Pages

30 July 2008

குருவி ஒரு கிளைமாக்ஸ் காமெடி + ஒரு முக்கிய பிரச்சனை

ஒரு மெகா சைஸ் காமெடி :

குருவினு ஒரு படம் கொஞ்ச நாள் முன்னால வந்துச்சு , சூப்பர் படம் என்ன பாட்டு என்ன பைட்டு , அது ஏனோ நம்ம பயலுவளுக்கு புடிக்கல ,

புடிக்கலணா சும்மா இருக்க வேண்டியதுதான அந்த படத்த பத்தி கலாய் கலாய்ணு கலாச்சு கிழிச்சு பிச்சி பிராண்டி துவைச்சு போட்ட கிழிஞ்ச ஜட்டி மாதிரி ஆக்கிணாங்க ,

அப்பலாம் நான் விஜய நினைச்சு கண்ணுல பட்ட துரும்பாட்டம் துடிதுடிச்சு போயிருக்கேன் , வருங்கால ஒரிசா கவர்னர் ஜே.கே.ரித்திஷ் குமார் அப்புறம் தமிழக விடிவெள்ளி இளம் நாயகன் அதிரடி ஸ்டார் சாம் ஆண்டர்சன் ரேஞ்சுக்கு விஜய கலாய்ச்சு ,

வெந்த ________ ல எதையோ சொருகின மாதிரி கதறி கண்ணீர் வடிச்சிருக்கேன் , இப்பதான் கொஞ்ச நாளா தசாவதாரம் வந்ததுலருந்து கொஞ்ச கொஞ்சமா எல்லாரும் மறந்திருந்தாங்க , 2 நாள் முன்னால சைட்டடிக்கலாம்ணு சத்யம் தியேட்டர் பக்கமா பட்டிகாட்டான் எதையோ பாத்த மாதிரி மார்க்கமா போற வர பொண்ணுங்கள தேமேணு பாக்கறப்பதான் அந்த மெகா சைஸ் போஸ்டர் என் கண்ணுல படணுமா!!!

இத்தனைக்கும் அந்த கெரகம் புடிச்ச தியேட்டர்ல ஒரு ஷோ கூட அந்த படம் ஓடலை . இந்த போஸ்டர் அஜித் ரசிகர்கள் செஞ்ச சதியா இருக்கமோ....

படத்துமேல கிளிக்கி அந்த கொடுமைய நீங்களே பாருங்க....... :-(((


ஒரு மெகா சைஸ் பிரச்சனை :

சென்னையில் மெகா சைஸ் விளம்பர ஹோர்டிங்குகள் வைக்க சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகராட்சி தடை விதித்திருந்தது , ஆனால் அந்த தடை விதிக்கப்பட்ட காலத்திலிருந்தே அதை சற்றும் பொறுட்படுத்தாமல் சத்யம் திரையரங்க நிர்வாகம் தொடர்ந்து தனது விளம்பர ஹோர்டிங்குகளை வைத்து கொண்டுதான் வந்திருக்கிறது , இதற்காக இவர்கள் ஏதும் சிறப்பு அனுமதி பெற்றார்களா என்பது தெரியவில்லை . அல்லது சென்னை மாநகராட்சி இதுவரை இந்த விளம்பர ஹோர்டிங்குகளை பார்க்க வில்லையா என்பதும் தெரியவில்லை .

இந்த விளம்பர ஹோர்டிங்குகள் நகரின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதாலும் , காட்சி மாசு (visual pollution ) ஏற்படுத்துவதாகவும் இருப்பதாலும் , வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் இருப்பதாலுமே தடை விதிக்கப்பட்டது , இதை சற்றும் பொருட்படுத்தாமல் சத்யம் திரையரங்கம் மட்டுமல்லாது , பல முக்கிய சாலைகளில் அமைந்துள்ள சங்கம் , அபிராமி போன்ற திரையரங்குகளும் மெகா சைஸ் ஹோர்டிங்குகளை இன்னும் வைக்கப்பட்டுள்ளது வருத்தத்தை அளிப்பதுடன் இது பல விபத்துகளுக்கு வழி வகுக்கும் என்பது நிதர்சனம் .

காட்சி மாசினை குறித்தும் அதன் தீங்குகளை குறித்தும் அறிந்து கொள்ள


சில்க்,ஷகிலா,நமீதா மற்றும் கிருஷ்ணன்பிள்ளை
''ஏன்னா , எப்பண்ணா வருவேள் , சித்த வந்துட்டு போங்கோணா , ப்ளீஸ்ணா!!! '' காட்டுத்தனமாய் கதறினாள் சில்லு .


''ஏன்டிமா , கொஞ்சம் பொருத்துக்க படாதா !!! நேக்கு கொஞ்சம் வேலை இருக்குடி!! வந்துடறேன்டிமா '' இவளுக்கு இதுவே வேலையா போயிடுத்து , கொஞ்சம் கூட ரெஸ்டே இல்ல , என்ன மனுசன்னு நினைச்சாளா இல்லை வேறெதும்னா?


வணக்கம்ணா நான் சீதாபதி ஸார்ட்டா "சீது"னு கூப்பிடுவா , இப்ப என்ன கூப்பட்டாளே அவ என்னோட ஆத்துக்காரி சரியான குடைச்சல் , ஏன்தான் கட்டிண்டமோனு நான் அழாத நாள் இல்லை , நான் பத்து வருஷமா நம்ம கிருஷ்ணப்பிள்ளை அலைஸ் கிட்டு மாமாகிட்ட வேலை பார்த்தேன் , நல்ல மனுசன் , அறிவாளி , விட்டிருந்தா இன்னொரு அப்துல் கலாமா வர வேண்டியவர் , அவர பாத்தா வீ எஸ் ராகவணாட்டமா கம்பீரமா இருப்பார்!!!!!


அவருக்கு எல்லாமே நான்தான் தெரியுமோ!!

ஏன்னு கேக்கறேளா , அவருக்கும் எனக்கும் அப்படி ஒரு உறவு , அவராண்டை போயி கேட்டு பாருங்கோ என்ன பத்தி , பத்தி பத்தியா புகழ்வார் , ஏன்னா அவரும் நானும் 25 வருஷப்பழக்கம் .


அப்ப எனக்கு 6 வயசிருக்கும் அப்ப கிட்டு மாமா எங்க பக்கத்தாத்துலணா இருந்தார் , நான் சிறுவர் மலர் படிக்கறதுக்கா அவர் வீட்டாண்டை போவேன் , அப்படியே ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ் ஆகிட்டோம் அப்ப அவருக்கு 30 வயசு .

மாமா கட்டை பிரம்மச்சாரி, சரியான அப்பிராணி , அவரும் நானும் முத முத வெளிய போனது அப்ப புதுசா வந்த ஜம்பு படத்துக்கு , அவருக்கு ராஜ்கோகிலானா உசிரு , அந்த காலத்து கர்ணன் படங்கள்ள வக்கிற கேமிரா ஏங்கிள பாக்கிறதுக்குன்னே போறேன்டானு சொல்வார் .


எனக்கு அந்த கேமிரா ஆங்கிள் பத்தி அப்ப புரியலை ஆனா இப்பதான் புரியறது , மாமாவுக்கு ஏன் ராஜ்கோகிலாவ மன்னிக்கனும் கேமிரா ஆங்கிள்னா பிடிச்சதுனு . அதும் அந்தம்மா நடிச்ச ரிவால்வர் ரீட்டா படத்த ஒரே நாள்ல 4 ஷோவும் பாத்து தியேட்டர் காரனையே மிரல வச்சவரு,

அவருக்கு தொழில்னா ஆராய்ச்சிதான் , எதையாவது எதையோடையோ கலக்கின்டே இருப்பார் , என்ன மாமா இதுலாம்னு கேட்டா , பாருடா ஒரு நா என் பேரு பேப்பர்ல வரும் நேக்கு நோபல் பரிசு கிடைச்சிடுத்துனு , நேக்கு அதலாம் புரியாது , ஏதாவது எடுபிடி வேலை செய்ய போயி அப்படியே அவரோடை இருந்து நானும் கொஞ்சம் கொஞ்சம் கத்துண்டு பியூசி முடிச்சுண்டு அவரோட அஸிஸ்டெண்ட் ஆகிட்டேன் .


ராஜ்கோகிலா படங்கள் ( அந்தம்மா ரிடையர்டு ஆனப்பறம் )சில காலமா வரமா இருந்தப்ப மாமா பித்து பிடிச்சுண்டு அவா படத்தை வச்சுண்டு பைத்தியமாட்டம் புழம்பிட்டு ஆராய்ச்சி கூட பண்ணாம லூசாட்டம் சுத்திடுருந்தார் .


அப்பதான் சில்க் சுமிதானு ஒரு புயல் மாமா வாழ்க்கைல வசந்தமாட்டமா வீசுச்சு , மறுபடியும் வேதாளம் முருங்கை மரமேறின மாதிரி அவருக்கு மறுபடியும் வாழ்க்கைல ஒரு பிடிப்பு ஒரு துடிப்பு வந்து ஒட்டிணுடுத்து.

அதுக்கப்பறம் மாமா மறுபடியும் பம்பரமாட்டாம் சுழண்டு சுழண்டு வேலை பண்ண ஆரம்பிச்சார் , அப்ப வந்து சில்க் சில்க் சில்க் படத்த 50 வாட்டியாவது பாத்திருப்பார் , நான் போன ஜென்மத்தில என்ன பாவம் செஞ்சேணோ நானும் அந்த கருமத்தை , எத்தனை வாட்டினு சொன்னேன் , ம்ம் 50 வாட்டி பாத்து தொலைய வேண்டி இருந்துது .


என்னண்ணா பண்ண சொல்றேள் , வவ்வாலாண்டை ஜோலி பாத்த தலைகீழா தொங்கித்தான பாத்தாகணும் , அப்படித்தான் வேண்டா வெறுப்பா பாக்க ஆரம்பிச்சேன் , சில்க்குக்காக தன் உயிரையும் தர தயாராயிருந்தார் .

மூன்றாம்பிறை படத்துல நடிச்சதுக்காக சிலுக்குக்கு தேசிய விருது கிடைக்கும்ணு எதிர்பார்த்த ஒரே இந்தியர் அவரு மட்டுந்தாண்ணா , சிலுக்க ஒருநா பாக்க போயி அந்தம்மா குடிச்ச காபி கப்ப வீட்டில கொண்டாந்து வச்சிண்டு அவரு விட்ட அலம்பல பாத்து நேக்கு அதாலயே கிழத்த அடிச்சி கொன்னுடலாமாணு தோணித்து அப்படி ஒரு அலம்பல்


அவருக்கு முதல் பொண்டாட்டி வேலைதான் ஊரே பத்தி எரிஞ்சாலும் இவரு மாத்திரம் அமைதியா ஹைட்ரோ குளோரிக் ஆசிட்ட சின்தெடிக் ரப்பரோட இணைச்சு வச்சு கும்மாளம் அடிச்சுண்டிருப்பார் .


இவரு பாட்டுக்கு எதையாவது பண்ணின்டே இருப்பாரு , நேக்கு வேலைவெட்டி இருக்காது , நானும் எத்தன நாழிதான் தேமேனி பாத்தின்டுருப்பேன் , என்னை ஆத்துக்கும் போக விடமாட்டார் , எனக்கு அப்பல்லாம் எரிச்சலாய் வரும் , பேசாமா கிழவனுக்கு மூக்கு பொடியில விஷம் வச்சு கொன்னுடலாமானு !!!

என்ன செய்றது நேக்கு போலிஸ்னாலே பயம் , அப்படியே அடக்கிப்பேன் டவுசர கிழிச்சிண்டு வர கோவத்தை , என்னடா லோகம்னு நொந்துண்டு விட்டத்த பப்பரப்பானு பாத்துண்டு உக்காந்துப்பேன் .

இப்படியே அறுந்து போன பட்டமாட்டமா போயிட்டிருந்த மாமாவோட வாழ்க்கைல மறுபடியும் கொதிக்கிற காபிய காதுல ஊத்தினா மாதிரி ஆகும்னு நினைக்கவே இல்லை ,

ஆமான்ணா

திடீர்னு ஒருநா சில்க்கு செத்துண்டானு தலைய மழிச்சிண்டு வந்து நிக்கறார் .
என்ன மாமா என்னாச்சுனு கேட்டா சில்க்கு செத்துட்டா அவளை என் ஆத்துகாரியாட்டமாதான் நினைச்சிண்டிருந்தேன்னாரு பைத்தியக்கார மனுசன் , அவரோட வாழ்க்கைல 15 வருஷம் வண்டில போடுவாளே ஆஆஆன் இன்ஜின் ஆயில் அதாட்டம் அவருக்கு சில்க்கு .

மனுசன் வாழ்க்கை மறுபடியும் முருங்கைமரத்துல ஏறிண்ட வேதளமாட்டம் ஆகிடுத்து , கிழவன் தேவதாசட்டம் பெரிய தாடி வளத்துண்டு பாக்க பரங்கிமலை சித்தராட்டாமா தத்துவம் பேசிண்டு ஊருக்குள்ள புதுசா முளைச்ச சாமியாராட்டம் ஆகிட்டார் . நேக்கும் 6 மாசமா வேலை இல்லைணு , எங்க காஞ்சிபுரம் தாத்தா வீட்டுக்கு போயிட்டேன்.


கிழவர் உயிரோடதான் இருக்காரா இல்ல போயிடுச்சானு பாக்கலாம்னு வந்து பாத்தா ஆசை அஜித்குமாராட்டம் பளபளன்னு ஷேவிங்கலாம் பண்ணின்டு தலைமயிருக்குலாம் கலர் பூசிண்டு அலம்பல் பண்ணின்டு திரியறது கிழம் , என்ன ஏதுன்னு விசாரிச்சா , பரங்கிமலை சாமியார் ஷகிலாவை பாத்ததும் பரவசநிலை அடைஞ்சிடுத்துனு.

கிழம் ஷகிலா படம் ஒண்ணு விடமா பாத்துரும் அதும் பாத்தபடத்தையே எத்தனை தடவை பாத்துதுனு கணக்கு வழக்கில்லாம , ஊருக்குள்ள ஒரு தியேட்டர் விடாது , நேக்கு எப்படியோ கிழம் மறுபடியும் பார்முக்கு வந்துடுச்சேனு மனசுக்குள்ள குபுக்குனு குதுகலம் குந்திடுத்து , இருக்காதா பின்ன அவரோட ஜோலி பாத்தா ஒரு நாளைக்கு ஆயிரம் இரண்டாயிரம் தேறும் அதான் வேறோன்னுமில்லை.

அதோட ஆராய்ச்சியும் மறுபடியும் ஆரம்பிச்சிடுத்து , முதமுத அவரு குளோனிங்ல ஒரு கொசுவ உருவாக்கினார் , மாமாக்கு சந்தோசம் தாங்கல , வாடா சீது கொண்டாடலாம்னு என்னை கூட்டிண்டு போனார் மாமா , நான்கூட மாமா எதோ ட்ரீட் வைக்கப்போறாருனு பாத்தா ,


கிழம் போயும் போயும் அந்த கிழத்தோட அகண்ட பாரதத்தின் அழகு மங்கை ஷகிலாவோட தங்கத்தோணி படத்த ஊருக்கு ஒருக்குபுறமா இருக்குற அந்த கண்றாவி தியேட்டர்ல முத வரிசைல உக்காரவச்சி என்னோட ஆசைல கபடி விளையாண்டுடுத்து கிராதகன் .

ஷகிலா படம் வரத்து குறைய ஆரம்பிச்சிது , மாமாக்கும் ஷகிலா மேல சலிப்பு வந்துடுத்து , இந்த முறை முழுமூச்சா ஆராய்ச்சில இறங்கிட்டார் , அவரோட அடுத்த லச்சியம் சில்க்கு சுமிதாவோட குளோனிங் அதுக்காக கிழம் முன்னாலயே சேகரிச்சு வச்சிருந்த அந்த பொம்மனாட்டியோட மயிரை வச்சிண்டு ஆராய்ச்சில இறங்கிடுத்து .


விசுவாமித்திர முனிவர் தவமிருந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணின்டு இருந்த மாமா வாழ்க்கைல அகலிகை மாதிரி வந்து தொலைஞ்சா நமிதா , என்ன பேரோ !! மாமா மனசு அலை பாஞ்சுது , மாமா கொஞ்ச கொஞ்சமா வழுக்கி கொஞ்ச கொஞ்சமா வழுக்கி திடீர்னு ஒருநா மொத்தாமா நமிதாவோட அந்த சின்ன................................

என்ன வோய் முறைக்கிறேள் !!

அந்த சின்ன சிரிப்புல சிதைஞ்சு போயிட்டாருனு சொல்ல வந்தேன்ண்ணா , மாமா வாழ்க்கைல வீசின கடைசி வசந்தம் நமிதாதான் , நமிதா படம்ணா மாமாக்கு உசிராச்சு , நமிதான்ற அந்த மந்திரச்சொல் அவரோட இருண்ட வாழ்க்கை அகண்ட விளக்காச்சு .

ஆனாலும் மாமாவோட பரந்து விரிஞ்ச விசாலமான மனசில நிரந்தரமா துண்டு போட்டு இடம் பிடிச்சதென்னமோ சிலுக்குதான் , அதனால நமிதா பத்தின ஆசைகளுக்கு மத்தியிலயும் தன்னோட சிலுக்கு குளோனிங் ஆராய்ச்சிய விடாம பிடிச்சிண்டு , ராப்பகல் பாக்காமா கண்முழிச்சு கூர்க்காவாட்டம் காவல் காத்து ஒருநா முழுசா சிலுக்க படைச்சிருச்சு கிழம் .


நேக்கு நம்பவே முடியல அந்த மெஷினுக்குள்ளருந்து முழுசா பதினெட்டு வயசுல ஒடம்புல ஒட்டுதுணி இல்லாம ஐயோ சாமி நேக்கு வெக்கமாருக்கு , இந்த கிழவனுக்குள்ளயும் என்னமோ இருந்துருக்கு பாரேன்னு நினைச்சிண்டேன்.

ஆனா பாருங்கோ அந்த சிலுக்கு பொண்ண அந்த பெரிய சைஸு குடுவைக்குள்ளருந்து வெளிய எடுத்து குளிப்பாட்டி உடம்புல துணிமாட்டி உக்காரவச்சா லூசு மாதிரி சிரிச்சுண்டே இருந்துச்சு ,


நேக்கு உடம்புக்குள்ள குலுகுலுனு குச்சி ஐஸ குமட்டுல வச்ச மாதிரி இருந்துச்சி , மாமா சொன்னார் அந்த பொண்ணு மண்டைல ஒன்னுமில்ல அந்த பொண்ணுக்கு சில விசயங்கள புரோகிராம் பண்ணி மூளைல ஏத்தணும் அப்பதான் அவளால நம்மலாட்டமா பேச முடியும்னு சொன்னார் , நேக்கு ஒண்ணும் புரியலை .


அந்த பொண்ணை மல்லாக்க படுக்க வச்சிண்டு அது மண்டைல உடம்பிலெல்லாம் வயருல்லாம் சொருகி அதை கம்யூட்டர்ல இணைச்சுண்டு மாமா என்னாண்டை , அவரு சொல்றதை டைப்படிக்க சொன்னார் .

நானும் அடிச்சேன் அடிச்சேன் அடிச்சேன் மூணு நாளு விடாம ,கண்ணு முழிச்சு கை தேயறவரைக்கும் அடிச்சேன் .

மயக்கத்திலருந்த அந்த மர்ம மங்கை மண்டைலருந்த வயர பிடுங்க சொன்னாரு , சொல்லிட்டு அடுத்த நாள் விடியகாலை அஞ்சு மணிக்கு வந்துட்றா சீதுனு கடிஞ்சார் , நானும் மாடு மாதிரி மண்டைய ஆட்டிண்டு அடுத்த நாள் அங்க போனா, தலைல கைய வச்சிண்டு மோடிமஸ்தான் குரங்காட்டம் உங்காந்துருக்கார் , என்ன மாமானா நீயே போயி பாருண்றார் .


நானும் தைரியத்தை வரவழைச்சிண்டு உள்ள போயி பாக்கறேன் , அந்த சிலுக்கு பொண்ணு என்ன பாத்து கண்ண்டிச்சிண்டு என்னாண்டை வந்து மாமா என்ன மாமா அப்படி பாக்கறேள் நான்ந்தான் உங்க ஆத்துக்காரி நோக்கு ஞாயபகமில்லயானு கேக்கறா, நேக்கு மனசுக்குள்ள ஒரு மாதிரி ஜிலோமாவா இருந்துச்சு , அவளை கூட்டிண்டு மாமாவாண்டை போனா மாமா என் கண்ணையே ஒன்கிட்ட ஒப்படைக்கிறேன் இதுல ஆனந்த கண்ணீரத்தான் பாக்கணும்னு எங்க கைய சேத்து வச்சிண்டு கிட்டு மாமா நாமெல்லாம் போக முடியாத இடத்துக்கு போயிட்டாரு ,

'' என்னது செத்து போயிட்டாரா ''

ஐயோ அப்படிலாம் பேசதேள் பாவம் கிட்டு மாமா எங்கயோ தேசாந்திரம் போயிட்டார் , கிட்டு மாமாக்கு என்ன சோகமோ அந்த ஆண்டவனுக்குதான் தெரியும் , போறப்ப ஒண்ணு சொன்னார் அதாவது கிடைக்கறது கிடைக்காது, கிடைக்காம இருக்கறதுதான் கிடைக்கும்னு எனக்கு ஒண்ணும் புரியலை .

இதோ இப்ப அங்க ஏக்கமா என்னை கூப்பிடறாளே என் ஆத்துக்காரி அவதான் அந்த சிலுக்கு பொண்ணு , அவரோட சொத்துக்களையும் எனக்கே குடுத்துட்டாரா , நல்ல சேமமா இருக்கேன் , வந்ததிலருந்து ஒண்ணும் பேசாம இருக்கேளே , காப்பி சாப்பிடறேளா ? '' ஏன்டி சில்லுமா சாருக்கு காபி குடு '' நான் என்ன சொன்னாலும் அப்படியே கேப்பா கீ குடுத்த பொம்மையாட்டம் , உங்கள கொல்ல சொன்னாக்கூட , வேணா ஒருவாட்டி சொல்லட்டுமா..........
வினோவுக்கு பீதியில் விழிபிதுங்கியது '' மிஸ்டர் சீதாபதி அப்படி என்னதான் ஆச்சி அந்த பொண்ணுக்கு ஏன் உங்கள பாத்து புருஷன்னு சொன்னாங்க ''

அதுவா அது ரகசியம்ணா , இருந்தாலும் உங்களாண்டை மட்டும் சொல்றேன் , தயவு பண்ணி இத பத்திரிக்கைல போட்றாதேள் , சில்லு மண்டைல வயர போட்டு அவளுக்கு எல்லாத்தையும் புரோகிராம் பண்ணறப்போ நான்தான எல்லாத்தையும் டைப் பண்ணேன் அப்பதான் அவரு பேரு வரவேண்டிய இடத்தில எல்லாம் என் பேர டைப் பண்ணிட்டேன் , நான் இத வேணும்ணு பண்ணலை , அவ மண்டைல ஓரு முறை பண்ண புரோகிராம் மறுபடியும் மாத்த முடியாதாக்கும் .

அவா அவா பிராப்தம் , அன்னைக்கு நான் தெரியாம பண்ண தப்பு இப்ப என்ன இப்படியும் கிட்டு மாமாவ அப்படியும் வச்சிருக்கு . இதெல்லாம் உங்க பத்திரிக்கைல போடமாட்டேளே , பின்னால என்னோட பரஸ்பர உத்தமமான தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும் அதான்.......


இப்படியாக சீதாபதியின் வாழ்க்கை சுபமாய் இல்லற சுகத்தோடு இன்பமாய் தொடர்ந்தது .

கிருஷ்ணப்பிள்ளை இமயமலையில் நயன்தாராவை ரஜினிகாந்துடன் இருவரும் தியானத்தில் இருந்த போது பார்த்து அந்த மாதின் மீது மையல் கொண்ட பிரும்ம ராக்ஷனைப்போல அவளுக்காய் திரும்பி சென்னை வந்து தனது புதிய ஆராய்ச்சியை ஆரம்பித்தார் இம்முறை குளோனிங்கில் சில்க் அல்ல நயன்தாரா....... கிழவனின் வாழ்க்கையில் தென்றல் அடிக்கடி வீசுவது போல மறுபடியும் காட்டுத்தனமாய் வீசத்தொடங்கியது .

29 July 2008

கிரிக்கெட்டாயணம் - பிளாஸ்டிக் பால காண்டம்இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி ஆனால் அது என்றுமே ஏழைகளை எட்டததாலோ என்னவோ எளிமையான கிரிக்கெட் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவி விட்டது .

கிரிக்கெட் விளையாட ஒரு பந்தும் பேட்டும் இருந்தால் போதும் வேறேதும் தேவையில்லை ,

அது முதன்முதலாய் புகுந்தது ஆங்கிலேயனின் வழியாய் இருந்தாலும் இன்று இந்தியாவின் உயிர் விளையாட்டாய் மாறி நிற்கிறது . நம்மில் கிரிக்கெட் விளையாடாத பார்க்காத ஏன் கிரிக்கெட் தெரியாதவர் மிகச்சிலரே . கிரிக்கெட்டும் ஒரு வகை யுத்தம் தான் , யுத்தங்களில் குண்டுகள் எறியப்படுகின்றன கிரிக்கெட்டில் பந்துகள் எறியப்படுகின்றன . இரண்டிலுமே வெற்றி பலசாலிக்கே .பிளாஸ்டிக் பால காண்டம் :


அறிமுகப்படலம் :கோவையின் மிக அருகில் இருக்கும் கிராமம் எங்களது செல்வபுரம் . அப்போது எனக்கு ஒன்பது வயது , அப்போதெல்லாம் நாங்கள் தொட்டு விளையாட்டு, ஒளிஞ்சு விளையாட்டு , பம்பரம் , கோலி,டீஞ்சி என ஒலிம்பிக்கில் சேர்க்க முடியாத உன்னத விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டிருந்த அற்புதமான மீட்க இயலாத காலம் , அது வரைக்கும் எங்களுக்கு கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு இருப்பதும் , அது பிற்காலத்தில் எங்களையெல்லாம் அடிமைப்படுத்த போகிறதென்றும் தெரியாது , முதன்முதலாக கிரிக்கெட்டை எங்களூருக்கு கொண்டு வந்தவர் எங்களூர் கிரிக்கெட் ஆசான் கார்த்திகேயன் , அவர்தான் முதன்முதலில் கிரிக்கெட்டை எங்களுக்கு அறிமுகம் செய்தார் , அப்போது அவருக்கு வயது 12 , அவர் ஒரு முறை சென்னப்பட்டினத்திற்கு சென்று வந்து கற்றுக்கொண்ட ஆட்டமது , ஒரு உடைந்த கட்டையை வைத்துக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பாலையும் வைத்து அவரும் அவரது தம்பி சிவானும் கிரிக்கெட் ஆடுவதை பார்த்து நாங்கள் மிரண்டு போய் பார்த்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையிலே , எங்களையும் அவர் ஆட அழைத்தார் , ஒல்லிக்குச்சி நோபால் வினோத் ,குட்டையான தயிர்வடை மஞ்சு, கட்டையான கறிக்கடை கார்த்தி,கருப்புநிற அக்னி,மனோஜ்,நெட்டையான தமிழ்,குண்டு கோகுல், கமல்,ரவி,முட்டை கார்த்தி , முஸ்தபா,லெனின்,வினி என சிகரெட் அட்டைகள் பொருக்கி டீஞ்சி விளையாடிக் கொண்டிருந்த எங்கள் ஊரின் பிற்காலத்தில் உருவாகப் போகும் ஒரு இளம் கிரிக்கெட் அணி அன்றுதான் பேட்டையும் பந்தையும் தொட்டு பார்த்தது .பயிற்சிப்படலம் :கரிபடர்ந்த கட்டை பேட்டும் ஒரு பச்சை நிற பிளாஸ்டிக் பாலும்தான் எங்களது முதல் கிரிக்கெட் பயணத்தை தொடங்க உதவியது . கார்த்தி அண்ணன் எங்களுக்கு கிரிக்கெட்டின் அடிச்சுவடிகளை கற்று தந்தார் , அவருடன் தினமும் விளையாட மாலைகளில் அவர் வீட்டு வாசலில் நானும் பிறரும் தவமாய் தவமிருந்தோம் , அவர் வீட்டு சந்து எங்களுடை முதல் மைதானம் , எங்களுக்கு நாள்பட நாள்பட கிரிக்கெட் நுணுக்கங்கள் கைவந்தன . அவர் வீட்டு முற்றம் பவுண்டரியானது , அவர் வீட்டு காம்பவுண்டு சுவர் ஸ்டெம்பாணது.


எங்களுருக்கு அப்போதுதான் டிவியின் வரவு ஏற்பட்டிருந்த காலம் , டிவிகார கவுண்டர் வீட்டில் நாங்கள் கிரிக்கெட்டை முதன் முதலில் பார்த்தோம் . கிரிக்கெட் ஒளிபரப்பாகும் நாட்களில் நாங்கள் பரபரப்பானோம் , நாங்கள் ஆடும் கிரிக்கெட்டுக்கும் அவர்கள் ஆடும் கிரிக்கெட்டுக்கும் ஆயிரம் வித்தியாசங்களை பட்டியலிட்டான் அக்கினி, பிறகு அதை குறித்து மாலை வேளைகளில் எங்கள் தெரு அண்ணாச்சிகடை வாசலில் வரிசையாய் அமர்ந்து அதை எப்படி நமக்கேற்றவாரு எளிமை படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிப்போம் , அண்ணாச்சிகடைக்காரர் பையன் சக்தி அண்ணன் எங்கள் குழுவுக்கு ஆலோசகர் அல்லது ஐடியா மணி ஆனார் , அவருக்கு வலதுகால் போலியோவால் சூம்பி விட்டதால் அவர் ஐடியா மட்டும் தருவார் , அவரால் விளையாட இயலவில்லை அதனால் தானோ என்னவோ அவருக்கு கிரிக்கெட் மிகபிடித்து போனது .முதல் பந்து :கார்த்தி அண்ணன் சென்னைக்கு கல்லூரி படிக்க போய்விட்டார் ,அவரோடு அவர் குடும்பமும் பட்டிணத்திற்க் குடி பெயர்ந்தது , நாலு வருடமாய் அவருடன் கிரிக்கெட் விளையாடும் இந்த வருங்கால இந்தியாவின் தூண்கள் இனி என்ன செய்ய போகிறதோ என்ற அச்சம் எங்களுக்குள் ஏற்பட்டது . நெட்டை தமிழ் யோசனை கூறினான் , நாங்கள் தனியாக ஆட ஆரம்பிக்க முடிவெடுத்தோம் , எங்கு விளையாடுவது , பந்துக்கும் பேட்டுக்கும் , என்ன செய்வது , ஒரு கிரிக்கெட் அணி அன்றுதான் உருவானது முட்டை கார்த்தி அன்றுதான் கேப்டனானான் , எங்களுள் அவன்தான் கொஞ்சம் உயரமானவன் , எல்லாரிடமும் பணம் வசூலித்தான் நானும் என் பங்குக்கு என் முப்பது இந்திய பைசாக்களை தந்தேன் , கோகுல் வீட்டிலிருந்து அடுப்பெறிக்கும் கட்டையை களவாடி வந்தான் பேட் தயாரானது , எங்களால் மொத்தமாய் 3 ரூபாயே பந்திற்காக சேர்க்க முடிந்தது , அனைவரும் கோவைக்கு நடைபயணமாய் கிளம்பி ஒரு கடையில் பிளாஸ்டிக் பால் வாங்க முடிவானது . அங்கு போய்தான் தெரிந்தது பந்து 2 ரூபாய் என்று மீதி பணத்தை எங்களது அணி நிதியாக சக்தி அண்ணாவிடம் சேர்க்கப்பட்டது . பந்து என்ன நிறத்தில் வாங்குஙது என எங்கள் வாக்குவாதம் முற்றி கடைசியில் கடைக்காரர் தலைமையில் சாட் பூட் த்ரீ போடப்பட்டு கோகுல் தம்பி கமல் ஆசைப்பட்ட வெளிர் மஞ்சள் நிறம் முடிவானது .

பந்தும் பேட்டும் தயாரானது , விளையாட இடம் வேண்டுமே , இட்லி வினோ ரோட்டில் ஆட இட்லிமாதிரி ஐடியா கொடுத்தான் , மின்விளக்கு கம்பம் ஸ்டம்பானது , விளையாட்டு துவங்கியது . இரண்டு அணிகள் பிரிக்கப்பட்டு ஆன் சைடில் மட்டுமை ரன்கள் என்பது போல ஆட ஆரம்பித்தோம் , ஆப் சைடில் சக்தி அண்ணன் கடை இருந்தது . ரோட்டின் குருக்கே ஒடி ரன் எடுக்க வேண்டும் , வண்டிகள் வரும்போது ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும் , பிறகு மீண்டும் தொடரும் , பந்து சாக்கடையில் விழுந்து விட்டால் அடித்தவன்தான் அதிலிருங்கி எடுக்க வேண்டும் ,யார் வீட்டிற்குள்ளாவது அடித்தால் அடித்தவன் அவுட், அவனே பந்தையும் கேட்டு வாங்கி வர வேண்டும் . சாக்கடையில் பந்து விழுந்தால் கழுவ தண்ணீர் அவனவன் வீட்டிலிருந்து எடுத்து வந்து கழுவ வேண்டும் . எங்கள் வயது பெண்கள் ( சரி குழந்தைகள் ) அவரவர் வீட்டு வாசலிலும் நின்று எங்கள் ஆட்டத்தை பார்த்து சிரிப்பது எங்களுக்கு ஒரு புது வித இனம் புரியாத மகிழ்ச்சியை கொடுத்தது , என்ன அந்த பெண்கள் முன்னால் சாக்கடையில் இறங்கி பந்தை எடுப்பது மட்டும்தான் கொஞ்சம் இல்லை இல்லை மிக கேவலமாக இருந்தது , அது ஏன் என்று புரியவில்லை எனினும் பிற்காலத்தில் அது புரிந்தது .டிரையல்ஸ் யுத்தம் :


இப்படியாக ஒரு நாள் கிரிக்கெட் விளையாடுகையில் முதல் பந்தில் மஞ்சு அவுட்டாக , அவனோ அது டிரையல்ஸ் ( ஆட்டம் ஆரம்பிக்குமுன் சும்மா வீசி பார்ப்பது ) என்றும் தான் அவுட்டில்லை என்றும் வாதிட்டான் , அவனணி அம்பயர் அடுத்து பேட் செய்ய ஆசைப்பட்டு அவனுக்கு அவுட் கொடுத்து விட என்ணணி வீரர்கள் வாய்வாதம் செய்ய கடைசியில் ச்சண்டை முடிந்ததென்னவோ அடிதடியில் கார்த்தி அக்கினியை சாக்கடையில் தள்ளி விட அவன் அங்கிருந்த கல்லை அவனை நோக்கி வீச கல் சரியாக அந்த வழியே வந்த என் தந்தையின் மண்டையை பதம் பார்க்க , அவர் தலையில் பொல பொலவென குறுதி காட்டாறு போல பாய்த்தோடியது , நான் அதிர்ச்சியில் உறைந்து அப்பாவை நோக்கி நடக்க மற்றவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைந்துவிட்டனர் .


எனக்கு வீட்டில் உபசரிப்பு பலமாய் கிடைத்தது , அப்பாவோ எங்கள் மீது பரிதாபப்பட்டு எங்களுக்காய் அம்மாவிடம் பரிந்து பேச அப்பா எனக்கு முதன்முதலாய் பரமபிதாவை போல காட்சியளித்தார் .


ஆனால் ரோட்டில் நாங்கள் ஆடும் ஆட்டம் அதோடு நின்று விடும் என எண்ணிய எங்கள் வீட்டு எதிரிகளின் எண்ணம் ஈடேறவில்லை , கோகுல் களத்தில் இறங்கினான் முதல் ஆளாய் அக்கினி என்னிடம் மன்னிப்பு கேட்டான் , முட்டை கார்த்தி படைகளை திரட்டினான் , அருங்கோண வடிவ 20 பைசா சுண்டப்பட(டாஸ்) மீண்டும் அடுத்த யுத்தம் ஆரம்பமானது . பிளாஸ்டிக் பந்து யுத்தம் .


28 July 2008

தமிழ்மணத்தில் கலக்கல் பகுதி : நிர்வாகிகளுக்கு நன்றி


இன்று நம் பதிவர்களினூடே பல எழுத்தாளர்களும் மறைமுகமாக உருவாகி வரும் ஒரு சூழல் நிலவி வருகிறது , இது போன்ற வேளையில் இப்புதிய பதிவர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நம் தமிழ்மணம் , பதிவர் புத்தகங்கள் எனும் புதிய பகுதியை துவக்கியுள்ளனர் , அப்பகுதியில் இப்போதைக்கு 3 புத்தகங்கள் குறித்த விபரங்களும் அதைப்பற்றி மற்ற பதிவர்களின் கருத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளன , இனி வரும் நாட்களில் இது போல பல பதிவர்களும் எழுத்தாளர்களாக வளரும் சூழல் நிலவும் என்பதே அனைவரது நம்பிக்கையும் . இன்றைய எழுத்தாளர்கள் பதிவர்களை மிகவும் இழிவாக நினைக்கும் இக்காலக்கட்டத்தில் நம் பதிவர்களில் இருந்தும் பல மிகச்சிறந்த எழுத்தாளர்கள் உருவாகி வருவது பதிவுலகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை காட்டுவதாகவே கருதுகிறேன் .
இந்த புதிய பகுதியை தமிழ்மணத்தில் இணைத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும் அதற்கு காரணமான சக பதிவர் நண்பர்களுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .

26 July 2008

முதல் டெஸ்ட்டில் இந்தியாவை தகர்த்த இலங்கை அணி


இலங்கையில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கஸ் மற்றும் 238 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமாக தோற்றது . இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி தரும் தோல்வியாக இது அமைந்துள்ளது .

முதலில் ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்கசில் 6 விக்கெட் இழப்பிற்கு 600 ரன்களை குவித்தது , தொடர்ந்து ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்கஸில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களையே எடுத்து பாலோ ஆன் செய்தது , தனது இரண்டாவது இன்னிங்கஸை தொடங்கிய இந்திய அணி எதிர்பார்த்தது போல 133 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்கஸ் தோல்வியை எட்டியது .
அந்த அணியின் முரளிதரன் மற்றும் மெண்டிஸின் சிறப்பான பந்து வீச்சு இலங்கை அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது .

சுழற் பந்து வீச்சில் வல்லவரான இந்திய அணியினர் கடந்த 10 வருடங்களாகவே அந்த தகுதியை இழந்து வருவதே இத்தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது .

166 ஓவர்கள் பேட் செய்த இலங்கை அணியின் 6 விக்கெட்டுகளை மட்டுமே இந்திய அணியினரால் எடுக்க முடிந்ததும் , கும்ப்ளே போன்ற மூத்த வீரர் ஒரு விக்கெட்டை கூட எடுக்காததும் , 144 ஓவர்கள் மட்டுமே வீசிய இலங்கை அணியினர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் நமது அணியின் பந்துவீச்சை கேள்விக்குறியாக்குகிறது .

இலங்கை அணியின் 4 பேட்ஸ்மென்கள் சதத்தை கடந்த ஒரு ஆடுகளத்தில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து ஒரு அரை சதத்தை மட்டுமே நமது அணியினரால் எடுக்க முடிந்திருப்பது , இந்திய அணியின் பேட்டிங்கையும் கேள்விக்குள்ளாக்குகிறது .

இது இந்திய அணியின் 3வது மிகப்பெரிய தோல்வியாகும் , இதற்கு முன் இந்திய அணி 1974,1958 ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் மே.இந்திய தீவு அணிகளிடம் 336,258 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

இந்த தோல்விக்கு ஒட்டு மொத்த இந்திய அணியின் மெத்தனமான ஆட்டமுறையே காரணமென வல்லுனர்கள் கருதுகின்றனர் . இன்னும் சிலர் 20-20 ஆட்டத்தின் பாதிப்பு இதுவெனவும் கூறப்படுகிறது .

எது எப்படி இருப்பினும் இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான தோல்வியே என்பது நிதர்சனம் .

_____________________________________________________________________


இலங்கையின் வெற்றிக்கு வித்திட்ட முத்தையா முரளிதரன் மற்றும் தனது அற்புத சுழலில் இந்திய அணியை மூழ்கடித்த அஜந்தா மெண்டிஸுக்கும் வாழ்த்துக்கள் .

19 July 2008

இளமையில் கொல்..... : அறிவியல் சிறுகதை .அந்த அரசுவிபச்சாரவிடுதியின் சுற்றுசுவரின் கிழக்கு பகுதியில் , பான்பராக் கரையும் , சிறுநீர் தடமும் , உபயாகித்த ஆணுறைகளின் குவியல்களினூடே பயணிக்கும் கரை படிந்த சுவர்களின் எல்லையில் இருக்கும் அந்த அதிரகசிய அரசாங்க புத்தக்கடையினை அடைவது அத்தனை சுலபமல்ல .

ஜெக்யூ அங்குதான் ஓட்டமாய் நடந்து கொண்டிருந்தான் அந்த கடையை நோக்கி , அவனது பதினைந்துவயது , பயத்தில் பிட்யூட்டரி சுரப்பிக்கு வேலை தந்து கொண்டிருந்தது , குற்ற ஒழிப்பு படையின் கண்ணில் சிக்கினால் , முதல்முறையாதலால் வலதுகாலின் கட்டைவிரல் மட்டுமே துண்டிக்கப்படுமென்பது அவனுக்கு தெரியாமலில்லை , அந்த புத்தகங்கள் மீதான அவனது ஆர்வம் அவனை இதோ இந்த அளவுக்கு தன் கட்டை விரலையும் பணயம் வைக்குமளவுக்கு தைரியம் தந்திருக்கிறது . அப்புத்தகங்கள் அவனுள் செய்துவிட்ட மாற்றங்கள் அவனை எதற்கும் துணிந்தவனாக்கியிருந்தது , அப்புத்தகங்கள் அவனது வயதையும் மீறிய விடயங்கள் குறித்த தேடலின் தொடக்கமாய் , புதிய உலகத்தின் வாசலாய் , அவனிதுவரை அறிந்திடாத இன்ப துன்பங்கள் பாச நேசங்கள் உறவு பிரிவுகள் சொர்க்க நரகங்கள் என அவனது ஆழ்மனத்தின் அலைவரிசையினூடே விரிவதாய் இருந்தது .''அண்ணா!! நான் கேட்ருந்த புத்தகம் வந்துடுச்சாங்கண்ணா '' தயங்கினான் ஜெக்யூ ,


'' வா, ஜெ!! இன்னும் வரலயே தம்பி , உன்னோட குடிமை எண் எங்கிட்ட இருக்குப்பா , அந்த எண் சரியா பாரு !! சுழியம் சுழியம் ஏழு எட்டு ஆறு ஏழு எட்டு ஆறு ஆறு ஆறு ஆறு !! அதுதானே !! ''


''ஆமானா , இன்னொரு சுழியம் சேர்த்துக்கோங்கண்ணா!! உயர்குடிமை மக்களுக்கு ஒரு சுழியம் கூட்டிருக்காங்கணா , உங்களுக்கு தெரியாதா , முந்தாநாளுதான் நம்ம தினா மின்னொளி செய்திகள்ல வந்துச்சே நீங்க படிக்கல ''


''எங்க தம்பீ , வரவர வியாபாரம் செமையா படுத்திருச்சு , ஏற்கனவே தடை பண்ண புத்தக எண்ணிக்கையே லட்சத்தத் தாண்டும் இப்போ இன்னும் மூணாயிரம் புத்தகத்த தடை பண்ணிட்டாங்க , புத்தகம் விக்க அரசாங்கம் குடுத்துருக்கற இடத்த பார்த்தல்ல , இந்த இடத்துக்கு எவன் வருவான் , அதுவும் இப்பல்லாம் எவன் படிக்கிறான் , அவன் அவனுக்கு அரசாங்க பார்ல தண்ணி அடிக்கவும் விடுதில விபச்சாரிகளோட ................. அதுக்குமே நேரம் சரியா இருக்கு , இந்த ஈனபிழைப்புக்கு நடுவுல எங்க தம்பி மத்த விசயத்த கவனிக்க ''


'' ம்ம் , அண்ணா , ஷங்கி ஒரு புக் கேட்டாணாமே ''


''அது மூணு நாளைக்குள்ள வந்துடும்பா , நீ ரொம்ப நேரம் இங்க இருக்காத , அந்த குற்ற ஒழிப்பு கபோதிங்க வந்துட்டா , உனக்குமட்டுமில்ல எனக்கும் சேர்த்துதான் தண்டனை , தயவு பண்ணி கிளம்பிருங்க தம்பி !! , உங்க நல்லதுக்குதான் சொல்றேன் ''


'' சரினா , என்னோட புக்கும் ஷங்கியோட புக்கும் வந்ததும் என்னோட குடிமை எண்ணுக்கு , எப்பவும் போல உங்களுக்கு பேதினு சேதி அனுப்புங்கண்ணா '' ,

நாட்டின் அனைவரது குடிமை எண் மூலமாய் அரசாங்கம் அவரவருக்கு வரும் சேதிகள் , தகவல்கள் , தத்தமது ஒளிப்பேழையின் மூலம் யாருடன் என்ன உரையாடினாலும் , என எல்லாமே கண்காணிப்பது சில தடைசெய்யப்பட்ட சொற்கள் பறிமாற்றம் கூட பிரச்சனைதான் எனபதும் ஜெக்யூவிற்கு நன்றாக தெரியும் அதனால்தான் இப்படி ஒரு விசேட ஏற்பாடு , பேசி முடித்து கவலைரேகைகள் முகத்திலோட வீட்டை நோக்கி நடக்கலானான் .

ராகவன் அதிபர் நைவத்தின் 100 அடி உயர சிலையின் பின்னால் மறைந்து கொண்டு தேசியக்கொடியிலிருந்து இருநூறாவது அடியில் தனது டைட்டானிய துளைப்பான் துப்பாக்கியை குறிபார்த்து கொண்டிருந்தான் . அம்முறை அந்த அராஜக அதிபரை கொன்றேயாக வேண்டும் .


ஒ.மா.இ நாடு (ஒருங்கிணைந்த மாநிலங்களின் இந்தியா ) தனது நூறாவது சுதந்திர தினத்தை அபரிமிதமாய் உலகத்தின் வல்லரசாய் அதனதிபர் நைவத்தின் சர்வாதிகார ஆட்சியில் கொண்டாடி கொண்டிருந்தது . நூறாவது முறையாக சரித்திர புகழ்வாய்ந்த தில்லியின் செங்கோட்டையில் ஒமாஇ நாட்டின் அதிபர் நைவத் மின்னல் குண்டுதுளைக்காத டைட்டானிய கவசமணிந்து நாட்டின் கொடியை கொடிக்கு ஆயிரத்தி ஐநூறு அடி தூரம் தள்ளி நிற்கும் சிறுநீர் காரில் அமர்ந்தபடியே ஒரு மைக்ரோ ரிமோட்டில் தன் குரலால் ஆணையிட தேசியக்கொடியும் எப்போதும் போல பட்டொளி வீசி பறந்தது . கொடியேற்றதிற்கு பின் காரை விட்டு இறங்காமல் அப்படியே தனது வீட்டிற்கு கிளம்பலானார் . அவரை எப்படியாவது கொன்றுவிட எண்ணி இருபத்தைந்தாவது முறையும் தோல்வியடைந்துவிட்ட ராக்ஸூம் கிருஷூம் விதியை நொந்தபடி அங்கிருந்து தங்களது அதிவேக இரு சக்கர நீர்உருளியை கிளப்பி மீண்டும் தங்களது இயக்க முகாமை நோக்கி பயணத்தை தொடங்கினர் .

'' எங்கடா , போயிருந்த? ''


''ஷங்கி வீட்டுக்குப்பா , ''


அவன் அப்பாவின் கையிலிருந்த ஒளிபேழையில் உள்ளீடாய் வருகின்ற ரத்தழுத்த உண்மைகண்டறியும் மென்பொருள் '' பொய் பொய்'' என அலறியது .


அவன் அப்பாவின் பிணவாடை வீசும் இதுவரை அவனை எப்போதும் அடித்திடாத கைகள் அவன் கன்னங்களில் முத்திரைபதிக்க ஜெக்யூ ''அம்மா அம்மா'' என்று அலறினான் .


அவனப்பா ஒமாஇ யின் அரசாங்க விவசாய சாலையில் சிறைச்சாலையின் மரணதண்டனை குற்றவாளிகளின் உரமாக்கப்பட்ட உடல் கூழை அள்ளிவந்து தனது பணியிடத்தில் சேர்க்கும் வேலை , ஷங்கியின் அப்பாவின் மேற்பார்வையில் தினக்கூலிக்கு பணியாற்றுகிறார் . ஜெக்யூவிற்கு அந்த வேலையை அவனப்பா செய்வது இப்போதெல்லாம் பிடிப்பதில்லை .'' சரி விடுங்க , இதென்ன இன்னைக்கு நேத்தா முகத்த தொங்க போட்டுகிட்டு வரீங்க ''


''இல்லை தலைவரே , நாங்க சரியாதான் திட்டம் போட்டோம் , ஆனா அவன் காரவிட்டு இறங்கவே இல்ல ''


'' சரி இனிமே இந்த வேலைக்கு நீங்க சரியா வரமாட்டிங்க, நான் வேற ஆள பாத்துக்கறேன், இந்த பண்டில போயி கடைக்கு சப்ளைபண்ணிட்டு , பணத்த வாங்கிட்டு வந்துடு , உங்களோட போலி குடிமை அட்டைய எடுத்துகிட்டிங்கள்ள ?!!'' , தலையை ஆமாம் என்பது போல ஆட்டியபடி பண்டலை தூக்கிக் கொண்டு இருவரும் கிளம்பினர் .


இஒஇ (இந்திய ஒருமைப்பாட்டு இயக்கம் ) ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகிறது , ஆரம்பிக்கபட்ட நாளிலிருந்து இதுவரை நாற்பது மிகப்பெரிய குண்டுவெடிப்புகள் , அறுபது வங்கி கொள்ளைகள், இருநூருக்கும் மேற்பட்ட மனித வெடிகுண்டு கொலைகள் என பல்வேறு சட்டவிரோத சம்பவங்களும் அரசாங்கத்திற்கு கண்டுபிடிக்க இயலாத தொல்லையாகவே இருந்தது . பள்ளி மாணவர்கள் பலரையும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புத்தகங்களை மலிவு விலையில் கொடுத்து மூளைச்சலவை செய்து இயக்கத்தின் பல்வேறு வேலைகளுக்கும் பயன்படுத்தினர் . இளம் மூளைகளை சலவைசெய்வது மிக சுலபமாக இருந்தது அந்த இயக்கத்தின் தலைவனுக்கு .


ஒளிப்பேழை ஒலி எழுப்பியது ஜெக்யூ அதை பார்த்து தன் மூளையால் கட்டளையிட அதன் உள்ளிருந்து வந்த புத்தக்கடைகாரனின் ஒளி பிம்பம்


'' வணக்கம் ஜெக்யூ , எனக்கு பேதி '' என்று கூறி மீண்டும் அந்த ஒளிப்பேழையின் உள்ளே விருட்டென்று ஓடி மறைந்து கொண்டது .தன் ஒளிப்பேழையில் ஷங்கியை அழைத்தான் .


ஜெக்யூவினப்பா வாங்கி தந்த தனது புதிய அதிவேக சூரிய ஒளி மின்னுருளியை முடுக்க அது அந்த அரசாங்க விபச்சார விடுதியின் மூத்திர சந்தில் போய் நின்றது .'' தோழர்களே , இந்த நாள் நம் இயக்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள் , சிதறுண்டு கிடக்கும் நாம் நம் பாரத தேசத்தின் பழம்பெருமையையும் பண்பாட்டையும் பேணிகாப்போம் , அதற்கு இந்த ஓமாஇ ஒழிந்து இந்திய தேசம் உருவாக வேண்டும் , நமக்கு தேவையான உதவிகளை தர நம் அயல்நாடான மங்கோலியாவும் அதன் நட்பு நாடான சீனாவும் ஒப்புதல் அழித்திருந்தன . இன்று இரவு அவை நம் நாட்டின் தலைநகரை முற்றுகையிட எண்ணியுள்ளனர் , அவர்களது செயற்கோள்கள் ஏற்கனவே தலைநகரை குறிப்பார்த்தபடி தயார் நிலையில் உள்ளது , இன்றிரவு அவை 8.13 மணிக்கு சரியாக தலைநகரை தாக்க உள்ளது , நாளை காலைக்குள் இந்தியாவின் முக்கிய ராணுவ தளவாடங்களும் , செயற்கை கோள்களும் அழிக்கப்பட்டு நாளை நம் மதத்தின் புதிய சாம்ராஜ்யம் இப்பூவுலகில் புதியதாய் பிறக்கும் , இனி பாரதத்தில் சிந்து மதம் மட்டுமே உயிரோடிருக்கும் மற்ற மதங்களும் பின்பற்றுவோறும் உயிரோடு கூட இருக்கலாகாது , வாருங்கள் தோழர்களே நாளை புத்துலகம் படைப்போம் , நாளைய சூரியன் நமக்காய் உதிக்கட்டும் , வாழ்க சிந்து மதம் , வாழ்க பாரதம் , பாரத் மாத கி ஜெ , பாரத் மாதா கி ஜெ '' தனது உரையை முடித்தபடி தனது கையில் தனது லேசர் கத்ததியால் ஒரு கோடிட அதிலிருந்து பொலபொலவென வந்த இரத்தம் அவனை சுற்றியிருந்தோர் மேல் தெளிக்க , பல்லாயிரக்கணக்காண சிந்து மதத்தினர் கூடியிருந்த அந்த சபையே அதையே மறுதலித்தபடி ஓவென ஓலமிட்டனர் . அங்கே பலருக்கும் ரத்தவாடை பிடித்திருந்தது .
'' ஜெக்யூ .. இதோ நீ கேட்ட புத்தகம் , மனுதர்மமும் வர்ணாசிரமும் ''


'' அப்பாடா குடுங்க இப்பவே படிச்சிடறேன் '' கையில் வாங்கியதும் அவனது மூளையிலிருந்த சிப்புகளை அவன் படிக்க தொடங்கு என உத்தரவிட அந்த புத்தகத்தின் சாரத்தை ஐந்து விநாடியில் மூளை உள்வாங்கியது .அவன் அங்குதான் தடை செய்யப்பட்ட கீதை,ராமாயணம்,மகாபாரதம்,பைபிள் புதிய பழைய ஏற்பாடுகள் , குரான் என மதங்கள் குறித்த புத்தகங்களை படித்திருக்கிறான் .


''என்ன ஜெக்யூ இந்த புத்தகமெப்படி இருக்கு !! ''


அவனது கேள்விக்கு பதில அளிக்க விருப்பமின்றி புத்தக கடைக்காரனிடம் பணத்தை கொடுத்து விட்டு , ஷங்கியின் புத்தகம் வராததால் அவனை அழைத்து கொண்டு பிரமைபிடித்தவனை போல அங்கிருந்து கிளம்பினான் .போகும் வழியில் தனது வாகனத்தை அந்த விபச்சார விடுதியின் ஆளில்லா பகுதியில் நிறுத்தி ஷங்கியிடம்


'' ஷங்கி நீ என்ன ஜாதிடா '' என கேட்க ,


ஷங்கி தனது ஜாதியை பற்றியும் அவனது முன்னோர்கள் பற்றியும் அவனது மூதாதையர் எழுதியதை பற்றியும் தான் படித்த சில குறிப்புகளை குறிப்பிட்டான் .இன்னும் நான்கு மணி நேரமே இருக்கிறது, ஓமாஇ மீது தாக்குதல் , தொடங்க அவனுக்கு மனது படபடவென இருந்தது , தனது தெய்வத்தை வேண்டிக்கொண்டான் , அலகு குத்தி தேர் இழுப்பதாய் . அவன் இங்கு வந்து சேர்ந்து இதோடு பத்து வருடங்கள் ஆகிவிட்டது , வீட்டிலிருந்தும் குற்றதடுப்பு படையிடமிருந்தும் தப்பிக்க அங்கே வந்தவன் இன்று அந்த இயக்கத்தை யாருமே எதிர்பாராத அளவு உயரத்திற்கே இட்டு சென்றிருக்கிறான் . இயக்கத்திற்காய் பல முறை தன் உயிரையும் பணயமாய் வைத்து பல கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கிறான் . எத்தனையோ கொலைகளையும் , கொள்ளைகளையும் மிகச்சாதரணாமாய் செய்தவனுக்கு இது மிக பெரிய சுமையாய் , முதன்முதலாய் பயத்தையும் கொடுத்தது .

அவன் கனவிலும் எண்ணியிராத அந்தக் கொலை பேச்சில் தொடங்கி கலகமாய் வளர்ந்து சண்டையில் நடந்து இதோ கொலையில் முடிந்து விட்டது ,

அது நடந்து பத்தாவது விநாடியில் சற்றுமுன் ஒளிப்பேழை செய்திகளில் ஜெக்யூ செய்த அந்த கொலைச்சம்பவம் சற்றுமுன்னின் செயற்கைகோள் மூலமாய் ஒளிபிம்பங்களாய் எல்லாரது ஒளிபேழையிலும் வெளிவரத்துவங்கியது , இரும்பு துண்டால் பிளக்கப்பட்ட ஷங்கியின் மூளை தனது சக்தியை முழுவதுமாய் இழக்க குற்ற ஒழிப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு தங்களது அதிவேக காற்றில் பறக்கும் சிற்றூர்தியில் பறந்து வர , ஜெக்யூ தனது ஒளிப்பேழையில் வந்த செய்தியை பார்த்து அதிர்ந்துபோய் செய்வதறியாது நிற்க , அதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த ஒரு நிழலுருவமவனை அப்படியே இழுத்துக்கொண்டு அந்த இருளான பகுதியில் மறைந்தது .


ஜெக்யூவால் எதையுமே பார்க்க இயலவில்லை , ஒரே இருட்டு , அவனது கண்களில் இனம் புரியாத வலி அவனை ஆட்கொள்ள , அவனால் தன் உடலின் எந்த பாகத்தையும் உணர முடியவில்லை . தன் தலை மொட்டை அடிக்கபட்டது போல உணர்ந்தான் , அவனால் அவனுடலஇன் எந்த பாகத்தையும் உணர முடியவில்லை . தனக்கு என்னாயிற்று , தான் எங்கிருக்கிறோம் கடைசியாய் என்ன செய்து கொண்டிருந்தோம் அவனால் நினைவு கூற இயலாது குழம்பினான் . அவனை சுற்றியிருந்த வெறுமை அவனை ஏனோ அவனால் புரிந்து கொள்ள இயலாத துன்பமாய் , தன் உடலை உணர இயலாத ஜடமாய் .....


சற்றுமுன் உடனடி செய்திகள் , ஓமாஇ யின் மீதான தாக்குதல் உளவு செயற்கைக்கோள்கள் மூலமாய் தடுக்கப்பட்டதாகவும் , அதற்கு காரணாமான அந்நிய நாடுகளின் மீதும் தன் தாக்குதலையும் தொடங்கியுள்ளதாகவும் , இந்த சதியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெக்யூ , ஓமாஇ ஐ கைப்பற்ற தனது இஒஇ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைமையில் செயல்பட்டதாகவும் , நாட்டில் இதுவரை ஒழிக்கப்பட்டிருந்த மதவாத மற்றும் வகுப்பு வாத பிரச்சாரத்தை மீண்டும் மீட்க முயன்றதாகவும் , பல பிற மதத்தினரை ஈவிரக்கமின்றி கொன்றதாகவும் , அது தவிர தன் மதத்தவராக கருதப்படுபவரையும் ஜாதி என்கிற தடைசெய்யப்பட்ட அழிந்து போன மிக பிற்போக்குதனமான முறையால் பிரித்து பார்த்தும் தனக்கு கீழானவராக தன் முன்னோர் எழுதிய புத்தகங்களின் படி பார்த்தும் அவர்களை துன்புருத்தி கொன்றிருக்கிறாரெனவும் , நாட்டை கைப்பற்றும் முயற்சியில் நமது எதிரி நாடுகளான அழிந்து போன சீனாவுடனும் , மங்கோலியாவுடனும் கைக்கோர்த்து சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இன்று காலை மக்கள் மன்றத்தில் அவனது மூளை தவிர மற்ற அனைத்தையும் வெட்டி கூளாக்கி விவசாயத்திற்கு உரமாக்குமாறு நமது அதிபர் தீர்ப்பளித்தார் எனவும் நமது உடனடி செய்தித்துறை செய்திகள் தெரிவித்துள்ளன . அவரது மூளை நமது அரசுமின்னிலையத்தின் மின் உற்பத்திக்காக நாளை அனுப்பி வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது . இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன . செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்களது கையடக்க ஒளிப்பேழையின் இலவச சேவையை பயன்படுத்துங்கள் . வாழ்க ஓமாஇ வாழ்க செம்மான் நைவத் .


அந்த அரசுவிபச்சாரவிடுதியின் சுற்றுசுவரின் கிழக்கு பகுதியில் , பான்பராக் கரையும் , சிறுநீர் தடமும் , உபயாகித்த ஆணுறைகளின் குவியல்களினூடே பயணிக்கும் கரை படிந்த சுவர்களின் எல்லையில்தான் இன்னும் அந்த மனுதர்மமும் வர்ணாசிரமும் கிடந்தது அடுத்த ஜெக்யூவின் வருகைக்காக .........

_____________________________________________________________________________________

சிறில் அலெக்ஸ் அவர்கள் அறிவித்திருந்த அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக என் முதல் கதை .


17 July 2008

அரசு மருத்துவமனை சுகாதாரம் - Dr.புருனோவின் கேள்விகளும் சில சிந்தனைகளும்


மருத்துவர் புருனோ தனது பதிவில் அரசு மருத்துவமனைகளின் சுகாதரத்தின் ஆணிவேர்கள் குறித்து சிலபல கேள்விகளை தனது (அரசு மருத்துவமனைகள் சுகாதாரம் இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம் ) பதிவில் வினவியிருந்தார் . அத்தனை கேள்விகளும் அற்புதமானவை . நம்மை (அதாவது நம்மை போன்ற சராசரி மக்களை சிந்திக்க செய்வது ) . சரி ஒரு சராசரி பாமரனாய் அக்கேள்விகளுக்கு நாமும் பதிலளிக்க முயல்வோம் .

கேள்வி .1 : அரசு மருத்துவமனை சுவரில் வெற்றிலை துப்புவது யார் – மருத்துவரா, இல்லை அங்கு வரும் நீங்களா (நீங்கள் என்பது மங்களூர் சிவா ஒருவரை மட்டும் அல்ல, அனைத்து பொதுமக்களையும் தான்) ?

நல்லா கேட்டிங்க சார் கேள்வி , அரசு மருத்துவமனைக்கு வருவது மென்பொருள் துறையில் பணிபுரியும் சீமான்களோ , படித்து பட்டம் பெற்ற கணவான்களோ , மக்கள் ஒட்டை தேவையான அளவு வாங்கி கொண்டு ஆட்சி செய்யும் மந்திரிகளோ அல்லர் . (மேற் சொன்ன யாராவது நீங்கள் சொல்லும் மாடுகளும் பன்றிகளும் மேயும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றதற்கான ஆதாரமிருந்தால் மன்னிக்கவும் , தற்குறி பாமரனுக்கு அவ்வளவுதான் அறிவு என்பதை ஒத்து கொள்கிறேன் )

அங்கே வரவன்லாம் காட்டில் ( வயலில் ) வேலை செய்றவன் , கக்கூஸ் கழுவறவன் , சாக்கடை சுத்தம் செய்பவன் , சேரியில் வாழற படிப்பறிவுல்லாத தற்குறிகள் , வரவன் பூரா காட்டு பயலுக ,( அவன் நம்மை போல சுகாதாரம் பற்றி படித்து தெரிந்தவனில்லை ) அவர்கள்தான் இந்த பாழாய் போன அரசு மருத்துவ மனைகளுக்கு வருவது . அவர்களிடம் நீங்கள் எதிர் பார்க்கும் சுகாதாரம் இருக்காதுதான் . ஒத்துகொள்கிறேன் , அவனுக்கு என்ன தெரியும் ஹைஜீன் பற்றி .

அவன்தான் அப்படி இருக்கிறான் படிக்காத தற்குறி பயபுள்ள .

அரசுமருத்துவமனைகளில் பணியிலுருக்கும் எத்தனை துப்புரவு ஊழியர்கள் சரியாக பணியாற்றுகின்றனர் . அட அரசு மருத்துவமனை சுவர்கள் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வெள்ளளையடிக்க படுகின்றன , எனக்கு தெரிந்தவரை அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை . துப்புரவு தொழிலாளர்களை கண்கானிப்பது யார் , கண்காணிப்பாளர் சரியாக இருந்தால் அரசு மருத்துவமனைகள் நிச்சயம் சுத்தமாகத்தான் இருக்கும் . அங்கே தினமும் சரியான நேரத்திற்கு வேலைக்கு போகும் மருத்துவர்களாவது இந்த அசுத்தங்களை சுத்தம் செய்ய சொல்லலாமல்லவா .

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு , மருத்துவமனைகளில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுருத்த வேண்டியது யார் கடமை . ( ஏன்னா வரவன் பூரா காட்டு பயலுக ,அவன் நம்மளாட்டம் படிக்கல அதான் )

கேள்வி 2 : அரசு மருத்துவமனை படிக்கட்டில் பாதி இட்லியையும் மீதி சட்னியையும் வீசுவது யார் – செவிலியரா அல்லது நீங்களா ?

நாங்கதான் சாமி , அது நாங்களேதான் . சரிங்க சாமி நாங்கதான் பேஸன்ட்டுக்கு துணையா வந்தா எங்களுக்கு தங்கதான் இடங்கொடுக்கல ( நாங்க எங்க 5 நட்சத்தி ஒட்டல்லயா சாமி தங்க , அப்புறம் சோறு திங்க ) திங்கவாவது இடங்கொடுக்கலாம்ல சாமி ,ஒதுக்கு புறமா . சாப்பிடற இடத்த சுத்தமா வச்சிக்க எங்களுக்கு தெரியலனா என்ன உங்காளுங்க தான் ஷிப்ட்டு போட்டு சுத்தம் பண்றாங்கள்ள (படிச்சவங்க ) சுத்தம் பண்ண வேணாம் , குறஞ்சது சொல்லலாம்ல இப்படி அசுத்தம் பண்ண வேணாமுன்னு .

கேள்வி 3 : ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தினுள் மாடு, பன்றி மேய்ப்பது – ஆய்வக நுட்பனரா அல்லது நீங்களா ??? அதை தடுக்கும் மருத்துவ அலுவலரிடம் அந்த பகுதி அரசியல்வாதி மூலம் பேசுவது மருந்தாளுனரா அல்லது நீங்களா ??

யாருங்க அத உள்ள விட்டது , உங்காஸ்பத்திரில செவிலியர்கள் , வாட்ச்மேன்கள்ளாம் இல்லையா . காசு குடுத்தா மாடு என்ன மாடர்னா என்ன வேணா பண்ணலாம்ங்க ஆஸ்பத்திரியில . அது சரி ஆரம்ப சுகாதார நிலையத்தில யாரு விவசாயம் பண்ண ஆரம்பிச்சா மாடு அங்கன வந்து மேய ( மாடு அங்க வந்து மேஞ்சு என்னத்த திங்க போவுது வீணாபோன சிரிஞ்சியும் , பஞ்சையுமா? ) . பன்றி மேயுதுனா அதுக்கு காரணம் உங்க துப்புரவாளர்களின் துப்பில்லாத தனம்தான் . ஏன்னா பன்றிகள் எங்க மேயும்னு உங்களுக்கே தெரியும் .

அப்புறம் இதுக்கு போயி அரசியல்வாதிய விட்டு மிரட்டுறதா சொல்றத கேட்டா , சிரிப்புதான் வருது , ஐயா மாடு மேய்க்கிற பயலுக்கு அதெல்லாமா தெரியும் , அப்படியே அது போன்ற விசயத்துக்கெல்லாம் ஒரு அரசியல்வாதி வருவரா ( ஒரு வேளை அது அப்போலோல வைத்தியம் பாக்கற , பண்ணையார் மாடா இருக்கும் , அவருக்கென்ன அவரும் உங்களாட்டம்தான் )

கேள்வி 4 : மருத்துவமனை என்று மட்டும் அல்ல ஏறத்தாழ அனைத்து அரசு அலுவலகங்களும் இப்படி இருக்க காரணம் அரசு ஊழியர்களா, நீங்களா ??

ஆமாமா , அந்த அரசு அலுவலகங்கள்ல்லாம் சுண்ணாம்ப பார்த்து எத்தனை வருஸமாச்சுனு அந்த சுவருக்கும் ஆண்டவனுக்கும் தான் தெரியும் . அதே மாதிரி வெத்தலை பாக்கு போடற அரசு அலுவலர்னு யாருமே இல்ல , இதுக்கு காரணமும் மக்கள்தான் ஒத்துக்கறோம்ங்க.

கேள்வி 5 : கலவரத்தில் விவேகம் பேரூந்து, கே.பி.எண் எல்லாம் பத்திரமாக போகும் போது அரசு பேரூந்து மட்டும் உடைவதற்கு காரணம் போக்குவரத்து துறையா, பொது மக்களா.???

முதலில் ஒன்றை தெளிவு படுத்துங்கள் , கலவரம் செய்வது பொதுமக்களா? , பஸ்ஸை உடைப்பது பொதுமக்களா??

பொதுமக்கள் என நீங்கள் கூறுவது ஒட்டு மொத்த சமூகத்தையும் சேர்த்துதான் என்பது உங்கள் வாதமாக இருப்பின் , கலவரம் செய்வது மருத்துவர்கள்தான் என்பது என் வாதம் ( மருத்துவர்களும் இச்சமூகத்தின் ஒரு பகுதியன்றோ )

நீங்கள் சொல்லும் கேபிஎன் ம் விவேகமும் எத்தனை பேருந்துகளை இயக்குகின்றன??, அதில் எத்தனை பேருந்துகள் கலவரம் நடக்கும் பகல் வேளையில் இயங்குகின்றன??

பாவங்க பொதுமக்கள் அரசாங்கம் எவ்வளவுதான் கட்டணத்த உயர்த்தினாலும் பேசாம கேக்கறத குடுத்துட்டு பயணிக்கிறான்

கலவரம் பண்ற படிக்காத பாமரனை கலவரத்திற்கு தூண்டிவுடுவது நம்மை போன்ற படித்தவர்கள் தானே . WE THE PEOPLE .

இந்த பிரச்சையில் ஒட்டு மொத்தமாய் பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தியாதாலேயே இந்த விளக்கம் , அதற்காக மக்கள் எந்த தவரும் செய்யவில்லை என நான் சப்பைகட்டு கட்டவில்லை , அதில் மக்களின் பங்கு அதிகமே , ஆனால் சரியான ஊழியர்களும் , தக்க மேலாண்மையும் ( தனியார் மருத்துவமனைகளில் உள்ளது போல ) , அரசின் நிதியும் ,இருந்தால் இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது . மக்களுக்கு மருத்துவ மனை சுகாதாரம் குறித்த அறிவை அதிகப்படுத்தினாலே போதும் ஓரளவு பிரச்சனை குறையும் . அதிகமான அளவு மக்கள் குவியும் அதுவும் பாமர மக்கள் வரும் இடங்களில் அதிகமான உருப்படியான துப்புரவு தொழிலாளர்களை நியமித்து அவர்கள் சரியாக இயங்கினாலே போதும் அரசு மருத்துவமனைகள் இந்தரலோகம் போல ஜொலிக்கும் .

அதில் மருத்துவர்களின் பங்கு மிகச்சிறியதே , அதனால் அந்த பிரச்சனையில் அவர்களை சாடுவது அர்த்தமற்றது . அவர்களால் இயன்றது இது போன்ற பிரச்சனைகளில் தலையிட்டு அரசிடம் இது குறித்து முறையிடலாம் . ( போராட்டம் வேண்டாம் , பிறகு தடியடி போன்றவைகளை சந்திக்க நேரிடலாம் )

அரசு மருத்துவமனைகளின் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் கூட நல்ல பலன் கிடைக்கும் என்பது அடியேனின் கருத்து .

16 July 2008

ஏழைக்கதைகள் ஏழு : கனவுக்கணினி


இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிரினத்திற்கும் ஆசை உண்டு , அது அமீபாவாக இருக்கட்டும் நீலத்திமிங்கலமாகட்டும் , ஏன் அழிந்து போன டைனோசர்களுக்கு கூட ஆசைகள் இருந்திருக்கும் . ஆசைப்பட தகுதி தேவையில்லை . உயிருள்ள எல்லாமே ஆசைப்படலாம் .
ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு ஆசை , சில ஆசைகள் தானாகவே நிறைவேறுகின்றன , சில ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன , சில ஆசைகள் அது சாகும் வரை அந்த உயிரனத்தோடு வாழ்ந்து அது இறந்தபின் அதனுடனே மக்கி மண்ணாகின்றன . ஆசைகளின் ஆற்றல் அளப்பரியது .

நாம் அனுபவிக்கும் பல வசதிகளும் யாரோ ஒருவரின் ஆசையின் வடிவமே , ஆசைகளின் வடிவம் கற்பனை , கற்பனைகளின் வடிவம் கண்டுபிடிப்பு . ஆக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஆசைக்கு அழிக்கும் பலமும் உண்டு . அணுவின் சக்தியை கண்டறிந்தவனின் ஆசை ஆக்கும் ஆற்றாலாய் உருவெடுக்க , அதை அனுபவிப்பன் ஆசை எதையும் அழிக்க முற்பட்டது . ஆசைக்கு எல்லையில்லை , அது சுதந்திரமானது அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ஒன்றுதான் .

அது கட்டற்றது .

'' முருகேசா , ஐயரு கம்பெனிக்கு டீ குடுக்க போகாம அங்க என்னடா பண்ற !! '' அதட்டினார் டீக்கடை அதிபர் , அவருக்கு வேலையாட்களை அதட்டுவதில் அதி தீவிர ஆசை .

'' தோ!! கிளம்பிட்டேன்ப்பா!!''


கையிலிருந்த தேநீர் அட்டியிலிருந்த எட்டு கோப்பைகளிலிருந்தும் தேநீர் தெரித்து விழ அதை இறுக்கமாய் பிடித்தபடி ஓடி வந்தான் முருகேசன் . அழுக்குக் கால்சட்டை மேலும் கிழிந்தபடி.

'' என்னடா !! சொல்லி வாய மூடல அதுக்குள்ள வந்து நிக்கற '' ,

திருதிருவென விழித்தபடி நின்றான் முருகேசன் , டீமாஸ்டர் வாயை திறந்து எதையோ பேச எத்தனிக்க , முருகேசன் அவரை பார்த்து வேண்டாம் என்பது போல் சைகை செய்ய மர்மமாக சிரித்தபடி தனது தேநீர் தயாரிப்பில் மூழ்கினார் .

அந்த அலுவலகத்தில் மொத்தமாய் பத்து பேர்தான் , எப்போதும் கலகல என ஆர்ப்பாட்டமாக இருக்கும் அந்த அலுவலகத்தில் முருகேசனுக்கு காலை மாலை இரு வேளையும் தேநீர் தருவது மிக பிடித்தமான ஒன்று . எல்லாமே அவளை பார்க்கத்தான் . அவள் அந்த அலுவலுகத்துக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது . அங்கு அவளை போல எட்டு இருந்தாலும் அவனது பார்வை எல்லாம் அவள் மேல்தான் . அந்த அலுவலகத்தில் அவள் மட்டும்தான் கருப்பு . அதுதான் அவனை ஈர்த்திருக்க கூடும் . அவனது ஆசை எல்லாம் அவளருகில் அமர்ந்து ஆசை தீர அவளோடு ஒரு நாள் முழுக்க அவளோடு கழிக்க வேண்டுமென்பதே .

'' சார் , ? ''

மேஜை மேல் டீயை வைத்து விட்டு ஏகாம்பரம் சாரை ஏக்கத்துடன் பார்த்தான் , அவர் கவனிக்கவில்லை , அந்த அலுவலகத்தில் இவனிடம் முகம் கொடுத்து பேசும் ஒரே ஆள் . இவனை பார்க்கையில் தன் பால்யம் ஞாயபகம் வருவதாயும் அவனை அடிக்கடி பள்ளிக்கு சென்று படிக்க சொல்லியும் வற்புறுத்துபவர் .

''சார் ? '' கொஞ்சம் சத்தத்தை கூட்டிப்பார்த்தான் .


''என்னடா !! '' முறைத்தார் .

''நான் கேட்டேனே அது ''

''சனிக்கிழமைனு சொல்லிட்டேன்ல , அப்புறமென்ன !! ''

'' சரிங்க சார் ,'' அங்கிருந்து தன் தேநீர் அட்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப முற்பட்டவன் , சில அடிகள் நகர்ந்து பின் ஒரு முறை அவளை ஏக்கமாக பார்த்துவிட்டு , ஒரு பெரு மூச்சுடன் நகர்ந்தான் .


இன்று வியாழன் , இன்னும் ஒரு நாள்தான் எப்படியாவது வேகமாக இந்த நாற்பத்தி எட்டு மணி நேரமும் கழிந்து விடாதா என ஏங்கினான் . சனிக்கிழமை தன் வெகு நாள் ஆசையை ஏகாம்பரம் சார் நிறைவேற்றி தருவதாக வாக்குருதி அளித்திருந்தார் .

கடைக்குள் நுழைய டீமாஸ்டர் வினவினார் இவன் முகத்தில் தெரித்த புன்னகையில் எல்லாம் புரிந்து போனது , மதியம் காய்ந்து போன தக்காளி சாதம் காயந்தபடி இருக்க இவன் மோட்டுவலையை பார்த்தபடி சோற்றை பிசைந்து கொண்டு அதை பற்றியே கற்பனை செய்து கொண்டிருந்தான்.

அவளை முதல் முறை பார்க்கையில் அவள் என்னவென்றே விளங்கவில்லை . ஆர்வமிகுதியில் யாருமே அவனிடம் பேசாத அந்த அலுவலகத்தில் ஏகாம்பரமிடம் கேட்க அவர் அதன் பெயர் கம்ப்யூட்டர் என்றும் கணக்கு போட வாங்கி இருப்பதாகவும் , அவனும் அதை கற்றுக்கொண்டால் நல்ல சம்பளத்தில் வேலைக்கு போகலாமெனவும் கூறினார் .

அவளால் நிறைய சம்பாதிக்க வேண்டுமென்பதெல்லாம் அவனுக்கு ஆசையில்லை , ஒரு நாள் மட்டும் அக்கணினியிலமர்ந்து அவ்விசைப்பலகையினில் தன் விரல் பட ஒரு நாள் எல்லாம் அப்படியே இருந்துவிட்டு அப்படியே செத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றெண்ணியிருக்கிறான் .

அறிவிற் சிறந்ததாய் இருப்பதால் அதை ஒரு பெண்ணாய் நினைத்தானோ. விந்தைகள் புரிவதால் தேவதையாய் கற்பனை செய்தானோ அவனுக்கு அது அதுவல்ல , அது அவளாகியிருந்தது . நம்மூரில் தேவதைகள்தானதிகம் தேவதூதர்கள் குறைவு , அதனாலும் கணினி அவனுள் பெண்பாலாய் ஆகியிருக்கலாம் .

கணினியுடனான அவனது ஆசையை காமத்தோடு ஒப்பிட்டால் , காமம் போன்றதொரு வேட்கையாயிருப்பின் , காமத்தின் ஆவல் ஒரு முறையோடு முடிவதில்லை , காதலாய் கொண்டால் அதுவும் காமத்தின் அழகிய வடிவமே , அவனது ஆசை பக்தியை போன்றது , இறையை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்னும் பக்தி , ஒரு முறை பார்த்துவிட்டால் பிறகு முக்திதான் என்பதை போல இதுவும் பக்திதான் கணினி மீதான ஒரு பக்தி .

அவனால் பணம் கொடுத்து கணினி கற்க அறிவுமில்லை வசதியுமில்லை , ஏகாம்பரமிடம் தெரிவிக்க அவரோ , அவர் வாங்கும் சொற்ப சம்பளத்தில் தன்னால் அவனை படிக்க வைக்க இயலாது வேண்டுமானால் வாரமொருமுறை சனிக்கிழமைகளில் வந்தால் கற்றுத் தருவதாய் வாக்களித்தார் .

நாற்பத்தி எட்டு மணி நேரத்தையும் நானூறு வருடங்களாய் ஆசையின் வலியோடு பயணித்தான் . ஒரு வழியாய் சனிக்கிழமையும் வந்தது .

விடியலுக்காய் காத்திருந்தது போல அவசரமாய் எழுந்து , குளித்து , பவுடர் பூசி , கோவிலுக்கு சென்று , சாமி கும்பிட்டு , தேங்காய் உடைத்து , கற்பூரமேற்றி , ஒரு வழியாய் ஐயர் அலுவலகத்தை அடைந்தான் . அலுவலகம் திறக்கப்படவில்லை . பொருத்திருந்தான் .

இவன் வயது குழந்தைகள் ரிக்சாவிலும் , ஆட்டோவிலும் , பேருந்திலும் பள்ளிக்கு போய்க்கொண்டிருந்தனர் , அவர்களை பார்க்க பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் , அலுவலக வாசலில் கிடந்த அன்றைய செய்தித்தாளை எடுத்துப் புரட்டினான் , அதுவும் சரியாக படிக்க இயலாமல் , மீண்டும் சாலையிலேயே அயர்ந்தான் . மேலும் குழந்தைகள் சாரை சாரையாக எறும்புகள் போல கையில் அட்டியுடன் அணிவகுத்து செல்ல , தலையை குனிந்து கொண்டான் . குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சார பயணமது .


ஏகாம்பரம் வரவில்லை , மதியமானது அப்போதும் அவர் வரவில்லை ,பொருத்திருந்ததான் , மாலை ஆனது பசி காதை அடைக்க ஆரம்பித்திருந்தது இன்னும் வரவில்லை , இரவாகியும் அவன் அங்கிருந்து அகலவில்லை , அவள் மேலிருந்த ஆசைக்கு அவ்வளவு பலம் .


நள்ளிரவாக டீமாஸ்டர் அவனைத்தேடி அலுவலகத்திற்கே வந்துவிட , இவன் அரைமயக்கத்தில் அந்த அலுவலக வாசலில் படுத்திருந்தான்.


''முருகேசா!! டேய் முருகேசா!! '' தட்டி எழுப்பினார் . '' என்னாடா ஆச்சு , நேத்து லீவு சொல்லிட்டு போனவன் , ரவைக்கு வீட்டுக்கு வருவனு காத்திருந்தா ஆளக்காணலயேனு இங்கிட்டு வந்து பார்த்தா இப்படி பைத்தியகார பயலாட்டம் படுத்திருக்க , வா ரூம்புக்கு போவோம் ''


''அண்ணா ஏகாம்பரம் சார் வரலணா , என்னாச்சினு தெரியல , யாருமே வரலணா ''


''சரி வா நாம காலைல பேசுவோம் , லூசுபயபுள்ள , எதையாவது தின்னியா'' பசியால் அவன் அவரது மடியில் மயங்கி விழுந்தான் .

திங்கள் கிழமையும் அந்த அலுவலகம் திறக்கப்படவில்லை , தொடர்ந்து ஒரு வாரம் பூட்டியே இருந்தது . தினமும் அவனும் விடாது அங்கு சென்று பார்த்து வருவான் .

சில நாட்கள் கழித்து அது ஒரு நிதிநிறுவனமென்றும் அது திவாலாகியதாகவும் செய்தி படித்ததாக மாஸ்டர் கூறினார் . அநந் அலுவலகம் இனிமேல் திறக்க மாட்டார்கள் எனபதை தவிர எதுவும் புரியாது துடித்து போனான் . அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது அவளை இனி பார்க்க முடியாதென்பது .

பிரிதொரு நாளில் அந்த அலுவலகம் அடித்து நொருக்கப் பட்டது அந்த நிறுவன முதலீட்டாளர்களால் , அவளும் அங்கிருந்து தூக்கி எறியப்பட்டாள் , அவள் உடைந்து நடுத்தெருவில் கிடக்க அதில் ஒன்றை கையில் எடுத்து கதறி அழுதான் . அவனாசை அநாதையாய் நடுரோட்டில் .


அதை தூக்கி கொண்டு கடைக்கு திரும்புகையில் வழியெங்கும் அவள் துகள்கள் ஒவ்வொன்றாய் பொருக்கி கொண்டான் , கையில் இடமில்லை அந்த விசைப்பலகையும் உடைந்த திலையில் சாக்கடையில் , ஒடிச்சென்று சாக்கடையில் இறங்கி அதையும் எடுத்துக் கொண்டு , தெருவோர நீர் குழாயில் கழுவியபடி கடையை நோக்கி நடக்க மாலை மங்க ஆரம்பித்தது . அவன் ஆசையும் நிறைவேறியது .சில ஆசைகள் தானாகவே நிறைவேறுகின்றன , சில ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன , சில ஆசைகள் அது சாகும் வரை அந்த உயிரனத்தோடு வாழ்ந்து அது இறந்தபின் அதனுடனே மக்கி மண்ணாகின்றன . ஆசைப்பட தகுதி தேவையில்லை . ஆசைகளின் ஆற்றல் அளப்பரியது .

05 July 2008

பிட்டு படம்'' ராமா எப்படியாவுது இன்னைக்கு அந்த படத்துக்கு போயிறணும்டா, !!!! '' கிருஷ்ணனும் ஒரு வாரமாக தினமும் பத்து முறையாவது இப்படி சொல்லிக்கொண்டே இருந்தான் . கிருஷணன் புதுக்கல்லூரியில் போன மாதம் சேர்ந்த பின் கிடைத்த நண்பன்தான் ராமன் , பால்மணம் கொஞ்சம் மாறிய பாலக இளைஞர்கள் , கிருஷ்ணனுக்கு அந்த பட போஸ்டரை பார்த்ததிலிருந்து நிலை கொள்ளவில்லை . ஒரு வாரமாக தினமும் வீட்டிலிருந்து கிளம்பும் போதும் வீட்டிற்கு திரும்பும் போதும் அந்த போஸ்டரை ஐந்து நிமிடமாவது பார்த்து ரசித்து விட்டுத்தான் மறுவேலை .

'' கிருஷணா அந்த படத்துல அப்படி என்னதான்டா இருக்கு '' தன் அக்ரகாரத்தை தவிர எதையும் அறியாத ராமன் தலையை சொறிந்தபடி கேட்க ,

''ராமா அதுக்குதான்டா!! ஒரு தடவ அந்த படத்த பார்த்துடலாம்டா !!

அந்த படம் பேர பாத்தியா இளநெஞ்சை கிள்ளாதேனு வச்சுருக்காங்க பேர கேட்டாலே உனக்கு ஒரு மாதிரி இல்ல ''

'' ஆமாடா நேக்கும் ஏதோ மாதிரிதான் இருக்குடா , சரி அந்த சினிமா எந்த தியேட்டர்ல ஒடுறது ''

''ஜோதிலடா , ஒரு வாரம்தான்டா அந்த படம் ஒடும் , இன்னிக்கு புதன்ல நாளானிக்கு வேற படம் மாத்திருவான் ''

'' ஐய்யயோ ஜோதியா!!! கிருஷ்ணா அங்க பக்கத்துல தான் எங்க அத்திம்பேர் வீடு இருக்கு , அவரு இல்ல அவருக்கு தெரிஞ்சவங்க பாத்துட்டா , அது சரி அந்த தியேட்டர் பத்தி இவ்ளோ மேட்டர் எப்படிடா தெரிஞ்சுது ''

'' உங்க அத்திம்பேர பத்தி கவலப்படாத , நாம காலைல காலேஜ் கட் பண்ணிட்டு , 8 மணிக்கே போயி தியேட்டர்ல உக்காந்துருவோம் , ஓகேவா, உங்க அத்திம்பேர் மட்டுமில்ல ஊரே ஆபிஸ் போற பிஸில இருப்பாங்க , பயப்படாதே''

''என்னடா காலேஜ் வேற கட்டா , தப்பு மேல தப்பு செய்ய சொல்றியே , பராவால்ல அப்ப நாளைக்கு காலைல சரியா வந்துடு '' என்று தனது பேருந்து வரவும் அதில் படபடவென ஏறி வீட்டிற்கு கிளம்பினான் .

இரவு இருவருக்கும் தூக்கமே வரவில்லை , முதலிரவுக்கு காத்திருக்கும் மணமகனைப்போல மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் , கிருஷ்ணாவுக்கு அந்த பட கதாநாயகி ரேஷ்மா பற்றியே கற்பனை , ராமனுக்கு அவனது அத்திம்பேர் பற்றியே கற்பனை !!!! . படத்தில் பிட் இருக்குமா , இருந்தால் பாதி காட்டுவார்களா அல்ல முழுதாக காட்டுவார்களா , கதை இருக்குமா , சண்டை இருக்குமா , கதாநாயகன் யாரு , அவர் படம் ஏன் அந்த போஸ்டரில் இல்லை , படப்பேருக்கேத்த மாதிரி காட்சி இருக்கமா , யாராவது பார்த்துட்டா என்ன செய்ய , வீட்டில மாட்டிகிட்டா என்ன சொல்றது , டிக்கெட் விலை எவ்வளவு , இது தப்பில்லையா என இரவெல்லாம் மனதிற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் , சரியான தூக்கமே இல்லை இருவருக்கும் , வீட்டிலிருந்து 7 மணிக்கே இருவரும் கிளம்பினர் .

7.30க்கு சரியாக பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர் , அங்கிருந்து ஒரு பேருந்தை பிடித்து திரையரங்கை 10 நிமிடங்களில் அடைந்துவிட்டனர் . வழியில் இருவரும் இரவு தூங்காமல் யோசித்து கொண்டிருந்ததை குறித்தே பேசிக்கொண்டிருந்தனர் . பரங்கிமலை ஜோதி சென்னையில் பலருக்கும் பாலியலை அறிமுகப்படுத்திய அந்த அற்புத திரையரங்கு இன்னும் அந்த இருவருக்காக திறக்கவில்லை , இருவரும் மனம் நொந்து போய் பக்கத்தில் இருந்த பெட்டிகடையில் விசாரித்ததில் தான் தெரிந்தது படம் 12 மணிக்கென்று , அதுவரைக்கும் என்ன செய்வது எனப்புரியாமல் திரையரங்கு வாசலில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்து 12 மணிக்கு காத்திருந்தனர் .

இருவரும் இரவு உறங்காததால் அப்படியே அங்கேயே உறங்கிபோனார்கள் , கனவுகளிலும் அந்த படம் பற்றிய நினைவுகளே , இருவருக்கும் . கனவில் மழை பெய்தது
11.30 மணிவாக்கில் கிருஷ்ணா படாரென விழித்துக்கொண்டான், பக்கத்தில் யாரோ மூத்திரம் போய் கொண்டிருக்க ராமனை எழுப்பினான் , ராமனுக்கும் அப்போதுதான் நினைவு வந்தது , '' மச்சி வாடா தியேட்டர் திறந்துட்டாங்க வா போயி டிக்கட் எடுக்கலாம் '' கிருஷணா , ராமனை அங்கிருந்து கிளப்பினான் .

'' தம்பிங்களா இந்த படத்துக்கு சின்ன பசங்கள்ளால் வரக்கூடாது , கிளம்புங்க'' டிக்கெட் கொடுப்பவர் விரட்டினார், இப்படி ஒரு பிரச்சனையை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை , அவர்கள் என்ன செய்வார்கள் அவர்களது உருவம் அப்படி .

'' அண்ணா எனக்கும் இவனுக்கும் 18 வயசு ஆயிடுச்சுனா , நம்புங்கண்ணா , காலைலருந்து வெயிட் பண்றேங்கண்ணா '' கிருஷணா போராடினான் , ராமனும் ஆமாம் என்பது போல தலையை அசைத்துக் கொண்டிருந்தான் .
'' தம்பிகளா உங்கள பார்த்தா ரொம்ப சின்ன பசங்களா இருக்கு உங்கள உள்ள விட்டா எங்களுக்குதான்பா பிரச்சனை ''
'' அண்ணா , இந்தாங்கண்ணா என் காலேஜ் ஐடி கார்டு , இதுல வயசு போட்டிருக்கு பாருங்க !!''
'' தம்பிங்களா காலேஜ்ஜா படிக்கிறீங்க ,முதல்லயே சொல்லிருக்கலாம்ல , சரி இந்தாங்க டிக்கெட் ''

கிருஷ்ணாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்ததது . டிக்கெட் கிழிப்பவரிடம் ராமன் ஆர்வத்தில் '' அண்ணா படத்தில பிட்டு இருக்காணா '' , அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது , முறைத்தபடியே டிக்கெட்டை பட்டென்று கிழித்து கையில் கொடுத்தார் .

தியேட்டரின் உள்ளே குமட்டும் நாற்றம் , சீட்டெல்லாம் கிழிந்திருந்தது , திரையரங்கின் இருளான பகுதியாக தேடிபிடித்து அமர்ந்து கொண்டனர் . ராமனுக்கு வயிற்றை பிறட்டியது , கிருஷ்ணன் மிக ஆர்வமாக அமர்ந்து கொண்டிருந்ததால் அவனுக்கு அந்த துர்நாற்றம் தெரியவில்லை . திரையரங்கில் மொத்தமாய் 10 பேர்தான் இருந்தனர் . மணி 12 ஆகியும் படம் தொடங்கவில்லை , 12.30 வரை அதுவே தொடர்ந்தது . மெதுவாக வெள்ளை திரை மேல் இருந்த சிகப்பு திரை மறைய , இருவரும் குஷியாகினர் . இன்னும் படம் தொடங்கவில்லை , இருவரும் மிக ஆர்வமாக திரையையே பார்த்துக்கொண்டிருந்தனர் , வெங்கடாசலபதி தரிசனத்திற்கு காத்திருக்கும் கடைநிலை பக்தர்களைப் போல . இப்போது திரையரங்கில் 30 பேர் கூடியிருப்பர் . அதில் ஒருவன் நேராக இவர்களை நோக்கி வர அதிர்ந்து போயினர் , அவன் '' தம்பி இந்த சீட்டுக்கு யாராவது வராங்களா , '' இருவரும் பயந்த படி இல்லைங்க என்றனர் .

கிருஷ்ணனின் அலுகில் அந்த நபர் அமர்ந்து கொண்டார் , பார்க்க காவல்துறை அதிகாரியை போல ஒரு தோற்றம் , அவர்களிருவருக்கும் கிலி மனதில் மட்டுமல்ல நுரையீரல் வரை பரவியது .

வெள்ளை திரை ஒளிர படம் துவங்கியது , எச்சில் துப்பாதீர்கள் , முன்சீட்டில் கால்வைக்காதீர்கள் , புகைபிடிக்காதீர்கள் , தினகரன் படியுங்கள் , மாலைமுரசு படியுங்கள் என , ஒவ்வொரு ஒளி கீற்றிற்கும் பக்கத்து சீட்டு நபர் கிருஷ்ணனை பார்த்து புன்னகைக்க , கிருஷ்ணனுக்கு குலை நடுங்கியது , படம் துவங்கியது .

'' டேய் ராமா இது என்னடா , யூ சர்டிபிக்கேட் போட்றுக்காங்க '' ,''எங்கிட்ட கேட்டா , உனக்குதான இதெல்லாம் அத்துபடி '' ராமன் கிசுகிசுத்தான் .

படம் பெயர் வந்ததும் தான் கிருஷ்ணனுக்கு நிம்மதியாய் இருந்ததது .

'' இளநெஞ்சை கிள்ளாதே '' '' கனவுகன்னி ரேஷ்மா '' பெயர்கள் ஒடிக்கொண்டே இருந்தது ,

5 நிமிடம் பெயர்கள் மட்டுமே ஓடி கொண்டிருந்தது .

'' நமோ நாராயணா'' ஒரு வயதானவர் கடவுளுக்கு அர்ச்சனை செய்ய படம் துவங்கியது ,

படத்தில் அந்த கிழவரின் இளம் மனைவியை அவர் பல முறை முயன்றும் திருப்தி படுத்த முடியாது கஷ்டப்பட , கதாநாயகன் அந்த பெண்ணை திருப்தி படுத்தினான் . படத்தில் பல முறை மிக நெருக்கமாக இருவரும் நெருங்குவார்கள் சட்டென அடுத்த காட்சி துவங்கிவிடும் . 5 முறை இதுவே தொடர்ந்தது .

படம் ஓடிக்கொண்டிருக்க திரை இருள , எல்லா விளக்குகளும் எரிந்தது . இடைவேளை .

ராமன் கிருஷ்ணனை முறைத்தபடி இருந்தான் , கிருஷணன் ராமனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான் .


இடைவேளை முடிந்ததது , இடைவேளையில் இருவரும் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தனர் . விளக்குகள் அணைய படம் தொடர்ந்தது , இருவரும் இப்போதாவது ஏதாவது பிட் வராதா என ஏக்கத்துடன் பார்க்க , படம் துவங்கி 5 நிமிடத்தில் அனைவரும் வெளியேற துவங்கினர் . படம் நிருத்தப்பட்டது . பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவரும் கிளம்ப இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை .

இப்போது திரையரங்கமே காலியாகியிருந்தது , '' தம்பிகளா படம் முடிஞ்சுது கிளம்புங்க !! ''

''அண்ணா கிளைமாக்ஸ் போடவேயில்லையே '' ராமன் ஆர்வமாய் கேட்க '' தோடா கிளம்பு '' என முறைத்தான் திரையரங்க ஊழியன்.

இருவரும் சோகமாக அங்கிருந்து கிளம்பினர் . இருவரும் அந்த படத்திற்கு சென்று திரும்பியதிலிருந்து பேசிக்கொள்வதில்லை . நட்பு முறிந்தது .

இருவரும் அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் போல எதிரில் பார்த்தால் முறைத்து கொள்வர் .

20 வருடங்களுக்கு பிறகு ,

ராமனின் நண்பன் வினோ , அது குறித்து கேட்டான் ,


'' அப்படி என்னதான்டா உங்களுக்குள்ள பிரச்சனை , ஒரே காலேஜ்ல படிச்சு ஒரே கம்பெனில 15 வருஷமா வேலை செய்றீங்க ''


ராமன் அவனும் கிருஷ்ணனும் பிட்டு படம் பார்க்க போனதை சொன்னான் .


'' அதுல என்னடா பிரச்சனை படத்துல பிட்டு இல்லனா அவன் என்ன செய்வான் , தியேட்டர் காரன் மேலதான உனக்கு கோபம் வரணும் ''
'' என் கோபம் அதுக்கில்லடா , அந்த படத்துல வர கிழவன் பேரு ராமன் , கதாநாயகன் பேரு கிருஷ்ணன் அதுக்குதான்டா , அதுக்காக என்ன பார்த்து கேவலமா சிரிச்சுட்டாண்டா'' கண்களில் கண்ணீருடன் ராமன் .
04 July 2008

பிளாக் எழுதியே நாசமாப் போனவன்!!!!!!!

'' டேய் மாப்ளே!!! என்னடா எப்படி இருக்கே , ரொம்ப நாளா ஆளும் இல்ல , போனும் இல்ல , உயிரோடதான் இருக்கியா!!!! '' சோகமாய் வினவினான் விஜய் .


'' இல்ல மச்சி , கொஞ்சம் பிஸிடா !! அதான் , எப்படி இருக்கே , அம்மா எப்படி இருக்காங்க , ஸாரிடா மாப்பி, போன் பண்ண்னும்னு நெனைப்பேன் அப்புறம் மறந்துருவேன் , '' கெஞ்சும் தோரணையில் அஜித் .


'' ஏன்டா நல்லாதான இருந்த என்ன ஆச்சு , என் மேல எதும் கோபமா , நான் எதும் தப்பா பேசிட்டனா , அப்படி எதும் பேசிருந்தா மன்னிச்சுர்ரா !!! ''


'' ச்சீ அப்படிலாம் ஒன்னுமில்லடா , நான் இந்த வலைப்பதிவுலாம் எழுத ஆரம்பிச்சுருக்கேன் , அதுல என்னோட கதை கவிதை விமர்சனம்லாம் எழுதறேனா அதான்டா , நிறைய யோசிக்க வேண்டி இருக்கு ''


'' வலைப்பதிவுனா?''


'' பிளாகுடா , நீ கூட ஏரிவாயன்னு ஒரு இங்கிலீஷ் பிளாகு வச்சிருக்கியே அது மாதிரி இது தமிழ்டா , தமிழ்ல வலைப்பதிவு ''


''ஸோ வாட் ''


''அதுதான்டா !! நிறைய யோசிச்சு எக்க சக்கமா எழுதறேன் , என்னோட கதை கவிதைலாம் கூட இருக்கு மாப்பி !! என்க்கு புனைப்பெயர் கூட இருக்குடா , ஜாம்பஜார் ஜக்குனு , என் வெப்சைட் அட்ரஸ் ஜக்குபாய் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம்டா மறக்காம பாருடா''


'' பாக்குறேன்டா , கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்புறம் பேசறேன் மச்சி , பாய்டா '' '' பாய்டா மாப்பி'' அஜித் மனதுக்குள் பரபரப்பாக இருந்தது விஜய் தன் வலைப்பூவை பார்த்து விட்டு என்ன சொல்ல போகிறானோ என்று .'' மச்சி விஜய் பேசறேன்டா !! ''


''சொல்லு மாப்பி ''


''மச்சி உன் பிளாக் பார்த்தேன்டா , நல்லாருந்துச்சி , பட் எனக்கு தான் ஒன்னும் புரியல ''


'' ஏன்டா , என்னாச்சு''


''நீ என்னமோ எழுதிருக்க , ஆனா பரவால்ல , நைஸ் , யாராவது வந்து பாக்குறாங்களா , ??''


அஜித்துக்கு என்னவோ போல் இருந்தது .


'' இது வரைக்கும் 2000 பேர் வந்து பார்த்துருக்காங்க மச்சி , ஆனா யாருமே கமெண்ட்ஸ் போட மாட்டேங்கிறாங்க , தமிழ்மணம்னு ஒரு திரட்டில போட்ருக்கேன் , அது மூலமா , வரவங்கதான் , தினமும் எப்படியாவது ஒரு பிளாக் போட்ருவேன்டா , ரெகுலரா அப்டேட் பண்ணிருவேன் , பட் தினமும் 20 பேர் தான் வராங்க , ரெண்டு நாளாதான் ஒன்னும் போடல , போஸ்ட் போட ஒரு மேட்டரும் கிடைக்கல மச்சி ''


'' சரி உன் பிளாக்ல நான் கமெண்ட் போடறேன் என் பிரண்ட்ஸ்கிட்டயும் சொல்லி கமெண்ட் போட சொல்றேன் ஓகேவா , யூ டோண்ட் வொரி ,'' , '' தேங்கஸ்டா மச்சி ''


'' ஒகே உன் லவ்வர் கீதா எப்படி இருக்காடா , '' ,


''மச்சி நான் அவளோட பேசறதில்லடா ''


''ஏன்டா ''


'' நீ வேற , அவளால என் பிளாக்ல இருக்கற கவிதைகள ரசிக்க முடியல , எப்படி என்னோட வாழப்போறா !! என் கவிதை மொக்கையா இருக்காம் , அதுவுமில்லாம அவளோட பேசினா , என்னால என் பிளாகுக்கு மேட்டர் எதும் யோசிக்க முடியறதில்ல அதான்டா!!


''அடப்பாவி இதுக்கு போயி எவனாவது இப்படி பண்ணுவானா !! லூசாடா நீ ? ''


'' மச்சி உனக்கு என்னடா தெரியும் நம்ம எழுத்த நாலு பேரு படிச்சு , அது மூலமா கிடைக்கிற அந்த பாராட்டு அதுனால கிடைக்கிற அந்த சந்தோசம் , அந்த கிக்கே தனிடா ''


''மச்சி , நீ எதுக்கோ அடிமை ஆகிட்டேனு நினைக்கிறேன் , வீட்லதான இருக்க உங்கம்மாவ கூப்பிடு , நான் கொஞ்சம் பேசணும் ''


''மாப்பி அம்மாகிட்ட கொஞ்சம் பிரச்சனைடா , அம்மாகிட்ட சரியா பேசறதில்ல , எப்ப பாரு கம்ப்யூட்டரே கதினு இருக்கேனு என்ன ஒரு நாள் ரொம்ப திட்டிட்டாங்கடா , நானும் அவங்கள கன்னாபின்னானு திட்டிட்டேன் ''


'' அட இழவெடுத்தவனே !! அப்படி என்னதான்டா இருக்கு அந்த கருமம் புடிச்ச பிளாக்ல , அஞ்சு காசுக்கு பிரயோஜனமிருக்கா !!''


'' மாப்பி நான் காசுக்காக எழுதறதில்லடா , மனசு திருப்திக்காகடா , நான்லாம் சுஜாதா, பாலகுமாரன் மாதிரி வரவேண்டியவன்டா , கொஞ்சம் மிஸ் ஆகி இப்படி ஆகிட்டேன் , என் எழுத்துக்கு இங்கதான்டா சரியான அங்கீகாரம் கிடைக்குது ''


''உன்னலாம் திருத்தவே முடியாது , வை போன!! நீயெல்லாம் பிளாக் எழுதியே நாசமாப்போகப் போறடா , தயவு செஞ்சு இனிமே எங்கிட்டயும் பேசாத!!''


பட்டென அலைபேசி இணைப்பை துண்டித்தான் விஜய் .காலச்சக்கரம் மேலும் 6 மாதங்கள் சுழன்றது


அஜித் தன் காதலியுடன் ஸ்பென்சர் பிளாசாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தான் , அங்கே வந்த விஜய் இந்த காட்சியை பார்த்து ஆச்சர்யத்துடன் அஜித்திடம் ஓடிச்சென்று


'' மச்சி !! எப்படிடா இருக்கே , என்னடா என்னலாம் மறந்துட்டியா , மறுபடியும் கீதாவோட பேச ஆரம்பிச்சுட்ட , ஏய் கீ (தா) நாயே நீயாவது ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல !! ''

'' மாப்பி , நானே உனக்கு கால் பண்ணலாம்னு இருந்தேன்டா , இப்பலாம் நான் பிளாக் எழுதறதில்லடா , ''


'' அட்ரா சக்கை , இது எப்பருந்து ''


'' மச்சி இந்த பிளாக்னாலே என் வாழ்க்கைல நிறைய விசயங்கள இழந்துட்டேன்டா , அதுவுமில்லாம இந்த பிளாக்ல நல்ல கதை நல்ல கவிதைலாம் எவன் படிக்கிறான் , ஒரே அரசியல் அங்க செக்ஸ்க்கும் சென்ஷேஸன்க்கும்தான்டா மதிப்பு , நானும் எப்படி எப்படியோ எழுதி பார்த்துட்டேன் ம்ம்ம் ஒரு பய நம்ம பிளாக்க மதிக்கலையே , அந்த விரக்தி எனக்கு வாழ்க்கைய உணர்த்திருச்சுடா , நான் இதனால என் வாழ்க்கையின் எத்தனை முக்கியமான தருணங்களை ரசிக்காம விட்டுட்டேன் , எக்ஸம்பிளுக்கு ஒன்னு சொல்லட்டா , இதோ என் செல்லக்குட்டியோட இந்த அழகான புன்னகையக்கூட ரசிக்க முடியாம போயிடுச்சே ''


கீதா வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டாள் . விஜயால் நம்பவே இயலவில்லை . கையை கிள்ளி பார்த்துக்கொண்டான் .


பெருமகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றவன் இன்னும் அஜித்தின் இந்த மாற்றத்தை நம்ப இயலாமல் மீண்டும் விஜய்க்கு தன் அலைப்பேசியில் அழைத்தான்


'' மச்சி விஜய்டா '' , '' சொல்லு மாப்பி ''


'' மச்சி உண்மைய சொல்லு நீ உண்மைலயே பிளாக் எழுதறத விட்டுட்டியா ''


''மாப்பி , நீ பெரிய தில்லாலங்கடிடா , கண்டுபிடுச்சுட்டியே !!''


'' அப்ப நீ இன்னும் திருந்தலையா ''


'' மாப்பி இப்பவும் நான் பிளாக் எழுதறேன் , ஆனால் முன்னால மாதிரி இல்ல , பிளாக் மட்டுமே உலகமில்லனு புரிஞ்சுகிட்டேன் , பிளாக் படிக்கிறவங்களுக்கு என்ன புடிக்குமுன்னு தெரிஞ்சு அதுக்கேத்த மாதிரி எழுத முயற்சி பண்றேன் , அதுனால நிறைய புதுபுது நண்பர்கள் கிடைக்கிறாங்க , ஆனால் ஒன்னு இந்த பிளாக் என் பெர்சனல் வாழ்க்கைய எந்த விதத்திலயும் பாதிக்காத மாதிரி பாத்துக்கறேன் , எதுக்குமே அடிமையாகம அத புரிஞ்சுகிட்டு

பண்ணா நிச்சயம் அந்த விசயத்துல பெரிய ஆளா வரலாம்டா , அது வாழ்க்கையா இருக்கட்டும் பிளாக்கா இருக்கட்டும் , அது இரண்டுக்குமே பொருந்தும் , பலன எதிர்பார்க்காம செய்ற எந்த வேலையும் ரொம்ப அழகாருக்கும் ''


'' அட நாயே , அப்ப காலைல கீதாவ வச்சுகிட்டு சீன் போட்ட?''


'' நீ வேற அவளுக்கு நான் பிளாக் எழுதறது தெரிஞ்சா அவ்ள்ளோதான் , சாமி தயவுசெஞ்சு அவகிட்ட மட்டும் சொல்லிறாத !!''


'' ஓகேஓகே , எப்படியோ போ!!''


''மச்சி இப்பக்கூட நாம பேசினத வச்சிதான் அடுத்த போஸ்ட் ஆரம்பிச்சிருக்கேன்டா ''


'' அட கருமாந்திரம் புடிச்சவனே , நீ பிளாக் எழுதியே நாசமா போ!!! என்ன விடு , பாய் ''


அஜித் தனது புதிய பதிவை தன் கணினியில் தொடங்கினான் '' பிளாக் எழுதி நாசமாப்போனவன்!!!!'' என்று.

03 July 2008

திருவள்ளுவர் வேடத்தில் ரஜினி!!!!!!!!

நடிகர் ரஜினகாந்த் செயின்ட் தாமஸ் குறித்து எடுக்கப்படும் புதிய படத்தில் திருவள்ளுவரின் வேடத்தில் நடிக்கலாம் என இன்றைய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .


50 கோடி ரூபாய் செலவில் கத்தோலிக்க திருச்சபையினரால் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் தவிர மேலும் பல முண்ணனி நாயகர்களும் நடிக்க உள்ளதாகவும் , இத்திரைப்படத்தின் தொடக்க விழா அடுத்த வியாழன் அன்று தமிழகமுதல்வர் கலைஞர் முன்னிலையில் நடக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டடுள்ளது .
இத்திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் திரு.பால்ராஜ் கூறுகையில் இத்திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சியில் புனித தோமையரும் திருவள்ளுவரும் சந்திக்கும் காட்சி வருவதாகவும் அக்காட்சியில் திருவள்ளுவராக நடிக்க ரஜினியிடம் பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் .


இது தவிர இப்படத்தில் passion of the christ படத்தில் இயேசுவாக தோன்றிய James caviezel ம் நடிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார் .

02 July 2008

என் வாழ்க்கை விற்பனைக்கு......EBAY.COM ல்நம்மில் பலருக்கும் நாம் வாழும் இந்த வாழ்க்கையும் , வாழ்க்கை முறையின் மீதும் அலுப்பும் வெறுப்பும் , விரக்தியும் பல தருணங்களிலும் ஏற்படுவதுண்டு , அது போன்ற சமயங்களில் நாம் என்ன செய்து விடுவோம் ? அதை நினைத்து வருந்துவோம் , அட ஆண்டவன் நமக்கு என்ன எழுதியுள்ளானோ அதுதான் நடக்கும் என நம்மை நாமே தேற்றி கொள்வோம் . அதை தவிர நம்மால் என்ன செய்து விட முடியும் , இந்த வாழ்க்கையை சிறிது மாற்றி வேறு பல நமக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபட்டு இந்த நிலையை மாற்ற முயலுவோம் .இதற்கும் மேல் நம்மால் என்ன செய்து விட இயலும் . அதைத்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் செய்திருக்கிறார் . தன் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் இ-பே (ebay) என்கிற நம் பொருட்களை இணையத்தில் விற்கும் இணையத்தளத்தில் விற்றுள்ளார் . என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா , எனக்கும் அப்படித்தான் இருந்தது முதன்முதலில் இந்த செய்தி குறித்து கேள்வி பட்டதும் .
அந்த மனிதரின் பெயர் இயான் உஷர் (உஷார் அல்ல !!) , 44 வயதான இவர் இங்கிலாந்தின் டர்ஹமில் வாழ்ந்து வந்தவர் 2001ல் ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதிக்கு குடியேறினார் . அவர் அங்குள்ள ஒரு தங்கச்சுரங்கத்தில் சரக்குந்து ஒட்டுனராக பணிபுரிபவர் . இவர் கடந்த வாரம் இ-பே இணைய தளத்தில் தன் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் வாழ்க்கை முறையையும் விற்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பலருக்கும் அவ்வறிவிப்பில் அதிர்ச்சி , அது குறித்து அவர் தனது இந்த இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் , அவர் தனது மனைவியை சில நாட்களுக்கு முன் பிரிந்துவிட்டதாகவும் , அதில் தனக்கு உடன்பாடில்லை எனவும் இருப்பினும் சூழ்நிலை காரணமாக அவரது மனைவியை பிரிய நேரிட்டதாகவும் , இப்போது அவர் வாழுகின்ற அவரது வீடும் , வீட்டில் உள்ள பொருட்களும் அவரது வாழ்க்கை முறையும் அவரது மனைவியை ஞாயபக படுத்துவதாகவும் , அதனால் தான் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளானதாகவும் அதனாலேயே தான் தன் வாழ்க்கையையும் வாழ்க்கை முறை, தன் வீடு, அங்குள்ள பொருட்கள் , தனது கார் , தனது இரு சக்கர வாகனம் , தனது ஜெட் ஸ்கீ , தனது நண்பர்கள் , தன் வேலை , தன் பிற அனைத்து வித சொத்துக்கள் என அவருக்கும் அவரது வாழ்க்கைக்கும் தேவையான அனைத்தையுமே சேர்த்து ஏலத்தில் விட 1 ஆஸ்திரேலிய டாலர்களில் தொடங்கிய ஏலம் 100 ஆயிரம் இங்கிலாந்து பவுண்ட்ற்றிகு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது . அவர் இந்த பணத்தை வைத்து தான் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க இருப்பதாக கூறியுள்ளார் . அவரது இணையத்தளத்தில் இன்னும்ம் அதிக விபரங்களும் இருப்பதால் இது குறித்த செய்தி அவ்வளவே .
இந்த செய்தி பல பெரிய ஊடகங்களில் வெளிவராததற்கு என்ன காரணம் என புரியவில்லை , இது ஒரு வேளை இணையங்களில் உலா வரும் பல ஸ்பேம் களில் ஒன்றா எனவும் கூற இயலவில்லை . எது எப்படி இருப்பினும் தன் வாழ்க்கையை விற்பது என்பது ஒரு நூதன வகை விற்பனை வழியாகவே எனக்கு படுகிறது . தன் வீட்டை காலி செய்து விட்டு வேறு ஊருக்கு புலம் பெயரும் பலரையும் நாம் பார்த்திருப்போம் அவர்கள் தன் வீட்டையும் அதன் பொருட்களையும் ஒரு நல்ல விலைக்கு மொத்தமாக விற்று விட்டு செல்வதை கொஞ்சம் மெருகேற்றி அதற்கு பரபரப்பு ஏற்படுத்தி நல்ல விலைக்கு விற்கும் சிறந்த வழியாகவே இது தோன்றுகிறது . அவர் விற்ற மொத்த பொருட்களிள் மதிப்பைவிட அதிக விலைக்கே அவை விற்கப்பட்டுள்ளதே இதற்கு சாட்சி. அவரது இந்த நூதன விளம்பரத்திற்கு அவரை கட்டாயம் பாராட்டியே தீர வேண்டும் . இது போல பரபரப்புக்கு அடிமையாகி எதை விற்றாலும் வாங்கும் நம் மக்களின் இந்த விளம்பர மோகத்தை என்ன சொல்லித்தான் திறுத்துவதோ!!!!!!!!!


01 July 2008

பதிவர் லிவிங்ஸ்மைல் வித்யா குறித்த செய்தி : டெக்கான் குரோனிக்கிளில்


பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யா குறித்து அனைவருக்கும் தெரிந்ததே , அவரை பற்றியும் அவரது வலைத்தளம் பற்றியும் இன்று வெளியான Deccan Chronicle செய்தி . அவரது வலைப்பூ http://livingsmile.blogspot.com/ (அவரைப்பற்றி தெரியாதவர்களுக்காக )படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்வித்யா அவர்கள் திருநங்கைகளுக்காக செய்து வரும் நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்