Pages

31 October 2008

வாசகர்கடிதம் - 31.10.08 ( FROM அன்பு நண்பர் அகில் )

கடந்த வாரம் அக்டோபர் 26ஆம் தேதி வந்த மின்னஞ்சல் கடிதம் . அவரது தளத்தில் சாருவை விமர்சித்து நிறைய பதிவுகள் எழுதி வந்தார் . நேற்று அத்தளத்தை பார்த்தபோது அதில் பொறுக்கி அகில் செத்துவிட்டான் என எழுதியிருந்தது . அகிலே அகிலை கொன்று விட்டாரோ . அதிஷா அதிஷாவை கொல்ல முயற்ச்சிப்பது போல . எப்படியோ ''நான்'' அழிந்தால் சரிதான் .


*************************


அகிலின் கடிதம் :

அதிஷா அவர்களுக்கு உங்கள் வலைப்பூவை சில நாட்களாக வாசித்து வருகிறேன். உங்கள் கதைகளையும், விமர்சனங்களையும் வாசிக்கிறேன்.

விமர்சனங்கள் அருமை. கதைகள் எழுதும்போது பொறுக்கி பெருமாளை போல நிறைய ஆபாச வார்த்தைகளை எழுதுகிறீர்கள். தமிழ் இணையத்துக்கு ஒரே ஒரு பொறுக்கி பெருமாள் போதும். எல்லோருமே பொறுக்கியாகி விட்டால் தமிழும் பொறுக்கி மொழி ஆகிவிடும்.

இனிமேல் நீங்கள் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி எழுதுவதை தவிர்க்கவும். மீறி எழுதினால் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பல்ல. பொறுக்கி பெருமாளுக்கு என்ன மரியாதை கிடைக்கிறதோ அதே மரியாதை உங்களுக்கும் கிடைக்கும்.

மற்றபடி நன்றாக எழுதிவருகிறீர்கள். அரசியல் குறைவாகவும், மசாலா அதிகமாகவும் இருக்கும் இப்போதைய நிலையை அப்படியே தொடரவும். ஆபாசத்தை மட்டும் குறைத்துகொள்ளவும்.

அகில்

http://akilpreacher.blogspot.com/
அக்டோபர் - 26
7.45. PM

**************************

எனது பதில் கடிதம் :

அன்பின் அகிலுக்கு

வணக்கம் தங்கள் கடிதம் கண்டேன் மிக்க மகிழ்ச்சி ,.தங்கள் விமர்சனங்களுக்கு நன்றி . தங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள இயலாது . நான் நானாகவே இருக்க எண்ணுகிறேன் . அதையே நமது தளத்தை படிக்கும் நமது வாசகர்களும் விரும்புகிறார்கள் .
நீங்கள் என்னை பொறுக்கி அதிஷா என்று சொன்னாலும் எனக்கு மகிழ்ச்சியே .

அன்புடன்

அதிஷா.
31.10.2008


************************

ஒபாமாவின் உயிரை காத்த கோவை ஜோதிடர்கள்...!!


பராக் ஒபாமாவை பற்றி நம்மில் பலருக்கும் சமீபகாலமாக நல்ல பரிச்சயம் ஏற்பட்டிருக்கிறது . அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முண்ணனி போட்டியாளர். அவர் அமெரிக்காவின் அதிபராக அதிக வாய்ப்புள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் கூறி வருகிறது . அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் , சில தினங்களுக்கு முன் அவரை சுட்டு கொலை செய்ய முயன்றதாக அமெரிக்காவில் இருவர் கைது செய்யப்பட்டதும் அனைவருக்கும் நினைவிருக்கலாம் . சரி கோவை ஜோதிடர்களுக்கும் ஒபமாவுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது .

'' மிரித்யுன்ஜயா யாகம் '' என ஒருவகை யாகம் அல்லது பூசை இருக்கிறது . இது எதிர்பாராத வகையில் ஏற்படும் சாவை அல்லது ஆபத்தை தடுக்கவல்லதாம் . அந்த யாகத்தை பற்றி பின்னர் பார்ப்போம் . அவ்வகை யாகம் ஒன்றை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமா அவர்களுக்காக சென்ற வாரம் கோவையில் இருக்கும் ஒரு சிறிய கோவில் ஒன்றில் வைத்து செய்திருக்கிறார்கள் . அது குறித்து நகரில் பலரும் அறிந்து அது குறித்து எள்ளி நகையாடியுள்ளனர் . இது புகழடைய நினைக்கும் சில ஜோதிடர்களின் வெட்டி ஸ்டன்ட் என்றும் சிலர் கூறினர் . ஆனால் அதை பொய்யாக்கும் விதத்தில் இய்யாகம் நடத்தி இரண்டாவது நாளே இருவர் ஒபாமாவை கொல்ல முயன்றதாக கைதானதும் இவ்விடயம் உச்சத்திற்கு சென்றுள்ளது .

இது தற்செயலானதா என இய்யாகத்தை நடத்திய கோவை ஆர்ய வைத்திய பார்மஸியின் இயக்குனர் பிஆர் . கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது , ஒபாமாவின் ஜாதகத்தை பார்த்து அதில் அவருக்கு தற்சமயம் ஒரு கண்டம் இருந்ததாகவும் அதிலிருந்து அவரை விடுவிக்கவே இய்யாகம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் . அதுதவிர அவர் இது போல நமது அரசியல் தலைவர்களின் ஜாதகங்களையும் கண்டறிந்து அதற்கேற்றாற் போல நமது இந்திய அரசாங்கத்தை அமைத்தால் இந்தியா விரைவில் வல்லரசு நாடாகும் எனவும் தெரிவித்துள்ளார் .

மிருத்யுன்ஜெயா யாகம் என்பது என்னவென்று பார்ப்போம் , இவ்வகை யாகம் சிவபெருமானை நோக்கி நடத்தப்படுபவை , இது எதிர்பாராத விபத்து அல்லது நாட்பட்ட நோய் போன்ற ஆபத்துக்களில் இருந்தும் நம்மை காக்க வல்லதாம் . சமஸ்கிருதத்தில் மிருத்யு என்றால் இறப்பு என்றும் ஜெயா என்றால் வெற்றி என்றும் பொருள் . அதாவது சாவை வெற்றி கொள்ள செய்யும் யாகம் என்று பொருள் படும் . பண்டிதர்கள் 1,25,000 முறை யாரை நோக்கி யாகம் நடத்துகிறோமோ அவர் பெயரையும் அவருக்குரிய மந்திரத்தையும் ஒதுவார்கள் . இய்யாகத்தில் துருவா எனப்படும் புல்லையும்(அருகம்புல்), அம்ரிதா எனப்படும் மூலிகையையும் அர்பணிப்பார்கள் .
காக்கை உக்கார பனம் பழம் விழுந்ததாக ஒரு பழமொழி உண்டு , இவ்விடயம் அதைப்போன்றதே , ஓபாமாவை கொல்ல அனுதினமும் அவரது எதிரிகள் முயன்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று . இந்த ஜோதிடர்கள் தாங்கள் நடத்திய யாகத்தால்தான் அவர் உயிர்தப்பினார் என்று கூறுவது ஏற்கனவே அறியாமை இருளில் மூழ்கி கிடக்கும் நம் மக்களை மேலும் இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாக்கும் முயற்சியே . அது தவிர ஒரு சில ஜோதிடர்கள் தங்கள் பெயரை மேலும் புகழடைய செய்யவும் இது போல செய்யலாம் . இப்படி யாகம் நடத்தி ஒருவரது உயிரை காப்பாற்றிக்கொள்ளலாம் என்னும் பட்சத்தில் நாட்டில் எதற்கு இத்தனை மருத்துவமனைகள் இராணுவம் மற்றும் காவல்துறையும் , மணி ஆட்டுவதற்கா? .

ஒபாமாவை காப்பாற்றியது சி.ஐ.ஏ வும் எப்.பி.ஐயும் , அதைவிடுத்து எங்கோ அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் உயிர் பிழைத்தது இங்கு நடத்திய யாகத்தால்தான் என்பது கேலிக்கூத்தாக இல்லையா . நம் நாட்டில் அனுதினமும் ஆயிரம் ஆயிரம் மக்கள் தேவையற்ற குண்டு வெடிப்பால் இறந்து கொண்டிருக்கின்றனர் . நேற்று கூட அஸஸாமில் 15 நிமிடங்களில் 18 குண்டுவெடிப்புக்கள் அதில் இறந்துபோகும் குழந்தைகள் . இப்படி லட்சக்கணக்கில் அப்பாவியாய் இறந்து போகும் மக்களுக்காக யாகம் நடத்துவதுதானே .

இதையெல்லாம் விட்டுவிட்டு வெறும் புகழுக்காக ஜோதிடம் என்னும் ஒரு கலையை பயன்படுத்தி புகழடைய நினைக்கும் சராசரி ஜோதிடர்களின் ஏமாற்று வேலையே இந்த யாகம் ,___ ,____ , எல்லாமே . ஓபாமாவிற்கு இருக்கும் மத ( இந்து மத ) நம்பிக்கையை பயன்படுத்தி அவரிடம் தங்களை முன்னிறுத்தும் முயற்சியாகவே நமது கோவை ஜோதிடர்களின் முயற்சி இருக்கிறது .


செய்தி உதவி : டெக்கான் குரோனிக்கிள் . நன்றி
படம் உதவி - கூகிள்

29 October 2008

சேவல் - செம லோக்கல் மாமு....


சேவல் :

சேவல் சண்டைகள் பார்த்திருக்கிறீர்களா , அதில் இரண்டு சேவல்களை மோத விடுவார்கள் , அவை மோதி கொள்ளும் போது அதில் இருக்கும் மூர்க்கத்தனமும் , வன்முறையும் வேகமும் அந்த சேவல்களுக்கு நடுவில் மட்டுமல்லாது , அதை பார்ப்பவர் மனதிலும் தொற்றிக்கொள்ளும் . அதன் தாக்கம் மிக வன்மையும் வலியும மனதில் பதியும் . இத்தனைக்கும் அச்சேவல்கள் நமதாக இல்லாதிருந்தாலும் அப்படி ஒரு உணர்வு தோன்றும் .
1980களிலும் 75க்கு பிறகும் வெளியான பெரும்பாலான படங்களின் கதைகளிலிருந்து , ஒரு ஒரு பருக்கையாக எடுத்து மொத்தமாக கிண்டி , ஒரு பானையில் அடைத்து 20 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் சுண்டகஞ்சி போல வந்திருக்கும் படம் சேவல் . இது சாதாரண சுண்டகஞ்சியாக இல்லாமல் குடும்பத்தோடு அனுபவிக்க வல்ல சுண்டக்கஞ்சியாக கொடுத்ததில் படத்தின் இயக்குனர் ஹரி வெற்றிப்பெற்றுருக்கிறார் என்றே சொல்லவேண்டும் . பி&சி சென்டருக்கு படம் எடுக்க வேண்டுமா கூப்பிடரா ஹரியை என்பது போல படம் வந்திருக்கிறது . பி&சி ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து படத்தை எடுத்திருக்கிறார் ஹரி .

குயில்கள் கூவும் கிராமம் , ஒரு வில்லத்தனமான நாட்டமை , போக்கிரியான ஹீரோ , அம்மா இல்லாத அக்ரகாரத்து அழகு ஹீரோயின் , அவளை வளர்த்த பாசக்கார அக்கா , இடையில் காதல் , நாட்டமைக்கு ஹீரோயின் மீது கண் , அதனால் சிக்கல் , அக்காவுக்கு புற்றுநோய் , அதனால் அக்கா புருஷனை கல்யாணம் செய்து தியாகம் செய்யும் ஹீரோயின் , அவளுக்கு சிக்கல்தரும் நாட்டாமை , நாட்டாமையை பழிவாங்கும் ஹீரோ , முடிவில் சுபம் .

இந்த ஒரு பத்தி கதையை வடிவேலுவின் நகைச்சுவை , சிம்ரனின் செண்டிமென்ட் , பரத்தின் துள்ளல் என அழகாக முடிச்சு போட்டு குடும்பத்தோடு பார்க்க தகுந்த வகையில் திரைக்கதை அமைத்திருக்கின்றனர் . படத்தின் முதல் பாதியில் நகைச்சுவை மற்றும் இரண்டாம் பாதியில் செண்டிமென்ட் எனும் வெற்றி பார்முலாவோடு களமிறங்கியிருக்கிறார்கள் .

படத்தின் ஹீரோ பரத் , பரத்துக்கு பிஞ்சுமூஞ்சி , அதை தனது நான்கு நாள் தாடியில் மறைக்க முயல்கிறார் . படம் முழுக்க ஓடுகிறார் , மூன்று குத்தாட்ட பாடல்களில் குத்து குத்தென குத்துகிறார் , இரண்டு சண்டைகளில் அடித்து உதைக்கிறார் , இரண்டு சோகப்பாடலில் அழுகிறார் . படம் முழுக்க பருத்திவீரன் கார்த்தியை காப்பியடித்தது போல உணர்வு .

படத்தின் ஹீரோயின் பூனம் பஜ்வா ( என்ன பேரு!!) படம் முழுக்க வருகிறார் , கதையும் அவரை சுற்றியே பயணிக்கிறது , இளைத்து போன பானு போல இருக்கிறார் . கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார் . இறுதிக்காட்சியில் மொத்தமாய் தாய்மார்களின் மனதை கொள்ளை கொள்கிறார் . ( கிளைமாக்ஸில் மொட்டை அடித்துக்கொள்கிறார் அது நிஜ மொட்டையா அல்லது கிராபிக்ஸா தெரியவில்லை எப்படி பார்த்தாலும் அழகு!! )

படத்தில் முக்கிய பாத்திரத்தில் சிம்ரன் , நிறைவாக செய்திருக்கிறார் , சிம்ரனுக்கு லேசான தொப்பை ( சிம்முக்கு வயசாகிருச்சோ!! ம்ம் ) .படத்தில் கேன்சர் வந்த பிறகு மேக்கப்பில்லாமல் நடித்திருப்பார் போல படம் பார்த்துக்கொண்டிருந்த தோழர் அதை உறுதி செய்தார்.

வடிவேலு அடிவாங்குவதை வித்தியாசமாக முயற்சித்திருக்கிறார் . சில இடங்களில் குணச்சித்திர நடிப்பில் அசத்துகிறார் . திரையரங்கில் படத்தில் நடித்த மற்ற எந்த நடிகருக்கும் இல்லாத விசில் , வடிவேலு திரையில் தோன்றும் போதெல்லாம் வருகிறது . வடிவேலுவை பார்த்தேலே தாய்மார்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

இது தவிர ராஜேஷ்,சவீதா ஆனந்த் , என இன்னும் நிறைய நட்சத்திரங்கள் , படத்தின் ஓட்டத்தில் வந்து வந்து போகின்றனர் .

இசை - இம்சை

ஒளிப்பதிவு மிக அழகாகவும் , படத்தில் இரண்டு சண்டை காட்சிகள் என்றாலும் படம் பார்க்கும் பார்வையாளன் மனதில் படம் நெடுக வன்முறையை ஓட விட்டிருப்பது அருமை . ( ரத்தமே இல்லாமல் வன்முறை )

படத்தின் இறுதிக்காட்சியில் பெரியார் கூறிய கருத்துக்களில் சிலவற்றை(மறுதார மணம் , பார்ப்பனிய எதிர்ப்பு , மூடநம்பிக்கைகள் ) மிக அழகாகவும் நாசூக்காகவும் இணைத்து , பார்வையாளன் மனதில் நச் என பதியவிட்டிருக்கிறார் இயக்குனர் . பெரியாரின் கருத்துக்கள் எப்போதுமே நம்மவர்களுக்கு விளக்கெண்ணெய் குடிப்பது போலத்தான் இருக்கும் , அதே விளக்கெண்ணெய் ட்ரீட்மெண்டை ஒரு சுவையான வாழைபழத்தில் வைத்து கொடுத்த இயக்குனருக்கு சபாஷ் . இது தவிர இது போன்ற ஒரு சர்ச்சைகுரிய விடயத்தை எடுத்துக்கொண்டு தைரியமாக படமாக்கியமைக்கும் இன்னொரு சபாஷ் .

படத்தின் பெரிய மைனஸ் , படத்தின் இரண்டாம் பாதியின் நீளம் , கொஞ்சம் குறைத்திருக்கலாம் , இரண்டாவது அரதப்பழசான செண்டிமென்ட் காட்சிகள் ( உதா ; புற்றுநோய் அதுவும் ரத்தப்புற்று நோய் ) . பாடல்கள் எரிச்சல் . அளவுக்கதிகமான வன்முறை ( ரத்தமே இல்லாமல் வன்முறையை பதியவிட்டிருப்பது , வடிவேலு காமெடியிலும் கூட ) . பரத்தின் நடிப்பு சமயங்களில் எரிச்சலூட்டுகிறது .

சமீபகாலமாக குடும்பத்தோடு பார்க்கவும் கொண்டாடவும் அதிகமாக படங்கள் வருவதில்லை , அந்த குறையை இப்படம் நிவர்த்தி செய்யும் . ( நேற்று தியேட்டரில் பார்த்த தாய்மார்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சி ) . இப்படம் பிராமணர்களை நிச்சயம் கவராது .

ஆனால் சாதாரண குடும்பத்து நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களை நிச்சயம் ஈர்க்கும் . (அதாவது பி&சி )

சேவல் - கமர்ஷியல் பிரச்சாரம்.

23 October 2008

கிழிஞ்ச டவுசர்*************************
கோவையிலிருந்து பேரூர் போயிருக்கிறீர்களா , பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மிகப்பிரபலம் , மிகப்பழமையான கோவில் , ஊரும் மிகப்பழமையானதுதான் , அக்கால சிற்பங்களும் கல்வெட்டுக்களும் நிறைந்த ஒரு கோவில் , நம் கதை அவ்வூரைப்பற்றியும் கோவிலைப்பற்றியுமிலை , அந்த பாதையில் வழியில் இரண்டு ஊருக்கும் மத்தியில் செல்வபுரம் உள்ளது . செல்வபுரத்தின் மத்தியில் சிவாலயா தியேட்டர் , அதை ஒட்டி பிரியும் இரண்டு சாலைகளில் தியேட்டருக்கு மிக அருகில் கார்ப்பரேசன் எலிமெண்டரி ஸ்கூலுக்கும் இன்னொன்று மூன்று மைல் தூரத்தில் இருக்கும் சேரிக்கும் செல்வது . சிவாலயா தியேட்டரில் சினிமா ஓடிக்கொண்டிருந்தால் அதில் எலிமெண்டரி ஸ்கூல் பையன்களுக்கு வசனமாவது கேட்கும் . அவன் , அதாவது குமரன் இக்கதையின் நாயகன் அங்கேதான் படித்துக்கொண்டிருந்தான் , மூன்றாம் வகுப்பு ஒரே பிரிவு . அந்த பள்ளியில் ஏ பி சி டி என பிரிவுகள் இல்லை , மொத்தமாய் அவ்வகுப்பில் படிப்பவர் எண்ணிக்கை முப்பதைத்தாண்டாது.

வெட்டிவைத்த கேக்குபோல அடுக்கடுக்காய் அரைமஞ்சள் கட்டிடங்கள் , கருஞ்சிவப்புக் ஒடுகளின் கூரை ,நைல்நதி போல கூரையில் தண்ணீர் ஓடிய கருப்பு சுவடுகள் , சுண்ணாம்பின்றி சிதிலமடைந்த சுவர்கள் அதில் இலங்கை மலேசியா போல அங்கங்கே குட்டி தீவுகள் , அதை சுற்றி கூம்பு வடிவத்தில் வரிசையாய் அசோகர் மரம் , மரத்தின் கீழே காய்ந்து போன அசோகர் மர கறுப்பு பழங்களும் அதன் வெளிர்மஞ்சள் நிற காய்ந்த கொட்டைகள் , மரத்துக்கு மரம் தாவும் பெண்அணில்கள் அதனை கீகீகீ என்று துரத்தும் ஆண் அணில்கள் , அவைகளின் ஊடல் , கூட்டம் போட்டு முடிவெடுக்கும் காக்கைகள் .


மத்தியில் மைதானம் , மைதானத்தின் ஒரு பக்கம் துருப்பிடித்த கொடிக்கம்பம் , அதில் கொடியில்லை , இன்னொருபக்கம் சத்துணவுக்கூடம் , சுற்றி அங்கங்கே உடைந்த நிலையில் சுற்றுச்சுவர் , சுற்று சுவரினை சுற்றியும் ஒரடி உயரத்தில் சிறுவர்கள் அடித்த சிறுநீர் , மறுபக்கத்தில் ஒன்னரை அடியில் பெரியவர்கள் அடித்த சிறுநீர் ,மலம் அதிலிருந்து நூல் பிடித்ததுபோல சுற்றுசுவரை ஒட்டி சத்துணவுக்கூடம் , சோறு தின்னும்போது கெட்ட நாற்றம் குடலை பிடுங்கும் . கழுவி பல வருடமான கழிவறை அருகில் டைனில் ஹால் இருப்பது போல .

அந்த கூடத்தை நோக்கி நீலம் அதிகமாகிய வெள்ளை சட்டையும் காக்கி நிற அரை கால்சட்டையில் பயல்களும் வெள்ளைசட்டையும் நீலநிற நீளமான பாவடையில் பாப்பாங்களும் ஒருவரோடு ஒருவர் மோதித்தள்ளியபடி நின்றிருந்தனர் . கலைத்துவிட்ட எறும்புக்கூட்டம் போலிருந்த வரிசையை சத்துணவு ஆசிரியர் அசோகர்மரகுச்சியால் மிரட்டியபடி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார் .


அசோகர் மரக்குச்சியால் குண்டியில் அடித்தால் பிருஷ்டம் சிவந்துவிடும் வானவில்போல (ஆனால் ஓரே நிறத்தில்), அந்த வடு மறைய மூன்று நாளாவது ஆகும் வலி மறைய ஒரு வாரமாகும் . அந்த குச்சி அத்தனை வலுவாக இருக்காது , ஆனால் நன்றாக வளைந்து கொடுக்க வல்லது . அடிவாங்கினால்தான் தெரியும் அதனருமை . இளம்பிருஷடங்களில் ஆளமாய் பதிந்து விடும் .

குமரன் மூக்கில் சளி மஞ்சள் நிறத்தில் வழிந்து உதட்டின் வழியே வாய்க்குள் நுழையும்போது அதை புறங்கையால் வளித்துவிட்டான் . அந்த நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தான் . குமரனுக்கு பிடித்த முட்டை வெள்ளிகிழமைகளில்தான் சத்துணவில் கிடைக்கும் . வெள்ளை நிற முட்டைகளில் சில வெளிர் நிறத்திலும் , சில வேகாமலும் , சில உடைந்தும் , மஞ்சள் கரு பிதுங்கி வெளியாகிய நிலையிலும் , சரியாக உரித்திடாதும் முட்டையின் மேலேயே ஓட்டுடன் சிலவும் , குமரனுக்கு அப்படி பட்ட முட்டைகளை எப்போதும் பிடிக்காது , முட்டை என்றால் முழுமையாய் வளுவளுவென வெண்ணைதடவிய பளிங்குகல் போல எங்கும் உடைந்திடாமல் இருக்க வேண்டும் . இல்லையென்றால் அதை அப்படியே போட்டுவிடுவான் .

சத்துணவில் தரப்படும் சோறும் குழம்பும் அவனுக்கு எப்போதுமே இஷ்டமில்லாதது . வெள்ளிகிழமைகளில் மட்டும் முட்டையால் அது பிடித்துபோயிருந்தது . அவன் சிலகாலமாய் செல்லியம்மன் கோவில் நாகத்தா புத்தில் வாழும் பாம்பிடம் பிரார்த்திக்கிறான் என்றாவது ஒரு நாள் அவன் பள்ளியில் வாரம் முழுதும் முட்டை வழங்க .


தினமும் அந்த பாம்பு புத்தில் பலரும் முட்டைகளை வைப்பதை பார்த்திருக்கிறான் , அந்த பிரார்த்தனைக்கு பாம்பு புத்து நாகாத்தாவை விட சிறந்த கடவுளர் உண்டா ? . அவனது பிரார்த்தனைகள் விசித்திரமானவை ,நாகாத்தாவிடம் முட்டைக்காக பிரார்த்தனை செய்பவன் நல்ல செறுப்புக்காகவும் பிரார்த்திகப்பான் , அவன் இது வரை செறுப்புகளை அணிந்ததேயில்லை , ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குத்தான் பள்ளியில் இலவச செறுப்பாம், இவன் மூன்றாம் வகுப்புதான் .

பிரார்த்தனை லிஸ்ட் , இயேசுபிராணிடம் சிமெண்ட்டு வீட்டு அருண் அண்ணனின் ஆங்கிலம் , லட்சுமியிடம் தீபாவளிக்கு லட்சுமி வெடி ,கிருஷ்ணனினடம் ரஜினி போல முடி ,பிள்ளையாரிடம் ரயிலில் பயணம் ,பெருமாளிடம் காலையில் தேங்காய் பன் , பால் , ஹார்லிக்ஸ் ,சரஸ்வதியிடம் காமிக்ஸ் , சிறுவர்மலர் , அம்புலிமாமா , பூந்தளிர் , மூணு வேலை வீட்டில சோறு , சுடலை மாடனிடம் ஞாயிறு கறிசோறு , இளைத்துப்போகாத வேலைக்கு போகும் அம்மா ,பார்வதியிடம் அம்மாவை அடிக்காத அப்பா ,சிவனிடம் அம்மாவை அடிக்கும் அப்பாவின் சாவு.. குமரனுக்கு கடவுள் பக்தி ஜாஸ்தி .. ஆனால் கடவுள் இவன் பிரார்த்தனையை கேட்பதே இல்லை . கடவுளரெல்லாம் பிஸி.


வரிசையில் இவன் , பின்னால் கோபி , முன்னால் இளவரசன் , கோபியின் பின்னால் அம்பிகா , இளவரசனின் முன்னால் தேவி , தேவிக்கு முன்னால் ஆயிசா , அம்பிகாவிக்கு பின்னால் ரேகா , ரேகாவுக்கு பின்னால் முரளி , முரளிக்கு பின்னால் இவனுக்கு குறுகுறுக்குத் தரும் அஞ்சலி , அஞ்சலி வரிசையில் தள்ள ,முரளி ரேகாவை தள்ள , ரேகா அம்பியைத் தள்ள , அம்பிகா கோபியை தள்ள கோபி குமரன் முதுகில் கைவைத்து அம்பியைபின்னால் தள்ளினான் , அஞ்சலி மல்லாக்க விழுந்தாள் . சத்துணவு மாஸ்டர் ஓடி வந்தார் .

நாற்ப்பத்தி ஏழு , நாற்பத்தி எட்டு , நாற்பத்தி ஒன்பது , அதை சற்றும் கவனியாத குமரன் முட்டைகளை எண்ணியபடி முன்னால் நகர்ந்தான் . வரிசை மிக மெதுவாக நகர்ந்தது , முட்டைகள் தீர்ந்து விடுமோ என்கிற பயம் வேறு வந்து வந்து மிரட்டியது , முட்டைகள் தீர்ந்து விட்டால் அவ்வளவுதான் இனி அடுத்த வெள்ளிக்கிழமைதான் .

வரிசையில் நிற்கையில் யாரோ அவனது பிருஷ்டத்தில் பேப்பரால் தேய்ப்பது போலுணர்ந்தான் , அரண்டு போய் பின்னால் கைவைக்க பின்னால் கிழிந்து போன அவனது காக்கி நிற டிராயரின் நூல் நூலாய் நைந்து போன துளையில் கோபி பேப்பரை மடித்து வைத்திருந்தான் . ஏ போஸ்ட்டு பாக்ஸு போஸ்ட்டு பாக்ஸு என்று பின்னால் இருந்து முரளி,அம்பிகா,காஞ்சனா,கோமதி முன்னால் இளவரசன் , தேவி என கூப்பிடுவதை கேட்டு திரும்பி பார்க்காமல் நின்றான் .


அவனுக்கு மிகப்பிடித்த அஞ்சலிகூட அப்படியே கூப்பிடட்டாள். அவனப்பாவை மனதிற்குள்ளேயே வைந்து கொண்டான் .ஆயிரம்தான் இருந்தாலும் அஞ்சலி அப்படி சொல்லியிருக்கக் கூடாது . அவனுக்கு அவளை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா.. அவனிடம் கேட்டால் ரெண்டு கையையும் அகல விரித்து காட்டுவான் . என்னிடம் இப்போது கேட்டால் இன்பினிட்டி என்பேன் . அஞ்சலி அழகானவள் அவளுக்கும் அவனை பிடித்திருந்தது .

அவனுக்கு அழ வேண்டும் போல் இருந்தது. முட்டையை கூட சாப்பிடவில்லை . அவன் முட்டை சாப்பிடாததால் யாருமே மகிழ்ச்சியின்றி இருப்பதை போல உணர்ந்தான் . அந்த மஞ்சள் நிற குண்டு சோற்றையும் மங்கிய சாம்பாரையும் அப்படியே வைத்து விட்டான் . எதுவும் தின்னாமல் அந்த பள்ளியின் மைதானத்தில் விளையாடும் சக மாணவர்களின் டிராயர்களை பார்த்தபடி யாரிடமும் பேசாமல் மரத்தடியில் அமர்ந்திருந்தான் . எந்த பையன் டவுசரிலும் ஒட்டையில்லை . அஞ்சலியை பார்த்தான் அவள் பாவாடைதான் போட்டிருந்தாள் .

அதுவும் பல வித டவுசர்கள், துணிகள் , எல்லாமே காக்கிதான் என்றாலும் அதிலும் பல சேடுகள் சில பச்சை கலந்தது , சில மஞ்சள் , சில காப்பி , சில பட்டு போல மின்னும் , சில வரிவரியாய் , சில நைந்து போய் .

அவனுடைய டவுசர் சத்துணவில் கொடுக்கப்பட்டது . அது பருத்தியில் நெய்தது போல இருக்கும் , காற்றோட்டமாய் , சன்னமாய் , எளிதில் நைந்து விடும் .

டே குமரா வாடா தொட்டு விளையாட்டுக்கு என அஞ்சலி அழைக்க , போடி என்று விரட்டினான் . அவளை கல்லால் அடிக்க வேண்டும் போல் இருந்தது . அவளை கொல்ல வேண்டும் போல் இருந்திருக்கவேண்டும் அவள் மீதிருந்த எதுவோ ஒன்று அதை தடுத்திருக்கலாம் . கணக்கில் நல்ல மார்க் எடுத்து பணக்காரனாகி நிறைய டவுசர்கள் வாங்க வேண்டும் என எண்ணிக்கொண்டான் .

பள்ளி முடிந்தது , பள்ளி சுவற்றில் ஒட்டியிருந்த காவலுக்கு கெட்டிக்காரன் பட போஸ்டரை கவனித்தபடி நடந்தான் , அதில் பிரபுவின் காக்கி பேண்ட் அவனை வெகுவாய் கவர்ந்தது , அழகாக இருந்தது . அப்படத்தில் பிரபு போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார் அவருக்கு ஜோடி அஞ்சலியை போன்ற முகமுடைய ஒரு நடிகை பெயர் தெரியாது , அவன் பள்ளியில் அமர்ந்து கொண்டு சிவாலாயா தியேட்டரில் படம் ஓடும் போது அவ்வசனங்களை கேட்டு கேட்டு மனனம் செய்து வைத்திருந்தான் .

முழு டவுசர் போட்டு பாத்துக்கொண்டான் கற்பனையில்... அழகாக இருந்தது . முழு டவுசர் போட்டபடி ராக்கம்மாவுடன் (அஞ்சலியுடன் அவளுக்கு மஞ்சள் கலர் பாவாடை சட்டைபோட்டிருந்ததாக நினைவில் இல்லை) கைய தட்டினான் ... சிரிப்பு சிரிப்பாய் வந்தது , வெட்கப்பட்டுக்கொண்டான் ,அஞ்சலியை நினைத்தாலே அப்படித்தான். 

****************************இன்னைக்கு எப்படியாவது அப்பாகிட்ட சொல்லி ஒரு டவுசர் வாங்கனும் வீட்டிற்கு சென்று வீட்டுப்பாடங்களை சீக்கிரம் முடித்துவிட்டு போட்டோஅண்ணன் வீட்டில் போய் சிறுவர்மலர் படிக்க வேண்டும். பலமுக மன்னன் ஜோ,விக்ரமன்கதை,சீனியூர் சீனிவாசன் கதை இப்படி நிறைய எண்ணிய படி இஸ்கூல் முடிந்துவிட்டபடியால் நட(க)ந்து வந்து கொண்டிருந்தான் .

வீட்டை அடைய வானம் இருட்டியிருந்தது .

அகண்டு பரந்த சேரி ,அதன் பக்கத்தில் சாக்கடை , சாக்கடை நெடுக மலம் , சிறுநீர் , திறந்தவெளி இலவச கக்கூஸ் , அதை சுற்றி பார்த்தீனிய செடிகள் , குண்டு விளையாடும் இளைஞர்கள் , மேல ரெண்டு , கீழ ஒண்ணு , பந்தயம் , வரிசையாய் ஒட்டி ஒட்டி குடிசைகள் , காலனி , அதிமுக கொடிகம்பம் , திமுக கொடி கம்பம் , காங்கிரஸ் , கம்யூனிசுடு , குண்டி கழுவாத நிர்வாண குழந்தைகள் , புரதமில்லாத வத்திபோன முலைகளுடன் அதன் அம்மாக்கள் , வொயின் ஷாப் , கையில் பாட்டிலுடன் சில்க் விளம்பரம் , சில்லைரைகாசுகளோடு வாசலில் கு.த க்கள் , பக்கத்து சந்தில் பத்து ரூபாய் விபச்சாரி , அதற்கு பக்கத்து சந்தில் குமரனின் வீடு அமைந்திருந்தது.

பூட்டில்லாத குடிசைவீட்டின் கதவை திறந்து பார்க்க அவனம்மா இன்னும் வந்திருக்கவில்லை , வீடு முழுதும் கும்மிருட்டு , தீப்பெட்டியை சாமி அலமாரியில் தேட அங்கேயுமில்லை , சாமி அலமாரி என்றால் சின்னதுதான் ஒரே ஒரு பிள்ளையார் மட்டும் இருப்பார் பக்கத்தில் காமாட்சி விளக்கு , பக்கத்திவீட்டு ராமாக்கா வீட்டில் போய் தீப்பெட்டி வாங்கி வந்து விளக்கேற்றி , தனது ஷோபா துணிக்கடை மஞ்சள்நிற புத்தகப்பையை ஒரு மூலையில் வைத்தான் . போன வருஷம் தீபாவளிக்கு அவனம்மா அவனுக்கு புதுச்சட்டை வாங்கி தந்தபோது கிடைச்சது .

தெருக்குழாயடியில் குப்பம்மாக்காவும் மீன் விக்கும் தேவகியக்காவும் தலைமயிறை கையில் பற்றியபடி அடித்துக்கொண்டிருந்தனர் . '' தேவிடியா முண்டை ஒன் புருஷன் தாண்டி வந்து என் _____ய நக்கினான் '' . '' உம் புருஷன்தாண்டி ஊர்ல இருக்கிற கிழவி _____ ______ கூட நக்கினான் '' , '' நீ அந்த மயிரான வளைச்சு போட்டது தெரியாதா '' '' அந்த மயிரானோட ______ _தான நீ மீன் கடை நடத்துற'' , போர்க்களம் போல் இருந்த அந்த குழாய் அருகில் அவர்கள் சண்டையிட அவன் சாவகாசமாய் அவர்களினூடே புகுந்து குழாயடியில் முகத்தை கழுவிக்கொண்டு கை கால்களில் தண்ணீர் விட்டு துடைத்து விட்டு , அந்த தெருச்சண்டைகளுக்கு நடுவிலே மீண்டும் புகுந்த வீட்டை அடைந்தான்.

பிள்ளையார் சாமி கும்பிட்டு , நெற்றியில் திருநீர் பூசி , வீட்டுப்பாடங்கள் செய்யலாமென புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு அப்பாவிடம் எப்படி கால்சட்டையும் செறுப்பும் கேட்பதென்று யோசித்தபடி கணக்கு புத்தகத்தின் மத்தியில் இருந்த மயிலிறகு குட்டிப்போட்டுவிட்டதா என பார்த்தபடி அமர்ந்திருந்தான் .

அந்த கருமம் புடிச்ச மயிரிலகு மயிரிலகு இல்லை இல்லை மயிலிறகு இன்னும் குட்டி போடவில்லை .

அம்மா வந்தா சொல்லணும் டவுசர் வாங்கித்தரச்சொல்லி , அம்மா எப்படி பசங்கள்ளாம் கிண்டல் பண்ணாங்க தெரிமா , ஒத்திகை பார்த்தபடியிருந்தான் .

வீட்டிற்குள் பீடி புகையும் , சாராய நாற்றமும் பரவுவதை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தான் . வீட்டின் ஒரு மூலையில் வாயில் பீடியை தனது இரண்டு விரல்களால் பிடித்து இஸ் என இழுத்தபடி , குந்தவைத்து அமர்ந்திருந்தான் .

''ஏன்டா குமரா படிக்கிறியா ''

''ஆமாங்ப்பா'' ,

''என்ன படிக்கற கண்ணு '' ,

''கணக்குங்ப்பா'' ,

''ம்ம்நல்லாபட்றா கண்ணு ''

''உங்காத்தா எங்கடா ''

''இன்னும் வரலங்ப்பா ''

''எவனோட ஊர்மேய போயிருக்கா !! ''

''யப்பா அம்மா வேலைக்கு போயிருக்காங்கப்பா'' ( ஊர் மேய்வதென்றால் என்ன வென்று அவனுக்கு தெரியாது , )

ஸ்ஸ்ஸ் பீடீயை நன்கு இழுத்தபடி '' அதான் 6மணிக்கு முடிஞ்சிடும்ல இன்னும் என்ன மணி ஆட்டற கலெக்டரு உத்தியோகம் ''

''அப்பா அம்மா பாவம்பா எதுனா வேலையிருக்கும் , அந்த பெரிய வூட்டு ஆயா எதுனா வேலை குடுத்துருக்கும்ங்ப்பா '' முகத்தை பார்க்காமல் கணக்குபுத்தகத்தை பார்த்தபடி பதிலளித்தான்.

பீடியை அணைத்து பக்கத்தில் இருந்த சின்ன டப்பாவில் போட்டு மூடினான் . சரியாக அணைக்கவில்லை போல அதிலிருந்து புகை வருவது குமரனுக்கு எரிச்சலாக இருந்தது.

அம்மாவும் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தாள் , கையிலிருந்த டிபனில் பெரியவீட்டம்மா தந்த பழைய பிரியாணியும் , இன்னொரு கையில் காய்கறி கூடையும் , தனது கூந்தலை தூக்கி இருக்க கொண்டைபோல கட்டிக்கொண்டு குமரனின் அருகில் சென்று '' கும்ரா, எதனா தின்னியா , இது ஏன் இப்படி உக்காந்திருக்கு ''என்றபடி துடைப்பத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்று , கூட்டி வாரிவிட்டு , உள்ளே வந்து காய்கறிகளை கொட்டி அதிலிருந்து சிலதை மட்டும் எடுத்து சிறிய பாத்திரத்தில் போட்டுவிட்டு , மீதியை குமரனின் மஞ்சள் பை அருகே வைத்து விட்டு காய்களை வெட்ட ஆரம்பித்தாள் அரிவாள்மனையில் . உர்ரென அவளையே பார்த்தபடி இருந்தவனை அவள் சட்டை செய்யாததால் , அவனே ஆரம்பித்தான் , தினமும் நடக்கு அதே சண்டையை ,

'' ஏன்டி தேவிடியா முண்டை இவ்ளோ நேரம் எவனோட படுத்துட்டு வந்த '' என்று கத்த ஆரம்பித்தான் ,

''அப்பா , சண்டை போடதப்பா ''

'' ஏன்டா , இன்னைக்கு எவனும் சிக்கல நீ வேணா எவனையாவது கூட்டிட்டு வந்து வுடேன் , ஒங்குடும்பத்துக்கு ஒங்குடுபத்துக்குதான் அது ஒன்னும் புதுசில்லல்ல ''

'' அம்மா , வேண்டாம்மா ''

''நீ சும்மா இருடா , ''

'' _____________ மகளே , உங்கப்பன்தான்டி ஊரையே கூட்டிகுடுத்து ஓத்து தின்னவன் ''

பேச்சு முற்றி அவன் அம்மாவை அடித்து உதைக்க ஆரம்பித்தான் , குமரன் கையிலிருந்த கணக்கு பாடபுத்தகத்தை கீழே போட்டு விட்டு '' அப்பா அப்பா வேணாம்ப்பா அப்பா வேணாம்ப்பபா '' என்று தந்தையை கையை பிடித்து கொண்டு அவன் கதற ,

அவனம்மாவின் முடியை பிடித்து சுவற்றில் முட்ட , அவள் தலையில் ரத்தம் வடிவதை கண்டு அவன் மேலும் அழ , அவனது கையை பிடித்து அடுப்பங்கரையில் தள்ளிய படி , அவனம்மாவை விடாமல் அடிக்க , அவள் தலையில் ரத்தம் வடிந்தது , விடாமல் சுவற்றில் அவனம்மாவின் தலையை முட்டியபடியே இருந்தான் , மேலும் ரத்தம் வடிந்தது , மேலும் வடிந்தது .

கையில் கிடைத்த விறகால் அவனது காலில் அடிக்க , அவள் அவன் பிடியிலிருந்து தப்பி தலையில் வடியும் ரத்தத்தை கையால் அடைத்தபடி வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்து ஊராரை கூட்டினாள்.

ராமாக்கா புருஷன் கர்ணன் வந்து இதனை தட்டி கேட்டான் , அவனை பார்த்து நீதான் எம்பொண்டாட்டிய வச்சிருக்கியா ,_______ பொண்டாட்டி _____ நக்கின நாயே , நீயே உம்பொண்டாட்டிய ஊர்மேயவிட்டு உக்காந்து தின்றவன் வந்துட்டான் பிராது குடுக்கு என்று அவனப்பா கேள்வி கேட்க அவன் இவன் மேல் பாய , ஊரே சேர்ந்து இருவரையும் பிரித்து விட்டது , இல்லாவிட்டால் யாராவது ஒருவர் செத்திருப்பார் , அவளை அழைத்துக்கொண்டு ராமாக்கா தன் வீட்டிற்கு கூட்டிச்சென்றாள் .

''அக்கா நான் வீட்டுக்கு போயி அந்த புள்ளைக்கு எதையாவுது குடுத்து இஸ்கூலுக்கு அனுப்பிட்டு வரேன் , ரவைக்கு என்னத்த தின்னுச்சோ தெரில , எனக்கு நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுதான் தெரியும் , பச்ச புள்ளனு கூட பாக்காம அந்த பாவிபரப்பான் புள்ளைய நேத்து அடிச்சி தள்ளிவிட்டுட்டான் ,'' என்றபடி அடிபட்ட தலையை ஒரு கையால் பிடித்தபடி நடக்கலானாள் .காதோரம் லேசாக வலியிருந்தது .

வீடு திறந்து கிடந்தது , திண்ணையில் அவனப்பா படுத்திருந்தான் , லுங்கி விலகி அவனது உள்ளாடைகள் வெளியில் தெறிய கைகளை விரித்தபடி படுத்து கிடந்தான் ,அவனது வாயில் ஈக்கள் மொய்த்து கொண்டிருந்தது . ஏதோ கெட்ட வாடை வீடெங்கும் . சாராயம் , பீடி என பல வகை...

அவள் அவனை பார்த்து தூ பொறுக்கி _____மகனே என்றபடி வாசலில் கிடந்த துடைப்பத்தால் வீட்டின் வாசலில் கிடந்த குப்பைகளை விரட்டிவிட்டு , உள்ளே நுழைய வீட்டின் இடது ஓரத்தில் அடுப்பின் அருகில் குப்புற படுத்திருந்தான் குமரன் , அவனது கிழிந்து போன அரைடிராயரை பார்த்து ஏக்க பெருமூச்சுடன் தன் மகனுக்கு ஒரு நல்ல டவுசர் அவள் வேலை செய்யும் வீட்டம்மாவிடம் சொல்லி இன்று வாங்கித்தரவேண்டுமென்று எண்ணியபடி மூலையில் கிடந்த துணிகளை ஒதுக்கி தள்ளினாள் .

''டேய் குமரா , எழுந்திருடா , மணி ஏழாச்சு , இஸ்கூலுக்கு போணிமில்ல , இன்னைக்கு அர நாளுதான '' என்ற அவனை அழைத்துக் கொண்டிருக்க , வீட்டுக்குள் கையில் புஸ்தக பையோடு குமரா என்ற படி ஓடி வந்தாள் அஞ்சலி ,

அவனம்மாவை எதிர்பார்க்காத அவள்'' உமாக்கா குமரன் எழுந்துட்டானா , வீட்டுபாடம்லா பண்ணிட்டானானு பாக்க வந்தேங்க்கா!!'' என்று பம்மினாள் .. ''வாடி இவளே பாரு இந்த புள்ளைய இன்னும் தூங்கிட்டுருக்கறத, இரு அவன எழுப்பறேன் , தினத்திக்கும் காலைல இவன பாக்காட்டி உன்னால இருக்க முடியாதோ'' என்று புன்னகைத்தபடி நடந்தாள்.

அவன் அப்படியே கிடந்தான் , தலையை இருக்கி முடிந்தபடி அவனப்பானாட்டம் இவனுக்கும் வர வர சோம்பேறித்தனம் அதிகமாகிடுச்சு என்றபடி அருகில் சென்று அவனை தட்டி எழுப்ப முயல அவன் சட்டையின் முன்பக்கமெங்கும் ரத்தம் , அவனது நெஞ்சில் அரிவாள்மனை அவனது வெள்ளை சட்டையெல்லாம் ஈரம் . குமரன் செத்திருந்தான் . . அன்று ஊரில் நல்ல மழை .
***************************
***************************

16 October 2008

வாசகர்கடிதம் - 16-10-08 ( FROM கூறு கெட்ட குப்பன் )
அடே தம்பி அதிஷா..


எப்படிக்கீறே?


ஓக்கே! எனக்கு உங்களை மாதிரி சென்னைத் தமிழ்ல தேர்ச்சி இல்லை. சாதாரணமாவே எழுதறேன்.


உங்க வலைப்பூ டிசைன் சூப்பர்! அப்பப மாத்தி அதை மெருகேத்தற உங்க பாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு கூட வேற டெம்ப்லேட் ரெடி பண்ணித்தரேன்னு உரிமையோட கேட்டு வாங்கி, பண்ணிக் குடுத்தீங்க. நானொரு சோம்பேறி.. இன்னும் அதை அப்லோடு பண்ணல.


சமீபமா உங்க வலைப்பூவை திறக்கும் போது நல்ல கூலிங் வாட்டரைப் பக்கத்துல வெச்சுட்டுதான் திறக்கறேன். ஏன்னா, உங்களுக்கு ஒரு நாளைக்கு 1000க்கு மேல ஹிட் வர்றதையும், எப்பப் பார்த்தாலும் 35 பேர் ஆன்லைன், 58 பேர் ஆன்லைன்.. புதுப் பதிவு போடாதப்பகூட 10பேர், 11பேர் ஆன்லைன்ல இருக்கறத பார்க்கறப்ப வயிறெரியுதுய்யா..! அதுனால் கூலிங் பண்ணிக்கத்தான் வாட்டர். (வேற மேட்டருக்கு ஆஃபீஸ்ல அனுமதி இல்லை!!)


ஆனா அந்தக் கூட்டம் சும்மா சேர்ந்ததில்லை. உங்க பாணில சொல்லணும்ன்னா 'இந்தப் பையனுக்குள்ளயும் என்னமோ இருக்கு பாரேன்'ன்னு வியந்துபோய் வர்ற கூட்டம்! அதுனால் பொறாமை இருந்தாலும், பெருமையாவும் இருக்கு! உங்க இறுதிமுத்தம் கதை படித்து நெகிழ்ந்திருக்கிறேன். தோசாவதாரத்திலும், பாரு நிவேதிதாவும் லகுட பாண்டிகளிலும் உங்கள் கற்பனா சக்தியையும், அதை நகைச்சுவை கலந்து எழுதும் பாணியிலும் வியந்திருக்கிறேன்.


கலைஞருக்கும், மன்மோகன்சிங்-க்கும் நீங்கள் எழுதிய கடிதம் சாதாரணமானதா? என்னதான் கிண்டல் தொனியோடு எழுதப்பட்டாலும் எத்தனை சீரியஸான மேட்டர் அது! கொஞ்சம் தவறி வேறு மாதிரி எழுதப்பட்டிருந்தாலும் பயங்கர சீரியஸாகி பலரது விமர்சனத்துக்கு ஆளாக வேண்டியதை சிறப்பாகக் கையாண்டிருந்தீர்கள்! சபாஷ்! சரி.. விடுங்க. அதையெல்லாம் சொல்றதுக்காக இப்போ கூப்பிடலை. ரெண்டு மூணு நாளா உங்க கிட்ட பேசறப்ப, 'நான் எழுதறதை நிறுத்திடப் போறேன்'ன்னு உளறிகிட்டிருக்கீங்க. என்கிட்ட பேசும்போதுதான் இப்ப்டிச் சொல்றீங்கன்னு பாத்தா, பாஸ் நர்சிம்கிட்டயும் இதையேதான் சொல்லி புலம்பியிருக்கீங்க.


அதுக்காக நீங்க சொன்ன காரணம் அருமை! உங்களைப் பாராட்டாம இருக்க முடியல. 'எனக்கு புத்தகம் படிக்கற பழக்கமே இல்லை. அதனால படிக்க ஆரம்பிக்கப் போறேன். அதுனால ப்ளாக்கை நிறுத்திட்டு, படிக்க பழக்கத்தை அதிகப்படுத்தப் போறேன்'ன்னு

சொல்லியிருக்கீங்க.


ஆச்சர்யமா இருந்தது. புத்தக வாசிப்பனுபவமே இல்லாம, ஒரு மனுஷன் இப்படி வகை வகையா எழுதமுடியுமா? அப்படீன்னா, இன்னும் ஆழமா படிச்சா எப்பேர்ப்பட்ட தளத்துக்கும் உங்களால போகமுடியும்ன்னு நினைக்கறேன். ஆனா, அதுக்காக எழுதறதை நிறுத்தணுமா-ன்னு யோசிச்சுப் பாருங்க அதிஷா.


எனக்குத் தெரிஞ்சு ஒரு நாளைக்கு வெறும் 2 மணி நேரம் மட்டும் இணையத்தை உபயோகப்படுத்தி, மத்த வலைப்பதிவுகளை படிச்சு, தேவையானதுக்கு கமெண்ட் போட்டு, நாமும் ஏதாவது பதிவு போட்டுட்டு வேற வேலைகளைப் பார்க்கமுடியும். அதுனால புத்தக வாசிப்புக்காக வலைப்பூ எழுதறத நிறுத்தணும்கறது அவசியமில்லாத ஒண்ணு!


நான் பத்திரிகைகளுக்கு எழுதத்துவங்கிய ஆரம்பக்கட்டத்துல எனக்கு எழுத்தாளர்(கள்) சுபா சொன்ன ஒரு விஷயம் 'எந்தக் காரணத்தைக் கொண்டும் தினமும் எழுதறதை நிறுத்திடாதீங்க. தினமும் ஏதாவது எழுதிட்டிருங்க. கதை, கவிதை, பார்த்தது, நடந்தது என்ன தோணினாலும் குறைஞ்சது ஒரு பக்கத்துக்கு எழுதுங்க. நாளாக நாளாக உங்களுக்கு, நீங்க முதல்ல எழுதறதுல பண்ற தப்புகளும், அதை மேம்படுத்தற லாவகமும் கைவரும்'ன்னாங்க.


அதையேதான் உங்களுக்கு நானும் சொல்லிக்கறேன். உங்க எழுத்து உங்களுடையது. அது அவனை மாதிரி இல்லையே, இவனை மாதிரி இல்லையே-ன்னு வருத்தப்படுறது....... வேணாம், சொல்லல. அசிங்கமா போய்டும்! முக்கியமா நீ பண்றது இது சரியில்லை, அது சரியில்லை அப்படி டிஸ்கரேஜா பேசறவங்களை அண்டவிடாதீங்க. அவங்க சொல்றதுல இருக்கற நல்லதை எடுத்துட்டு, அவங்க மட்டம் தட்டினா மாதிரி பேசறதை மறந்துடுங்க. அதுதான் உங்களை மெண்டலாக்குது!


எந்தக்காரணத்தைக் கொண்டும் படிக்கணும்ங்கற ஆர்வத்தை நீர்த்துப் போகச் செய்துடாதீங்க. எது கிடைச்சாலும் படிங்க. தப்பேயில்லை. (என்னது... சரோஜாதேவியா... அடிங்...) உங்களுக்கு நெருக்கமான பலர்கிட்ட, அவங்க ஆரம்ப கட்டத்துல படிச்ச புத்தகங்கள் லிஸ்ட் கேளுங்க. (இப்போ அவங்க படிக்கறது-ன்னு கேட்காதீங்க HEAVYயா இருக்க வாய்ப்புண்டு!!!) அதிலிருந்து ஆரம்பிங்க!


எனக்கு உங்களை நெனைச்சா பொறாமையா இருக்குய்யா. இப்போ நான் மறுபடி பழசை எல்லாம் மறந்து புத்தகங்களை புதுசா படிக்கணும்ன்னா, மறுபடி சாப்பிடாம, தூங்காம எல்லாத்தையும் பயங்கர சுவாரஸ்யமா படிப்பேன்!


ஒண்ணு பண்ணுங்க. இப்பவும் 'துக்ளக்' மகேஷ் அவனோட ராவுகள் – ங்கற தலைப்புல அவர் படிக்கற புத்தகங்களை நம்மகிட்ட பகிர்ந்துக்கறாரே.. அதேபோல நீங்க படிக்கற புத்தகங்களை உங்க வாசகர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.


அதுல 'ஐய.. இப்பதான் இதப் படிக்கறயா'ன்னு உங்களை மட்டம் தட்டறவங்களை விட்டுத்தள்ளுங்க. ஆரோக்யமா அந்தப் புத்தகத்துல இருக்கற விஷயங்களை உங்ககூட விவாதம் பண்ண நிறையபேர் இருப்பாங்க! கலக்குங்க அதிஷா!


கூடிய சீக்கிரம் 100வது பதிவுன்னு நெனைக்கறேன்.


ஆல் தி பெஸ்ட்.


அளவில்லா அன்போடு-


கூறு கெட்ட குப்பன்!

15 October 2008

பரிசல்காரனுக்கு வாழ்த்துக்கள்...!!நண்பர் பரிசல்காரன் அவர்களைப்பற்றி அனைவருக்கும் தெரியும் .. அவர் ஒரு மிகச்சிறந்த பதிவர் ஆவார் . நம் பதிவுலகில் தவிர்க்க இயலாத சிலரில் அவரும் ஒருவராகவும் மிகக்குறைந்த நாட்களில் பதிவுலகில் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கியவரும் ஆவார் . இவையனைத்தையும் மீறி அவர் எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர் .


இந்த வாரத்திலிருந்து ஜீனியர் விகடனில் இருந்து அவரது ஒரு குட்டித்தொடர் வருவதாக முன்பே என்னிடம் கூறியிருந்தார் . அப்போதே என் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டதை போலவும் , எனது படைப்பு விகடனில் வெளியானது போலவும் உணர்ந்தேன் .


இதோ இந்த வாரத்திலிருந்து அவரது படைப்புக்கள் வர துவங்கிவிட்டன . அதை பதிவர்களுக்கு அறிவிப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சியுண்டு .


இன்றைய விகடனில் வெளியாகியுள்ள சிந்தனை சின்னசாமி என்கிற கட்டுரை அது ( அக்கட்டுரையில் அவரது பெயர் வெளியாக வில்லை அதனால் விகடனுக்கு பதிவர்கள் சார்பாக ஒரு குட்டு )


இது அவரைப் போன்ற ஒரு நல்ல எழுத்தாளருக்கு தாமதமாய் கிடைத்த வாய்ப்பாகவே நான் கருதுகிறேன் ,


திரு.பரிசல்க்காரன் அவர்களுக்கு தமிழ்வலையுல நண்பர்கள் சார்பாக என் வாழ்த்துக்கள் .


( இதை சிலர் இதெல்லாம் ஒரு விசயம் இதுக்கு ஒரு பதிவு என எண்ணக்கூடும் என்னைப் போன்ற வெகுஜன ஊடகங்களில் நம் பெயர் மட்டுமாவது வராத என காத்திருக்கும் பதிவர்களுக்கு இது நிச்சயம் பெரிய விடயம்தான் அதனாலேயே இந்த பதிவு )


அந்த படைப்பை இங்கே தர இயலவில்லை.. கிடைக்கும் போது அதையும் இணைக்க விழைகிறேன் .


( பரிசல் ட்ரீட் எப்போ ? )


13 October 2008

ஜோதி தியேட்டரும் சில பிரபலங்களும் டவுசர் பாண்டியும்....
சென்னைக்கு நம்ம டவுசர் பாண்டி வந்த புதுசு , அவன் ஊரு நாக்கமுக்காம்பாளையம் , சென்னைல செத்த காலேஜ,உயிர் காலேஜ் , எம்ஜிஆர் சமாதி , அண்ணா சமாதிலாம் பாத்தவன் , ஒரு நா உலக புகழ்பெற்ற ஜோதி தியேட்டரு பத்தி கேள்விபட்டான் , அங்க '' வாடா மன்மதானு'' ஒரு படம் , போயி டக்கரா ஒரு டமால் டுமீல் படம் பாக்கலாம்னு முடிவு பண்ணி , கிளம்பினான் .

ஆனா பாருங்க இந்த லூசு பாண்டி இருக்கறது , கோயம்பேடு .


ஜோதி தியேட்டர் இருக்கறது ....ஆமா அதேதான் பரங்கி மலைல ,( என்னது கத்திபாரா , நேரு சிலையா , யோவ் போங்கையா , கத்திப்பாராவுக்கே ஜோதியாலதான் பெருமைனு வரலாறு சொல்லுது )

நம்ம டவுசரு கிளம்பி டகால் டிகால்னு ஒரு அன்டிராயர மாட்டிகிட்டு அதுக்கு மேல ஒரு முக்காலே அரைக்கா டவுசரயும் போட்டுகிட்டு கிளம்பிட்டான் , ஆனா பாருங்க அந்த பயலுக்கு வழி தெரியாது , சரி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல சுத்தி சுத்தி பாத்தா ஒரு ஆளயும் காணல சரி இன்னா பண்றதுனு யோசிச்சுகிட்டே பாத்தா அந்த பக்கமா நம்ம பாருநீபேதிதா வந்துட்டாரு , அவரத்தான் இவனுக்கு நல்லா தெரியுமேனு அவருகிட்ட போயி பேச ஆரம்பிச்சான்.

பாண்டி : அண்ணே வணக்கம்

பாரு : ம்ம் சொல்லுங்க

பாண்டி : ஏனுங்க இந்த ஜோதி தியேட்டருக்கு எப்படிண்ணே போனும்

பாரு : பாஸ் நான் யார் தெரியுமா

பாண்டி : தெரியும்னேண் நீங்கதானே பாரு.

பாரு : ஒரு எழுத்தாளன்கிட்ட கேக்கற கேள்வியா இது , எங்கிட்ட இத்தாலிய கவிஞரு சூச்சா லத்தீன் எழுத்தாளர் மூச்சீபூச்சீ பத்தி கேட்டா ஒரு மரியாதை இருக்கு , நீ ஒன்னு பண்ணு பிஜினி காந்துகிட்ட கேளு அவரு சொன்னா நானும் சொல்றேன் .

அவர் பேசிய பேச்சில் தனது டவுசர் கொஞ்சம் கொஞ்சமாய் கழண்டுவிடுவதை கவனித்தவன் டெரராகி அங்கிருந்து எஸ்கேப்பாகிறான் ...

அங்கிருந்து எஸ்கேப்பானவன் சும்மா இருக்காம அங்கே வெள்ளையும் சொள்ளையுமா இருந்த பெரியவர் கிட்ட போயி கேட்டான்.

பாண்டி : அண்ணே வணக்கம்

பெருசு ; ஆங் வணகம்

பாண்டி ; அண்ணே இந்த ஜோதி தியேட்டருக்கு எப்படி போனும்

பெருசு : தம்பீ உங்கள பாத்தா ஊருக்கு புதுசா இருக்கீங்க அதனால ச்சொல்றேன் , சென்னைல

மொத்த தியேட்டரோட எண்ணிக்க 240 அதுல தமிழ் படம் போடறது 190 அதுல என்னோட படத்த ஒட்டறவன் 45 நானே காசு குடுத்தாலும் என் படத்த வேணாங்கறவன் 40 பேரு இது பிட்டு படம் போடறவன் 10 அது பிட்டு நிறைய போடுறது 7 இப்ப ச்சொல்லுங்க தம்பீ நீங்க எங்க போகணும்

நம்ம பாண்டி பித்து பிடிச்ச பிதாமகன் மாதிரி ஆயி எங்க போணும்னு மறந்துடுச்சுங்கனு சொல்லவும்

பெருசு ; அப்ப ஒன்னு பண்ணுங்க இப்படி வலது பக்கம் போன ஒரு கல்யாண மண்டபம் இருக்கும் அங்க போங்க உங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டு ஒரு கிலோ அரிசியும் ஹார்லிக்ஸும் குடுப்பாங்க ..

பித்து பிடிச்ச பாண்டி செய்வதறியாமல் , ஐயா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க

பெருசு : இங்க பாருங்க தம்பீ மக்கள் மாற்றத்த எதிர்பாக்கறாங்க , வேற வழியில்ல இந்த நாட்டுக்காகவும் இந்த மக்களுக்காவும் ஏதாவது செஞ்சாகனும் நீங்க அங்கே போங்க தம்பீ , மக்களுக்காக நாம இறங்கிருக்கற இந்த ஆப்பரேசன்ல நீங்க கட்டாயம் கலந்துக்கணும்

ஐயோ ஆபரேசனா என்று அரண்டு கண்ணாமுழி பிதுங்கி , அடங்கொங்கமக்கா இந்தாளு நம்மள பேசி பேசிப்பேசியே வலியில்லாம ஆபரேசன் பண்ணி அரிசி குடுத்துருவார் போலருக்கேனு அங்கிருந்து எஸ்கேப்பாகிறான் .

அங்கிருந்து ஓடி போயி ஒராளு மேல இடிக்க அவரு முகத்துக்குள்ள தாடியா தாடிக்குள்ள முகமானே தெரியல அவ்ளோ முடி மூஞ்சிலாம் , பாக்க ஜீலருந்து தப்பிச்சு வந்த பாண்டா கரடிமாதிரி . ஆனா ஆள் பாக்க ரொம்ப நல்லவரா இருக்கவும் அவருகிட்ட போயி பேசினான் .( பாண்டிக்கும் பாண்டா கரடிக்கும் பேச்சு வார்த்தை ) .. அவருதான் பீயாரு ....

பாண்டி ; அண்ணா அண்ணா

பீயாரு : ( முடியை கோதியபடி ) சொல்லுடா ( பீலிங்காக சொல்கிறது )

பாண்டி ; இந்த ஜோதி தியேட்டருக்கு..

பீயாரு : என்னது ஜோதியா .. டே டண்டணக்கா நாட்டுக்குள்ள ஆயிரம் ஜாதி , நீயோ தேடுற
ஜோதி .. உன்ன மாதிரிதாண்டா இந்த ஊருல பாதி ... ஷகிலாவ பாத்தாலே போறான்டா பேதி...

பாண்டி ; அண்ணே வழி மட்டும் சொல்லுங்கண்ணே

பீயாரு : டேய் டண்டணக்கா ... உனக்கு தேவை வழி... என் நெஞ்சுக்குள்ள ஆயிரம் வலி... நயனு ஆக்கிட்டா என் பையன பலி ... வானத்துல பாருடா கிளி...

பாண்டி மேல பாக்கிறான் ...

அவன் மண்டையில் நங்கென குட்டி கரடி மேலும் தொடர்கிறார்

பீயாரு : பாக்கதடா மேல , உனக்கு ஊத்திருவான் பால , என் பையன் ஒரு கொம்பு அவன் இல்லாட்டி எனக்கு ஏதுடா தெம்பு

பாண்டி கண் தண்ணி வழிய அண்ணே என்ன விட்டுடுங்கண்ணே நான் ரூமுக்கே போறேன்.

பீயாரு : டே டண்டனக்கா .. என்று ஆரம்பிக்க

பாவம் கொழந்த கிலியடிச்சு போயி பேய் புடிச்ச மாதிரி அங்கிருந்து ஓட ஆரம்பிச்சிருச்சு ,

அவர வழில ஒரு தாடி வச்ச பெரியவர் தடுத்து நிறுத்தறார் ,... பாண்டிக்கு இந்த பெரியவர நல்லா தெரியும் அவருதான் பேமஸ் டாக்டர் ... சுத்ரன்.. மனசு சரில்லனா அவரு சரி பண்ணுவார்ணு பாண்டி ஏதோ படத்தில பாத்திருக்கான் ..

சுத்ரன் : சார் நில்லுங்க , ஏன் இப்படி ஓடறீங்க.. உங்களுக்கு ஏதோ மனப்பிரச்சனே இருக்கு போலருக்கே

பாண்டி : சார் வணக்கும் சார் நான் ஒரு கிராமத்தான் இந்த ஊருக்கு புதுசு ஜோதி தியேட்டருக்கு வழி கேக்கப்போயி இப்படி ஆயிட்டேன் சார்.. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

சுத்ரன் : சார் இது ஒரு சாதாரண பிரச்சனை இதுக்கு பேரு வழிகேப்பான்போபியானு மனோதத்துவத்தில சொல்லுவாங்க ...

பாண்டி : என்னது வழிகேப்பானபோபியாவா.. அவ்வ்வ் அதுனால என்னாகும் சார்...

சுத்ரன் : சொல்றேன் , இந்த மாதிரி வியாதி பொதுவா எல்லாருக்குமே இருக்கும் .. இதுமாதிரி அமெரிக்கால கூட ஜான்டி பியோ ங்கறவருக்கு வந்திருக்கு .. அவரு கிளிண்டன்கிட்ட வழிகேட்டு அவரு ஏதோ மோனிகா நினைப்புல எடக்கு மடக்கா ஏதோ பண்ணப்போயி அந்த வியாதி வந்திருச்சுனு சொல்றாங்க..

பாண்டி : அவ்வ் இந்த வியாதிய குணப்படுத்தவே முடியாதா..

சுத்ரன் : நிறைய பேரிச்சம்பழம் , செவ்வாழைலாம் சாப்பிடுங்க , அப்புறம் யோகா பண்ணுங்க .. சரியாகிடும் ..

பாண்டி : ரொம்ப நன்றி சார்.. அப்புறம் ஒரு டவுட்டு

சுத்ரன் : கேளுங்க

பாண்டி : இந்த ஜோதி தியேட்டருக்கு எப்படி போகணும்...

சுத்ரன் : ஜோதி தியேட்டரா .. இந்த மாதிரி வர ஆசைகளுக்கு ஜோதியோபேதியா னு மனோத்தத்துவத்தில.. இது மாதிரி அர்ஜெண்டினால ஒருத்தருக்கு.....

ஆஹா மறுபடியுமா னு அங்கிருந்து ஓட்டமெடுக்க ஆரம்பிச்சான் ... அங்க நின்னுகிட்டு இருந்த இரும்பு பொம்மை பக்கத்தில போயி நின்னுகிட்டு பொலம்ப ஆரம்பிச்சான்..

பாண்டி : ஆண்டவா ஏன்டா இப்படி சோதிக்கற .. ஜோதி தியேட்டர கண்டுபுடிக்கறதுக்குள்ள நான் ஜோதில கலந்துருவேன் போலருக்கே...

அந்த இரும்பு பொம்மை பேசுகிறது ...

இரும்பு பொம்மை : தோழா உனக்கு நான் உதவட்டுமா

பாண்டி டரியலாகிறான்..

பாண்டி : பொம்மைசார் நீங்களா பேசினீங்க

இ.பொ ; ஹா ஹா ஹா ஆமா.. உனக்கு என்ன பிரச்ன எங்கிட்ட சொல்லு நான் முடிச்சிதரேன்

பாண்டி : பொம்மைசார் வேண்டாம் சார் ..

இ.பொ : கண்ணா ஒன்னு மட்டும் வாழ்க்கைல தெரிஞ்சிக்கோ கிடைக்கறது கிடைக்காம இருக்காது கிடைக்கறதுதான் கிடைக்கும் ..

பாண்டி : ஐயோ சார் எனக்கு அதுலாம் வேண்டாம் இந்த ஜோதி தியேட்டருக்கு போகணும்

இ.பொ : கண்ணா மனசுல மூணு வகையிருக்குனு சோபாஜி சொல்லிருக்கார் ஒன்னு கர்மா இன்னொனு தர்மா இன்னொனு குர்மா இதில நீ குர்மால இருக்க ...

பாண்டி : அப்போ அடுத்தது பர்மாவா சார்....

தன் இரும்பு கைகளால் மண்டையில் ஓங்கி ஓரே அடி பாண்டி தலை மேலே மயில்கள் பறக்கிறது ..

இ.பொ : இப்படி குறுக்க குறுக்க பேசினா எப்டி பேசர்து , இதில குர்மாவ அடக்கி கர்மாவ மத்தில கொண்டுவந்து தர்மாவ நடுவுல வச்சா உன்னோட மனசு ஒரு நிலைப்படும் , சப்த நாடிகளும் அடங்கும் ., அப்படியே அடக்கி குந்த வச்சு உக்காந்தா குண்டலினி குபீருனு பீரிட்டு வரும் ...

பாண்டி : எங்கருந்து சார்

இரும்பு பொம்மை டென்சனாகி தனது இரும்பு கைகளிலிருந்து டெர்மினேட்டரு படத்தில வரா மாதிரி துப்பாக்கிய நீட்ட பாண்டி அங்கிருந்து ஓடினவன்தான் சென்னைபக்கம் திரும்பி வரலையே ...

லூசுப்பய என்னாட்டம் நம்ம பக்கிமுக் கிட்ட கேட்டிருந்த ஒரு நல்ல வழி காமிச்சு வாழ்க்கைல முன்னேத்திருப்பாருல... என்ன நான் சொல்றது..........

_____________________________________________________________________________________
பி.கு : இந்த கதை யார்மனதையும் புண்படுத்த அல்ல.. சும்மா டமாசுக்கு....
_____________________________________________________________________________________
அவ்ளோதான்பா.. ;-)

_____________________________________________________________________________________

பிரபல சென்னைப்பதிவருக்கு திருமணம் !!!

பிரபல சென்னைப்பதிவரும்... மிகச்சிறந்த புகைப்படகலைஞருமானதிரு.ஜாக்கிசேகர் அவர்களுக்கு இந்த வாரம் ஞாயிற்றுகிழமை கடலூரில் கல்யாணம்ங்க


இந்த இருமணம் இணையும் திருமணம் சிறப்பாக நடைபெற அனைத்து சகபதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .


பதிவர்கள் இத்திருமணத்தில் கலந்து கொள்ள இதோ பத்திரிக்கை...( அவர் அனுப்பினதுங்கோ )பத்திரிக்கை மேல கிளிக்கி டிடேய்ல் தெரிஞ்சிக்கோங்க...

திருமணம் செய்ய இருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

WE WISH YOU A HAPPY MARRIED LIFE....

_____________________________________________________________________

11 October 2008

என்ன புள்ள செஞ்ச நீ...! பாவிப்பய நெஞ்ச நீ...! - A LOVE LETTERஎன் இதயத்தை கொள்ளைகொண்ட சிகரட்டே ....


உன் முன்னால் காதலன் எழுதும் கடைசி மடல் , உனக்கு கடிதமா என யோசிக்காதே .

நீயும் என் காதலிதான்

இதுவும் நிச்சயம் காதல்கடிதம்தான்

காதலியை அணைத்தபின் அனுபவிப்பேன்

உன்னை அனுபவித்து பின் அணைப்பேன் .

நீயும் என் காதலிதான் உன் வேலையும் இதயத்தில் நுழைவதுதானே .

நம் உறவும் காதலைப்போல் தானே துவங்கியது , நண்பர்களால் அறிமுகமானாய் , முதன்முதலில் நீ எனக்கு எப்போதாவது நண்பர்களின் உதவியோடு ஊருக்குள் மறைவாய் யாருமில்லா இடங்களிலே ,உன்னை முதன்முறை பார்க்கையில் உடனே பிடிக்கவில்லை உன்னுடனான தொடர்பு நண்பர்களினூடே தந்த கௌரவம் எனை மாற்றியதோ .

என் இதழ்களுடனான உன் முதல் சந்திப்பு அத்துனை இதமாய் இருந்திருக்கவில்லை , அதன் பின் இரண்டாம் முத்தம் இதமாய் மூன்றாம் முத்தம் சுகமாய் நான்கைந்தில் அடிமையாக்கினாய் , என் இதழுடனான உன் உறவு அதிகமாக , உன்னை சந்திக்கவே பல நாட்கள் என் நண்பர்களை சந்தித்திருக்கிறேன் தெரியுமா .

உன்னுடனான எனது தொடர்பு என் வீட்டில் பல நாள் தெரிந்து போய் என் தந்தையிடமும் தாயிடமும் எவ்வளவு அடி வாங்கியிருப்பேன் தெரியுமா , எல்லாம் உனக்காக! உன்னொடு என்னை என மாமன் பார்த்துவிட்டு அடித்த அடி எத்தனை வலித்தது தெரியுமா . எல்லாம் எதற்காக உனது உறவுக்காய் . காதலில் வலியும் வேதனையும் சகஜம் தானே .

நண்பர்களின் உதவியோடு உனை சந்தித்த அந்த பால்ய பருவம் கடந்து போய் நானே உன்னை சந்திக்க விழைந்தேன் . அத்தனிமையில் இனிமையாய் உன்னை என் உதடுகளின் மத்தியில் வைத்து பிடித்து ......... ஆனந்தம் . நண்பர்களுடன் பேசும் சமயங்களைவிட உன்னை தனிமையில் சந்திக்கையில் உன்னை அதிகம் விரும்பினேன் . எப்போதும் விரும்புவேன் .

காலம் ஓடியது , நம் உறவு பிரிக்க முடியாததும் , உடைக்க முடியாததுமாய் நானும் நீயும் பின்னி பிணைந்து என் உடலில் கலந்து உயிரிலும் கலந்து விட்டாய் .

இப்போதெல்லாம் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை என்பது போல எந்நேரமும் என் விரலிடுக்கில் , உதடிடுக்கில் என எப்போதும் காலை முதல் மாலைவரை உன்னை நினைக்காத நொடியில்லை . என் இதயத்தில் எந்த காதலியும் இத்தனை சீக்கிரம் பிடித்திடாத இடத்தை நீ பிடித்து விட்டாய் . இதயம் மட்டுமல்ல நுரையீரல்,கல்லீரல் ,கணையம் என எந்த காதலியும் அமர முடியாத இடத்திலெல்லாம் நீதான் நீ மட்டும்தான் . நீ காதலியை விடவும் உயர்ந்தவள் .

உன்னால் என் இதயத்தில் கோளாறு வருமாம் என் உயிருக்கே ஆபத்தாம் , அஞ்சமாட்டேன் இதற்கெல்லாம் , கேன்சர் என்றால் பயந்து விடுவேன் என்று நினைத்தாயோ , நம் உறவு அதையும் தாண்டி புனிதமானது . உனை பிரிந்து நான் எப்படி , சோறின்றி கூட பட்டினி கிடப்பேன் உன்னை பிரிந்து ஐயகோ நினைக்கவே அச்சமாக இருக்கிறதே .

நம் இணைபிரியா உறவை சிதைக்க அரசாங்கம் கூட முயல்கிறது , இதோ போட்டுவிட்டான் தடையுத்தரவு , என்ன கொடுமை கோல்டு பில்டரே!!....

பொது இடத்தில் உன்னை சந்திக்கத் தடையாம் , இனி உன்னை வீட்டில் மட்டுமே சந்திக்க வேண்டுமாம். இயலுமா , நாம் அப்படியா பழகியிருக்கிறோம் , என்றுமே நம் காதல் கள்ளக்காதல்தானே . அலுவலகத்தில் , பேருந்து நிறுத்தத்தில் , பொது இடத்தில் எங்கும் இனி நாம் சந்திக்க இயலாதாம் .

எவன் தடுத்தாலும் விடேன் , அந்த எமன் தடுத்தாலும் விடேன் , மறைவாய் உன்னை சந்திக்க ஆயிரம் இடமிருக்கையில் எனக்கென்ன கவலை என அடித்தேன் அடித்தேன் விடாமல் அடித்தேன் மறைவாய் சந்தில் பொந்தில் இண்டு இடுக்கு என யார் கண்ணிலும் படாமல் உனை அனுபவிக்கிறேன் , நிறைய நிறைய நிறைய நிறைய......

வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ? என கவியரசர் பாடிச்சென்ற வரிகளும் பொய்யே , உனது சுவடுகள் நான் இறந்து மக்கி மண்ணாகும் வரை என் நெஞ்சுக்குள் நிலைத்திருக்கும் . நிக்கோடின் சுவடுகளாய் .. என் உயிர் பிரிந்தாலும் உனைப்பிரியேன் ;-)

ஆனால் ஒரு பத்து நாட்களாக என்னவோ தெரியல என்ன மாயமோ புரியல உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை , இறுமல் அதிகமாகி அதிகமாகி இதயமே வாய் வழியாய் வந்துவிடும் போலிருந்தது . டாக்டரிடம் கேட்டால் காசநோயாம் !!! அட கருமம் புடிச்ச பன்னாடை பரதேசி நாய்ங்களா ... கேன்சர்தானடா வரும்னு சொன்னீங்க தீடீர்னு இது வந்திருச்சுனு சொன்னேன் , அதெல்லாம் ஒத்துக்கமுடியாது னு சொன்னாலும் வந்தது வந்ததுதான் நொந்தது நொந்ததுதான் என்று இளையராஜா வாய்ஸில் பாடுகிறார் .

அடிப்பாவி உன்னை காதலிச்ச பாவத்துக்கு என் நெஞ்சத்தான் கிழிச்சி தொங்கவிட்டனுபாத்தா கொஞ்ச கொஞ்சமா என் என் கு.........கு.......கு............குட்டி நுரையீரலையுமில்ல காலிபண்ணிட்ட..

பிறகென்ன ... ம்ம் வந்தது வந்துதான் நொந்தது நொந்தது தான்........

எப்போதும் போல எல்லா காதல் கதைகளின் முடிவும் இதுதானே ரோமியோ போல் , அம்பிகாபதியைபோல அமரக்காதல்னா கடைசியில் காதலனுக்கு முடிவு சங்குதானேதானே..

இப்படிக்கு...

நெஞ்சு பஞ்சா போயி பஞ்சரான

பஞ்சாபகேசன் ( இப்பல்லாம் எல்லாரும் நான் இருமுறத பாத்து கஞ்சாபகேசன்னுதான் கூப்பிடறாங்க ... எல்லாம் உன்னாலே உன்னாலே , சங்கூதினப்பறம் இப்படிலாம் கடிதமெழுத முடியாது அதான் முன்னாடியே , சாகறதுக்கு முன்னாடி சமாதி கட்ற மாதிரி.... )
_____________________________________________________________________________________
அவ்ளோதான்பா ;-)
_____________________________________________________________________________________

வால் - ஈ ( WALL-E ) : திரைப்பட விமர்சனம்உலகிலேயே அமெரிக்கர்கள்தான் அதிக அச்சத்துடனும் பயத்துடனும் வாழ்பவர்கள் என்பது அவர்களது நாட்டில் வெளியாகி வெற்றியடையும் திரைப்படங்களை கண்ணோக்கினாலே புரிந்துவிடும் . அதுவும் அவர்களது பெரும்பாலான படங்களில் ஏதோ ஒரு ஆபத்து நியார்க் அல்லது வாஷிங்டன் நகரத்தை தாக்குவதாகவும் அதிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோவோ அல்லது அந்நகரத்து மக்களோ திரண்டு நாட்டை மட்டுமல்ல சமயத்தில் உலகத்தையே காப்பாற்றுவதாகவும் திரைக்கதைகள் இருக்கும் .


நம் உலகம் மற்றும் அதன் அழிவு தரும் அச்சம் அனைவருக்குமே பொதுவானவை . இன்றைய சுற்றுசூழலின் நிலை அனைவரும் அறிந்த ஒன்று , நாம் சுவாசிக்கும் காற்றாகட்டும் , அல்லது குடிக்கும் நீராகட்டும் , ஏன் ஓஸோன் மண்டலத்தில் விழுந்து வரும் துளையால் நம் மேல் விழுகின்ற சூரிய ஒளி கூட நமக்கு ஆபத்தை விளைவிப்பதாய் மாறி வருகிறது . இந்நிலை என்றுமே குறையாது , அது ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணமேயுள்ளது . இந்நிலை இன்னும் சில வருடங்களில் அதிகமாகி நம்மை இவ்வுலகத்தில் வாழ இயலாத ஒரு நிலைக்கு கொண்டு செல்லும் . எங்கும் சுவாசிக்க இயலாத விஷவாயுவால் சூழப்பட்டு ஒரு உயிர் இப்பூவலகில் வாழ இயலாத ஒரு நிலை .
அப்படி ஒரு சூழலில்தான் இப்படம் துவங்குகிறது , உலகத்தில் இருக்கும் மனிதர்கள் தங்களது அயராத உழைப்பால் நம் உலகத்தை ரசாயன கழிவுகளின் குப்பையாக்கி அதன் பலனாய் தானே அழிந்து போன நம் உலகம் , அங்கே எல்லாம் இரும்பு கழிவுகள் அக்கழிவுகளை அகற்றும் பணிக்கு வால்-இ எனப்படும் ரோபோக்கள் . மனித அழிவிற்கு பிறகு பல நூறு ஆண்டுகள் கடந்த பின் உலகில் உயிரினங்கள் அற்ற சூழலில் சூரியசக்தியில் இயங்கும் இந்த வால்-இ ரோபோக்களும் அழிந்து அவ்வகையில் ஒன்று மட்டும் தனித்து தனது அன்றாட வேலையான குப்பை அகற்றுதலை செய்துகொண்டிருக்கிறது .

அந்த வேலைகளுக்கு நடுவே புதிதாக வித்யாசமான பொருட்கள் தென்பட்டால் அதையும் தன்து சிறிய குடோனில் அடைத்து வைத்துக்கொண்டு , ஒரு கரப்பானின் துணையோடு வாழ்கிறது ! . தனது உதிரிபாகங்களையும் கூட பாதுகாத்து வைத்துக்கொண்டு ஒரு மிகப்பழைய அமெரிக்க திரைப்படத்தின் பாடல்காட்சி அடங்கிய ஒரு வீடியோ டேப்பை வைத்துக்கொண்டு தினமும் பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அந்த படத்தை பார்க்கிறது , அதில் காதலர்கள் கைகோர்த்து தங்கள் அன்பை வெளிப்படுத்தும் காட்சியில் இதுவும் தனது இயந்திரகைகளை கோர்த்தபடி தனக்கு அது போல ஒரு துணையில்லையே என வருந்துகிறது .


பின் அங்கு வரும் ஒரு வேற்றுகிரக ரோபோவும் , அதனுடனான வால்-இ யின் காதலும் அதனைதொடர்ந்து வரும் காட்சிகளும் இறுதியில் வால்-ஈ யிம் அந்த பெண் ரோபோவும் இணைந்தனரா , அவர்களது இரும்புகைகள் இணைந்ததா என்பது கிளைமாக்ஸ் .
படத்தின் முதல் 30 நிமிடங்கள் எந்த வித வசனங்களும் இன்றி வெறும் காட்சிகளிலேயே படத்தை கொண்டு சென்றிருப்பது படத்தின் முக்கிய விடயம் . ரஜினிகாந்த் படத்தைக்கூட வசனமில்லாமல் முதல் அரைமணிநேரம் நம்மால் பார்க்க இயலுமா என தெரியவில்லை ஆனால் முதல் அரை மணி நேரமும் ,அதில் இடம் பெரும் காட்சிகளையும் சார்லி சாப்ளினின் அக்கால பேசாப்படங்களோடு ஒப்பிடலாம் . அத்தனை நேர்த்தி அவ்வளவு அழகு , முதல் அரை மணிநேரமும் படத்தில் வசனங்களே இல்லை என்பதை நாம் உணர்வதற்குள் காட்சிகள் வேகமாய் ஒரு மணிநேரத்தை தாண்டிவிட்டிருக்கின்றன.

சார்லி சாப்ளின் படங்களில்(சிட்டிலைட்ஸ் ) காணவல்ல நகைச்சுவையுடன் கூடிய ஒரு சோகமான காதலை இப்படத்தில் பயன்படுத்தியிருப்பது அருமை.

படத்தில் இரண்டு இயந்திரங்களையும் அதன் பாலினத்தையும் அதன் உணர்வுகளையும் முக அசைவுகளையும் உடலசைவு மொழிகளையும் மிக அருமையாகவும் துல்லியமாகவும் வடிவமைத்திருக்கின்றனர் . நிச்சயம் இவ்வகை முகமற்ற ரோபோக்களில் பாலினம் அறிவது மிக கடினமான விடயம் .


இத்திரைப்படம் முழுவதும் விரவியிருக்கும் சுற்றுசூழல் மீதான அக்கறை வியக்கவைக்கிறது , குழந்தைகளுக்கான ஒரு அனிமேஷன் திரைப்படத்தில் இப்படி ஒரு முயற்சி நமக்கு விந்தையாக இருந்தாலும் , நாம் வெட்டி விட்டு போன மரத்தின் நிழலை தேடும் நாளைய சமுதாயம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பிரச்சனை இது .இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியோர்களுக்கும் ஏற்ற வகையில் ஆக்சன் , ரொமான்ஸ் , சென்டிமென்ட் என கலந்து கட்டி அடித்திருப்பது , நமது மசாலா வகை ரசிகர்களுக்கும் பிடிக்கும் .

படத்தின் நாயகன் வால்-ஈ யின் தனிமையையும் அது தரும் ஒரு வெறுமையான ஒரு சூழலையும் முதல் இரண்டு காட்சிகளிலேயே புரியவைத்து விடுகின்றனர் .

உலகை நாசமாக்கும் இயந்திர வாழ்க்கையையும் அது தரும் சுகத்தால் நாம் அழித்து வரும் இவ்வுலகம் குறித்தும் இப்படி ஒரு சூழலில் அழியவிருக்கும் மனித குலத்தை ஒரு இயந்திரம் காப்பாற்றுவது போலவும் திரைக்கதை அமைத்தமைக்கு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
படத்தினூடே இழையோடும் இசை ஒரு அனிமேஷன் படத்திற்கு இத்துணை சிரத்தையா என வியக்கவைக்கிறது .

படம் பற்பல கருத்துக்களை கூறினால் எந்த இடத்திலும் அலுப்பின்றி ஒரு அனிமேஷன் திரைப்படம் பார்க்கிறோம் என்கிற ஒரு உணர்வின்றி நம்மை ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அடுத்து என்ன என்னும் ஒரு சஸ்பென்ஸோடு கதை நகர்வது அருமை .
ஒரு முழுமையான அறிவியல் புனைக்கதையை சார்ந்த இந்த அனிமேசன் திரைப்படம் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் .

இது போன்ற படங்களை ஏன் தமிழில் யாரும் மொழிபெயர்த்து வெளியிட முன்வருவதில்லை என்பது கேள்விக்குறியே .

09 October 2008

நினைவுகளாய் மலரும் சினிமா சினிமா சினிமா.....

தோழர் நாகார்ஜூனன் தனது சினிமா குறித்த நினைவுகளால் மலர்ந்ததை தொடர்ந்து அடுத்து ஐகாரஸாரும் அதை தொடர்ந்து தோழர் ஸ்ரீஸ்ரீ பூஜ்ய ஸ்ரீ லக்கிலுக்கானந்த சுவாமிகளும் நினைவுகளால் மலர்ந்த இந்த சினிமா குறித்த தொடர் விளையாட்டில் லக்கி சுவாமிகள் அடுத்த இதனை என்னையும் இன்னும் சிலரையும் தொடர சொல்லியிருந்ததால் அதோ எனது பதிவு .

நினைவுகளாய் மலரும் சினிமா சினிமா சினிமா......... ;


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


நான் விபரம் தெரிந்து பத்து வயதில் பார்த்த படம் கரகாட்டக்காரன், கோவையில் நாஸ் தியேட்டர் என்று நினைக்கிறேன் . இப்படத்தின் நகைச்சுவைகாட்சிகளை மட்டுமே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது , அந்நகைசுவைக்காட்சிகளை பல நடிகர்களும் செய்வதாக அப்போது மிமிக்ரி செய்து பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் மற்ற படி படத்தின் கதையோ இசையோ என்னால் உணரமுடியவில்லை. நான் பிறந்து முதல் மாதமே நானும் என் அம்மாவும் அவரது தோழிகளும் போன படம் ''கோழிகூவுது'' ( இது என் அம்மா கூறியே எனக்கு தெரியும் ) . தியேட்டர் பெயர் லட்சுமி .. அந்த தியேட்டர் இப்போது ஏபிடி குடோனாக இருக்கிறது .


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ஒரு நல்ல நண்பருடன் சக்கரக்கட்டி என்னும் தமிழ்சினிமாவையே புரட்டிப்போட்ட ஒரு மகத்தான திரைப்படத்தை பார்த்தேன் . அந்த தோழர் வாழ்க .

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சென்றவாரம் எனது அறையில் இரவு சன்டிவியில் சிவாஜி கணேசன் நடித்த ''அந்த நாள் '' திரைப்படம் பார்த்தேன் , ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் , இப்படம் மட்டும் ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஒரு புதிய உத்தியை அப்படத்தின் இயக்குனர் கையாண்டிருப்பதை உணர முடியும் . இப்படத்தினூடே இழையோடும் மெல்லிய வகை நகைச்சுவையை உணர முடிந்தது .இது தவிர இப்படம் நிகழும் காலகட்டம் அது ஜப்பான் சென்னையின் மேல் மூன்று குண்டுகளை போட்ட ஒரு நாளில் துவங்குகிறது . அது குறித்து சில விபரங்களை சேகரித்த போது சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் குறித்த எனது எண்ணங்களிலும் ஒருவித மாற்றத்திற்கும் வித்திட்டது .
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

''ரத்தக் கண்ணீர் '' மற்றும் மௌனராகம் இவ்விரண்டு படங்களும் வெவ்வேறு விதங்களில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி படைத்தது .

ரத்தகண்ணீர் திரைப்படத்தை இது வரை நான் 200 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன் , ஆனால் ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் அது மிகப்புதிதாகவே தெரிவது அப்படத்தின் ஆற்றல் .

ரத்தகண்ணீர் திடைப்படத்தில் எம்.ஆர். ராதா அவர்களின் நடிப்பின் ஆளுமையும் அவர் தோன்றும் காட்சிகளின் வசீகரமும் அப்படத்தினை ஒரு முறை பார்த்தாலே உணர இயலும் .
மௌனராகம் திரைப்படத்தின் மென்மையும் படம் முழுக்க விரவியிருக்கும் இசைஞானியின் பிண்ணனி இசையும் காலத்தால் அழிக்க முடியாதவை. அப்படத்தின் எளிமையும் ஒரு பெண்ணின் கோணத்தில் செல்லும் காட்சியமைப்பும் அதன் பிறகு வெளியான எந்த திரைப்படத்திலும் சொல்லப்படாதவை . மௌனராகம் திரைப்படம் பிடிக்காதவர் யாரேனும் இருக்க முடியுமா.

சமீபத்தில் '' மொழி '' _______


5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

பாபா v/s பாமக ....

லூசுத்தனமான ஒரு சண்டை , தேவையில்லாத விளம்பரம் , மற்றும் புஸ்ஸாகிப்போன ஒரு புரட்சி .


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

விக்ரம் திரைப்படம் , அப்படத்தின் கதைக்களம் மற்றும் சூழல் தமிழ் சினிமாவிற்கு மிகப்புதிது . எனக்கு சைன்ஸ் பிக்சனை அறிமுகப்படுத்திய ஒரு திரைப்படம் .
விக்ரம் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் பாராச்சூட்டில் கமலும் அப்படத்தின் கதாநாயகியும் (பெயர் நினைவில்லை ) பேசியபடியே வானில் இருந்து விழும் காட்சி மிக அருகாமையில் படமாக்கப்பட்டிருக்கும் *(குளோசப்பில் ) , பல நாட்கள் அக்காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள் என சிந்தித்திருக்கிறேன் . (பிற்காலத்தில் அது மிக எளிமையான ஒரு முறையில் அமைக்கப்பட்ட கிராபிக்ஸ் என்பது தெரிந்தது ) . அதே போல விட்டாலாச்சார்யா படங்களின் மோசன் கிராபிக்ஸ் வகைகளும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கின்றன் .

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வாரமலரில் துணுக்குமூட்டை , 10 வயதிலிருந்தே படித்து வருகிறேன் ,அதே போல தினதந்தியின் வெள்ளி மலர் , குமுதம் , ஆனந்தவிகடனில் வரும் சினிமா செய்திகள் , தற்காலத்தில் ROTTEN TOMATOES.COM போன்ற தளங்களும் இணையத்தில் ஒரும் செய்திகளும் வாசிப்பதோடு சரி . பிற மொழித் திரைப்படங்கள் பார்க்கையில் அது குறித்த செய்திகளை இணையத்தில் தேடி படிப்பதும் உண்டு .

7.தமிழ்ச்சினிமா இசை?

தமிழ்ச்சினிமா இசை மிக நன்றாக முன்னேறியுள்ளது , முன்னாலெல்லாம் தேவா காப்பியடிப்பது தெரிவதுபோல இசையமைத்து மாட்டிக்கொள்வார் , இப்போதெல்லாம் அது தெரியாத வண்ணம் பூசி மெழுகிவிடுகின்றனர் .அதும் அமெரிக்க இசையை தவிர்த்து மொராக்கோ போன்ற நமக்கு பரிச்சயமில்லாத இசையை காப்பியடிப்பதால் அப்படி . தற்காலத்தில் வரும் பாடல்களில் சில நல்ல பாடல்களை வித்யாசாகர்,ஹாரிஸ் , பரத்வாஜு , யுவன் போன்றோரிடமிருந்து வருவது குறிப்பித்தக்கது .

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

உலகமொழிசினிமா அதிகம் பார்க்க வாய்ப்பில்லையென்றாலும் கடைகளில் தேடிப்பிடித்து டிவிடியில் பார்ப்பேன் , சமீபத்தில் பார்த்த தி ஹிட்டன் பார்ட்டரஸ் ( the hidden fortress ) திரைப்படம் , அகிராகுரோசோவாவின் இப்படம் ஒரு கடைநிலை கதாபாத்திரத்தின்( சந்திரமுகி படத்தின் கதை வடிவேலு பாத்திரத்தின் பார்வையில் நகர்ந்தால் எப்படி இருக்கும் ) கண்ணோட்டத்தில் நகரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் . ஹிந்தியில் என்னை மிகவும் தாக்கிய திரைப்படம் தாரே ஜமீன் பர் தான் அதற்கு முக்கிய காரணம் அப்படத்தின் கதைக்கு மொழி அவசியமில்லை என்பதே . அதே போல ஆங்கிலத்தில் FORREST GUMP என்னை மிகவும் தாக்கிய ஒரு திரைப்படம் .

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சென்னைக்கு 6 வருடங்களுக்கு முன் வந்த புதிதில் சிலபல மாம்பலம் மேன்சன் உதவி இயக்குனர்களின் நட்பிருந்தது , சில நல்ல படங்களில் கதை விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் . அவர்களது பழக்கத்தால் எனது சினிமா மீதான மோகம் அதிகரித்தது , ஆனால் குடும்ப சூழ்நிலைகள் மற்றும் பண நெருக்கடி மற்றும் சினிமாவின் நிலையற்றத்தன்மை அக்கனவை முளையிலேயே கிள்ளி எறிந்தது . எஸ்.ஜே.சூர்யாவிடம் கூட உதவி இயக்குனராய் சேர முயற்ச்சித்து அது தோல்வியடைந்திருக்கிறது .

ஆனால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் தமிழ்சினிமாவில் ஏதாவதொரு வகையில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆவல் மட்டும் குறைந்ததில்லை . அதற்குண்டான வாய்ப்பும் சூழலும் வாய்க்கையில் நிச்சயம் தமிழ்சினிமாவின் பணியாற்றுவவன் .

என்னால் தமிழ்சினிமா மேம்படுமா என்பது தெரியாது . ஒரு வேளை நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நான் நிச்சயம் தமிழ்சினிமாவால் மேம்படுவேன் .


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்சினிமாவிற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது , உலக அரங்கில் தமிழனின் ஆக்கங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் . மக்களின் மாறிவரும் ரசனையும் தற்போது வெளியான ''மிக நல்ல'' படங்களில் வெற்றியும் இதனை உறுதி செய்வதாக தெரிகிறது.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

இந்த கேள்வியே வசீகரமாக இருக்கிறது , ரஜினி,கமலெல்லாம் நிம்மதியாக இருப்பார்கள் , நமிதா , நயன்தாரா சிம்பு போன்றோர்கள் கிசுகிசுக்களை SMSல் பரப்ப முயற்சிக்கலாம் ,சினிமா நடிகர்கள் ஒரு வருடம் ஓய்வெடுப்பார்கள் , சினிமா தொழிலாளர்கள் வாழ்க்கை நசிந்து போகலாம் . நமக்கு பிரச்சனையில்லை சினிமா இல்லையேல் இருக்கவே இருக்கிறது அரசியல் அதுவும் போரடித்தால் கிரிக்கெட் , அதுவும் போரடித்தால் நிறைய புத்தகங்கள் படிக்கலாம் , அதுவும் போரடித்தால் நாமே புத்தகம் எழுதலாம் சினிமா பார்க்காமல் இருப்பது எப்படி என்று .

தமிழர்களுக்கு என்ன ஆகப்போகிறது , ஒன்றும் ஆகாது , ஆங்கிலபடங்கள் பார்ப்பார்கள் , ஆன்மீகத்தில் ஈடுபடுவார்கள் , சாமியார்கள் அதிகரிக்கலாம் , அரசியல்வாதிகள் சினிமா நடிகர்களிடமிருந்து நம்மை மீட்டு அவர்களுக்கு அடிமையாக்க முயற்சிக்கலாம் . நாடகங்கள் நடக்கலாம் , தெருக்கூத்து , கரகாட்டம் , பொய்க்கால்குதிரை , ஒயிலாட்டக்கலைஞர்களுக்கு மறுவாழ்வு உண்டாகலாம் , திருவிழாக்கள் அதிகம் நடத்தப்படும் , அதில் மானாட மயிலாட ரேஞ்சில் நடனங்கள் பார்க்கலாம் . மீண்டும் கேப்ரே டேன்சுகளுக்கு மவுசு கூடலாம்.

கோவில்களில் நாட்டிய நாடகங்கள் நடக்கலாம் , சுற்றுலாத்துறை வளர்ச்சியடையலாம் . ( தமிழர்கள் தங்களத் குடும்பத்தோடு பல ஊர்களுக்கு சுற்றுவதால் )

இவையெல்லாம் இருந்தாலும் ஒரு வருடம்தானே இந்த தடை அதனால் நிச்சயம் தமிழரின் சினிமா மோகம் குறையாது . ( வெறிபிடித்த தமிழ் ரசிகனும் பொங்கலுக்கும் , தீபாவளிக்கும் , தன்தலைவன் படம் வராத இந்த தீபாவளி கறுப்பு தீபாவளி என எப்போதும் போல போஸ்டர் அடிப்பான் , தமிழகம் முழுக்க இவ்வகை போஸ்டர்களால் அல்லோலகல்லோலப்படும் )
____________________________________________________________________________________

இப்பதிவை தொடர்ந்து இந்த சினிமா நினைவுகள் குறித்த பதிவை தொடர்ந்து எழுத
1.பாலபாரதி
2.வடகரைவேலன் போன்ற பழம் பெரும் பதிவர்களையும்
1.குப்பன்யாகூ
2.சென்
3.பாலா ( சந்தர் ) ஆகிய பழம் பெறாத பதிவர்களையும் அழைக்கிறேன் .

_____________________________________________________________________________________

அவ்ளோதான்பா.... ;-)
_____________________________________________________________________________________

வாசகர்கடிதம் - 10-10-2008

நமது வலைப்பூவின் வாசகர் மற்றும் விரைவில் தானும் ஒரு வலைப்பூவை துவங்கவிருக்கும் திரு.ரவிஷங்கர் அவர்கள் அனுப்பிய கடிதம் உங்கள் பார்வைக்கு . இதுவரை வந்த கடிதங்களிலேயே இக்கடிதம் மிகசுவாரசியமாக இருந்ததால் இதை இங்கே பதிகிறேன் .கடிதம் :

_____________________

அன்புள்ளஅதிஷா ,

உங்கள் கதைகளை படித்தேன். (காலமும்காதலும்,கேள்விகளில்லா விடைகள்,இறுதிமுத்தம்,படிக்கக்கூடாத குட்டிக்கதைகள், சில்க்,ஷகிலா,நமீதா மற்றும் கிருஷ்ணப்பிள்ளை). அதை பற்றிய என் எண்ணங்கள்.

வாழ்கையை கூர்ந்து கவனிக்கிறிரீகள்.கதை கரு நன்றாக இருக்கிறது .சில வரிகள் அற்புதம். வயது மீறியா அனுபவம். ஆனால் அதை கதைக்கு கொண்டு வரும்போது, முரசொலி கலைஞர், கண்ணாதாசன் /நா.பா./அகிலன் நடிகர் எஸ்.எஸ்.ஆர் இவர்களை கூட்டிகொண்டு வர கூடாது. மற்றும் காவிய தமிழ் கண்டிப்பாக மறக்க படவேண்டும். காவிய தமிழ் எழுதினால் கதை நீர்த்து போய் விடும் .

ராமராஜன் உடையில், அதே விக்கில்,லிப்ஸ்டிக் பூசிய உதட்டோடு பிஸ்சா சென்டெரில் ஒருவனை பார்த்தால் எப்படி இருக்கும் ?

நாம் இருப்பது .2008..... முரசொலி கலைஞர் பாணியில் கதை இருக்கிறது. "பராசக்தி" சிவாஜி வசனம் இருக்கிறது. புரட்சி நடிகர் எஸ்.எஸ்.ஆர் பேசுகிறார் . கண்ணாதாசன் /நா.பா./அகிலன் போல வருணனை . . .தானாக உணர்ச்சிகள் வாசகனிடத்தில் எழ வேண்டும் . உணர்ச்சியை "புஸ்க் புஸ்க் " என்று காத்து அடித்து ஏற்றுகிறீர்கள். உப்பி போய் வெடிக்கிறது . காட்சி தளங்களும் கதை சொல்ல வேண்டும். இது சுவிஸேஷ கூட்டம் இல்லை.

கோனார் நோட்ஸ் போடக்கூடாது . பிரசார நெடி அடிக்க கூடாது சுருங்க சொல்லணும் .மெலோட்ராமா கூடாது .பாலசந்தர் காலம் முடிந்து இப்போது பருத்தி வீரன் காலம். வார்த்தைகளை தலைகாணியில் பஞ்சு அடைப்பது போல் கதையில் அடைக்கிறீர்கள். செயற்கைததனம் . Romanticise செய்யாக்கூடாது. தெரியாமல் செய்ய வேண்டும்.

. காலம் போக போக பக்குவம் வரும் .விடலைத்தனம் போகும் . நிறைய படிக்க வேண்டும் .படித்தல் மட்டும் போதாது. உள் வாங்க வேண்டும் .


நீங்கள் படிக்க வேண்டியது : சிறு கதை: "தனுமை" வண்ணதாசன் “செண்பகபூ" தி .ஜா. "நாற்காலி" கி.ரா. "அப்பாவும் ..." மா.வே.சிவகுமார் “கடவுளும் கந்தசுவாமி பிள்ளையும்” (பு.பித்தன் ) ம்ற்றும் பிரபஞ்சன் கதைகள் ..


கண்டிப்பாக "தனுமை" படிக்க வேண்டும்

பார்க்க வேண்டியது: “படங்கள்: கலாட்டா கல்யாணம் , அவள் அப்படித்தான் ,Monsoon Wedding ,( மெலிதான நகைச்சுவை) சோப்பு சீப்பு கண்ணாடி (வித்தியாசமான கதை). Gandhi movie.


வாழ்த்துக்கள்

கே.ரவிசங்கர்
___________________________

கடிதம் அனுப்பிய திரு.ரவிஷங்கர் அவர்களுக்கு நன்றி.
_____________________________________________________________________________________
அவ்ளோதான்பா ;-(
____________________________________________________________________________________

08 October 2008

விடுமுறை தினத்தை முன்னிட்டு....
இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் எதாவது சிறப்பு நிகழ்ச்சியானு மட்டும் கேட்டுவிடாதீர்கள் , இது அதை பற்றியதல்ல , பெரிய விழா, தீபாவளி,பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் உங்களில் எத்தனை பேர் கொலைப்பட்டினி கிடந்திருக்கிறீர்கள் . இது அப்படி பட்டவர்களின் வாழ்க்கைபற்றியது . இது உணவிற்கும் உணர்விற்குமான ஒரு ஆராய்ச்சி .

பேச்சிலர் வாழ்க்கை இனிமையானது , இயல்பானது , சுதந்திரமானது தான் , அதனடி ஆழத்தில் இறைந்து கிடக்கும் வலியும் வேதனையும் அவனால் மட்டுமே உணரமுடிந்தது . பேச்சிலர்னா வாரம் ஒரு முறை பீரும் கண்ட நேரத்தில் தம்மும் , நினைத்த நேரத்தில் ஊர் சுற்றி திரும்பி வருவதும் , என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற இத்துனை சுதந்திரங்களையும் தாண்டி அவனது வாழ்க்கையின் மனதின் அடிஆழத்தில் இறைந்து கிடக்கும் தனிமையை அவனால் மட்டுமே உணர இயலும் .

பொதுவாகவே பேச்சிலர்கள் பலரும் விடுமுறைதினங்களில் எப்பாடுபட்டாவது தங்கள் சொந்த ஊருக்கு போய் விடுவர் . ஆனால் சில பாவப்பட்ட ஜீவன்கள் அலுவலகத்தில் , தொழிற்சாலையில் , மற்றும் பிற இடங்களில் விடுமுறை கிடைக்காமலோ ஊருக்கு ஒரு நாளில் செல்ல வழியில்லாமலோ தங்களது அறைகளில் அடைந்து கிடக்கும் கொடுமையை பார்க்கலாம் . துபாயில் மட்டுமல்ல நம்மூரின் சென்னையிலும் திருப்பூரிலும் கோவையிலும் கூட இதை கண்கூடாக காணலாம் . அதுவும் சென்னை போன்ற இடங்களில் மேன்சன்களில் வாழும் இந்த ஜீவன்கள் இத்தினங்களில் உணவங்களின் விடுமுறையால் அவதியுறும் காட்சிகள் மிக சகஜம் . இந்த கடைநிலை பிராணிகள், மேன்சன்களின் பத்துபத்து அளவில் பத்து பேருடன் பகிர்ந்து கொள்ளும் அறையில் நிச்சயம் சமைக்க இயலாது . (மென் பொருள் துறையில் பணிபுரியும் பேச்சிலர் நண்பர்களைப்பற்றி எனக்கு தெரியாது. இது முழுக்க முழுக்க திருவல்லிக்கேணி பல துறைகளிலும் கடைநிலையில் பணியாற்றும் நாலிலக்க சம்பள நண்பர்களை பற்றியதே )

பேச்சிலர்களில் பலரும் இந்நாட்களில் தங்களது பைக்கில் ஊரெல்லாம் சுற்றி எங்காவது பேருந்து நிலையங்கள் அருகிலேயோ அல்லது ரயில்நிலையத்திலோ சென்று உணவு வாங்கி வந்து உண்ணுவதையும் காணலாம் . மாதக்கடைசியில் வரும் பண்டிகை தினங்களில் இது இன்னும் மோசமாகும் , பெரும்பாலான மேன்சன் வாசிகள் மாதக்கடைசிகளில் மெஸ்களை மட்டுமே நம்பி கையில் காசின்றி அந்த மெஸ்களின் விடுமுறைதினத்தில் சோற்றுக்கும் வழியின்றி கையிலும் காசின்றி மிக கொடுமையாய் பத்துக்குபத்து அறையில் காலையிலிருந்து மாலைவரை முடங்கிக்கிடக்கும் பேச்சிலர்களை எல்லா விடுமுறைதினத்திலும் காணலாம் .

இவர்களில் பலரும் இத்தினங்களில் கையில் பணமின்றி பெட்டிக்கடைகளில் அக்கௌண்ட் இருந்தால் ஒரு சில வாழைப்பழமும் தண்ணீர் பாக்கெட்டும் ஒரு சிகரெட் என மதிய உணவை முடித்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன் . இதை படிக்கும் குடும்பஸ்தர்களுக்கு இது ஒரு விந்தையான விடயமாக இருக்கலாம் . ஆனால் இது காலம்காலமாக நடக்கும் ஒரு நிகழ்வே . இதை பற்றி படித்தால் இதன் வலியும் வேதனையும் நிச்சயம் மத்ய வயதினருக்கோ அல்லது குடும்பஸ்தர்களுக்கோ , வாழ்க்கையில் ஒரு நாள் கூட பேச்சிலராக வாழாதவருக்கோ நிச்சயம் வேடிக்கையும் நகைப்புக்கும் உரிய ஒரு விடயம்தான் இது .

இந்த பேச்சிலர்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கும் , இது போன்ற விழா நாட்களில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களோ அல்லது சக குடும்ப நண்பர்களோ தங்கள் வீடுகளுக்கு அழைத்து ஒரு வேளையாவது சோறு போடமாட்டார்களா என்று , ஆனால் பெரும்பாலான மக்கள் ஒரு ஆடவன் தங்கள் வீட்டிற்கு வருவதையோ இது போன்ற பண்டிகைதினங்களில் வீட்டினை ஆக்கிரமிப்பதையோ விரும்புவதில்லை போலும். அதிலும் குறிப்பாக மனைவிகளுக்கு தனது கணவனின் பேச்சிலர் நண்பர்களை கண்டாலே ராவணனை கண்ட சீதை போல ஒரு உணர்வு, அதற்கும் காரணம் உண்டு பொதுவாகவே கணவன்கள் தண்ணி அடிப்பதையோ அல்லது சிகரெட் பிடிப்பதையோ மனைவிகளுக்கு பிடிப்பதில்லை , அதை பேச்சிலர் நண்பர்கள்தான் தனது கணவன்மார்க்கு கற்று தருவது போல ஒரு எண்ணம் . உண்மை என்னவென்றால் இந்த கல்யாணம் பண்ணிய ரங்கமணிகள்தான் வீட்டிற்கு பயந்து, நண்பர் அறைகளில் தம் அடிக்கவும் தண்ணி அடிக்கவுமே பேச்சிலர்களிடம் மிகுந்த அக்கறையுடன் பழகுவது தெரியாது போலும் . இது எல்லா குடும்பஸ்தர்களையும் குறிக்காது சிலரை மட்டும் .

பேச்சிலர்கள் என்றுமே பேச்சிலர்களாகவே இருந்து விடுவதில்லை . ஒரு நாள் அவர்களுக்கும் திருமணமாகிறது , அவர்களும் தான் வாழ்ந்த அதே ஊரில் தன் மனைவியுடன்தான் பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலமாய் பொழுதை கழிப்பர் . ஆனால் தான் இது போன்றதொரு நாளில் இன்று நம்மோடு இருந்த அந்த பேச்சிலர் அனுபவிப்பானே என்கிற எண்ணம் யாருக்குமே வராததன் மர்மம் மட்டும் ஏனோ புரிவதில்லை . அதுவும் பலர் தான் பேச்சிலராய் பட்ட அந்த நாட்களை மறந்திருப்பது வியப்பே.

நான் பொதுவாகவே இது போன்ற குடும்பஸ்த நண்பர்களிடம் பொங்கல் அன்று உங்கள் வீட்டற்கு வரலாமா என்று வாயைவிட்டு கேட்டாலும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லும் நண்பர்களும் நிறைய இருக்கின்றனர் .

நீங்கள் நினைக்கலாம் என்னங்கடா ஒரு நாள் சோறு இல்லைனா என்ன செத்தா போயிடுவீங்க என்று , இது ஒரு நாள் சாப்பாடு குறித்த பிரச்சனை அல்ல , இது ஒரு பண்டிகை தினத்தில் இது போல பல வருடங்கள் தன் குடும்பத்தோடும் நண்பர்களோடும் கழித்த ஒரு பண்டிகைதினத்தில் ஒரு வேளை சோறு கூட இன்றி ( அறையில் இருக்கும் பிற நண்பர்கள் ஊருக்கு போயிருந்தால் இது இன்னும் மோசம் ) யாரும் சாப்பிட்டாயா என்று கேட்க கூட ஆளில்லாமல் , வெளியில் சுற்ற பணமுமில்லாமல் பேசயாருமின்றி ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடப்பது கொடுமைதானே . இனிப்பை சுவைத்த ஒருவன் ஊரே இனிப்பின் மகிழ்ச்சியில் திளைக்கையில் தனக்கு மட்டும் கசப்பு மருந்து கிடைத்தால் இருக்கும் அந்த மனநிலையே இது .

இதை தாழ்வு மனப்பான்மையாக கூட நீங்கள் கருதலாம் . இது நிச்சயம் தாழ்வுமனப்பான்மையே , எந்த கஷ்டப்படும் பேச்சிலரும் !! ஜாலியாக ஊரை சுற்ற வெளியூருக்கு வந்து வேலை செய்வதில்லை , தனது குடும்ப சுமையும் வறுமையுமே அவனை அங்கே அழைத்து வந்திருக்கிறது , ஏப்பேர்பட்ட வறுமையிலிருப்பவனும் பண்டிகை தினங்களில் மகிழ்ச்சியாய் குடும்பத்தோடு பொழுதை கழிக்கவே விரும்புவான் , ஆனால் அது கூட கிடைக்காத வெறுமையே இதற்கு காரணாமாக இருக்கலாம் .

இது உணவையும் தாண்டி உணர்வு சார்ந்த ஒரு விடயம் , இது பண்டிகை நாட்களில் மட்டுமல்ல மற்ற நாட்களிலும் தொடர்வதை பார்க்கலாம் . பேச்சிலர்கள் ஊருக்கு போய் திரும்பும் போதெல்லாம் ஒரு வித புத்துணர்ச்சியுடனும் கொஞ்சம் உடல் சதையுடன் முகமலர்ச்சியோடும் வரும் அவன் அதன் பின் அடுத்த முறை ஊருக்கு போவதற்குள் அது குறைவதையும் அந்த புத்துணர்ச்சியின்றி உடல் மெலிந்து இருப்பதை கண்கூடாகக் காணலாம் .

பல நாள் கழித்து ஊருக்கு செல்லும் போதெல்லாம் எல்லா பெற்றோரும் முதலில் சொல்லும் வாக்கியம் என்ன தெரியுமா என்னாடா இப்படி இளச்சிட்டே என்பதுதான் ( அவன்/ள் எத்துனை குண்டாக இருந்தாலும் ) , எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சொற்றொடர் அது , நம் சமூகத்தில் உணவுக்கும் உணர்வுக்கும் இருக்கும் உறவு அது . அதனால்தான் ஊரிலிருந்து வந்த மகனை/ளை நாம் திரும்பும் வரை இன்னும் கொஞ்சம் சாப்பிடு இன்னும் இன்னும் என சொல்லி சொல்லி சோறூட்டும் தாயின் உணர்வு அது யோசித்து பாருங்கள் அது வெறும் வெந்த அரிசியா என்ன அது நிச்சயம் உணவல்ல ஒவ்வொரு தாயின் அன்பு அது (அதை நாம் எப்போதுமே உணர்வதில்லை அது வேறு விடயம் அதை விடுங்கள் ).

இது போன்ற தருணங்களில் சிகரெட்டு மிகுந்த ஆறுதல் தரக்கூடியவன் , மனதை இது போன்ற தருணங்களுக்கு தயாராக்குவான் . ம்ம் இதானால்தானோ என்னவோ பெரும்பாலான பேச்சிலர்களுக்கு சிகரெட் பழக்கம் வந்து விடுகிறது . தனிமையின் வெறுமையை எப்போதும் போக்குபவது இந்த சிகரெட்டின் சக்தி . அது கூட ஒரு தற்காலிக நண்பன்தான் அணையும்வரை . அதறகும் நம் உயிரென்னும் விலைதரவேண்டியிருக்கிறதே . காதல் கூட இந்த நோய்க்கு மருந்தாகாது , அதுவும் தற்காலிக மருந்துதான், போதை மருந்து . பிறகக இந்நோய்க்கு என்னதான் மருந்து , அது நிச்சயம் நோயில்லை . இது நிகழ்வு , இதன் சாரம் ஒவ்வொரு பேச்சிலருக்கும் மாறுபடும் .

பேச்சிலராய் வாழும் ஒவ்வொரு இளைஞனும் கட்டாயம் இது போன்றதொரு தருணத்தை நிச்சயம் கடந்திருப்பான் . மிகசுவாரசியமான அந்நாட்களை பிற்காலத்தில் அசைபோடுகையில் அது நேற்றைய பேச்சிலருக்கு என்றுமே நகைச்சுவைதான் .

____________________________________________________________________

அவ்ளோதான்பா........ ;-)

____________________________________________________________________

06 October 2008

மன்மோகன்சிங் ஐயாவுக்கு ஒரு பாராட்டு கடிதம் :தந்தி இல்லைங்கோ...


மதிப்பிற்குறிய மன்மோகன்சிங் ஐயாவுக்கு ,

வணக்கமுங்கோ , என்னை உங்களுக்கு தெரியுதுங்களா , நான்தானுங்க எல்லா கிராமத்திலயும் இருக்கற ஒத்த ஆலமரத்தடில எப்படா மழைவரும்னு வானத்தையே பாத்துகிட்டும் , எப்படா கரண்ட் வரும்னு மோட்டாரையும் பாத்துகிட்டு கிடக்கற தற்குறி தமிழன் (இந்தியனும் வச்சிக்கலாம் என்ன மக்க இந்தியன் தாத்தாம்பாய்ங்க ) . எசமான் என்னடா இவன் என்ன சாதாசோதா நமக்கு கடிதம் எழுதனு மட்டும் நினைக்காதீங்க , நாங்கெங்க வூட்ல இருக்கறவீகளையும் சேர்த்து ஒங்களுக்கு மொத்தமா 10 ஓட்டு போட்ருக்கோமுங்கோ . அந்த தகிரியத்திலதான் கடுதாசி போடறமுங்க . சமீபத்தில கூட எங்க மொதல்வரய்யா உங்களுக்கு தந்தி போட சொன்னாரு . தந்தி போடலாம்னு எனக்கும் ஆசைதாங்கய்யா , ஆனா எதுக்கு தந்தினு தெரியலயே . விடுங்க நம்ம கடுதாசி அதுக்கில்ல.

இந்த கடுதாசி எதுக்கு எழுத ஆரம்பிச்சேன்னே மறந்து போச்சுங்கையா , ஏன்னா பாருங்க இங்க கரண்ட் எப்பயாச்சும்தான் வருது , அந்த நேரம் மோட்டரப்போட்டு கருதுங்களுக்கு கொஞ்சம் தண்ணி காட்டிக்கலாமுங்கையா . இந்த கடுதாசி கட்டாயம் கரண்ட் பிரச்சனைக்கும் இல்லீங்கையா , ஏன்னா அதுக்கு முன்ன ஒருக்கா எங்க மொதலமைச்சருக்கு ஒரு கடுதாசி எழுதி அவரும் அத மதிச்சி ஒரு வாரம் கரண்ட்டு விட்டு எங்கள மகிழ்ச்சியாக்கிட்டாருங்கையா , அப்புறம் என்னாச்சுன்னு நீங்க கேக்கறது புரியுதுங்கையா , அதபத்தி நாங்களே எங்க மொதலமைச்சருகிட்ட பேசி தீத்துக்கறோம் நீங்க என்ன பண்ணுவீங்க பாவம் . இந்த கடுதாசி நிச்சயம் இலங்கை பிரச்சனை பத்தியுமில்லீங்கையா , ஏன்னா அத பத்தி நமக்கு அறிவு ரொம்ப கொறவுங்கையா .

நேத்து நம்ம பத்தாவது படிச்ச ( அவன்தானுங்க எங்கூர்லயே அதிகம் படிச்சவன் ) பிச்சமுத்து சொன்னான் , நீங்க அமெரிக்கா காரன்கிட்ட ஏதோ ஒரு ஒப்பந்தம் ம்ம்ம் அணுசக்தி அது என்ன எழவோ நமக்கு தெரியாதுங்க , ஆனா அந்த ஒப்பந்தம்ல கையெழுத்துப்போட்டு நம்ம நாட்டயே அவன்கிட்ட அடமானம் வச்சுட்டீங்கனு சொன்னானுங்க , அது மட்டுமில்லாம இந்த ஒப்பந்தம் வேஸ்ட் இதுனால இந்தியாக்கு ஒரு மயிரும் கிடைக்காதுனும் சொல்றானுங்க .சாமி நீங்க வெசனப்படாதீங்க உங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு அவன் கெடக்கான் சிவப்பு சட்டை பய , நீங்க அப்படிலாம் நாட்டுக்கு கெடுதல் செய்யமாட்டீங்கனு தெரியும் , இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு பயம்.

ஏன்னா பாருங்க நம்ம காவாலி காத்தமுத்து சொல்லுறான் அந்த காலத்தில பிரிட்டிஷகாரன்கிட்ட அடிமையா இருந்த இந்தியாவ காங்கிரசு சுதந்திரம் வாங்கி குடுத்துச்சுன்னும் இந்த காலத்து காங்கிரசு நம்ம இந்தியாவ அமெரிக்கா காரன்கிட்ட விக்குதுன்னும் , அவன் சொல்றப்பல்லாம் நமக்கு வயித்துக்குள்ள பூச்சி பறக்குதுங்கையா , இருந்தாலும் நீங்க நல்லவரு வல்லவருனு தைரியம் அதுமில்லாம அவன் உங்க கட்சி மேல எப்பவும் காண்டாவே சுத்தற நம்ம காவிகட்சி வேறெப்படி பேசுவான் .அவனுங்க கெடக்காறானுங்க நீங்க எம்புட்டு நல்லவரு எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு வராமாதிரி எதுனா செய்யவா போறீங்க ,
சாமி ஏற்கனவே ஊருக்குள்ள உக்கார இடத்தில குண்டுவைப்பானோ ஒன்னுக்கு போற இடத்தில குண்டு வைப்பானோனு அவனவன் அலறிகிட்டு திரியுறானுங்க , அத ஒன்னும் பண்ண மாதிரி தெரியல , அதவிடுங்க இந்த தீவிரவாதிங்க அவங்களயும் ஒன்னும் பண்ண மாதிரி தெரியல , அட அதயும் விடுங்க நம்ம விலைவாசி அது காட்டுத்தனமா காட்டேறி மாதிரி ஏறிகிச்சு அதயும் ஒன்னும் பண்ணல , அதெல்லாம் விட்டுட்டு இப்ப எதுக்கு இந்த ஒப்பந்தத்த இவ்ளோ அவசரமா நிறைவேத்தறீங்கனு நான் கேப்பனா? நம்ப கேனப்பய குப்பன் கேக்கறானுங்க . அவன் சொல்றப்பபக்கூட நமக்கு கதிகலங்கி பூமி அதிருதுங்க இருந்தாலும் அவனுங்க கெடக்காறானுங்க நீங்க எம்புட்டு நல்லவரு எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு வராமாதிரி எதுனா செய்யவா போறீங்க ,

நாட்டுக்குள்ள இப்படி பல பிரச்சனை இருந்தும் , அதெல்லாம் மயிராபோச்சினு கிடக்கறது கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனைல வைனு சொல்றாப்பல எங்க வீட்டு கிழவி கூட ஏதேதோ பேசுதுங்க , அதுங்க கிடக்குதுங்க நீங்க எம்புட்டு நல்லவரு எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு வராமாதிரி எதுனா செய்யவா போறீங்க ,

உங்க ஆட்சி மேல நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவந்தப்பம் கண்ட கபோதி நாய்ங்க கூடல்லாம் கூட்டணி வச்சி நெறய காசு செலவழிச்சு மறுபடியும் ஆட்சிய புடிச்சதே இந்த ஒப்பந்தத்த நிறைவேத்தத்தான்னு நம்மூர் ராமாக்கா மகன் கூட சொல்லுறான் அவனுக்கு வயசு பத்துதானுங்க , அட அந்த சின்னபயபுள்ளைக்கு எவ்ளோ திமிரு பாருங்க யாரோ கொலைகாரனுக்கு மந்திரி பதவிலாம் நீங்க வாங்கிதந்துதான் உங்க ஆட்சிய காப்பத்தினீங்கன்னான் .அவனுங்க கெடக்காறானுங்க நீங்க எம்புட்டு நல்லவரு உங்கள பத்தி எங்களுக்கு தெரியாதா எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு வராமாதிரி எதுனா செய்யவா போறீங்க ,

இதுனா வரைக்கும் அந்த கருமம் புடிச்ச ஒப்பந்தத்தில என்ன மயிருதான் இருக்கு , அட அந்த கெரகத்த நிறைவேத்தினா இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்னு யாருக்குனா தெரியுமா , அட மேலிடத்தில இருக்கற மயிரான்லருந்து தா என்னாட்டாம் ஆலமரத்தடி கெழவன் வரைக்கும் ஒருத்தருக்கும் ஒரு எழவும் தெரியாது . அட அதையாவது நீங்க ச்சொல்லி குடுத்துட்டா உங்களுக்கு கோடி புண்ணியமா போகுமுங்க , அப்படினு நான் சொல்லலைங்க நம்ம ஊராட்சி மன்ற தலைவரு சுடலை சொல்லுறான்ங்க , அவனுங்க கெடக்காறானுங்க நீங்க எம்புட்டு நல்லவரு எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு வராமாதிரி எதுனா செய்யவா போறீங்க ,

ஆனா சாமி அது என்ன இழவு கருமாந்திரம் அத நிறைவேத்தினா இன்னாகும் . அதுனால எங்கள மாதிரி ஏழைங்களுக்கு எதுனா உபயோகம் இருக்குமா , இதுலாம் எங்களுக்கு வேண்டாம் சாமி ஏன்னா நாங்க உங்கள நம்பித்தான் ஒட்டு போட்டமுங்க , எங்க தலைல நீங்க மண்ண போடமாட்டீங்கனு நம்புறோமுங்க , நீங்க அத என்ன காரணத்துக்கு வேணா நிறைவேத்துங்க ஆனா அதுனால நாம பொறந்த இந்த மண்ணுக்கு ஒரு பிரச்சனை வரும்னா அப்படி ஒரு ஒப்பந்தமே வேண்டாமுங்க... அத சொல்ல நீ யாரு மட்டும் கேக்காதீங்க சாமீ , உங்களுக்கு ஓட்டு போட்ட உரிமை இருக்குனு இன்னும் நம்பிக்கிட்டு கெடக்கற தற்குறி பயபுள்ளங்க ,....

அந்த ஒப்பந்தம் நல்லதோ கெட்டதோ என்னாட்டம் படிக்காத தற்குறி பயலுகளுக்கு புரியாதுங்க , ஆனா படிச்சவீகளுக்கு புரியுமில்ல அவங்கள்ள சிலபேரயாவது கூப்பிட்டு பேசி ஒரு முடிவெடுக்கலாமில்லைங்களா .... அதும் இந்த காலத்தில டிவி பொட்டிலாம் வந்திருச்சு அதுலயாவது இத பத்தி விபரம் சொல்லி மக்களுக்கு கொஞ்சம் விளங்க வைக்கலாமில்லீங்க..

உங்களோட ஒசந்த குணம் மக்களுக்கு புரியும்ல....

பாத்துக்கோங்க சாமீ அப்புறம் உங்க இஷ்டம் . நீங்க மெத்த படிச்சவீக நாங்கல்லாம் படிக்காதவீக உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்ல... எதுனா செய்யுங்க ...

இப்படிக்கு ,

குண்டிக்கடில குண்டு வச்சிருக்கானானு பாத்துக்கிட்டே கடிதம் எழுதற

தற்குறிதமிழன் .....

_____________________________________________________________________________________

அவ்ளோதான்பா... ;-)

_____________________________________________________________________________________

05 October 2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பும் சில சுவாரஸ்யங்களும்......
கடந்த சனிக்கிழமை (04-10-2008) அன்று சென்னை மெரீனா கடற்கரையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே . அன்றைய தினம் பல பணிகளுக்கிடையே அங்கே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சக பதிவர்களுக்கு நன்றி . இக்கூட்டத்தில் பல புதிய பதிவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது . ஆவலுடன் கலந்து கொண்டு பல மூத்தப்பதிவர்களும் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி .

இச்சந்திப்பில் இடம் பெற்ற பதிவர்களும் அவர்கள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களும் உங்களுக்காக :

பாலபாரதி :

பதிவர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் இவர் திருமணத்திற்கு பிறகு 10 வயது குறைந்தது போல இருக்கிறார் . சந்திப்பில் டிஷர்ட் ஜீன்ஸ் எல்லாம் அணிந்து கொண்டு ஒரு மூத்தப்பதிவர் என்கிற எந்த பாகுபாடுமின்றி அனைவரிடமும் தானக முன் வந்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் . அது தவிர இங்கு நடந்த பொது இட புகைப்பிடிப்பது பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு மிக சூடாகப் பேசி அனைவரையும் கவர்ந்தார் .

ஞானி :

நமது சக பதிவர்கள் அடிக்கடி விவாதிக்க வாராவாரம் பல விடயங்களை தன் ஓபக்கங்களால் எழுதி வரும் ஞானியை பற்றி நான் கூறுவது சூரியனுக்கு டார்ச் அடித்தது போல் ஆகி விடும் . பதிவர் சந்திப்புக்கு எதிர்பாராத விதமாக வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் . அவரிடம் பல பதிவர்களும் பலவித கேள்விகணைகளை தொடுக்க தான் ஒரு பார்வையாளனாக சக பதிவராக இந்த சந்திப்புக்கு வந்ததாக கூறி மேலும் ஆச்சர்யப்படுத்தினார். அக்டோபர் 2 ஆம் தேதி அவர் தனது வலைப்பூவை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . (இப்போ அவரும் வலைப்பதிவராகிட்டாருங்கோ .. .ஜீனியர்தான் அதனால யார்வேணா அவர ராகிங் பண்ணலாம் ) சில அவசர காரணங்களால் சில நிமிடங்களிலேயே அவர் கிளம்பிவிட்டாலும் , நம்மைப் போன்ற வலைப்பதிவர்களை மதித்து அவர் இச்சந்திப்பில் கலந்து கொண்டதில் எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும் . ( பாருங்கையா எழுத்தாளர்கள்லாம் நம்மள திரும்பி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க )

டோண்டு ராகவன் :

வயதிலும் , வலையுலக அனுபவத்திலும் மூத்த பதிவர் , இச்சந்திப்பு முழுவதுமே மிக உற்சாகமாக காணப்பட்டார் , அங்கே நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தனது டைரியில் குறித்துக்கொண்டார் .

பொட்டீகடை :

இவருக்காகத்தான் முதலில் சந்திப்பு நடத்த உத்தேசித்து சிலபல சிக்கல்களால் சந்திப்பு முடிவதற்கு அரைமணிநேரம் முன்புதான் வந்து சேர்ந்தார் . ஆஸ்திரேலியாவில் இருந்து ஆஸ்திரேலிய உடையிலேயே சந்திப்பில் கலந்து கொண்டது விழாவை மேலும் சிறப்பிப்பதாய் இருந்தது . எல்லா பதிவர்களுக்கும் ஐஸ் வாங்கி தந்து சந்திப்பை மேலும் குளிர்வித்தார் .

ஜ்யோவ்ராம்சுந்தர் :

நமது காமக்கதை புகழ் சுந்தர் அண்ணா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் . பணி முடிந்து அப்படியே வந்துவிட்டார் போலும் மிக டிப்டாப்பாக வந்திருந்தார் . பல விடயங்கள் குறித்தும் சக பதிவர்களிடமும் பேசியபடியே இருந்தார்.

சுகுணாதிவாகர் :

இவரது பதிவுகள் போலவே இவரும் மிக நல்ல மனிதர் . சந்திப்பு முழுவதும் பல இலக்கிய விவாதங்களில் ஈடுபட்டிருந்தார் . என்னால் சரியாக இவரை கவனிக்க இயலவில்லை ( இலக்கியத்திற்கும் நமக்கும்தான் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரமாயிற்றே )

ரோசாவசந்த் :

நான் கடந்த வருடங்களில் இவரது எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் , ஆனால் நேரில் அப்படியே எதிர்மறையாய் மிக மென்மையானவராக இருக்கிறார் .( அமுல் பேபி போல ) அனைத்து பதிவர்களிடமும் தானே முன் வந்து பேசியபடி இருந்தார் .

கென் :

கென் என் நண்பன் , எனக்காகவே இச்சந்திப்பிற்கு வந்ததாக கூறினார் , அவரது சித்தப்பா வராத குறையை அவரது மகன் மற்றும் மூன்றாம் சிஷயர் வந்து நிவர்த்தி செய்தார் , இவர் அவரது சித்தப்பாவிற்கு நேரெதிர் ஆள் யாரிடமும் அதிகமாக பேசாமல் அமைதியாக மற்றவர் பேசுவதை கவனித்தபடி இருந்தார் .

மருத்துவர் புருனோ :

நம்ம மருத்துவருக்கு சந்திப்பு என்றால் அல்வா சாப்பிடுவது போல எத்தனை பணி இருந்தாலும் கட்டாயம் சந்திப்புகளில் கலந்து கொள்ளும் சிலரில் ஒருவர் . புகைப்பிடித்தல் தடை குறித்து விவாதம் எழுகையில் அருமையான ஒரு கருத்தை முன்வைத்தார் , சிகரெட்டை காண்டத்துடன் ஒப்பிட்டு , அது குறித்து தனி பதிவு விரைவில் இட எண்ணியுள்ளேன் . ( ஆள் எப்போதும் போல முக மலர்ச்சியுடன் அனைவரிடமும் நட்பு பாராட்டினார் )

அருட்பெருங்கோ :

இவரைப்பற்றி அதிகம் நான் சொல்லத்தேவையில்லை , மிக நல்ல மனிதர் , மிக அமைதி , அவரது எழுத்துக்களையும் பெயரையும் வைத்து 45 வயதில் ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் அவரோ மிக இளமையாய் 27 வயது மதிக்கத்தக்கவராய் இருந்தது பெரும் அதிர்ச்சி .

ஆழியுரான் :

இவர் ஒரு பழைய பதிவர் , சிலபல பொது சேவைகளில் தற்சமயம் ஈடுபடுவதால் பதிவுகள் எழுதுவதில்லை . இவரும் எல்லா சந்திப்புகளிலும் முடிந்த வரை கலந்து கொள்பவர் .

ஜிம்ஷா :

தினமும் பல அதிரடி பதிவுகளால் அடிக்கடி சூடான இடுகைகளை ஆக்கிரமிப்பவர் , சந்திப்புக்கு மிகத்தாமதமாக வந்தார் அது தவிர யாரிடமும் பேசாமல் அனைவரது நடவடிக்கைகளையும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தார் . தொப்பி கண்ணாடி என அசத்தலாக இருந்தார் .

ஜிங்காரோ ஜமீன் :


பதிவர் ஜிங்காரோ ஜமீன் , பல பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் . பதிவுகள் மட்டும் எழுதமாட்டார் . கும்மி மக்களோடு சந்திப்பு முழுதும் ஐக்கியாமாகியிருந்தார் . அவரோடு அளவளாவ அத்துனை வாய்ப்பு கிட்டவில்லை . கிட்டியிருந்தால் கலாய்த்து மகிழ்ந்திருப்பேன்
வடகரைவேலன் :

கோவையிலிருந்து நமது பதிவர் சந்திப்பிற்க்காக இந்த சென்னை வந்த ஒரே பதிவர் இவர் . சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அவருக்கு என் நன்றிகள்.

தாமிரா :

சமீபகாலமாக வலையுலகில் தங்கமணிகள் பற்றி பதிவுகளால் வலையுலகில் சிலபல புரட்சிகள் செய்து வருபவர் . புகைப்படத்தில் பார்ப்பதைவிட நேரில் ஆள் அழகாக இருக்கிறார் . சினிமாவில் நுழைவதை விட டிவி மெகா சீரியல்களில் கதநாயகன் வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார். சந்திப்பு முடிவதற்கு முன்னே ஓடிவிட முயன்றார் .(தங்கமணி டிரபிளாக இருக்கலாம் )

கார்க்கி ;

சமீபகாலமாக சிலபல அதிரடி பதிவுகளால் கலக்குபவர் , இளமைதுள்ளலுடன் சந்திப்பு முழுவதுமே காணப்பட்டார் . ( அவர் என்னை போலவே மஞ்சள் சட்டையும் நீல பேண்டும் அணிந்து வந்து என்னை வியப்பில் ஆழ்த்தினார்...... இன்னாங்கடா கலரு என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது ... )

குப்பன் _ யாகூ ;

யாகூவின் சாட் ரூம்களில் கபடி ஆடிக்கொண்டிருந்தவர் சமீபகாலமாக தமிழ்வலையுலகிலும் கலக்குகிறார் . சந்திப்பு அறிவித்த நாளில் இருந்து ஆல்கஹால் மறுப்புகொள்கையுடன் இருந்தவர் . ஆனால் ஏனோ பாதி சந்திப்பில் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாகினார் .

ஊர் சுற்றி - ஜோன்சன் :

சந்திப்பு முழுதுமே மிக அமைதியாக காணப்பட்டார் . அனைத்து பதிவர்களிடமும் ஆரம்ப தயக்கம் இருப்பினும் பின் சுதாரித்து அனைவரிடமும் கலகலப்பாக இருந்தார்.

பாலசந்தர் :

உலகம்.நெட் தளத்தின் பங்களிப்பாளரான இவர் தனியாகவும் தனக்கென ஒரு வலைப்பூவை வைத்துள்ளார் . பார்க்க ஆரம்பகால விஜயகாந்த் போல இருந்தாலும் மிக அமைதி . தனது டிஷர்ட்டில் தமிழ்வலைப்பதிவர் என எழுதி வந்து அனைவரையும் கவர்ந்தார்.

சரவணன் :

நம்மில் மிகமிக புதிய பதிவர் , திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றும் இவர் தனது பணிகளுக்கு நடுவே சந்திப்பின் பாதியில்தான் வந்தார் .

சென் :

இவரும் ஒரு புதிய பதிவர் சமீபத்தில் தான் தனது வலைபதிவை தொடங்கியிருந்தார் . அனைவரிடமும் நிறைய பேசி நட்பு பாராட்டினார் . நிறைய புகைப்படங்கள் எடுத்தார் . அதை என்ன செய்தார் என்று தெரியவில்லை.

வினோத் ( அக்னிபார்வை ) ;

மேலும் ஒரு மிகப்புதியப்பதிவர் , சந்திப்புக்கு வந்த புதிய பதிவர்களில் அதிகம் விவாதங்களில் கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் .

வரவணையான் :

இவரும் மிகப்புதிய பதிவர் , இவரும் பொட்டீகடையாரும் ஒன்றாகவே வந்தனர் . அனைவரையும் மாறிமாறி படமெடுத்தபடி இருந்தார் . சந்திப்பு முடிந்ததும் சில பதிவர்களுக்கு சரக்கு வாங்கிதந்து நட்பு பாராட்டியதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .


வெண்பூ தனது மகனின் உடல்நிலை சரி இல்லாததால் வர இயலவில்லை என்று கூறியிருந்தார்.


இவர்கள் தவிர வருவார்கள் என மிகவும் எதிர்பார்த்த புதுகை அப்துல்லா , உண்மைத்தமிழன் , கேபிள் சங்கர் , போன்ற பதிவர்கள் வராதது மிகவும் வருத்தத்தை அளித்தது .


இவர்கள் தவிர அதிஷா,லக்கிலுக்,கடலையூர் செல்வம் , முரளிகண்ணன் போன்ற புதிய பதிவர்களும் சின்னத்துரை மற்றும் நர்சிமின் நண்பர் , மேலும் ஒரு வாசகர் இச்சந்திப்பில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் குச்சி ஐஸ் வாங்கித்தரப்பட்டது . ( திஸ் குச்சி ஐஸ் ஈஸ் ஸ்பான்சர்டு பை பொட்டிகடை)


சாருநிவேதிதா குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது , என்னை பொருத்தவரை இந்த சந்திப்புக்கு அவரது வலைபக்கத்திலும் விளம்பரம் கொடுத்து உதவியதாகவே கருதுகிறேன் . ( சாரு மிக்க நன்றி ; )


சந்திப்பு 6 மணிக்கு என அறிவித்து விட்டு நானும் லக்கியும் 5 மணிக்கே பீச்சுக்கு வந்து கொண்டிருக்கையில் லக்கியின் பைக் பஞ்சராகியது , அதனால் நாங்கள் பீச்சை அடைய 6.10 ஆகிவிட்டது , பல புதிய பதிவர்களும் ஒருவரை ஒருவர் அறியாது அது வரை ஆங்காங்கே அலைந்து கொண்டிருந்தனராம்.


எங்களது பைக் பஞ்சரான இடம் சென்னையின் மிக முக்கிய கல்லூரியான எத்திராஜ் கல்லூரியின் வாசலில் , அதுவும் அந்த கல்லூரி முடிந்து பெண்கள் வெளியேறும் நேரம் , நல்ல நேரத்திலும் கெட்ட நேரம் .


கடற்கரையில் பல பதிவர்களும் பதுங்கி பதுங்கி தம் அடித்தது வேடிக்கையாக இருந்தது . ( அன்னைக்கினு பாத்துதான் யாரோ வி.ஐ.பி வரணுமா பீச்சு பூரா ஒரே போலிஸ்.


புதுப்பதிவர்கள் ஒவ்வொருவராக வருவதும் அவர்களை அலைப்பேசியில் பிடித்து சந்திப்பில் விடுவதுமாக இருந்ததால் என்னால் யாரிடமும் சரியாக பேசக்கூட இயலவில்லை . அதனால் அங்கே என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை. ( இந்த பதிவில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பதிவில் உங்கள் பெயரையும் சேர்த்துக்கொள்கிறேன் )


பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் இங்கே...


http://picasaweb.google.co.in/asksen.ashok/BloggerSMeet?authkey=lODgj2cQiJ0#


____________________________________________________________________________________


அவ்ளோதான்பா. ;-)


____________________________________________________________________________________