Pages

30 July 2009

கன்ட்ரோல் X + கன்ட்ரோல் V




உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லை. மூன்று பேரும் பூமி அதிர ஓடிக்கொண்டிருந்தனர். ராகவ் அதீத வேகத்தில் மின்னல் போல ஓடிக்கொண்டிருந்தான். மானிட்டரில் 85KMPH எனக்காட்டியது. அருகில் ஓடிக்கொண்டிருந்த இளாவின் மானிட்டரில் 83தான் காட்டியது. அது ஒரு ஓடும் இயந்திரம் நின்ற இடத்திலேயே ஒடிக்கொண்டிருக்கவல்ல இயந்திரம். டிரட்மில் போன்றிருந்தாலும் இது லேட்டஸ்ட் மாடல். உங்கள் பிளட் பிரஷர் , உடல் இயக்கம் , வேகம் , இதயத்துடிப்பு என சகலத்தையும் மானிட்டரில் காட்டிவிடும். நின்ற இடத்தில் ஓட பயிற்றுவிக்கும் இயந்திரம் அது. மூவருக்கும் தெரிந்த விளையாட்டு பொழுதுபோக்கு எல்லாமே விபரம் தெரிந்ததில் இருந்து அதுதான்.

அவர்கள் யார் எங்கிருந்து வந்தவர்கள் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கும் தெரியாது. விபரம் தெரிந்ததில் இருந்து அந்த இடத்தில்தான் வாசம். தினமும் வகுப்புகள் முடிந்து அரைமணிநேரம் சுதந்திரம் அந்த நேரத்தில் நடக்கலாம் , ஆடலாம் , பாடலாம் , சிரிக்கலாம், சக நண்பர்களோடு பேசலாம் , அல்லது இதோ இங்கே ஓடலாம்.

சூரியன் மறைந்துவிட்டால் ராகவ்,இளா,சுந்தர் மூவருக்கும் இதுதான் முதல் வேலை. ஓடிக்கொண்டேயிருப்பார்கள். யார் குறைந்த வேகத்தில் ஓடுகிறார்களோ அவர் மற்றவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டும். கப்பம் என்றால் பெரிதாய் ஒன்றுமில்லை. ஹாஸ்டலில் இரவு உணவில் தரப்படும் நான்கு வெந்த உருளைக்கிழங்குகளில் இரண்டை தந்துவிட வேண்டும். எப்போதும் ராகவும் இளாவும்தான் ஜெயிப்பார்கள். சுந்தர் எப்போதாவதுதான் உருளைக்கிழங்கு வாங்கியிருக்கிறான்.

நாளை ஆர்ட்டிபீசியல் இன்ட்டலிஜென்ஸ் பாடத்தின் செய்முறை தேர்வு. ராகவும் இளாவும் படிப்பில் லேசாய் மக்கு. சுந்தர் சுமார். ரோபோ எனப்படும் இயந்திர மனிதர்களின் அறிவு குறித்த அந்த பாடம் கொஞ்சம் சிரமமானது. மற்றபாடங்களும் சிரமமானதுதான். மற்றவையும் ரோபோக்களை பற்றியதுதான். ரோபோக்கள் மட்டும்தான் பாடம். நிறைய கணக்கு போடவேண்டும். பல பார்முலாக்களை மனப்பாடம் செய்ய வேண்டும். நம்மவர்கள் அதில் கொஞ்சம் வீக்கு. கொஞ்சமல்ல நிறைய வீக்கு.

''டேய் எப்படிடா! நாளைக்கு பாஸாகாட்டி அவ்ளோதான்.. நாம சாகவேண்டியதுதான்..? '' மெதுவாக ஓடியபடி இளா பேச ஆரம்பித்தான். வேகம் 35 காட்டியது.

தேர்வில் தோற்கும் மாணவர்களில் அறிவில் குறைந்தவர்களாக தெரிபவர்களை அரசாங்கம் பரிசோதித்து பார்க்கும் . வேலைக்கு ஆகாவிட்டால் அவர்களை கொன்று அவர்களது மூளையை எடுத்து மின்வினியோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் என ஏற்கனவே மீரானையும் கிரியையும் பிடித்துக்கொண்டு போனபோது பக்கத்து பெஞ்சு பரமு சொல்லியிருந்தான் . அந்த பயம்தான் இவர்களை பாடாய் படுத்தியது.

''டேய் இந்த மாதிரி படிச்சிட்டு , எவனோ ஊர் பேர் தெரியாத ஒரு இயந்திரத்துக்கு அடிமையா வாழறத விட செத்துப் போயிடலாம்டா '' தன் முகத்தில் வழியும் வியர்வையை காயவைக்க உஸ் என காற்றடிக்கும் ஏதோ இயந்திரத்தில் முகத்தை மட்டும் காட்டியபடி பேசினான் சுந்தர்.

''இல்லடா மச்சான்! இங்க படிக்கற பசங்கள பாரு எவனுக்கும் சொரணைன்றது கொஞ்சம் கூட கிடையாது... ஏதோ நாமதான் கொஞ்சூண்டாவது புரட்சி பத்தின பழங்காலத்து மெமரி ஸ்டோரேஜ்லாம் பொறுக்கி படிச்சு ஓரளவுக்கு சூடு சொரணையோட இருக்கோம்..'' சலித்துக்கொண்டான் ராகவ்.

''டே லூசுங்களா நாளைக்கு எப்படி பாசாகறது அதுக்கு வழி சொல்லுங்க..! '' எரிச்சலோடு கத்தினான் இளா! அவனது கத்தலில் மரண பயம் கவ்வியிருந்தது கச்சிதமாய் தெரிந்தது.

''நாளைக்கு எக்ஸாம்க்கு யாருடா டியூட்டர் ''

''நம்ம ஏ-2371 தான் ''

''ம்ம்.. அதுவா.. அது சி-5556 மாடல் இயந்திரமாச்சே , அதோட கண்ணு அப்புறம் சென்சிட்டிவிட்டி எப்படி இயங்குதுனு முதல்ல தெரிஞ்சுக்கணும் , இளா நீ அந்த பழைய விக்கிபீடியா டேடாபேஸோட மெமரி சிப் தோட்டத்துல இருக்கற மூடின சுரங்கத்தோட வாசல்ல பொதஞ்சிருக்கு எடுத்துட்டு வாயேன்...! ''

நூறாண்டுகளுக்கு முந்தைய கையடக்க கணினி ஒன்றினை சுரங்கங்களில் பணியாற்றுகையில் பூமிக்கடியில் இருந்து எடுத்திருந்தனர். வாரமிருமுறை சுரங்ககங்களில் வேலை இவர்களுக்கு. தோண்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னால் கம்பியை விட்டு நோண்டி விடும்கள் அந்த இயந்திரங்கள்.

அங்கேதான் அழிந்து போன பூமியின் பல சொச்சங்கள் அழியாமல் அவர்களிடம் கிடைத்திருந்தது. ஏபிசிடி புத்தகங்கள், பென் டிரைவ் , என்சைக்ளோபீடியா , இதோ இந்த கூகிள் சிப் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் , பொதுவாய் மற்ற மாணவர்கள் அது மாதிரி கிடைக்கும் போது அதை தங்களது டீயுட்டரிடம் ஓப்படைத்து விட வேண்டும். எத்தனை பொருட்கள் தருகிறார்களோ அத்தனை மதிப்பெண்கள். அந்த சுரங்க வேலைப்பாடத்தில் இவர்களுக்கு எப்போதுமே சரியாக பாஸ் மார்க்தான்.

கையடக்க கணினியில் அந்த சிப்பை இணைத்து முடுக்கிவிட்டான் இளா. அது ஓளிர்ந்து விக்கிபீடியா டேடாபேஸ் திறந்தது. சி-5556 என்று டைப் செய்து SEARCH பட்டனை அழுத்த அது இரண்டு விநாடிகளில் மொத்தமாய் விபரங்களை குவித்தது.

''மச்சான் அந்த மாடல் ரோபோவுக்கு கையெழுத்த படிக்க தெரியாதாம்.. அது ஒன்னுதான் வழி.. ''

''ஆனா நமக்கு யாருக்குமே கையால எழுத வராதேடா''

''ம்ம்.. நான் அந்த ஏபிசிடி புக் படிச்சு சுரங்கத்தில கிடைச்ச கரிய வச்சு ஓருமாதிரி எழுதி பழகிருக்கேன்டா.. ''

வெறும் மானிட்டரில் மட்டுமே எழுத்துக்களை பார்த்து பழகிய தன் நண்பர்களிடம் குஷியாய் சொன்னான் சுந்தர் .

''சரி எங்க எழுதுவ என்ன எழுதுவ.. ''

''ம்ம்ம் இதோ நம்ம உடம்புலதான்.. ''

''கரியால நம்ம உடம்புல எழுதினா..நாம எப்படி படிக்கறது..''

''என் முதுகுல எழுதிருக்கறத நீ படி.. உன் முதுகுல எழுதிருக்கறத நான் படிக்கறேன்.. அவ்ளோதான்.. ''

''அப்போ நான்..''

''டேய் நீ என்னோட முதுகுல படி ''

உடையே வாழ்க்கையில் பார்த்திராத அவர்களுக்கு இந்த யோசனை எளிதாய் இருந்தது. தத்தமது பெட்டிகளுக்குள் போய் உட்கார்ந்தபடி சில வயர்களை எடுத்து நெற்றி ஓரங்களில் மாட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தனர்.

விடிந்தது. கரிக்கட்டையை எடுத்து சுந்தர், இருவரது ஓப்பன் முதுகிலும் எழுதத்துவங்கினான் .

''மச்சான் எக்ஸ் எப்படி எழுதணும். அப்புறம் வி ... அப்பறம் ஸ்கோயர் எப்படி போடணும் "

''டேய் நீதானடா எனக்கு எழுதவரும்னு சொன்னே.. இப்ப என்னடா! எங்கிட்ட கேட்டா! ''

''இரு .. யோசிக்கிறேன்.. ''

''ஓகேடா முடிச்சிட்டேன்.. ''

''டேய் என் முதுகுல யார்டா எழுதுவா..! ''

''ரெண்டு பேர் முதுகுல எழுதினது போதும்... நீ வரிசைல கடைசியா பின்னாலதான நிப்ப என் முதுக பாத்து எழுது '' அதட்டினான் இளா

தேர்வு துவங்கியது. எதிரில் இருந்த உயிரில்லாத மாதிரிரோபோக்களின் இதயப்பகுதியில் தனது கீபோர்டை இணைத்து தட்டச்ச துவங்கினர்.

இவர்களது ஊடாக அவர்களது டியூட்டர் இயந்திரம் நடந்து கொண்டே இருந்தது. கீ கீ கீ கீ. தேர்வு முடிந்தது.

இன்னும் 23 விநாடிகளில் முடிவுகள் அறிவிக்கப்படும். அசரீரயாய் ஒரு குரல் எங்கிருந்தோ ஒலித்தது.

''அமீர் - பாஸ் , அஜ்மல் - பாஸ் ... '' வரிசையாய் அறிவித்துக்கொண்டிருந்தது அந்த குரல். மூவரது பெயர் மட்டும் மிஸ்ஸிங்.

''இளா,சுந்தர்,ராகவ் மூவரும் தங்களது டியூட்டரான ஐ-2323யின் அறைக்கு உடனே வரவும்'' என்றது அந்த அசரீரி குரல்.

அறையில் தனது இதயப்பகுதியில் இருந்த எதையோ கழட்டி துடைத்துக்கொண்டிருந்தது அந்த ஐ-2323 என்னும் ரோபோட்.

''அமருங்கள் . நீங்கள் மூவரும் தேர்வில் வெற்றியடைந்து விட்டீர்கள்..! ''

மூன்று பேர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசமாய் ஒளிர்ந்தது.

''நீங்கள் செய்த புரோகிராமில் மட்டும் ஒரு பிழை இருக்கிறது. கன்ட்ரோல் வீ மற்றும் எக்ஸ் இடம் மாற்றி இடப்பட்டிருக்கிறது , அது பெரிய பாதிப்பை உண்டாக்காது.. இருந்தாலும்...''

மூவருக்கும் லேசாய் வேர்த்துக்கொண்டிருந்தது. ராகவ் சுந்தரைப் பார்த்து பல்லைக் கடித்துக்கொண்டிருந்தான்.

''மூவரும் அதே தவறை செய்திருப்பதால் நீங்கள் %$@$&%$@&%$@%$@*@*@*$$*@%))%)% எனவே உங்களை பரிசோதித்த பின் நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.. '' என்று பேசிய படியே அருகிலிருந்த பொத்தானை அழுத்த இரண்டு நீலநிற ரோபோக்கள் வந்து மூவரையும் அழைத்து சென்றது.

(நடுவில் வந்த $&$@#&$&@@%$& ரோபோக்களின் கெட்ட வார்த்தை )

***************

அந்த மனிதகொலைக்களத்தை இப்போதுதான் முதல்முறை பார்க்கின்றனர். இரண்டு ரோபோக்களும் அவர்களை பிடித்திருந்த பிடியை தளர்த்தியது. இளா துருதுருவென அங்கிருந்து தப்பிக்க நினைத்தான். எப்படி? வழி? எதுவும் தெரியாது. அந்த பெரிய அறையின் கதவு திறந்துதான் இருந்தது. எப்படியாவது அங்கிருந்து தப்ப வேண்டும். உயிர்! . ஓடு ஓடு ஓடு என மனது சொல்லியது. உடல் வலிமையை மொத்தமாய் திரட்டி மின்னல் வேகத்தில் ஓடித்துவங்கினான். ஓடினான். ஓடினான். நிச்சயம் 90 ஐ தொட்டிருப்பான். ஆனால் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தான். அப்படித்தான் அந்த இயந்திரம் அவர்களை பழக்கப்படுத்தியிருந்தது. அருகில் எந்த சலனமும் இன்றி இரண்டு ரோபோக்களும் அவனை பார்த்துக்கொண்டிருந்தன.

ஓடிக்கொண்டிருந்தவனின் அருகில் போய் ''போகலாமா? '' என்றது நீலநிற சைத்தான்.

இளா மெதுமெதுவாய் வேகம் குறைத்து. அவைகளோடு நடக்கத் துவங்கினான்.

அவர்கள் ஒவ்வொருவரும் வசிக்க இதே போல பெட்டிகள் கொடுத்திருந்தனர். ஆபீஸ் டேபிளை கவுத்துப் போட்டது போலிருந்த அந்த டேபிளுக்குள்தான் இப்போதும் அனுப்புகின்றனர்.

''டேய் என்னடா இது நம்ம தங்கற பெட்டி மாதிரி இருக்கு இதுக்குள்ள போட்டு என்ன பண்ணுவானுங்க , வேகவைப்பானுங்களா!''

''தோழர்களே நீங்கள் இங்கே பேசத்தடை இருக்கிறது.. மீறி பேசினால் , நாக்கு துண்டாக்கப்பட்ட பின் கொல்லப்படுவீர்கள் ''

மூவரும் கப்சிப்.

அங்கிருந்த பெட்டிக்குள் மூவரும் அடைக்கப்பட்டனர்.

அதன் மேல்கதவுகள் மூடப்பட்டன. அந்த நீலநிற ஜந்துக்களின் கையோடு இணைந்திருந்த குட்டி கணினி போன்ற ஒன்றில் ,

ஆப்சன் 4
கன்ட்ரோல் எக்ஸ்
கன்ட்ரோல் வி

என டைப்படிக்க.

சில நிமிடங்களுக்கு பின் அந்த கதவுகள் திறக்கப்பட மூவரும் எழுந்தனர் உயிருடன்.

அந்த பெட்டி முழுக்க ஓரே புகை. திருதிருவென விழித்த படி நிர்வாணமாய் நின்றனர். ராகவ் சிரித்தான் . சுந்தர் அழுதுகொண்டிருந்தான் . இளா மட்டும் பெட்டிக்குள் ஓடிக்கொண்டேயிருந்தான். அதே வேகம் 90ஐ தொட்டிருப்பான். அவர்களில் மிகச்'சிறிய' மாற்றம். உயரம் மட்டும் குறைவாய் , பால் பற்களுடன் நான்கு வயது பாலகர்களாய்.

27 July 2009

அலங்கல்!




வினவு - புரட்சி - புண்ணாக்கு - புதிய பார்வை - லக்கிலுக் - ஆபாசம் - குமுதம் ரிப்போர்ட்டர் - சைபர் கிரைம் - தொடர் - மலை - விடியல் - திமுக - உதயசூரியன் - கிழக்கு - புத்தகம் - பதிப்பகம் - பிரபாகரன் - மே 17 - வாழ்க்கை - மரணம் - பாராகவன் - விற்பனையில் சாதனை - கொழுவி - பெயரிலி - பதிவர் - தமிழ்மணம் - பிரபலம் - நர்சிம் - தனிநபர் தாக்குதல் - தீபா - ஜெயகாந்தன் - எழுத்தாளர் - தமயந்தி - அக்னிபிரவேசம் - அபிஅப்பா - உடன்பிறப்பு - நட்பு - லாலாலா - விக்ரமன் - வடகரைவேலன் - பரிசல்காரன் - நாட்டாமை - வெத்தலை - எச்சில் - சொம்பு - சரத்குமார் - விஜயகுமார் - மஞ்சுளா - எம்.ஜி.ஆர் - ரிக்சாகாரன் - அழகியதமிழ்மகள் இவள் - விஜய் - குருவி - லேகியம் - சித்த வைத்தியம் - ஆண்மைக்குறைவு - மோசடி - திருவாங்கூர் இராஜவைத்தியம் - முதுகுத்தண்டு - அஜித்குமார் - வாய்கொழுப்பு - சாரு - ஜெயமோகன் - நான் கடவுள் - பாலா - இளையராஜா - டாக்டர் புருனோ - அரசு ஊழியர் - போராட்டம் - கலைஞர் - கோபாலபுரம் வீடு தானம் - போயஸ் கார்டன் - ஜெயலலிதா - தேர்தல் புறக்கணிப்பு - காமெடி - ராமதாஸ் - காடு வெட்டி - பசுமை தாயகம் - சுற்றுசூழல் - சூரிய கிரகணம் - உலகம் அழிவு - மாயன் காலண்டர் - சாவு - சுடுகாடு - பிரமிடு - சாய்மீரா - மொக்கை சினிமா - பத்துக்குபத்து - சோனா - பிட்டுப்படம் - ஜோதி - ஷகிலா - அதிஷா - ஆபாசம் - லக்கி லுக் - புதிய பார்வை - புண்ணாக்கு - புரட்சி - வினவு .

***************

சரியா ஒரு நிமிஷம் ஆயிடுச்சா ... போங்கோ... அவ்ளோதான் போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க..!

23 July 2009

கவிஞர் ஆலபுலவாயனாரும் அரைபாட்டில் விஷமும்





'' கவிதைனா என்னனு தெரியுமாடே ஒனக்கு.. கவித்துவம்னா தெரியுமா ஒனக்கு.. நீ சிற்றிலக்கியத்துல சாதனை பண்ண கவிஞர் ஏரிவாய்க்கால்பட்டி எருமைதாசன் எழுதின கவிதை தொகுப்பு படிச்சிருக்கியா.. அவருதான்யா ஏரிவாய்க்கால் பட்டி வட்டார மொழிவழக்குக்கு பிதாமகனே... அதுவாவது பரவால்ல ரஷ்யகவிஞர் ரப்னோஸ்கி கிலிலிபோனியோவாவது தெரியுமா.. ரஷ்ய வட்டார வழக்குல பெரிய இவருயா! தம்பி உங்களுக்கு ஆர்வம் இருக்கற அளவுக்கு இலக்கிய அறிவு கிடையாது இன்னும் வளரணும் தம்பீ''

உங்க கவிதைய கொண்டுபோய் அந்தாளுகிட்ட காட்டினா அப்படித்தான் சொல்லுவாரு. ரொம்ப நல்லவரு. கவிதையின் உள்ளடக்கம் பொருளடக்கம் நடு அடக்கம்னு பேச ஆரம்பிச்சாருனா நம்மல அடக்கம் பண்ற அளவுக்கு பேசுவாரு நம்ம பின்னவீன முன்னவீன அதிநவீன கட்டணமுறைக் கவிஞர் ஆலபுலவாயனார். பெயர் காரணம்லாம் கேக்காதீங்க அது ஏற்கனவே சொல்லியாச்சு. பிரபல கவிஞர்கள பத்தி யாராச்சும் பேசினாப் போதும் ஓஓ அவனா நானும் அவனும் ஒரே தட்டுல தின்னு ஒரே பாத்ரூம்ல குளிச்சவங்கன்ற ரேஞ்சுல கும்மியடிப்பாரு. மெய்யாலுமே இந்தாள அந்த கவிஞருக்கு யாருனே தெரியாதாருக்கும். தெரிஞ்சாலும் கெட்ட வார்த்தைலதான் திட்டுவாங்களாருக்கும்.

எங்க எலக்கிய கூட்டம் நடந்தாலும் மேடையில முன் வரிசைல மொத ஆளா துண்டுப் போட்டு எச்சிதுப்பி எடம் புடிச்சு உக்காந்துக்குவாரு. அங்க வர பெரிய மனுஷாள்கிட்ட பேசற மாதிரி போட்டோ எடுத்துகிட்டு வீட்டில அவரவிட பெரிசா அதை ப்ரேம் போட்டு மாட்டிவச்சுக்குவாரு.

நான்கூட மொதல்ல அந்தாளு ஏதோ பெரிய கவிஞரு போலனு நினைச்சு ஒரு கடைல போய்
'பிரபல' கவிஞர் ஆலப்புலவாயனார் கவிதைத்தொகுப்பு இருக்கானு கேட்டேன். பேந்த பேந்த முழிச்சிட்டு பிம்பிளிக்கி பிளாப்பினு சொல்லி லூசு மாதிரி சிரிச்சான். அடப்பாவிங்களா பேரச்சொன்னதுக்கே இப்படி ஆகிட்டானேனு யோவ் தமிழ்ல சொல்லுய்யான்னா கேட்டா சார் நீங்க என்ன மென்டலானு கேட்டான். அப்ப எனக்கு புரியல அதுக்கான அர்த்தம்.

அப்புறம்தான் தெரிஞ்சுது இந்தாளு பேரச்சொன்னா இலக்கிய வட்டத்துல நம்மள லூசுனு நினைப்பாங்கனு. ஆனாலும் விடாப்பிடியா எங்கயாச்சும் யாராச்சும் இலக்கியம்னு சொல்லி டீக்கடைல கூட்டமா நின்னாக்கூட அதுல கலந்துகிட்டு தன்னோட குஞ்சாணி என்கிற சிறுபத்திரிக்கைல போட்டு , அங்க டீ ல சக்கரை கம்மினு கண்டன தலையங்கம் கூட போடுவாரு. எல்லாமே சொந்த காசு அவரப்பா விவசாயம் பண்ணி சம்பாதிச்ச காசு. ஏன்யா சொந்த காச இப்படி வீணாக்குறீங்கனு கேட்டா... தம்பீ பாரு இன்னும் இருபது வருஷம் கழிச்சு தமிழ் இலக்கியம்னாலே அது ஆ.பு.வாயனார்தானு பேசுவாய்ங்க.. இதெல்லாம் இலக்கியத்துக்கு நாம செய்யற சேவப்பா உன்ன மாதிரி இலக்கியம் தெரியாத பயலுகளுக்குலாம் தெரியாது..

விகடன் குமுதம் கல்கி கல்கண்டு ஆனந்தசினிமா மங்கையர்மலர் மஞ்சள் சிவப்பு கருப்பு புளிப்பு அது இது லொட்டு லொசுக்கு எல்லா பத்திரிக்கைலயும் அண்ணனுக்கு ஆளிருக்கு. என்ன இந்தாள பாத்தாதான் அவன் அவன் டெரராவான். அப்படி இப்படினு பிரபல பத்திரிக்கைல வாராவாரம் வரமாதிரி ஒரு தொடருக்கு வாய்ப்பு வாங்கி நானும் கவிஞன்டானு உலகம் அறிஞ்ச கவிஞ்சர் ஆகிட்டாரு. ஆனாலும் நாளு வாரம் நாளே வாரம்தான்.. தொடர் அறிவிக்கப்படாம நின்னு போச்சு.

ஆனா நம்ம சிங்கம் குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலனுதான சொல்லும்.. யாராச்சும் கேட்டா.. ''இலக்கிய பணிகளுக்கு நடுவுல ஜனரஞ்சக பத்திரிக்கைல எழுத ரொம்ப நேரம் செலவாகுது அதுமில்லாம நான் கொஞ்ச நாள் ஓய்வெடுக்கலாம்னு நினைச்சு முடியாதுனுட்டேன் சார்''னு சீன் போடும்.

அப்படி இருக்கும் போது அந்தாளு வாழ்க்கைலயும் வசந்தம் வீசுச்சு. வசந்தா வடிவத்தில. வசந்தா அவரோட வேலைப்பாக்கற பொண்ணு. ரொம்ப அழகா அம்சமா இருக்கும்.அதுக்கு நம்ம ஆலபுல மேல ஒரு கண்ணு. ஒரு நா வந்து சார் ஐ லவ் யூனு சொல்லிருச்சு. உடனே நம்ம ஆலுவுக்கு மூக்குக்கு மேல கோவம் வந்துருச்சு. ஒரு கவிஞன்கிட்ட காதல இப்படித்தான் வாயில சொல்லுவாங்களானு எகிற ஆரம்பிச்சிருச்சு. அந்தம்மா மிரண்டு போய் அந்த கம்பெனிய விட்டுல்ல ஊரே விட்டே ஓடிருச்சு. உடனே ரொம்ப சோகமா இப்படி ஒரு கவிதை எழுதினாரு ஆ.பு.வாயனார். அவருக்கு கானாக்கு கானா புனாக்கு புனானா ரொம்ப புடிக்கும் .

ஒரு சாம்பிள் கவிதை போடலாம்னு ஆசைதான் .. அத படிச்சு உங்களுக்கு வாந்தி , சீதபேதி , கக்குவான் இருமால் இப்படி பல வியாதி வந்து நீங்க செத்துப்போயிட்டா.. சோ நோ கவிதை.

ஒரு கவிதைய எழுதி இந்த பொண்ணுக்கு ஒரு கவர்ல போட்டு ஊருக்கு கொரியர்ல அனுப்பினாரு. உடனே அந்த பொண்ணு ஊரிலருந்து போலிஸ கூட்டிட்டு வந்து இந்தாளு என்ன கொலை பண்ண முயற்சி பண்றாருனு கேஸ் போட்டிருச்சு. இரண்டு மணிநேரம் இந்தாள லாக்கப்புல வச்சதுக்கே இரண்டு மூணு லாக்கப் மர்டர் ஆகிப்போச்சுனு கேள்வி . அப்புறம் தன்னோட இலக்கிய அந்தஸ்த வச்சு ரிலீஸ் ஆகி வெளிய வந்து '' சிறையறை கழிவறைகள் ''னு இரண்டாயிரத்து சொச்சம் பக்கத்துல ஒரு நாவல் எழுதி எழுதி எழுதி முடிச்சிட்டாரு.

அந்த நாவல எழுதினதிலருந்து அடுத்த ஜெமோ நான்தான் அடுத்த எஸ்.ரா நான்தான்டானு (அடுத்த சாரு நான்தான்டானு நல்ல வேளை சொல்லல) ஊருக்குலாம் லெட்டர் போட்டு கூவினாரு அவரு. ஆனாலும் யாரும் பெரிசா கண்டுக்கல. அப்பதான் ஒரு நாள் நான் வச்சிருக்கற பூச்சி மருந்து கடைக்கு வந்தாரு.

சார் என்னசார் கவித எழுதறத விட்டுட்டு விவசாயம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டீங்களானு கேட்டேன். அட நீ வேறயா சிறுபத்திரிக்கை நடத்தி பணம் போச்சு , கவிதை எழுதி மானம் போச்சு , நாவல் எழுதினேன் நாசமா போச்சு , எலக்கிய கூட்டத்துக்கு போய் மரியாதை போச்சு , பத்திரிக்கைல எழுதி எல்லாமே போச்சு அதான் விஷம் குடிச்சு சாகலாம்னு வந்தேன்னாரு..

நான் சிரிச்சுகிட்டே சொன்னேன் பிம்பிளிக்கி பிலாப்பினு..

யோவ் என்னய்யா என்ன பாத்தா லூசு மாதிரி இருக்கானு..கேட்டாரு

அட நீங்க வேற சார் இப்பலாம் சாவறதுக்கு விஷம் வேணும்னா யாரும் மருந்து வாங்கறதில்ல நேரா புக் சாப்புக்கு போய் உங்க கவிதை தொகுப்புதான் வாங்குறாய்ங்களான்னேன். விஷம் குடிச்சவன் கூட தப்பிச்சுடறானாம் உங்க கவிதைய படிச்சு இது வரைக்கும் யாரும் பொழச்சதே இல்லையாம்னு சொன்னேன்.

அப்ப என்னை கடுப்பாகி பாத்துட்டு போன மனுசன் அதுக்கப்புறம் உயிரோட இருக்காரா செத்தாரானு தெரியலை ஆனா நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன்.

அந்த ஆலபுலவாயனார எங்கயாச்சும் பார்த்தா சொல்லுங்கப்பு.. இல்லாட்டி பாத்த இடத்திலயே கொன்னுருங்க இல்லாட்டி அடுத்த கவிதை தொகுப்ப போட்டு உலகத்த அழிச்சற போறாரு..!


&&&&&&&&&&&&&&

பின் குறிப்பு - இந்த கதை(?)யில் வரும் பாத்திரங்களும் கரண்டிகளும் ஸ்பூன்களும் இன்ன பிற தட்டுமுட்டு சாமான்கள் யாவும் கற்பனையே.. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி உங்களை அது குறிப்பது போலிருந்தால் அது யதேச்சையானது. :-)

21 July 2009

தனிமையின் இசைக் கலைஞன்




பியானிஸ்ட் – ஒரு தனிமையின் இசை

அமைதியான ஒரு தேசம். அந்நியர்களின் ஆக்கிரமிப்பு. மொத்தமாய் எல்லாமே மாறிவிடுகிறது. ஒரே நாளில். முதலில் ஒரு இனம் மட்டும் தனித்து அடையாளம் காணப்படுகிறது. பின் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது. பின் அவர்களது இனமே மொத்தமாய் அழிக்கப்படுகிறது. அந்த அத்தனை சம்பவங்களிலும் அனைத்து துன்பங்களையும் அனுபவிக்கும் ஒருவன் , விடாமல் துரத்தும் மரணம் , அதிலிருந்து தப்பி அத்தனை கொடுமைகளுக்கும் ஒரு மௌனசாட்சியாய் தன் இசையின் மூலம் உலகத்திற்கே அறிவிக்கிறான் அவன். அவன் ஒரு பியானிஸ்ட்.

அது செப்டம்பர் 1 1939 போலந்தின் வார் சா (WARSAW) நகரம் தன் அழகோடு அமைதியாய் ஒரு காலை வேளையில் தன் வேலைகளை மும்முரமாகிறது. ஒரு நிசப்தமான வானொலி நிலையத்தில் ஒலிப்பதிவுக்கூடம் . அதன் உள்ளே தனிமையில் ஒருவன் தனது பியானோவில் மிகப்புகழ் வாய்ந்த ஒரு இசையை வாசித்துக்கொண்டிருக்கிறான். வெளியே அதை பதிவு செய்யும் இருவர் ரசித்தபடி இருக்கின்றனர். இசை மெல்லியதாய் நகர அவனது விரல்கள் அந்த பியோனோவினைத்தழுவ.. மிகப்பெரிய குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. வெளியே பதிவு செய்து கொண்டிருந்தவர்கள் அவனை நிறுத்தச்சொல்லி வெளியே அழைக்கின்றனர். அவன் விடாது வாசித்துக்கொண்டிருக்கிறான். மீண்டும் இன்னொரு மிகப்பெரிய சத்தம். அடுத்த குண்டு. தொடர்ந்து வாசிக்கிறான் . மூன்றாவது குண்டு அந்த கட்டிடத்தின் ஒரு பகுதிலேயே விழுகிறது. இப்போது வேறு வழியின்றி வாசிப்பதை நிறுத்திவிட்டு அக்கூடத்தை விட்டு வெளியேறுகிறான். கட்டிடத்தை விட்டு வெளியே வர அங்கே அழகான பெண்ணொருத்தி நீங்கள் சில்மேன் தானே என கேட்கிறாள். ஆம் நான்தான் என இவள் சொல்ல. அங்கே ஒரு மெல்லிய காதல். அடுத்த குண்டு மீண்டும் விழுகிறது. அனைவரும் தப்பி ஓடுகின்றனர்.

இப்படித்தான் துவங்குகிறது பியானிஸ்ட் திரைப்படம்.

ஜெர்மனி இரண்டாம் உலகப்போரினை துவக்கிய காலம் அது . போலந்து நாட்டை ஆக்கிரமிக்கிறது. அந்நாடு முழுக்க ஜெர்மனி தன் படைகளை குவித்திருக்கிறது. அப்படி ஒரு சூழலில்தான் இத்திரைப்படம் துவங்குகிறது. வீட்டிற்கு செல்கிறான் சில்மேன் என்னும் இப்படத்தின் நாயகன். அங்கே அவனது தந்தை,தாய்,தம்பி மற்றும் தங்கை என அனைவருமே பிபிசி வானொலியின் அறிவிப்பை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அதில் இங்கிலாந்து ஜெர்மனியை எதிர்த்து தன் போரை அறிவிக்கிறது. இங்கிலாந்து போலந்தைக்காக்கும் என நம்புகின்றனர். விரைவில் ஜெர்மனியின் நாஜிப்படைகள் விரட்டியடிக்கப்படுமென மகிழ்ச்சியடைகின்றனர். அம்மகிழ்ச்சியை அன்றிரவே அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

நாட்கள் நகர்கிறது. ஜெர்மனி முழுமையாக போலந்தை தன் ஆக்கிரமிப்பில் கொண்டு வருகிறது. இக்காகலக்கட்டத்தில் ஜெர்மனியில் வாழும் யூதர்கள் (Jews ) மீது தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்குகிறது ஆதிக்க அரசு. அனைத்து யூதர்களும் கட்டாயம் தங்களது சட்டைகளில் நீல நிற நட்சத்திரம் பதித்த பட்டையை அணிய வேண்டும் என்பதே அது. அந்த பட்டையும் இத்தனை சென்டிமீட்டர் அளவில் இருக்க வேண்டும் எனவும் நிர்பந்திக்கிறது.

பின் மற்றொரு அறிவிப்பு வருகிறது. யூதர்கள் தங்கள் வீட்டில் மிகக்குறிப்பிட்ட அளவு பணமே வைத்துக்கொள்ள வேண்டும் என அடுத்த அறிவிப்பு வருகிறது. சில்மேனின் குடும்பம் அதிர்ச்சியடைகிறது. அவர்களிடமிருக்கும் அதிக தொகையை மறைக்க இடம் தேடி அலைகின்றனர். கடைசியில் சில்மேனின் தந்தையின் வயலினில் அவை மறைத்து வைக்கப்படுகிறது.

ஜெர்மனியின் தொடர் அறிவிப்பு அதிர்ச்சிகள் குறைவதற்குள் இடியாய் அடுத்த அறிவிப்பு வெளியாகிறது. யூதர்களுக்கென ஊரிலிருந்து பிரிந்து தனி காலனி அமைக்கப்பட்டு அங்கே இடம் பெயர வற்புறுத்தப்படுகின்றனர். சில்மேனின் குடும்பமும் இடம் பெயர்கின்றனர். வசதியாய் வாழ்ந்த அவர்களது குடும்பம் ஒரு சிறிய குடிலுக்குள் தங்க வைக்கப்படுகின்றனர். அனைத்து யூதர்களுக்கும் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு , பசியிலும் பட்டினியிலும் கிடந்து வாடி சாகின்றனர்.

சில்மேனின் குடும்பமும் வறுமையில். சில்மேன் ஒரு சிறிய ஹோட்டலில் பியானோ வாசிக்கிறான். அதற்கிடையில் அந்த காலனியில் இருக்கும் அனைத்து யூதர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாய் அறிவிக்கின்றனர். உண்மையில் அத்தனை பேரும் கொல்லப்படவே அழைத்துச்செல்லப்படுகின்றனர். சில்மேன் மட்டும் அவரது போலந்து போலீஸ் நண்பர் ஒருவரால் எதிர்பாராமல் தப்பவைக்கப்படுகிறான். பின்தான் தெரிகிறது யூதர்கள் அனைவருமே சாகடிக்க படவே அந்த இடமாற்ற அறிவிப்பு என்பது. மீண்டும் போலந்து வீதிகளில் அநாதையாய் சுற்றித்திரிகிறான். யாருமே இல்லாத வீதிகள் அவை. மயான அமைதி. மயானமேதானோ என்று எண்ண வைக்கிறது. அத்தனை பிணங்கள்.
ஜெர்மனியப்படையிடம் மீண்டும் மாட்டிக்கொள்கிறான். அவனை ஒரு கட்டுமானப்பணியில் வேலைக்கு அமர்த்துகின்றனர். அங்கே அவனது சக யூத நண்பர்கள் ஜெர்மனிய படையிடம் மோத ஒரு திட்டம் தீட்டுகின்றனர். இவன் அதற்கு உதவுகிறான். திட்டம் நிறைவேற்றப்படும் முன் அந்த இடத்தில் இருந்து தப்புகிறான். அங்கிருந்து தப்பி நண்பர் ஒருவரின் உதவியை நாடுகிறான்.

நண்பர் அவனை அந்த பகுதியின் ஒரு கட்டிட்டத்தில் தங்க வைக்கிறார். எப்போதாவது உணவு . என்கிற ரீதியில் ஒரு சிறிய அறைக்குள் பல நாட்கள் முடங்கிக்கிடக்கிறான். அவனுக்கு உதவிய நண்பர் இறந்துவிட அந்த அறையைவிட்டு வெளியேறி மீண்டும் மறைந்து வாழ இடம் தேடி அலைகிறான். மீண்டும் ஒரு நண்பர். மீண்டும் தனிமை. எப்போதாவது உணவு. ஜன்னல் வழி உலகம்.

அறையிலேயே பியானோ இருந்தும் வாசிக்க இயலாது தவிக்கிறான். பல முறை மரணத்தைக் கண்டும் இறந்து போகாமல் இருக்கும் நிலையை எண்ணி வருந்துகிறான். இப்படி மறைந்து வாழ்வதற்கு இறந்து போய்விடலாமே என எண்ணி அழுகிறான்.
இதற்கிடையில் போலந்து நாடே அழிந்து போய் கிடக்கிறது. அந்நாட்டின் மக்கள் தொகையில் பாதி அழிந்து போயிருந்தது. ஜெர்மனி அடி மேல் அடி வாங்கி தோல்வியின் விளிம்பில் இருக்கிறது.

இவன் மட்டும் யாருமில்லா போலந்து வீதிகளில் உணவு தேடி அடையாளமிழந்து அலைகிறான். ஒரு பாழடைந்த வீட்டில் கிடைத்த பழைய ரொட்டியும் ஒரு டின் ஏதோ ஒரு திரவத்தையும் வைத்துக்கொண்டு அங்கேயே மறைந்து வாழ்கிறான். ஒரு நாள் அந்த வீட்டிற்குள் ஒரு ஜெர்மனி இராணுவ அதிகாரி ஒருவர் நுழைகிறார். இவன் அவரைக்கண்டு அஞ்சுகிறான். யார் நீ என கேட்க , தான் ஒரு பியானிஸ்ட் என்கிறான். எங்கே வாசித்துக்காட்டு என சொல்கிறார் அந்த அதிகாரி.

பல வருடங்களுக்கு பிறகு பியானோவில் விரலை வைத்து வாசிக்கத்துவங்குகிறான் தன் வாழ்க்கையின் மிக உன்னதமான இசையை இடைவிடாது பல மணி நேரங்கள் வாசித்து கொண்டே இருக்கிறான். அந்த அதிகாரி அந்த இசையில் மெய்மறந்து நேரம் செல்வதைக்கூட அறியாது அமர்ந்திருக்கிறார்.

இரவாகிறது. அவனை உயிரோடு விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் அந்த ஜெர்மனிய அதிகாரி. தினமும் அவனுக்கு அந்த பாழடைந்த வீட்டிலேயே உணவு கொண்டு வந்து தருகிறார். அது போல ஒரு நாளில் இனி நான் வரமாட்டேன் இனி உனக்கு விடுதலை என தனது கோட்டை கழட்டி அவனிடம் கொடுத்துவிட்டு செல்கிறார்.

போர் முடிவடைகிறது. இவன் சுதந்திரமாய் தன் நாட்டின் வீதியில் இறங்கி நடக்க , அவனது ஜெர்மனிய கோட்டைக் கண்டு போலந்து நாட்டினர் அவனை ஜெர்மானியன் என எண்ணி கல்லால் அடிக்கின்றனர். தன்னை ஒரு யூதன் என அறிவித்துக்கொள்கிறான். பின் ஜெர்மனியின் கொடும் சிறைகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்படுகின்றனர். அங்கே அந்த அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு யூதனிடம் சில்மேனை எனக்கு தெரியும் அவரிடம் நான் இங்கிருக்கிறேன் என சொல்லுங்கள் என்கிறான்.

மீண்டும் சில்மேன் தனது வானொலி நிலையத்தின் ஒலிப்பதிவுக்கூடத்தில் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறான். அதே அமைதி. அதே இசை. சுதந்திரமான இசை.
அந்த அதிகாரியைத்தேடி சிறைக்கூடம் இருந்த இடத்திற்கு சென்று பார்க்கிறான். அங்கே சிறையும் இல்லை அதிகாரியும் இல்லை..

சில்மேன் என்கிற அக்காலத்திய பியானிஸ்ட் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இத்திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதப்பெற்ற ஒன்றாகும்.

அது தவிர பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.
இப்படத்தின் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி. ஜெர்மனிய சிறைகளின் கொடுமைகளையும் , கீட்டோ எனப்படும் யூதர்களின் காலனிகளில் நடந்த பிரச்சனைகளையும் கண்முன்னே நிறுத்துகிறார். யூதரான இவர் போலந்தைச்சேர்ந்தவர். இவரும் ஜெர்மனியின் படைகளால் துன்புறுத்தப்பட்டு அதிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்காக ஆஸ்கரின் சிறந்த இயக்குனர் விருதையும் வென்றார்.

தனிமையின் இசை மிகவும் அழகானது
அது நம் வாழ்வோடு இணைந்தது
அது மரணத்தின் வாசலில் அதீத ஒலியுடன் எதிரொலிப்பது
மரணத்தின் வாசனையை உணர்ந்தவனால் மட்டுமே அதை ஒலிக்க எதிரொலிக்கச் செய்ய இயலும்
பியானிஸ்ட்டின் அந்த இறுதி இசை ஒரு இன அழிப்பின் இறுதி ஓலமாய் ஒலித்த ஓசை
இன்றளவும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தன் இனம் அழிக்கப்படுகையில் எங்கெங்கும் எதிரொலிக்கும் தனிமைகளின் இசை.


**************

18 July 2009

வேலுபிரபாகரனின் காதல் கதை!



ஓஷோவின் ஏதோ ஒரு புத்தகத்தில்...

காமத்தைக் கடக்க காமத்தில் மூழ்கு.. காமத்தில் மூழ்காமல் மறுகரைக்கு செல்லவே முடியாது.

*********


காமம்! இந்த ஒற்றைச்சொல்லிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஓராயிரம் பிரச்சனைகளை ஒன்றரை மணிநேரத்தில் ஒட்டுமொத்தமாய் சொல்ல முயற்சித்திருக்கிறார் வேலு பிரபாகரன். ஒரு நல்ல உரையாடலை அல்லது விவாதத்தை முன் வைத்திருக்க வேண்டிய ஒரு ஒன்லைனரை வைத்துக்கொண்டு மூன்றாம்தர பிட்டுப்பட வெலவலில் ஒரு காவியம். இசை இளையராஜா.

நான் வயதிற்கு வந்திருந்த சமயத்தில் இந்த திரைப்படம் பூஜையின்றி தொடங்கப்பட்டிருக்கக் கூடும். ரிலீஸ் ஆவதற்குள் ஆண்டுகள் பல கடந்திருக்கின்றன. ஒரு சில நிர்வாணக்காட்சிகள் படத்தில் இருந்தமையால் படத்தை வெளியிடுவதில் சிக்கல்கள் இருந்ததாய் பல முறை வே.பி மீடியாக்களில் கண்ணீர்விட்டு கதறியிருக்கிறார். அதுவும் முழுநிர்வாணம் கூட கிடையாது செமி தான். இப்படம் வெளியாக ரஜினிகாந்த் கூட உதவியதாய் கூட ஒரு வதந்தியோ செய்தியோ உண்டு. அது தவிர ஒருமுழுப்படத்தையும் எடுத்துவிட்டு அது சொல்ல வந்த கருத்தை சென்ஸாருக்குச் சொல்லவே இன்னொரு படத்தையும் எடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்திருக்கிறது. அதனால் படம் பப்படமாய் இருக்கிறது.

காமம் மறைக்கப்பட வேண்டியதா! இந்தியாவின் கலாச்சாரம் காமத்தை மூடிவைத்து அதன் மீது அதீத வெறியை ஒவ்வொரு ஆணிடமும் உருவாக்கி , வெறும் காமத்தை மட்டுமே தேடுகின்ற ஒரு மடச் சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறது என படத்தின் ஆரம்பத்திலேயே மைக்கைப் பிடித்து பேசத்துவங்குகிறார் வே.பி. இறுதிக்காட்சியில் இளம்பருவத்தில் இளம்வயது பாலியல் குற்றங்களையும் ஏக்கங்களையும் தவிர்க்க அரசாங்கமே அனுமதிக்கப்பட்ட மாற்று ஏற்பாடுகள் ( லைசண்ஸ் தரப்பட்ட விபச்சார விடுதிகள் ) செய்து தரவேண்டும் எனவும் முழங்குகிறார்! இது தவிர நடுவில் மீடியாக்களையும் சாடுகிறார். மீடியாக்கள் பெண்ணின் தொப்புளையும் மார்பகங்களையும் காட்டி ஆண்களின் காமத்தை தூண்டுகின்றன என்கிறார்.ஆனால் இந்த படத்தின் பெரும்பகுதிகளில் விதவிதமாய் அதையே மூன்று பெண்களை வைத்து காட்டியிருப்பது முரண்.

மற்றபடி கதை? - முன்று பெண்கள் - ஒரு ஜாதிவிட்டு ஜாதி காதல் - ஒரு கள்ளக்காதல் - ஒரு கைவிடப்பட்ட பெண்ணின் காதல் - அதை சுற்றி காமம் - பின் அனைத்தும் பலி - அனைவரும் பலி - கடைசியில் வே.பி காதல் எல்லாம் சும்மா காமம்தான் உண்மை என கருத்து சொல்லி படத்தை முடிக்கிறார்.

மேற்ச்சொன்ன கதையை ஒரு டைரக்டர் படமாக எடுக்க அந்த படத்திற்கு எதிர்ப்பு .. அவரை யாரோ கத்தியில் குத்திவிட , அதை விசாரிக்கும் போலீஸ்...ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா முடியல!

இசை இளையராஜா. நீங்கள் இளையாராஜா ரசிகராக இருந்தால் தயவு செய்து இந்த படத்தை பார்க்க வேண்டாம் இசைராஜாவை வெறுத்துவிடும் வாய்ப்பிருக்கு! பிட்டுப்படங்களுக்கு இசையமைக்கும் ஏ.டி.ஜாயை விட அருமையான இசை. பிண்ணனி ஓஹோ!

இது தவிர வே.பி, சில்க் ஸ்மிதாவுடனான தனது காதலையும் அவரும் ஸ்மிதாவும் மணமுடித்துக்கொண்டதையும் பின் பிரிந்து போனதையும் படத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மை எனவும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

நிர்வாணம் காட்டுகிறேன் பேர்வழி என வே.பி அக்கால கர்ணன் படங்களில் உபயோகப்படுத்திய டிரான்ஸ்பரன்ட் வெள்ளை உடையில் நாயகிகளை நீரில் நனைத்து உரித்துக் காட்டுகிறார். படத்தில் வரும் அனைத்து பெண்களும் பாலியலில் ஈடுபடுகின்றனர். நிர்பந்தத்தால். அவர்களது காமம் அல்லது காதல் குறித்து ஒன்றும் சொல்லவில்லை.

வே.பிரபாகரனின் முந்தைய திரைப்படங்களான கடவுள் , புரட்சிக்காரன் திரைப்படங்கள் கூட ஓரளவு அதன் சொல்லும் கருத்தை தெளிவாய் சொன்னதற்காகவாவது பார்க்கலாம். இத்திரைப்படம் சொல்ல வந்த கருத்திலிருந்து விலகி ஏதேதோவாகி சொல்லவந்த கருத்தை நேரடியாய்ச் சொல்லாமல் நீட்டி முழக்கிச் சொல்லிச்செல்கிறது.

இது தவிர இத்திரைப்படம் ஆணின் பார்வையிலேயே அதிலும் வேலுபிரபாகரனின் பார்வையில் காமமின்றி காதலில்லை. காதலே பொய் , காமமே மெய் என வேதாந்தம் சொல்லி முடிக்கிறது.

உடல்அரசியல் குறித்த டின்டோ பிராஸின் படங்கள் சொல்லும் அதே செய்தியை நம்மூர் லோக்கல் மசாலா சேர்த்து மண் வாசனையோடு சொல்ல முயன்று தோற்றிருக்கிறார் வே.பி. ஆனால் பேசாப்பொருளைப் பேசதுணிந்ததற்காக அவரைப் பாராட்டலாம்.

மற்றபடி படம்? - பிட்டுப் பார்க்காதே என்கிற அறிவுரையும் நாலேமுக்கால் பிட்டும்..

16 July 2009

அமெரிக்கா எந்திரன் - டொய்ங்ங்ங்ங்!



உங்கள் வீட்டு டிவி,பிரிட்ஜ்,பைக்,கார் மற்றும் இன்ன பிற உலோக தட்டுமுட்டு சாமான்கள் ஒரு ரோபோ(ROBOT) அல்லது பல குட்டி குட்டி ரோபோட்டுகளாக உருமாறி உங்களை தூக்கிப் போட்டு தூர்வாறினால் எப்படி இருக்கும். அப்படி உருமாரும் ரோபோட்டுகளை வைத்துக்கொண்டு மின்னல்வேகத்தில் ஒரு பிரமிப்பான திரைப்படத்தை கொடுத்திருக்கின்றனர் டிரான்ஸ்பார்மர் படக்குழுவினர்.

நூற்றுக்கணக்கான ரோபோட்டுகள். அத்தனையும் விதவிதமாய் சரவணாஸ்டோர்ஸ் பாத்திரக்கடை போல பளபளா கலகலா சலசலக்க அதிர வைக்கின்றது. உண்மையாகவே எல்லாமே விதவிதமான பாத்திரங்கள்தான்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்? .

அனைத்தும் அடித்துக்கொண்டு மோதுகின்றன. நிஜமாகவே தீப்பொறி பறக்கிறது. கர்ஜிக்கின்றன நமது இருக்கைகள் அதிர்கிறது. பல கோடிகளை வாரி இறைத்து அசால்ட்டாக எடுத்திருக்கின்றனர். படம் முழுக்க பிரமிப்பு பிரமிப்பு .

டிராண்ஸ்பார்மர்ஸ் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இந்த வாரத்தில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் அதே நக்கல் வசனங்கள் , அதிரடி சரவெடி பஞ்ச் டயலாக் பேசும் அபார ரோபோட்டுகள். ரோபோட் வில்லன். ரோபோட் நாயகன் . இவர்களுக்கு நடுவில் ஒரு மனித ஹீரோ. சோகக்காட்சியிலும் அதீத கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ஜலபுல ஜங்கா ஹீரோயின் மேகான் பாக்ஸ் ( ம்ம் பெருமூச்சைத்தவிர எதுவும் சொல்ல இயலவில்லை). வேறென்ன வேண்டும் மைக்கேல் பேயின் இந்த இரண்டாவது படைப்பில். முழு நீள மசாலா சைன்ஸ் பிக்சன். கதையின் அதீத பூச்சுற்றலும் அதனூடே ஓடும் சுமால் சுமால் நகைச்சுவைகளும் சுஜாதா கதை படிக்கும் சுவாரஸ்யம் தரும் அம்சங்கள். மைக்கேல் பே ( படத்தின் இயக்குனர் ) சுஜாதா கதைகள் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் படத்தின் தயாரிப்பு அமெரிக்க சுஜாதா ஸ்பீல்பெர்க் ஆயிற்றே.

டிராண்ஸ்பார்மர்ஸ் முதல் பாகத்தில் தப்பியோடிய ஜோரோ என்னும் கெட்ட ரோபோட் மீண்டும் தன் படைகளை திரட்டிக்கொண்டு பூமியை தாக்க வருகிறது. நமது சப்பை ஹீரோவும் அவரது கவர்ச்சிக்காதலியும் ஆப்டிமஸ் என்னும் ரோபோக்கள் கிரக மன்னரும் இணைந்து எதிரிகளின் இந்த திட்டமிட்ட திடீர் தாக்குதலையும் , ரோபோக்களின் மூதாதையர்கள் மறைத்து வைத்திருக்கும் சூரியனை தின்னும் மெஷினை அழிப்பதும் படத்தின் கிளைமாக்ஸ்.

விறுவிறுப்பு, சுறுசுறுப்பு - திரைக்கதை. படம் ஆரம்பித்த முதல் பிரேமிலிருந்து கடைசி காட்சியில் பெயர் போடும் வரை விடாது துரத்தும் வேகம். முதல்பாகத்தை காட்டிலும் ஒரளவு முந்திச்செல்கிறது.

டொய்யாங்ங்ங்ங்... அதிரும் சவுண்ட் எபஃக்ட். காது கிழிகிறது. படம் பார்ப்பவரின் சேர்கள் அதிர்கிறது. ரோபோக்கள் சண்டையிட அவர்களுக்கு நடுவில் பதட்டமாய் பாப்கார்ன் சாப்பிடும் உணர்வு!. அதற்கே ஒரு டொய்யாங்ங் சேர்த்துக்கொள்ளலாம்.

கிராபிக்ஸ் கலைஞர்களின் நொங்கைபிதுக்கி வேலை வாங்கியிருப்பார்கள் போல. இரண்டு காட்சிகளில் ஒன்றேமுக்காலே அரைக்கால் காட்சி , முழுக்க முழுக்க கிராபிக்ஸ். அதிலும் அத்தனை வித ரோபோட்டுகள் அத்தனையும் வேறு வேறு நிறம் . வேறு வேறு உடலமைப்பு. கொசு ரோபோ , மிக்ஸி ரோபோ , குண்டு ரோபோ , காமெடி ரோபோ , வால் முளைத்த அழகி ரோபோ , நாய் ரோபோ.. மிகப்பெரிய லிஸ்ட் அது. எழுத ஆரம்பித்தால் இன்னும் நீளும். மேற்ச்சொன்னவை அனைத்தும் நீங்காமல் மனதில் பதிந்த ரோபோக்கள். அதிலும் சில ரோபோக்கள் பேசும்போது அவற்றின் உடல்மொழி, சிரிப்பதும் அழுவதும் , பயப்படுவதுமாய் அனைத்தும் மிகத்துல்லியமாய் பார்த்து பார்த்து செதுக்கி... இல்லை இல்லை முறுக்கி இருக்கிறார்கள் கிராபிக்ஸ் கலைஞர்கள். தமிழ்சினிமா கிராபிக்ஸில் பல நூறு வருடங்கள் பின்தங்கியிருக்கிறதோ என்னவோ? ரோபோக்கள் ஒருபுறமென்றால் எகிப்தின் பிரமிடுகள் உடைந்து சுக்குநூறாகின்றன. தூண்கள் சரிகின்றன. அவற்றின் மேலேறி ரோபோக்கள் நர்த்தனமிடுகின்றன. தூசு கூட மிச்சமின்றி அனைத்தும் மிஸ்டர்.பர்பெக்டாய் வந்திருக்கிறது. அனிமேசன் துறையின் இமாலய வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

படத்தின் இயக்குனர் மைக்கேல் பே யை அனைவருக்கும் அத்தனை பரிச்சயம் இருக்குமா தெரியவில்லை. ஆர்மகெட்டான், பேட் பாய்ஸ் , பேர்ல் ஹார்பர் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் அவர். அவருக்கு இத்திரைப்படம் அல்வா சாப்பிடுவது போல் இருந்திருக்க வேண்டும். முழுக்க ரசித்து செய்திருக்கிறார். அவரது கிரியேட்டிவிட்டி படம் நெடுக அசத்தலாய் வெளிப்படுகிறது.

படத்தின் நடிப்பு குறித்து அதிகம் பேச இயலாது. படமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ரோபோட்டுகள் அருமையாக நடித்திருக்கின்றன. அதிலும் ஒருகாட்சியில் கண்களில் கண்ணீர் வர அழுது புரளும் ரோபோவின் நடிப்பு அட்டகாசம். தங்கப்பல் காமெடி ரோபோவின் வசனங்கள் வசனகர்த்தாவின் உழைப்புக்குச் சான்று. இரட்டை அர்த்த வசனங்கள் கூட படத்திலுண்டு.

படத்தின் ஓளிப்பதிவு அடேங்கப்பா.. ராக்கெட்டில் பறந்துகொண்டே படமாக்கியிருப்பார் போல. பளீர் பளீச் கலர்புல் கலாட்டா!

இப்படத்தின் மூலம் ஒரு விசயத்தை அமெரிக்கர்கள் உலகத்திற்கு தெரிவிக்க எண்ணுவதாய் இருந்தது. அது அவர்கள் நினைத்தால் உலகத்தை இரண்டே முக்கால் நிமிடத்தில் சாம்பலாக்கி பக்கத்து கிரகமான செவ்வாய்க்கு ஒரு பொட்டலத்தில் பார்சல் அனுப்பும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதே அந்த செய்தி. அத்தனை பலமான ஒரு தற்கால இராணுவமாக அமெரிக்க இராணுவம் காட்டப்படுகிறது. மற்றபடி மேலும் ஒரு அமெரிக்க பயம் இத்திரைப்படம்.

சும்மா ஜாலியாக இரண்டு மணிநேரம் பொழுதைக்கழிக்கலாம். சிரிக்கலாம் சிலிர்க்கலாம். கிராபிக்ஸ் குறித்த ஆர்வமுள்ளவர்கள் அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்ள ஒரு பாடபுத்தகமாக பயன்படுத்தவும் பார்க்கலாம்.

திரைத்தொழில்நுட்பத்தில் நாம் இன்னும் வேகமாய் முன்னேற வேண்டும் என்பதை உணரவாவது ஒருமுறை காணலாம்.

மற்றபடி டிரான்ஸ்பார்மர்ஸ் - தி ரிவன்ஜ் ஆப் தி பாலன்ஸ் -

சும்மா.. விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

13 July 2009

சும்மா டைம் பாஸ் மச்சி!





ஒரு குட்டித்தத்துவம் -

''பெண்களும் பிரச்சனைகளும் மணியும் ஓசையும் மாதிரி அடிக்கு ஏத்த மாதிரி ஓசை கேக்கும் '' -


BY அகில உலகப்புகழ் அதிஷானந்தா!


***************


எத்தனை நாள் ஆகிவிட்டது இப்படி ஒரு கிரிக்கெட் ஆட்டம் பார்த்து. கடந்த ஆறு மாதங்களாகவே தொடர்ச்சியான டி20 ஆட்டங்கள் ஒரு வித சலிப்பையும் கடுப்பையுமே தந்துகொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் சமீபத்தில் ஆஷஸ் தொடர் ஆரம்பமானது. முதல் டெஸ்ட் போட்டி நேற்றோடு முடிந்தது. மிக அருமையான ஆட்டம். ஐந்து நாளும் ஆராவாரம். ஆஸி வெற்றியின் விளிம்பை முத்தமிட்டு திரும்பியது. இங்கிலாந்து கடைசி பந்து வரை போராடி ஆட்டத்தை டிரா செய்தது. என்ன விறுவிறுப்பு. எத்தனை பொறுப்பான ஆட்ட முறை. எத்தனை நுணுக்கமான களப்பணிகள். எக்ஸலன்ட்.

டி20 தன் ஆட்ட அளவில் சிறந்ததாக இருந்தாலும் அது ஒரு விபச்சாரியிடம் செல்வதைப்போன்றதாகவே படுகிறது. உடனடி ஆறுதல். மற்றபடி டெஸ்ட் ஆட்டங்களே ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனின் முழுத்திறமையையும் வெளிக்கொணரும் மற்றும் அதீத ஆட்டத்திறனும் தேவைப்படுகிற ஒரு ஆட்டமாகவே கருதுகிறேன். டெஸ்ட் ஆட்டங்கள் மனைவியோடு ஆடுவதைப்போல. ஆடிக்கொண்டே இருக்க அதீத பொறுமையும் ஆற்றலும் திறமையும் தேவை. கொஞ்சம் பிசகினாலும் காலி.

ஆஸி அணியின் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தால் மிக எளிதாய் எந்த சுப்பனும் குப்பனும் முனியனும் சொல்லிவிடலாம். அந்த அணியின் மட்டமான பந்து வீச்சுதான் என்று. நம்மூரில் பல காலம் ஆடிய அதி அற்புத பந்து வீச்சாளர் அகார்கர் போலவே நான்கு பேரை வைத்திருக்கிறார் பாண்டிங். தேவையானபோது தேவைகளை தீர்க்கும் வார்ன் , மெக்ரா போன்றவர்கள் அல்ல அவர்கள். அதுவே பிரச்சனை. மற்றபடி மிக அருமையான ஆட்டம் அந்த முதல் டெஸ்ட். முடிந்தால் கட்டாயம் ஹைலைட்ஸ் பாருங்கள் நல்ல விறுவிறுப்பு.

இப்படி ஒரு டெஸ்ட் இங்கே நடக்க பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிரிலங்கா அந்த அணியை 90 ரன்களுக்குள் சுருட்டி வீசியது இன்னும் பிரமாதமாக இருந்தது. இன்னொரு பக்கம் டெஸ்ட் ஆட்டங்களில் சுமாரான பங்களாதேஷ் அணி வெஸ்ட் இன்டீசுக்கு இணையாக விளையாடிக்கொண்டிருக்கிறது.

டெஸ்ட்டுனா டெஸ்ட்டுதான்..

***************


பதிவுலக மக்களுக்காக ஒரு குட்டி வீடியோ (கடைசி இரண்டு பதிவுகளிலும் வீடியோ சேர்த்தமையால் இது ஹாட்ரிக் வீடியோ ) இதை பார்த்தும் சிரிக்கலாம். இந்த வீடியோவுக்கும் சமீபத்திய வலையுலக மக்களின் பிரச்சனைகளுக்கும் ஒரு எழவு கருமாந்திர தொடர்பும் இல்லை இல்லை இல்லை.



மிக நல்ல பிரிண்ட்டு. இத பாத்தாவது திருந்துங்க மக்கள்ஸ்.


*****************

சனிக்கிழமை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நமது அன்பு அண்ணன் சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ ஸ்டெப்புநீ படம் பார்த்து தமிழகத்தில் பலருக்கும் ஆண்மைக்குறைவு , விரைவீக்கம் , மூலம் , பௌத்திரம் முதலான பிரச்சனைகள் உருவானதாய் பல நேயர்களும் ( இனிமே வாசகர்கள்னு சொல்ல மாட்டேனாக்கும் ) கருத்து தெரிவித்திருந்தனர். முழுப்படத்தையும் பார்த்து மகிழ்ந்த அனைத்து எங்கள்குல சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

படத்திற்கு நடுவே சாம் ஆண்டர்சன் படம் குறித்து நிறைய கூறினார். அதில் முக்கியமானது.

''இந்த படம் நம்ம இயக்குனரோட 35 வருஷ கனவு லட்சியம் , 35 வருஷமா இந்த கதைய மனசுக்குள்ளயே வச்சிருந்து , அதுக்காக ரொம்ப கஸ்டப்பட்டு இந்த படத்த எடுத்து ரிலீஸ் பண்ணாரு.. படம் முழுக்க ஒவ்வொரு காட்சிலயும் அவரோட உழைப்ப நீங்க பாக்கலாம்.. ''

''அல்லேலுயா ''


*****************

கவிஞ்சர் தபூ சங்கர போன வாரம் ஒரு சூட்டிங்கில் சந்திக்க முடிஞ்சது. அவரோட கவிதை புக்குலாம் பாத்திருக்கேன். ( ஒன்லி பாத்திருக்கேன் ) . திடீர்னு இயக்குனர் ஆகிட்டாராம்.

''வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்'' பட சூட்டிங் எம்.ஜி.எம் ரிசார்ட்டில் நடந்துகொண்டிருந்தது.

படத்தின் ஹீரோ குங்கும்பபூவும் கொ.புறாவும் பட ஹீரோ ( பேரு தெரியல )

ஹீரோயின் யாரோ. (ரொம்ப சுமாரான பிகர்தான், ஸ்கிரீன்ல அழகா தெரிவாங்களோ என்னவோ )

மத்தபடி படத்தோட டைட்டில் ரொம்ப புடிச்சிருந்தது.

சரி இந்த பட டைட்டில ஒரு பொண்ணுகிட்ட சொன்னா என்ன சொல்வாங்கனு டிரைபண்ணி பார்த்தேன்.

அவங்க சொன்னாங்க.. போலீஸ்ல ஈவ்டீசிங்னு கம்ப்ளைன்ட் தருவேன்னு.

மீ த எஸ்கேப்பு.

**********************

சமீபத்தில் டுவிட்டரில்..

- நாரதர் கலகம் நன்மையில் முடியுமாமே?

-நாரதரா! யோவ் நீயே ஒரு நாரதர் தானய்யா?

-ஹலோ நான் சொல்றது கைல வீணைலாம் வச்சிட்டு குடுமி வச்சிருப்பாரே அந்த நாரதர்.. contd
நாரதர் நாராயணானு சண்டை மூட்டிட்டு போயிடுவாரு சிவபெருமான் பக்தன் டவுசர கழட்டிட்டு எல்லாம் என் திருவிளையாடல்ம்பாரு

-அட வீணை வச்சிருக்கறது சரஸ்வதிய்யா.. நாரதர் வச்சுருக்கறது வேற!

-ஹலோ அது பெரிய வீணை மடில வச்சு செய்றது! நாரதரோடது சின்ன வீணை கைல புடிச்சு செய்றது

-டிங்!

***********

இந்த வாரம் புதன் கிழமை என்ன விசேசம்?

சரியான பதில் அளிக்கும் முதல் பத்து நேயர்களுக்கு எனது பின்னவீனத்துவ புத்தகமான ''சரசு கொஞ்சம் உரசு '' உடனடியாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

பின்னூட்டத்தில் உங்க மெயில் ஐடியை தெரிவிக்கவும். அல்லது dhoniv@gmail.comக்கு ஒரு மடலை தட்டிவிடவும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


************

வர்ட்டா!

10 July 2009

அடிச்சுகிட்டு சாவுங்கடா(டி) !




முன்டிஸ்கி -


மக்களே இது இலச்சி மல ஆத்தா சத்தியமா முழுக்க முழுக்க காமடிப்பதிவு ( காம டி பதிவு அல்ல ) . அதனால் இது யார்மனதையும் புண்படுத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டதால் யாரும் மனம் புண்பட வேண்டாம். புண்பட்டாலும் இது என் வலைப்பூ இதில் என்ன கருமத்தை வேண்டுமானாலும் கிறுக்கும் உரிமையை கூகிளாண்டவர் இலவசமாய் இல்ல இல்ல சகாய விலையில் கொடுத்திருக்கிறார். தயவு செய்து பிரபல பதிவர்கள் பின்னூட்டமிடவேண்டாம். உங்கள் பின்னூட்டம் நிராகரிக்கப்படும்.

மற்றபடி தன்பதிவில் என்னை நல்லவர்னு சொன்ன தீபாவுக்கு நன்றி. நீங்க இவ்ளோ அப்பாவியா!

ரெண்டு நாள் கம்பேனி லீவு தீபா அதான் ஒன்னும் சொல்லலை நீங்க தப்பா நினைச்சிட்டீங்க நான் நல்லவன்லாம் கிடையாது.


**********************

இரண்டு நாள். இரண்டே நாள் ஊரில் இல்லை. அடங்கொக்காமக்கா பதிவுலகமே பற்றி எரிஞ்சுகிட்டு இருக்கு. நண்பர் நர்சிம் மேல தீபாவுக்கு என்ன கோபமோ ( இல்ல பிரபல பதிவர்கள் மேல என்ன கோபமோ... ) டமால்னு ஒரு காமெடி பதிவ போட்டுட்டாங்க. தீபா ஒரு காமெடி பீஸ் னு நான் நினைச்சிருந்தா அந்த பதிவையும் காமெடியா விட்டுரலாம். ஆனா அவங்க ஒரு சீரியஸ் பீஸாச்சே. அதுமில்லாம அதுல ஒரு பத்தில குறிப்பா பிரபல பதிவருங்கள பத்தி கிழிகிழினு கிழிஞ்சிருந்தாங்க.

அவ்வ்வ் என்ன கொடும சார் இதுனு அங்கனக்குள்ள போய் ஒரு பின்னூட்டம் போட்டு நம்ம கண்டனத்த போட்டாலும் போட்டேன். ஆளாளுக்கு என்னை திட்டிகிட்டுருந்தாங்க. அத விடுங்க நாம இன்னைக்கு நேத்தா இதையெல்லாம் பாக்கறோம். குத்துங்க எஜமான் குத்துங்கனு முதுக காட்டற பரம்பரயாச்சே. அதனால அத லூஸ்ல விட்டுட்டு சாம் ஆண்டர்சன் வீடியோ பாத்துட்டு குஜாலா ஊருக்கு போய்ட்டேன்.

போனமச்சான் திரும்பி வந்தான் கோமணத்தோடன்ற மாதிரி திரும்பி வந்து பாத்தா ரத்தபூமி ரத்தபிரபஞ்சமாகி கிடக்கு. லக்கிலுக்கத்தவிர மத்த எல்லாரும் இதை பத்தி பதிவு பின்னூட்டம் அது இதுலாம் போட்டு ஜாலியா என்சாய் பண்ணிருக்காங்க. இந்த வாரம் நர்சிம்மும் தீபாவும் பலபேர் போதைக்கு ஊறுகாயா யூஸாகிருக்காங்கனு தெரியுது. வாழ்க உங்கள் சேவை. அடிக்கடி இப்படி சண்டை போடுங்க நாசமாப்போங்க. WE WILL TAKE OUR STANDS AND ENJOY.

நர்சிம் மாதிரி ஆளுக்கு ( அவரும் என்னாட்டம் மொக்கைனு நினைக்கேன் .. என்ன நர்சிம் ஆர் யூ மொக்கை ஆர் எலக்கியவியாதி? ) இதெல்லாம் சாதாரணம். அவரு சண்டைனாலே அய்யோ சண்டைனு அரண்டு ஓடற அப்புராணி.

ஆனா தீபா மாதிரி ஒரு பொறுப்பான எழுத்துக்கு உரியவர் ஏன் தடாலடியா சட்டைய மடிச்சுவிட்டுட்டு சாரி சுடிதார மடிச்சுவிட்டுட்டு கோதாவில இறங்கி கும்மாங்குத்து குத்துனாங்கனு தெரியல. அது பத்தாதுனு ராப்னு ஒரு நல்லவங்க அவங்களுக்கு துணையா சந்தனமுல்லைனு மிகப்பெரிய நல்லவங்க.. நான்லாம் தப்பித்தவறிக்கூட அவங்க பதிவுப்பக்கம் போனதில்ல அவளோ நல்லவங்க.. ஏன்னா நம்ம என்னைக்கு நல்லதப்படிச்சோம் . அவங்க கூட கைல அரிவாள் கத்தி போன்ற படுபயங்கர ஆயுதங்களோட ஜூடா சண்டைக்கு வந்துட்டாங்கனு கேள்விப்பட்டேன்.

அடப்பாவி தமிழ் கூறும் நல்லுலகமே இப்படி மூன்று சாதுக்களை மிரளவைத்து சூடுப்பட்டுக்கொண்டீர்களே. இனி பெண்கள் நம்மை மதிப்பார்களா.. பின்னூட்டமிடுவார்களா.. அவர்களுக்கென்று தனிச்சங்கம் அமைத்துக்கொண்டு உங்களை நிராகரிக்க மாட்டார்களா.. என்னதான் பொண்ணுங்க கூட்டணிப்போட்டு நம்மள அடிச்சாலும் சில அறிவுஜீவி பசங்க 'ஏன்டா எல்லாரும் கூட்டமா அந்த அப்பிராணி பொண்ணுங்கள அடிக்கறீங்கனு' உங்களையும் ஒதுக்கி வக்க மாட்டாங்களா.. அதனால உங்களுக்கு ஏற்கனவே வர இரண்டே முக்கா பின்னூட்டமும் நூத்திநாலு ஹிட்டும் போய்டுமே... அறிவுகெட்ட ஆம்பளைங்களா!

உங்களச்சொல்லி பிரச்சனையில்ல.. பதிவுலக அரசியல் அப்படி..

எனிவே தேங்க்ஸ் தீபா,ராப்,சந்தனமுல்லை மற்றும் பலர் .. செம ஜாலியா இருந்துச்சு உங்க பைட்டு. அடிக்கடி இப்படி சண்டைப்போட்டு செத்து செத்து விளையாடலாம் வாங்க. நான் எடுத்துக்குடுக்கறேன் எங்கருந்து சண்டைய தொடங்கலாம்னு.

நர்சிம் யுவர் டைம் இஸ் வெரி வெரி பேட். ஞாயித்துகிழமை டிநகர் பக்கம் வாங்க தண்ணி அடிச்சு சூட்டைத்தணிப்போம்.

எப்படியோ எல்லாருக்கும் பொழுது போனா சரி! என்ன தீபா நான் சொல்றது!


******************

சந்தனமுல்லை ராப் மற்றும் தீபா அணியனரும் நர்சிம் கார்க்கி முரளிக்கண்ணன் அணியினரும் சண்டைப்போட்டு ரொம்ப டயர்டா இருப்பீங்க அதனால ரிலாக்ஸா இந்த வீடியோ பாத்து என்சாய் பண்ணுங்க.

இந்த வீடியோ கட்டாயம் உங்களை திருத்தும். தயவு செய்து முழுவீடியோவையும் பார்க்கவும். அனைத்து பதிவர்களும் கட்டாயம் ஒருமுறை பார்த்தாலும் சரி.

ஆனால் அண்ணன்தம்பியா தங்கச்சியா அதுவா இதுவா ஒன்னுக்குள்ள ஒன்னா கண்ணுக்குள்ள கண்ணா பழகிட்டு இப்படி அடிச்சிக்க கூடாது.

இப்போதைக்கு உங்களுக்குலாம் ஒரே வார்த்தைதான் ஒற்றுமையே உயர்வு. ( நாலு மாடு ஒரு சிங்கம் கதை நெட்டில் எங்கே தேடியும் கிடைக்கவில்லை.. அதனால் இந்த வீடியோவை இணைக்க வேண்டியாதகிவிட்டது. )

மற்றபடி என்னால்தான் தொடங்கியதாய் சொல்லப்படும் இந்த மகா மெகா யுத்தம் என்னோடு முடியட்டும் வாருங்கள் நண்பர்களே எல்லாருமே சேர்ந்து விக்ரமனின் இந்த கிளாஸிக் வீடியோ பாத்து பேதி வந்து செத்துப்போவோம்.







பின்டிஸ்கி -



மீண்டும் சொல்கிறேன் , இது ஒரு பக்கா காமடி பதிவு. உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றாலும் இது காமடி பதிவுதான். இலச்சி மல ஆத்தா சத்தியமாக மீண்டும் சொல்கிறேன் இது ஒரு காமடி பதிவுதான்.

பிரபல பதிவர்களின் பின்னூட்டம் மட்டுறுத்தப்படுவதால் , யார் பின்னூட்டம் வரவில்லையோ அவர் பிரபல பதிவராக அடுத்தப்பதிவில் அறிவிக்கப்படுவார். அல்லது நீங்களே புரிந்து கொள்ளலாம்.

**********

_ண்டிஸ்கி -

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

07 July 2009

பிரபல நடிகர் சாம் ஆண்டர்சன்!







யாரிந்த டெரர் ஹீரோ
அவர் நடித்த படம் யாருக்கு யாரோ
சாம் ஆண்டர்சன்
நீ ஒரு மைக்கேல் ஜாக்சன்
தமிழ் சினிமாவில் ஒளிவீசும் சன்
கட்டபொம்மனிடம் வட்டி கேட்டான் ஜாக்சன் துரை
வாங்கித்தந்தாயே நாய்க்கு பொரை
நீ செவ்வாயின் மர்லன் பிராண்டோ
அர்னால்டும் ஜாக்கிசானும் உன் பிரண்டோ
டவுசர் கிழிஞ்சாலும் குறையாது உன் ஸ்டைலு
அதைப் பார்த்து மயங்குமே அழகு மயிலு
கவுந்தடிச்சு எட்டி உதைப்பியே உன் காலால
ஊருக்குள்ள ஆயாலாம் சாவுது உன் படமென்னும் பால் ஆல


சாம் ஆண்டர்சன் இந்தப் பெயர் உங்களுக்கு அத்தனை பரிச்சயமில்லாததாக இருக்கலாம். அப்படித்தான் இருந்தேன் ஆறு கோடி தமிழர்களில் ஒருவனாய். இதெல்லாம் அவர் நடித்த அகில உலகப்புகழ் '' யாருக்கு யாரோ ஸ்டெப் நீ '' படம் பார்க்கும் வரை.

உலகசினிமாவே ஒரு நிமிடம் மூக்கில் விரல் வைத்து உள்ளே கைவிட்டு நோண்டி குடாய்ந்து பிரமித்துப் போன அத்திரைக்காவியம் தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் ஒரு உலக நாயகனைப்பெற்று தந்திருக்கிறது என்று.

என்ன பொடலங்கா ஜே.கே.ரித்திஷ் குமார். இவரது நடிப்பைப்பார்த்த பின் இனி ஜே.கே.ஆரின் மீதான என் மதிப்பு வெகுவாய் குறைந்து போனது. அதற்கான காரணம் அவரது ஸ்டைலா? அவரது சுமைலா? அல்லது அவரது எழிலான நடையா? ஆளை மயக்கும் உடையா? இப்படி ஒரு நாயகனைத்தானே இத்தனை காலமாய் தேடிக்கொண்டிருந்தோம்.

அடிக்கும் மின்னலும் அஞ்சும் கண்கள். பார்த்தாலே குமட்டும் சிரிப்பு ( குமட்டில் வரும் சிரிப்பு). ஹாலிவுட்டுக்கு ஒரு பிராட் பிட்டு. நீதானே எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் விட்டு.

சமீபகாலமாக இணையமெங்கும் இவர் பெயர்தான் மந்திரமாய் ஒலிக்கிறது.

இப்படி ஒரு ஸ்டாரை.. பிரபஞ்ச ஸ்டாரை.. விளக்கமாத்து நாரை ஏனோ வலையுலகம் வரவேற்கவில்லை.

இப்பதிவின் மூலம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறோம் ( ஏன்னா நாங்கள் தனி ஆள் அல்ல ) . இனி விஜய் அஜித் சூர்யா விக்ரம் எல்லாம் வேறு வேலை ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ளலாம். இவர்தான் தமிழ்சினிமாவின் நம்பிக்கை.

மற்றபடி இப்பதிவின் நோக்கம் இந்த வாரம் ஜீ தமிழ்த்தொலைக்காட்சியில் நமது சாம் ஆண்டர்சனின் ''யாருக்குள் யாரோ ஸ்டெப்நீ திரைப்படம் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பார்த்து பிள்ளை குட்டிகளோடு சாவுங்க..!

அவர் நடித்த படத்திலிருந்து காட்சிகளின் வீடியோ இணைப்பு. வீடியோ இணைப்பைப் பார்த்து மகிழ்ந்து ஜீடிவியில் முழுப்படமும் பாருங்க.

Statutory Warning : அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கவேண்டாம் உங்கள் வெடிச்சிரிப்பு உங்கள் வேலைக்கே வெடிவைக்கலாம்.







இந்த வீடியோவைப் பார்த்தும் நீங்கள் உயிரோடிருந்தால் ஓட்டும் பின்னூட்டமும் இட்டு நமது அகில உலக ஆஸ்கார் நாயகன் சாம் ஆண்டர்சன் தலைமை கழகத்தில் உறுப்பினராகலாம். அல்லது ஆயிரத்து ஒன்று சந்தா கட்டினால் அவரது அடுத்த படத்தை வீட்டிலேயே வந்து சக நடிக நடிகைகளுடன் நடித்துக் காட்டுவார் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.


இப்படிக்கு

வருங்கால முதல்வர் சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம்
நெதர்லாந்து

சத்தியமா நான் சாமியார்தான்டா!





மாநிலத்தையே கலக்கற மிகப்பெரிய அரசியல்வாதி அந்த ஆளு. அவர் ஒருமுறை நம்ம சாமியாரைப்பற்றி கேள்விப்பட்டு அடடே இப்படி ஒரு ஆளா.. உடனே அந்தாள பாக்கணுமே..

''டேய் தம்பீ இந்தா வா!..''

''இன்னாண்ணா... , யார்டா அந்த சாமீ .. பயங்கர டெரராமே அந்தாள பாக்கணும் ஏற்பாடு பண்ணுங்கோ.. ''

ஒரு நல்ல முகூர்த்த நாளில் சாமீயாரை சந்திக்க வந்தான் அந்த மிகப்பெரிய ரவுடி.

சாமியார் எப்போதும் போல புலித்தோலில் அமர்ந்து கொண்டு வரும் கஸ்டமர்களுக்கு... சாரிப்பா...... பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்.

அரசியல்வாதியின் வரிசை வந்தது. அ.வா உள்ளே நுழைய அவரோடு வந்திருந்த குண்டு குண்டு அடியாட்களை பார்த்து குருவுக்கு லைட்டாக உதறலாய் இருந்தது.

சிஷ்யனைப் பார்த்தார் . அவன் நினைப்பது அவரது ஞானக்கண்ணுக்கு தெரிந்தது.

சிஷ்யன் '' இன்னைக்கு வாயக்குடுத்து நல்லா வாங்கிக்க போறயா நீ..! ஐ ஜாலி குரு இன்னிக்கி நாஸ்திடா '' என நமுட்டு சிரிப்பு சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான்.

சிஷ்யனைப்பார்த்து குருவும் பயத்தோடு தெனாவெட்டாய் ஒரு சிரிப்பு சிரித்தார்.

அரசியல்வாதி குருவைப்பார்த்தான். அவனுக்கு குபீர் என இருந்தது. குருவின் முகத்தில் தெரிந்த ஒளியில் தேஜஸில் மிரண்டு போனான். அதுவும் குருவின் ஸ்டைலும் அழகையும் பார்த்து ஒரு நிமிடம் சுளீர் என இருந்தது.

தன்னைப்பார்த்து அரசியல்வாதி டெரராகிரான் என்பதை உணர்ந்தவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

''சாமீ இதுவரிக்கும் எனக்கு யார பாத்தும் இப்படி டகுலானதில்ல.. ஒன்ன பாக்க சொல்ல அப்பிடியே அடி வயிறு கலக்குதுப்பா.. இன்னாபா மேட்டரு.. நீகண்டி அரசியலுக்கு வந்த ஒரு பய ஒன் முன்னால நிக்க முடியாது போலக்கீதுப்பா.. '' என்றான் பவ்யமாய்.


''ஹாஹாஹாஹா.. '' அழகாக சிரித்தார் நமது டகில் சாமியார்.

''தெய்வீக சிரிப்புய்யா ஒனக்கு.. இன்னா மேட்டர் இது ஏன் ஒன்ன பாத்து எனக்கு டகில் ஆச்சு.. ''

''நீ ஒரு பொடியன்பா.. கொஞ்சம் அப்படி ஓரமா குந்திகினு இரு.. சொல்றேன்..''

அரசியல்வாதிக்கு லைட்டா கோபம் வந்தாலும் சாமியார் பவர்புல்லா இருப்பாரோனு ஒரு பயத்துல பேசாம போய் குந்திக்கினான்... சாரி உக்காந்துகிட்டான்.

நிறைய பேர் அவரை பார்த்து ஆசி வாங்கிக்கிட்டே இருந்தாங்க. அரசியல்வாதிக்கு லைட்டா இருந்த கோபம் அதிகமாகிட்டே இருந்துச்சு. சிஷ்யனுக்கு அதைபாக்க ஜாலியா இருந்துச்சு.

ஒரு வழியாக சாயங்காலம் ஆறு மணிக்கு யாரும் பக்தர்கள் இல்லாததால் அரசியல்வாதியை கூப்பிட்டார்..

''தம்பீ இப்படி வா.. ''

இன்னாது தம்பியா டேய் நீ கண்டி வெளிய வா... மவனே வாயகீயல்லாம் உடசிறேன்.. என்று மனதுக்குள் நினைத்தாலும் வெளிய கிகி என சிரித்தபடி முகத்தை வைத்துக்கொண்டு கையைக்கட்டிக்கொண்டு அருகில் சென்றான்.

''இன்னாத்துக்கு வெயிட் பண்ணிகினுக்கீறே..! ''

''சாமி உங்களான்ட ஒரு கொஸ்டீன் கேட்டனே..''

''ஓஓ அதுவா.. சரி வா அப்படிக்கா வெளிய நட்ந்துக்கினே பேசலாம்... '' என அழைத்துக்கொண்டு வெளியே நடந்தார்.


அது ஒரு பௌர்ணமி நாள். முழுநிலவு பளீர் என பெரிய ஸைஸ் பெட்ரமாக்ஸ் லைட்டு போல் எரிந்தது.

''தம்பீ , அங்க பாத்தீயா இரண்டு மரம் இருக்கா.. இது நான் பொறந்ததுலர்ந்து இருக்கு.. ஒன்னு நெட்டை இன்னொன்னு குட்டை.. ஆனா என்னைக்குமே அந்த குட்டை மரம் நெட்டை மரத்தப் பாத்து மெர்சலாகி .. நெட்டை மரம் ஒன்ன கண்டாலே எனக்கு மெர்லாக்கீதுனு சொன்னதே இல்ல.. இதுவரைக்கும் ரெண்டும் அப்படி யோசிச்சதுகூட இல்ல.. ஏன் தெரியுமா.. ''

''ஏன்னா மரம்லாம் எப்படி சாமீ கம்பேர் பண்ணிக்கும்.. ''

''அடங்கொக்கமக்கா ஒனக்கே நீ கேட்ட கேள்விக்கு விடை தெரிஞ்சிருக்கே.... ஒகே தம்பீ நாம இன்னொருக்கா சந்திப்போம்.. நான் அவசரமா இமயமலைக்குப் போறேன்.. ''


கதை அவ்ளோதான்.

****************

பிற்சேர்க்கை.

அரசியல்வாதி குழம்பிப்போய் பார்த்துக்கொண்டிருக்க.. ஓட்ட நடையாய் கிளம்பிய சாமீ ஆஸ்ரமத்தின் பின்வாசல் வழியாக தனது வேட்டியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு விழுந்தடித்து ஓடிக்கொண்டிருந்தார்.

****************

நன்றி - ஜென்கதைகள்

02 July 2009

நாடோடிகள் - தந்தைகளின் காவியம்!




''டேய் நீ அப்பா மாதிரி.... தான்! ஆனா..! என் பொண்ணுக்கு கஷ்டம்னு வந்தா உங்கிட்டயா வந்தா அப்பானு எங்கிட்டதானடா வந்தா! என்னடா பிரண்டு..! பெத்து வளத்த பொண்ணுக்கு என்ன வேணும்னு பெத்து வளத்தவன விட உங்களுக்கு என்னடா தெரியும்.. ''

நடுமண்டையில் 'நறுக்' என கொட்டியது போலிருந்தது அந்த வசனம். பெண்ணைப் பெற்ற பெரியவர்களுக்கு தெரியும் அதன் வலிமை.

அது காதல் படமா? இல்லை. நட்பு படமா? இல்லை. தந்தை சென்டிமென்ட் ? இல்லை. பின்ன?

சுப்ரமணியபுரம் சென்றவருடம் வெளியாகி பல மூத்த திரைப்பட ஆட்களின் மூக்கில் விரல் விட்டு ஆட்டிய திரைப்படம். சாரு தனது விமர்சனத்தில் அது ஒரு துரோகத்தின் காவியம் என குறிப்பிட்டிருந்தார். ஏனோ சசிக்குமார் நடித்த அடுத்தப் படமே நம்பிக்கைகளின் காவியமாய் ஆகிப்போனது தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதா தெரியவில்லை.

அது நம்பிக்கைகளின் திரைப்படம். வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையோடிருக்கும் நால்வரின் வாழ்வில் துவங்கும் படம். அடுத்த நிகழ்வில் நம்பி வந்த நண்பனின் காதல் பிரச்சனையில் , ஒருவன் காலை இழக்கிறான் , ஒருவன் காதை இழக்கிறான் . ஒருவன் காதலை இழக்கிறான். ( காது+கால்=காதல்! கவிதையோ!). வாழ்க்கையை தொலைக்கின்றனர். கிடைக்க வேண்டிய வேலை,லோன்,பாஸ்போர்ட் என எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றனர். மீண்டும் பீனிக்ஸாய் எழுகின்றனர். அச்சமயத்தில் சேர்த்து வைத்த காதல் ஜோடிகள் பிரிந்து விட... மீதி திரையில் காணலாம்.

கொஞ்சம் பிசகினாலும் விக்ரமன் டைப் படமாக ஆகியிருக்கக்கூடிய ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற தேர்ந்த நடிகர்களையும் , திரைக்கு பின்னால் உழைக்கும் ஒரு அசாத்திய அணியையும் உருவாக்கிக்கொண்டு காவியம் படைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.


இது ஏன் தந்தைகளின் காவியம்?


எத்தனை விதத்தந்தைகள். ஏதோ பிரச்சனையில் வீட்டில் இழவு விழுந்து கிடக்கையிலும் ஊரார் தூற்ற ''என் பையன் எது பண்ணிருந்தாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்யா '' என்று மார்த்தட்டும் ஒரு தந்தை.

இரண்டாம் மனைவிமுன் அதட்டினாலும் உள்ளுக்குள் பாசத்தை விதைத்துவிட்டு ஊமையாய்ப் போனவர். மகன் தன் காது செவிடாகிவிட்டது இனி நீ சொல்றது எனக்கு கேட்காது என அத்தந்தையை பார்த்து கேட்க உடைந்துபோய் அழும் ஒரு தந்தை.

பிரச்சனையில் தன் காலிழந்து வீட்டிற்குள் முடங்கிப்போனவனிடம்.. ''தம்பீ நம்ம பரம்பரைக்கே கால்லதாம்யா ஏதோ பிரச்சனை '' என நம்பிக்கையாய் ஒரு தந்தை.

காதலுக்கு தூது போய்.. ஏய் அவ போறா இப்ப (சைக்கிள்) பெல் அடி , ரிசல்ட் தெரியும் என ஐடியா தருவதாகட்டும் .. சரி நீங்க பேசிட்டு இருங்க என புறவாசலில் போய் அமர்ந்து கொண்டு வலியையும் வேதனையையும் அடக்கி கொள்வதாகட்டும் அடடே போட வைத்த ஒரு தந்தை!

தூக்கில் தொங்கிருவேன்.. செத்துப் போயிருவேன்.. அவனை மறந்துட்டேனு சொல்லு என அடம்பிடிக்கும் ஒரு சராசரி தந்தை. ஐய்யோ என் மானம் போச்சே என் பொண்ணே எனக்கு துரோகம் பண்ணிட்டா என வீதியெல்லாம் கத்தி ஓடி வரும் ஒரு தந்தை!.

மூன்று பெண்கள் மூவருமே காதலிக்கின்றனர். மூன்று காதலுமே வேறு வேறு மாதிரியானவை. ஒன்றில் முறைமாமன் . மற்றொன்றில் அண்ணனின் நண்பன் . இன்னுமொன்றில் பணக்கார யாரோவைக்காதலிக்கும் மகள். இந்த மூன்று காதலையும் மூன்று விதமாய் அணுகும் மூன்று தந்தைகள். பளீர்.

இப்படி தந்தைகளின் பல பரிமாணங்கள். நம் தமிழ்சினிமா அம்மாக்களின் ஆயிரம் விதங்களை காட்டியிருக்கிறது. ஏனோ தந்தைகள் எப்போதும் ஒன்று தன் பிள்ளைக்கு நம்பிக்கையூட்டபவனாகவோ அல்லது டம்மி பீசாகவோதான் காட்டப்பட்டிருக்கின்றனர். இத்திரைப்படத்தின் தந்தைகள் தமிழ்சினிமாவிற்கு மிகப் புதியவர்கள். அது போக இப்படத்தில் அம்மாக்களுக்கு அதிகமாய் வேலை இல்லை முறைப்பதும் சிரிப்பதுமாய் வந்து போகின்றனர் பெரும்பாலும். அதனால் முழுக்க தந்தைகளின் ராஜ்ஜியம்.

இப்படத்தின் நாயகர்கள் அந்த தந்தைகள்தாம். தந்தைகளின் பலவித உணர்வுகளை சில காட்சிகளில் ( வசனம் கூட இல்லாமல் )செவுட்டில் அறைந்தது போல் சொல்லிய சமுத்திரக்கனி கட்டாயம் 'அப்பாப்பிள்ளை'யாகத்தான் இருக்க வேண்டும்.

நட்புதான் இப்படத்தின் அச்சாணி என்றாலும் , மொத்த வண்டியே தந்தைகளாய் ஆகிப்போகின்றனர். நண்பர்களை விடவும் அவர்களது தந்தைகள் ஏனோ மனதில் ஆழமாய் அதிகமான பாதிப்பை உண்டாக்கிச்செல்கின்றனர்.

பொதுவில் எல்லா தந்தைகளுமே இப்படித்தான். எல்லா தந்தைகளுக்குள்ளும் மேற்ச்சொன்ன அனைத்துமே அடக்கம். சூழலும் நிகழ்வுகளும் விதவிதமான தந்தைகளை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

படத்தின் அடுத்த நாயகன் இசை - சுந்தர்.சி.பாபு. கில்லி திரைப்படத்தில் சரியான இடத்தில் அர்ஜூனரு வில்லு என்றொரு பாட்டு இடம்பெற்றிருக்கும். அதே பாணியில் இப்படத்திலும் ஒரு சேஸிங் காட்சி . கில்லியை காட்டிலும் நூறு மடங்கு வலிமையான பாடல் அது. வெகு நாட்களுக்குப் சங்கர் மகாதேவன் சம்போ சிவசம்போ என மந்திரம் போட்டு மந்திரித்து விடுகிறார். இடைவேளை முடிந்து வெளியில் வரும் பலரது முகங்களும் அதற்கான சாட்சியாய் மந்திரித்து விட்ட கோழிகள் போல சிகரெட்டை திருப்பி பற்றவைத்துக்கொண்டு அலைகின்றனர். பிண்ணனியில் பிழந்திருக்கிறார் சுந்தர்.சி.பாபு.

****************

கல்லூரி திரைப்படத்தில் வந்த அந்த பையன். அடேங்கப்பா என்ன ஒரு நடிப்பு. பார்க்கும் பெண்களையெல்லாம் டாவடிப்பதாகட்டும். குடித்துவிட்டு பேசிபேசி உதைவாங்குவதாகட்டும். கிளைமாக்ஸில் டேய் கர்ணா அவங்க போட்டுருவோம்டா.. என் வீறு கொண்டு கதறுவதாகட்டும் . அதிலும் காது கேட்காமல் போன பின் ( திடீரென காது கேட்காமல் போனவராய் நடிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் ) அசத்தலப்பா!

வசந்த் அன் கோ புகழ் வசந்த் விஜய் , பார்க்க சென்னை 28 ல் பார்த்த அந்த மெக்கானிக் பையன் போல் இல்லாமல் அந்த பையனின் அண்ணன் போல மிடுக்காய் ஒரு மாதிரி அவரை வேறுமாதிரி இயக்குனர் செதுக்கியிருப்பது தெரிகிறது. ஒரு காட்சியில் ( காலிலழந்த நிலையில் கட்டிலில் கிடக்கையில் காதலிக்கு ஆறுதல் கூறும் போது ) மட்டும் சொதப்பல். மற்றபடி நிறைவு.

சசிக்குமார். ஆடுகிறார். மிரட்டுகிறார். ரொமான்ஸ் பண்ணுகிறார். காமெடிக்கிறார் . பாடல் ஒன்று பாடியதாய் கேள்வி. மிகையில்லா நடிப்பு. தேவையில்லாத பில்டப் இல்லை. ஆனால் மிரட்டலான பாடி லேங்வேஜ் மற்றும் வாய்ஸ் மாடுலேசன். என்ன குரல் இவருக்கு. படத்தில் காட்சிக்கேற்ப அவரது குரல் மாறுவது சிறப்பு. ஆனாலும் சசிக்குமார் நடிக்கப்போய்விடக்கூடாது என இறைவனை வேண்டுவோம். இன்னொரு சுப்ரமணியபுரம் வேண்டுமே! சசிக்குமாரை நடிகராக்கி அழகு பார்த்து அவரை முழுநேர நடிகராக்க முயற்சித்த ச.கனிக்கு ஒரு குட்டு!. மற்றபடி சசிக்குமார் இளம்ஹீரோக்களுக்கு போட்டியாக இருப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாது.

இவர்களுக்கெல்லாம் நடுவில் தேவையில்லாமல் மாட்டிக்கொண்டு உதைவாங்கும் கஞ்சாகருப்பு. வரும் காட்சிகளிலெல்லாம் மொத்தமாய் திரையை முழுங்கி விடுகிறார். தூள்!

இவர்கள் தவிர சசிக்குமாரின் பாட்டியாக நடித்த அந்த 'அழகு' பாட்டி ( நாயகிகளை விட அழகாய் இருக்கிறார் அந்த பாட்டி ) முதல் வசனமே இல்லாமல் வந்து போகும் பைக் நண்பன் வரை அனைவருமே அட போட வைத்திருக்கின்றனர்.

**********

கேமரா = ராக்கெட் வேகம்
வசனங்கள் = ஷார்ப்

**********

ரொம்ப நாளைக்குப் பின் ஹரிஹரன் குரலில் ஒரு மெலோடி. கேட்க கேட்க பிடிக்கும் போலிருந்தது.

**********

இன்டெர்வெல்லிற்கு பின் வரும் காட்சிகளில் காமெடி கலந்த சோகம் . வக்கிரம்? அல்லது PATHOS வகையோ?

**********

மொத்தமாய் படத்தின் மிகப்பெரிய பலம் இயக்கம். சமுத்திரக்கனியின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிவது அழகு. ஒரு காட்சியில் ஒருவன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயல்கிறான். அவனை வெளியே எடுத்து காப்பற்ற முயல்கின்றனர். தலைகீழாய் போட்டு உலுக்கும் போது அவன் கைகளில் பாதி கழண்ட ஈரமான ஒரு வாட்ச்சு..எத்தனை நுணுக்கம். அட!

நெறஞ்ச மனசு சமுத்திரக்கனியா இது? அடப்போங்கடா இத்தன நாளா அந்தாள சீரியல் எடுக்கவிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.

குறையெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும்.


**********

நாடோடிகள் - இன்னொருவாட்டி பாக்கணும்.