இந்த உதவி இயக்குனர் ரொம்பவே ஸ்பெஷல். கடந்த 50 ஆண்டுகளாக இவர் உதவி இயக்குனராகவேதான் இருக்கிறார்!

சாதாரண ரசிகனுக்கு வெளிப்பார்வையில் தகதகவென ஜொலிக்கிற சினிமா உலகம் தனக்குள் எப்படி இயங்குகிறது? நாம் திரையில் பார்க்கிற நட்சத்திரங்களின் முகப்பூச்சில்லாத முகங்கள் எப்படியிருக்கும்? சினிமா உலகில் வெற்றிபெற என்ன தேவை? இங்கே தோல்வி எப்படி நிகழ்கிறது? என்பதையெல்லாம் தன் அனுபவங்களின் ஊடாக கூறுகிறார் 78 வயது உதவி இயக்குனரான அழகேசன். எவ்வளவு துரோகம், எவ்வளவு இழப்பு, எவ்வளவு அவமானங்கள்.

இருந்தும் விடாப்பிடியாக இன்று வரை போராடுகிறார். ஆனால் காலம் அவரை மெகாசீரியல்களுக்கு நகைச்சுவை காட்சிகள் எழுதவும், சினிமாவுக்கு காமெடி வசனங்கள் எழுதவும் பயன்படுத்தபடுகிற பினாமி எழுத்தாளராக மாற்றிவிட்டிருக்கிறது. எத்தனையோ வெற்றிப்படங்களுக்கு பின்னால் அழகேசனின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தாலும் அன்றும் இன்றும் அதற்குரிய எந்த அங்கீகாரமும் இன்றி தனிமையில் வாழ்கிறார். கடைசி வரை அவரால் ஒரு முழுநீள படத்தை இயக்கவே முடியவில்லை. பலமுறை படமெடுக்க தொடங்குவதும் பின் கைவிடுவதுமாக நீள்கிறது அழகேசனின் அனுபவங்கள்.

‘’சினிமா உலகின் உங்களிடம் ஒன்று பணம் வேண்டும். அது இல்லையா செல்வாக்கு கட்டாயம் வேண்டும். இரண்டுமே இல்லையென்றால், அதிர்ஷ்டம் வேண்டும். இம்மூன்றும் இல்லாதவனுக்கு திரையுலகம் துரோகங்களை மட்டுமே பரிசளிக்கும்!’ என்கிறார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாடி படித்து முடித்து நடிகனாகும் ஆசையில் நாடகங்களில் நடிக்கிறார். நாடகங்கள் மூலமாக சினிமா தொடர்புகள் கிடைக்க.. சென்னைக்கு வண்டியை விடுகிறார். இங்கே படாத பாடுபட்டு.. உதவி இயக்குனராக வசனகர்த்தாவாக உயர்கிறார். அதோடு அப்போது சான்ஸ் தேடி அலைந்துகொண்டிருந்த பல நடிகர், நடிகைகளுக்கும் வாய்ப்புகள் வாங்கித்தருகிறார். கவுண்டமணி,பாண்டியராஜன்,சுமித்ரா,முத்துராமன்,ஐசரி வேலன் என ஏகபட்ட பேர் வாய்ப்புத்தேடி அலைந்த காலத்தில் கோலிவுட்டில் அவர்களுக்கான முதல்வாய்ப்பை பெற்றுத்தந்திருக்கிறார் அழகேசன்.

அதில் மிகச்சிலரே இன்னும் அந்த பழைய மரியாதையோடு அழகேசனோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று வருத்தத்தோடு பதிவு செய்கிறார். சிலர் தன்னை முழுமையாக மறந்துவிட்டதையும் குறிப்பிடுகிறார்.

புகழின் உச்சிக்கு சென்ற பின்னும் இன்னமும் அழகேசனை ‘அழகேசண்ணே’ என்று அழைப்பவராகவும் அவரோடு சகஜமாக அதே பழைய அன்போடும் இருப்பவராக ஒரே ஒருவரைத்தான் குறிப்பிடுகிறார். அந்த நடிகர், கவுண்டமணி.

ஒருமுறை சாண்டோ சின்னப்பதேவர் தன் படத்துக்கு நல்ல நகைச்சுவை நடிகன் வேண்டும் என அழகேசனிடம் கேட்கிறார். அப்போது வாய்ப்புத்தேடி கம்பெனி கம்பெனியாக அலைந்துகொண்டிருந்தார் கவுண்டமணி. அவரை கண்டுபிடித்து தேவரிடம் அழைத்து செல்கிறார் அழகேசன்.

ஆபிஸ் ஹாலில் தேவர் அமர்ந்திருக்கிறார். கவுண்டமணி உள்ளே நுழைந்து வணக்கம் சொல்லிவிட்டு காத்திருக்கிறார். ‘’எந்த ஊர்.. கவுண்டமணி என்கிற பெயர் உனக்கு எப்படி வந்தது?’’ என்று எல்லா விஷயங்களையும் துருவி… துருவி… கேட்கிறார். கவுண்டமணியும் வாய்ப்பு கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு பதில் சொல்கிறார்.

எல்லாம் பேசி முடித்த பின், தேவர் ‘’ஏம்பா நீ இவ்வளவு கறுப்பா இருக்கிறீயே.. உனக்கு மேக்கப் பவுடருக்கு எங்கேப்பா போறது?’’ என்று சொல்ல. கவுண்டமணிக்கு முகம் மாறிவிட்டது. பதில் பேசாமல் அமைதியாக நிற்கிறார். அவமானத்தை உணர்கிறார்.

‘’சரிப்பா நான் சொல்லி அனுப்பறேன். மகராசனா போய்ட்டு வா’’ என்று சொல்லி தேவர் கவுண்டமணியை அனுப்பிவிடுகிறார்.

கவுண்டமணியும் அழகேசனும் வெளியே வர.. கவுண்டமணி, அழகேசனை முறைக்கிறார்.

‘’இந்த ஆளு மிருகங்களை வச்சு படம் எடுத்து, அதோடயே பேசி பழகிட்டாருண்ணே.. அதான்.. என்னை மனுஷனா மதிச்சி பேசலைல.. எனக்கும் ஒரு காலம் வரும்ண்ணே.. அப்ப வச்சுக்கிற்றேன் கச்சேரிய’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து போய்விடுகிறார்.

அதற்குப் பிறகு வேறு படங்களில் நடித்து கவுண்டமணி புகழின் உச்சிக்கு செல்கிறார். அந்த நேரத்தில் தேவர் பிலிம்ஸ் தண்டபானி கவுண்டமணியை ஹீரோவாக்கி படமெடுக்க அவரை அணுகுகிறார். ஆனால் கவுண்டமணி அதை மறுத்துவிடுகிறார். அதோடு பல வருடங்களுக்கு முன்னால் அவர் தேவர் பிலிம்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அவருடைய அப்பா (தேவர்) அவமானப்படுத்தியதையெல்லாம் சொல்ல.. அந்த இடத்திலேயே தண்டபாணி மன்னிப்பு கேட்ட பின்புதான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் கவுண்டமணி.

பாண்டியராஜன் நடிகனாகும் ஆசையோடு அலைந்துகொண்டிருந்த போது, அவருக்கு ‘தங்கரங்கன்’ என்னும் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்ததோடு, பிறகு பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டதும் அழகேசன்தான். சாதாரண நாடக நடிகராக தி.நகரில் சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்த முத்துராமனை ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலமாக திரையுலகில் கால்பதிக்க வைத்ததும் அழகேசன்தான். தெய்வத்திருமகள் சூட்டிங்கில் முத்துராமனை பார்த்து பிடித்துப்போய் இயக்குனர் ஸ்ரீதர் தன்னுடைய நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் பயன்படுத்திக்கொண்டாராம்.

இதுபோல, இன்று நாம் கொண்டாடும் பல இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகளின் ஆரம்பகால அனுபவங்கள் இப்புத்தகத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. அவர்களுடனான அனுபவங்களின் வழியாக தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறார் இந்த உதவி இயக்குனர்.

புத்தகத்தில் வெறும் புலம்பல்கள் மட்டுமேயில்லாமல் சில நல்ல அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். “தாய்சொல்லைதட்டாதே” படத்தின் ஷூட்டிங். அப்படக்குழுவினரோடு புதிதாக இணைந்திருந்தார் அழேகசன். அன்று வாகினி ஸ்டுடீயோவில் சூட்டிங். படக்குழுவினர் அனைவரும் முன்னதாகவே வந்துவிட கொஞ்சம் தாமதமாக எம்ஜிஆர் வருகிறார். அனைவரும் எம்ஜிஆருக்கு வணக்கம் அண்ணே.. வணக்கம் அண்ணே என்று வணக்கம் சொல்ல.. அழகேசன் மட்டும் வணக்கம் அய்யா என்று சொல்கிறார். அழகேசனை மட்டும் அதிர்ச்சியாகி திரும்பி பார்த்துவிட்டு சூட்டிங்குக்கு போய்விடுகிறார். சூட்டிங்கில் இருந்தவர்கள் அனைவரும்.. அய்யயோ என்னய்யா சொன்னே அண்ணே ஏதோ கோச்சிக்கிட்டாரு என்று அழகேசனை பயமுறுத்துகிறார்கள்.

சூட்டிங் முடித்த பின் அழகேசனை அறைக்கு அழைக்கிறார் எம்ஜிஆர். அழகேசன் எந்த ஊர் எப்படி சினிமாவுக்கு வந்தார் முதலான விபரங்களை கேட்கிறார். அழகேசனும் ஆர்வத்தோடு நான் காரைக்குடி அய்யா, நாடகத்துல நடிச்சிருக்கேன் அய்யா என்று தொடர்ந்து பேசுகிறார். ஒருகட்டத்தில் கடுப்பாகிற எம்ஜிஆர். ‘’நீங்க செட்டிநாட்டுல பொறந்தவரு.. உங்க ஊர்ல எல்லாம் தாத்தாவைத்தானே அய்யானு கூப்பிடுவீங்க.?’’ என்று கேட்கிறார்.

அதற்கும் ஆர்வத்தோடு ‘’ஆமாங்க அய்யா’’ என்கிறார். எம்ஜிஆர் புன்னகைத்தபடி சேரில் இருந்து எழுந்து வந்து..
‘’இப்ப நான் உங்களை தம்பினு கூப்பிடுவேன்.. பதிலுக்கு என்னை நீங்க என்னானு கூப்பிடுவீங்க’’

‘’அண்ணானு கூப்பிடுவேங்க அய்யா’’ என்கிறார் அழகேசன்.

‘’அப்படீனா இனிமே நான் அண்ணே.. நீங்க தம்பி.. இதையே தொடர்ந்து வச்சிக்கங்க..‘’ என்று சிரித்தபடி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம் என்று எம்ஜிஆரை கடுப்படித்த அனுபங்களும் அழகேசனிடம் உண்டு.

முழுமையாக தயாரிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி மீண்டும் பொட்டிக்குள் முடங்கிய எண்ணற்ற படங்கள் குறித்தும் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது ‘கொட்டு முரசே’ என்கிற திரைப்படம் தொடர்பானது. பாரதியாரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தமிழில் தயாரான முதல் திரைப்படம் அதுதான். இப்படத்தில் ‘ரிஷிமூலம்’ படத்திலும் சில தொலைகாட்சி தொடர்களிலும் நடித்த சக்ரவர்த்தி என்பவர், பாரதியாராக நடித்துள்ளார். படத்துக்கு இசை ஐயப்பன் பாடல்கள் புகழ் வீரமணி! மனோரமா, ரம்யா கிருஷ்ணன் போன்றோரெல்லாம் நடித்திருந்தும்.. இப்படம் போணியாகவில்லை.

‘’இது பாரதியார் படம்.. யார்சார் பாப்பாங்க’’ என்று விநியோகஸ்தர்கள் படத்தினை வாங்க மறுத்துவிட்டனர். கடைசியில் தமிழக அரசே ஒரு தொகையைக் கொடுத்து, இப்படத்தினை வாங்கிக்கொண்டது. ஆனால் அதை இன்று வரை வெளியிடவேயில்லையாம்! எந்த ஆண்டு இப்படம் எடுக்கப்பட்டது என்பது குறித்து அழகேசன் குறிப்பிடவில்லை. உத்தேசமாக எப்படியும் 25 ஆண்டுகளாவது ஆகிவிட்டிருக்கும் என்று யூகிக்கலாம். முதல் பாரதியார் படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்பதை பார்க்கிற ஆவல் படிக்கும்போது ஏற்படுகிறது. தமிழக அரசு தூர்தர்ஷனிலாவது ரிலீஸ் செய்யலாம்!

இப்படி அழகேசன் பணியாற்றிய படங்கள், அறிமுகப்படுத்தி நட்சத்திரங்கள் அவர்களுடனான நல்ல கெட்ட அனுபவங்கள் தோல்விகள் அவமானங்கள் ஏராளம். அவரே இயக்கி முழுமையாக தயாராகி வெளியாகாத படங்களும் உண்டு என்கிறார். சகலவித மனிதர்களையும் வாழ்வின் மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டுவிட்ட இந்த உதவி இயக்குனர் தன்னுடைய தோல்வியைக்கூட அழகாக ஒப்புக்கொள்கிறார்.

‘’மண்ணில் உள்ள தாவரங்கள் மரம், செடி, கொடிகளில் உள்ள இலைகள் எல்லாம் பழுப்பு நிறமாகி உதிர்ந்துவிடும். ஆனால் கருவேப்பிலை இருக்கிறதே அது காய்ந்து சருகாகி மரத்திலேயே வாடிக்கொண்டு இருக்குமே தவிர பழுப்பு நிறமாகி உதிர்வதில்லை. அதுதான் நான்!’’

புத்தகத்தின் கடைசி வரிகள் இவை. சினிமாவில் வாழ்பவர்கள், சினிமா ஆசையோடு சென்னைக்கு ரயிலேறுகிறவர்கள், சினிமாவில் வாழ்க்கையை தொலைக்கிறவர்கள் என சினிமா ஆர்வமுள்ள அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. விகடன் பிரசுரம் வெளியீடு. விலை 85 ரூபாய்!

(நன்றி - www.cinemobita.com)

02 April 2013

கேடி & கில்லாடி!






இதுவரை ஆனந்தவிகடனில் வெளியான வலைபாயுதே ட்விட்டுகள் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களை தொகுத்து ஒரு புத்தகமாக போட்டு அதையே திரைக்கதையாக மாற்றினால் என்ன கிடைக்குமோ அதுதான் கேடிப்பில்லா கில்லாட்டிரங்கா.

படம் முழுக்கவே வசனங்களால் நிரம்பியிருக்கிறது. இப்படத்தை பார்த்து ரசிப்பதைவிட கேட்டு ரசிக்க இனிமையாக இருக்கும் என்று தோன்றுது. அல்லது படத்தின் திரைக்கதையை புத்தகமாக்கி வெளியிட்டால் படித்தும் ரசிக்க முடியும். டெக்னிகலாக மிகமிக சுமாராகவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே பல காட்சிகளில் பேய்ப்படம் பார்ப்பதுபோல கண்ணை மூடிக்கொண்டுதான் படத்தை கேட்க மட்டுமே செய்ய வேண்டியதாயிருந்தது என்பது வேறு விஷயம்.

சிவகார்த்திகேயனும் பரோட்டா சூரியும்தான் சூம்பிப்போன திரைக்கதையை அவ்வப்போது ஒன்லைன் டைமிங் காமெடிகளால் தூக்கி நிறுத்துகிறார்கள். சி.கா வுக்கு ஜோடியாக வருகிற அந்த ஹீரோயின் யார் என்று தெரியவில்லை. பார்த்ததும் காதலிக்க வேண்டும் போல ஆசை வந்துவிடுகிறது. சோ க்யூட்!

இயக்குனர் ராஜேஷ் தொடங்கிவைத்த டிரெண்ட் இது. பாண்டிராஜ் அதை ஒட்டி தன்பங்குக்கு ஒரு படமெடுத்திருக்கிறார். சந்தானம் இருந்திருந்தால் இதே படம் வேறுநிறத்தில் இருந்திருக்குமோ என்னவோ! இருப்பினும் படம் பார்க்கும்போது முதல்பாதியில் சில இடங்களிலும் பின்பாதியில் சில இடங்களிலும் சிரிப்பு வருகிறது.

பிட்டுப்படங்களில் படம் முழுக்க கில்மா மேட்டர்களாக போட்டு ரொப்பிவிட்டு கடைசி காட்சியில் ''தவறான செக்ஸ் உடல்நலத்துக்கு தீங்கானது'' என்று அறிவுரை சொல்வார்கள். அதுபோலவே இப்படத்திலும் அறிவுரை சொல்லும் பெற்றோர்களை படம் முழுக்க நாயகர்கள் இருவரும் கேவலமாக பேசி கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்திவிட்டு இறுதிக்காட்சியில் ஃபாதர் ஈஸ் காட் என்று காமெடி பண்ணியிருப்பது மிகவும் அருமை. படத்தின் நான் ரசித்த மிகச்சிறந்த காமெடி அதுதான். படத்திற்கு இசை யுவன்ஷங்கராம். மிகமிகமிக அடக்கிவாசித்திருக்கிறார்.

அந்தகாலத்தில் தங்கமணி ரங்கமணி, சகாதேவன் மகாதேவன், இரண்டு கில்லாடிகள் போன்ற லாஜிக்கே இல்லாத கலகல காமெடி படங்கள் போல சமகாலத்தில் யாருமே எடுப்பதில்லை என்று அடிக்கடி தோழரிடம் வருத்தங்கலந்த ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன். ராமநாரயணன் எடுத்த முரளி,எஸ்விசேகர்,மோகன்,நிழல்கள்ரவி என பலரும் நடித்த இத்திரைப்படங்கள் எப்போது டிவியில் ஒளிபரப்பானாலும் ரசித்து பார்க்க கூடியவையாகவே இருக்கும்.

ஒன்பதுல குரு கிட்டத்தட்ட அதுமாதிரி முயற்சிதான் என்றாலும் மகா மொக்கையான படமாக அது அமைந்தது. அந்த வகையில் டிவியில் ரிப்பீட்டில் போட்டால் பார்த்து ரசிக்க கூடிய ஜாலியான படமாகவே இந்த கேடிபில்லா வந்துள்ளது. டிவியில் போட்டால் கட்டாயம் பாருங்க டோன்ட் மிஸ் இட்!